7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

  • 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவில் பல புதிய அரசுகள் உருவாகின.
  • இந்தியாவின் தெற்கே விஜயநகரமும், குல்பர்கா (பாமினி) அரசுகளும் எழுச்சி பெற்றன.
  • பாமினி (குல்பர்கா) அரசு மகாராஸ்டிரா மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கி ஆட்சி செய்தது.
  • பாமினி அரசில் மொத்தம் எத்தனை ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தனர் = 18 ஆட்சியாளர்கள்.
  • பதினாறாம் நூற்றாண்டில் பாமினி அரசு எத்தனை சுல்தானிய அரசுகளாக பிரிந்தது = ஐந்து.
  • பாமினி அரசு பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரிந்து “பிஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா, பீடார், பீரார்” என ஐந்து சுல்தானியங்களாக பிரிந்தது.
  • விஜயநகர அரசு உருவான 10 ஆண்டுகளுக்கு பிறகே பாமினி அரசு உருவானது.
  • விஜயநகர அரசு சுமார் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது.
  • விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த போர் = தலைக்கோட்டைப் போர் (1565).
  • தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு = 1565.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

விஜயநகரப் பேரரசு

  • விஜயநகர அரசை உருவாக்கிய இரட்டையர்கள் = ஹரிஹரர், புக்கர் (சகோதரர்கள்).
  • ஹரிஹரர், புக்கர் சகோதரர்கள் யாரிடம் முதலில் பணிபுரிந்தனர் = துக்ளக் வம்ச அரசர்களிடம்.
  • யாருடைய பேச்சின் அடிப்படையில் ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகர அரசை உருவாக்கினர் = வித்யாரண்யர்.
  • வித்யாரண்யர் என்பவர் = சிருங்கேரி சைவ மடத்தின் தலைவராக இருந்தவர்.
  • ஹரிஹரர் மற்றும் புக்கரின் ஆன்மீக குரு = வித்யாரண்யர்.
  • தங்கள் குருவிற்கு மதிப்பளிக்கும் வகையில் தாங்கள் ஆண்ட பகுதிக்கு “வித்யாநகர்” எனப் பெயரிட்டனர். பிறகு இது விஜயநகர் என அழைக்கப்பட்டது.

விஜயநகரப் பேரரசின் நான்கு வம்சங்கள்

  • விஜயநகரப் பேரரசு நான்கு அரசு மரபுகளால் ஆளப்பட்டது. அவை,
        1. சங்கம வம்சம் (1336 – 1485) = 149 ஆண்டுகள்.
        2. சாளுவ வம்சம் (1485 – 1505) = 20 ஆண்டுகள்.
        3. துளுவ வம்சம் (1505 – 1570) = 65 ஆண்டுகள்.
        4. ஆரவீடு வம்சம் (1570 – 1646) = 76 ஆண்டுகள்.
  • விஜயநகரப் பேரரசில் மிக அதிக காலம் ஆட்சி செய்த வம்சம் = சங்கம வம்சம்.
  • விஜயநகரப் பேரரசில் மிக குறைந்த காலம் ஆட்சி செய்த வம்சம் = சாளுவ வம்சம்.
  • விஜயநகர அரசர்கள், பாமினி அரசர்கள் மற்றும் ஒடிசா அரசர்கள் இடையே தொடர்ந்து போர் நடந்ததற்கான காரணம் = கிருஷ்ணா – துங்கபத்ரா நதிப் பகுதியின் செழிப்பு, கிருஷ்ணா – கோதாவரி கழிமுகப்பகுதி.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

சங்கம வம்சம் (1336 – 1485, 149 ஆண்டுகள்)

  • சங்கம வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர்கள் = ஹரிஹரர், புக்கர் (இரட்டையர்கள்).
  • புக்கரின் மகன் = இரண்டாம் ஹரிஹரர்.
  • இரண்டாம் ஹரிஹரர், பாமினி அரசிடம் இருந்து பெல்காம், கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்.
  • சங்கம வம்சத்தின் தலைச் சிறந்த அரசர் = இரண்டாம் தேவராயர்.
  • படைவீரர்களுக்கு நவீன போர் பயிற்சிகளை வழங்கினார்.
  • இஸ்லாமிய வீரர்களை படையில் சேர்த்துக் கொள்ளும் முறையை துவக்கி வைத்த சங்கம அரசர் = இரண்டாம் தேவராயர்.
  • சங்கம் வம்சத்தின் கடைசி அரசர் = இரண்டாம் விருபாக்ஷி.
  • இரண்டாம் விருபாக்ஷியை கொலை செய்தவர் = அவரின் படைத்தளபதி சாளுவ நரசிம்மர்.
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

மதுரா விஜயம்

  • “மதுரா விஜயம்” நூலின் ஆசிரியர் = கங்காதேவி.
  • முதலாம் புக்கரின் மகன் = குமார கம்பணா.
  • குமார கம்பணாவின் மனைவி = கங்காதேவி.
  • குமார கம்பணா, “மதுரை சுல்தானிய” அரசை நீக்கி விட்டு அங்கு நாயக்க அரசை வெற்றிகரமாக நிறுவினார் என்ற செய்தியை மதுரா விஜயம் பதிவு செய்துள்ளது.
  • மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் = குமார கம்பண்ணா.
  • விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதை கூறும் நூல் = மதுராவிஜயம்.

சாளுவ வம்சம் (1485 – 1505, 20 ஆண்டுகள்)

  • சங்கம வம்ச அரசரிடம் படைத்தளபதியாக இருந்தவர் = சாளுவ நரசிம்மர்.
  • சாளுவ வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = சாளுவ நரசிம்மர்.
  • சங்கம வம்சத்தின் கடைசி அரசனான இரண்டாம் விருபாக்ஷியை கொலை செய்துவிட்டு ஆட்சியை கைப்பற்றினார் சாளுவ நரசிம்மர்.
  • சாளுவ நரசிம்மரின் மரணத்தோடு சாளுவ வம்சத்தின் ஆட்சி முடிவிற்கு வந்தது.

துளுவ வம்சம் (1505 – 1570, 65 ஆண்டுகள்)

  • சாளுவ நரசிம்மரின் படைத்தளபதி = நரசநாயக்கர்.
  • துளுவ வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = நரசநாயக்கர்.
  • துளுவ வம்ச அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர் = கிருஷ்ணதேவராயர்.
  • விஜயநகர அரசர்களிலே மிகவும் புகழ்பெற்ற அரசர் = கிருஷ்ணதேவராயர்.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

கிருஷ்ணதேவராயர்

  • கிருஷ்ணதேவராயர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் = 20 ஆண்டுகள்.
  • எந்த பாமினி சுல்தானை சிறையில் இருந்து மீட்டு, அவருக்கு மீண்டும் அரியணையை வழங்கினார் = பாமினி சுல்தான் முகமதுஷா.
  • ஓடிசாவை சேர்ந்த கஜபதி வம்ச அரசனான பிரதாபபருத்திரன், கிருஷ்ணதேவராயரோடு சமாதனம் செய்துக் கொண்டு அவரின் மகளை கிருஷ்ணதேவராயருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.
  • போர்ச்சுகீசிய பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு எந்த பாமினி சுல்தானை வீழ்த்தினார் கிருஷ்ணதேவராயர் = கோல்கொண்டா சுல்தான்.
  • எந்த வீரர்களின் உதவியோடு கிருஷ்ணதேவராயர் கோல்கொண்டா சுல்தானை வீழ்த்தினார் = போர்ச்சுகீசிய பீரங்கிப்படை வீரர்கள்.
  • மழைநீரை சேமிப்பதற்காக பல்வேறு குளங்களை வெட்டியவர் = கிருஷ்ணதேவராயர்.
  • கிருஷ்ணதேவராயரின் தலைநகரம் = ஹம்பி.
  • கிருஷ்ணதேவராயர் கட்டிய புகழ்பெற்ற கோவில்கள் = ஹம்பியில் உள்ள கிருஷ்ணஸ்வாமி கோவில், ஹசாரா ராமசாமி கோவில், விட்டாலசுவாமி கோவில்.
  • தான் பெற்ற செல்வங்களை கொண்டு பல்வேறு கோவில்களில் மிகப்பெரிய நுழைவாயில்களை கட்டியவர் = கிருஷ்ணதேவராயர்.
  • கிருஷ்ணதேவராயர் கட்டிய கோவில் நுழைவாயில்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = ராயகோபுரம்.
  • கிருஷ்ணதேவராயரின் அவை எவ்வாறு அழைக்கப்பட்டது = அஷ்டதிக்கஜங்கள் (எட்டு இலக்கிய மேதைகள் இருந்தனர்).
  • அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர் = அல்லசானி பெத்தண்ணா.
  • அஷ்டதிக்கஜங்களில் மற்றொரு முக்கிய ஆளுமை = தெனாலிராமன் (தெனாலி ராமகிருஷ்ணன்).
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

யுனஸ்கோ பாரம்பரியச் சின்னம் ஹம்பி

  • கிருஷ்ணதேவராயரின் தலைநகரான “ஹம்பி”, தற்போதைய கர்நாடக மாநில துங்கபத்ரா நதிக்கரியில் உள்ளது.
  • ஹம்பி நகரம் சீர்குலைந்து இடிபாடுகளுடன் காணப்படுகிறது.
  • யுனஸ்கோ அமைப்பு “ஹம்பியை” உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

தலைக்கோட்டைப் போர் (1565)

  • கிருஷ்ணதேவராயருக்கு பிறகு இரண்டு அரசர்கள் ஆட்சி புரிந்தனர்.
  • அவர்களுக்கு பிறகு குறைந்த வயதில் “சதாசிவராயர்” ஆட்சிப் பொறுபேற்றார்.
  • சதாசிவராயரின் படைத்தளபதி “ராமராயர்”, சதாசிவராயரை பெயரளவில் மன்னராக வைத்துக் கொண்டு ஆட்சி முழுவதையும் கையாண்டார்.
  • கி.பி. 1565 இல் தக்காண பாமினி சுல்தான் அரசுகள் ஒன்றிணைந்து விஜயநகரம் மீது “தலைக்கோட்டை” என்னுமிடத்தில் போர் தொடுத்தது.
  • தலைக்கோட்டைப் போர் எவ்வாறு அழைக்கப்படுகிறது = ராக்சச தங்கடி.
  • போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டு, விஜயநகரப் பேரரசு முழுவதும் அழிக்கப்பட்டது.
  • விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தப் போர் = தலைக்கோட்டைப் போர்.

ஆரவீடு வம்சம் (1570 – 1646, 76 ஆண்டுகள்)

  • தலைக்கோட்டைப் போரில் ராமராயர் கொல்லப்பட்டார்.
  • ராமராயரின் சகோதரர் திருமலைதேவராயர், அரசர் சதாசிவராயருடன் பெரும் செல்வங்களை எடுத்துக் கொண்டு சந்திரகிரி நகரை அடைந்தார்.
  • ஆரவீடு வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = திருமலைதேவராயர்.
  • ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் = பெனுகொண்டா.
  • விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சி அடைந்த ஆண்டு = கி.பி. 1646.

விஜயநகர நிர்வாகம்

  • அரச பதவி பரம்பரையாக இருந்தது.
  • “பகர ஆளுநர்” என்றால் என்ன = அரச பதவி ஏற்ப்பவர் வயதில் சிறியவராக இருந்தால், நிர்வாகப் பணிகளை கவனிக்க “பகர ஆளுநர்” என்பவரை நியமனம் செய்யும் முறை.
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

விஜயநகர அரசமைப்பு

  • விஜயநகரப் பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலங்கள்), நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்), கிராமங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தது.
  • விஜயநகர அரசமைப்பு = மண்டலங்கள் – நாடுகள் – ஸ்தலங்கள் – கிராமங்கள்.
  • விஜயநகர அரசமைப்பு = மாநிலங்கள் – மாவட்டங்கள் – வட்டங்கள் – கிராமங்கள்.
  • “மண்டலேஸ்வரா” என்றால் என்ன = மண்டலம் அல்லது மாநிலத்தை ஆளும் ஆளுநர்.
  • கிராம நிர்வாகமே மிகச் சிறிய அலகு.
  • “கௌடா” என்றால் என்ன = கௌடா என்பவர் கிராமத் தலைவர்.
  • விஜயநகர் நிர்வாகத்தில் கிராமம் தொடர்பான விவரங்களை கௌடா எனப்படும் கிராமத்தலைவர் நிர்வகிப்பார்.

படைப்பிரிவு

  • விஜயநகர அரசின் பலம்வாய்ந்த படை = வெடிமருந்து ஆயுதங்களை பயன்படுத்தும் ஒருங்கிணைந்த குதிரைப் படை.

விஜயநகர பேரரசின் பொருளாதார நிலை

  • விஜயநகரப் பேரரசு செல்வச் செழிப்பாக இருந்தது.
  • பல்வேறு வெளிநாட்டு பயணிகள் பேரரசின் செல்வம், வளம், மேன்மை குறித்து பதிவு செய்துள்ளனர்.
  • “வராகன்” என்றால் என்ன = விஜயநகரப் பேரரசு வெளியிட்ட தங்க நாணயங்கள்.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

வேளாண்மை

  • விஜயநகரப் பேரரசின் வேளாண்மை கொள்கை = சிறந்த நீர்ப்பாசன முறைகளைக் கடைப்பிடித்து நாட்டின் வேளாண்மையை ஊக்கப்படுத்துதல்.
  • நிலச்சுவான்தார்கள் = கோவிலிலும், நீர்ப்பாசனத்திலும் முதலீடு செய்தனர்.
  • அப்துர் ரசாக் = பாரசீக பயணியான அப்துர் ரசாக் என்பவர் தனது குறிப்பில், “விஜயநகரப் பேரரசில் போர்ச்சுகீசிய கட்டுமானக் கலைஞர் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாக” பதிவு செய்துள்ளார்.
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

குடிசைத் தொழில்கள்

  • விஜயநகரப் பேரரசின் குடிசைத் தொழில்கள் = நெசவுத்தொழில், சுரங்கத் தொழில், உலோகத் தொழில்.
  • “கில்டுகள்” என்றால் என்ன = கில்டுகள் எனப்படும் “தொழில்சார் அமைப்புகள்” கைவினை, குடிசைத் தொழில்களை முறைப்படுத்தின.
  • விஜயநகரப் பேரரசில் கைவினை கலைஞர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக பதிவு செய்துள்ள வெளிநாட்டு பயணி = பாரசீகப் பயணி அப்துர் ரசாக்.

வாணிகம்

  • எந்தெந்த வெளிநாடுகளுடன் விஜயநகரப் பேரரசு வாணிகத்தில் ஈடுபட்டது = பாரசீகம், தென்னாப்பிரிக்கா,
  • “அமுக்தமால்யதா” எந்த மொழியின் எழுதப்பட்டது = தெலுங்கு.
  • “ஜாம்பவதி கல்யாணம்” என்னும் நாடக நூலின் ஆசிரியர் = கிருஷ்ணதேவராயர்.
  • “ஜாம்பவதி கல்யாணம்” எனும் நாடக நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருத மொழி.
  • “பாண்டுரங்கமகாத்தியம்” எனும் நூலின் ஆசிரியர் = தெனாலிராமன்.
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

அமுக்தமால்யதா

  • தெலுங்கு இலக்கியத்தின் தலைச்சிறந்த படைப்பாக கருதப்படும் நூல் = அமுக்தமால்யதா.
  • “அமுக்தமால்யதா” என்னும் நூலின் ஆசிரியர் = கிருஷ்ணதேவராயர்.
  • “அமுக்தமால்யதா” எந்த மொழியின் எழுதப்பட்டது = தெலுங்கு.
  • இந்நூல், பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான “கோதை தேவி” (ஆண்டாள்) பற்றியது ஆகும்.
  • அமுக்தமால்யதா என்பதன் பொருள் = தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்.

விஜயநகரப் பேரரசின் கட்டிடக்கலை

  • விஜயநகரப் அரசர்கள் பின்பற்றிய கோவில் கட்டிடக்கலைப் பாணி = விஜயநகரப்பாணி.
  • விஜயநகரப் பாணியின் தனித்துவ அடையாளங்கள் = பெரும் தூண்கள், அவற்றில் சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகள்.
  • விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கின் உருவம் = குதிரை.
  • “உயர்ந்த மேடையுடன் கூடிய மண்டபங்கள் அல்லது திறந்தவெளி அரங்குகள்” அமைக்கப்பட்டன.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

பாமினி அரசு

  • பாமினி அரசு உருவான ஆண்டு = 1347.
  • பாமினி அரசை உருவாக்கியவர் = ஹசன் கங்கு (அலாவுதீன் ஹசன்).
  • ஹசன் கங்கு ஒரு துருக்கிய அதிகாரி. முகமது பின் துக்ளக்கிடம் வேலை செய்தவர்.
  • 1347இல் தௌலதாபாத் நகரை கைப்பற்றி அதனை “பாமான்ஷா” என்ற பெயரில் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டார்.
  • அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தனது தலைநகரை “குல்பர்காவிற்கு” மாற்றினார்.
  • 1429 இல் மீண்டு தலைநகர் “குல்பர்காவில்” இருந்து “பீடாருக்கு” மாற்றப்பட்டது.
  • பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் ஆட்சி செய்தனர் = 18 அரசர்கள்.

அலாவுதீன் ஹசன் பாமான்ஷா (1347 – 1358)

  • அலாவுதீன் ஹசன் பாமான்ஷா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் = 11 ஆண்டுகள்.
  • அலாவுதீன் ஹசன் தனது அரசை எத்தனை மாகாணங்களாக பிரித்தார் = நான்கு மாகாணங்கள்.
  • “தராப்” என்றால் என்ன = பாமினி அரசின் மாகாணங்கள் “தராப்” என அழைக்கப்படுகின்றன.
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

முதலாம் முகமது ஷா (1358 – 1375)

  • அலாவுதீன் ஹசன் பாமான்ஷா ஆட்சிக்கு பிறகு அரியணை ஏறியவர் = முதலாம் முகமது ஷா.
  • முதலாம் முகமது ஷா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் = 17 ஆண்டுகள்.
  • 1368இல் வாரங்கல் அரசோடு போரிட்டு எதனை பெற்றார் = கோல்கொண்டா கோட்டை மற்றும் பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட சிம்மாசனம்.
  • இதுவே பின்னர் பாமினி அரசின் சிம்மாசனமாக மாறியது.
  • பாமினி அரசிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்த அரசர் = முதலாம் முகமது ஷா.
  • யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது பாமினி அரசு ஐந்து சுல்தாங்கலாக பிரிந்தது = முதலாம் முகமதுஷா.
  • முகமது ஷா “குல்பர்காவில்” இரண்டு மசூதிகளை கட்டினார்.
  • “மகா மசூதி” 216 x 16 அடி என்ற அளவில் கட்டப்பட்டதாகும்.
  • சுல்தான் முதலாம் முகமதுஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாட்டில் இருந்து முஸ்லிம்கள் தக்கான பகுதிக்கு குடி வந்தனர்.

ஷா நாமா

  • “ஷா நாமா” நூலின் ஆசிரியர் = பிர்தௌசி.
  • “பச்சை வண்ண நீலக் கல்லினால் உருவாக்கப்பட்ட அரியாசனம், பாரசீக அரசர்களின் அரியணையை அலங்கரித்தது” என்ற தனது “ஷா நாமா” நூலில் குறிப்பிட்டுள்ளார் பிர்தௌசி.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

கோல்கொண்டா கோட்டை

  • கோல்கொண்டா கோட்டை குன்றின் மீது எவ்வளவு உயரத்தில் கட்டப்பட்டுள்ளது = 120 மீட்டார்.
  • இந்தியாவில் “ஒலி தொடர்பான கட்டிடக்கலை அம்சங்களுக்கு” பெயர் பெற்ற கோட்டை = கோல்கொண்டா கோட்டை.
  • கோல்கொண்டா கோட்டையில் உயரமான இடத்திற்கு என்ன பெயர் = பால ஹிசார்.

முதலாம் முகமதுவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அரசர்கள்

  • முதலாம் முகவதுவின் மகன் “முஜாகித்” பதவி ஏற்றார்.
  • அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = இரண்டாம் முகமது.
  • பிந்தைய பாமினி அரசர்களில் முக்கியமானவர் = மூன்றாம் முகமது (19 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்).

மகமது கவான்

  • மூன்றாம் முகமது சுல்தானின் அவையில் அரசின் பிரதம அமைச்சராக இருந்தவர் = மகமது கவான்.
  • பிறப்பால் பாரசீகரான மகமது கவான், மூன்றாம் முகமதுவிற்கு விசுவாசமாக இருந்து நாட்டை வளர்ச்சி பெறச் செய்தார்.
  • மகமது கவான் எந்த சீர்திருத்தங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார் = ராணுவ நடவடிக்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தம்.
  • மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்கும் பாரசீக வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
  • வெடிமருந்து தயாரிப்பது மற்றும் அவற்றை படைகளில் பயன்படுத்துவது தொடர்பாக வீர்களுக்கு பயிற்சி அளித்தார்.
  • மாகாண ஆளுநர்களை கட்டுப்படுத்த நான்கு மாகாணங்களை எட்டாக உயர்த்தினார்.
  • ஒவ்வொரு மாகாண ஆளுநரும் ஒரு கோட்டையை மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற கோட்டைகள் அரசரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • மகமது கவானின் வளர்ச்சியை விரும்பாத சிலர், அரசருக்கு எதிராக சதி செய்வதாக போலிக் கடிதம் மூலம் அரசருக்கு அனுப்பி வைத்தனர்.
  • இதனை நம்பிய அரசர் மகமது கவானுக்கு மரண தண்டனை வழங்கினார்.
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

பாணி அரசின் முடிவு

  • மூன்றாம் முகமது சுல்தானுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = முகமது அல்லது சிகாபுதின் முகமது.
  • இவர் நீண்ட காலம் ஆட்சி புரிந்தார். இவரின் ஆட்சிக் காலத்தில் இருந்தே பாமினி அரசு சிதையத் துவங்கியது.
  • பாமினி சுல்தானியம் ஐந்து தக்காண சுல்தானியங்களாக பிரிந்தது. அவை = பீடார், பிஜப்பூர், அகமதுநகர், பீரார், கோல்கொண்டா.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

பாமினி பேரரசின் கட்டிடக்கலை

  • கட்டிடக்கலைக்கு பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பை எங்கு காணலாம் = குல்பர்கா.
  • குல்பர்காவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் அரண்மனைகள், குவிமாடங்கள் போன்றவை வெளிக்கொணரப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாமினி அரசில் கல்வி

  • பாமினி அரசின் எட்டாவது சுல்தான் = சுல்தான் பெரோஸ்.
  • பாமினி அரசின் எட்டாவது சுல்தானான “பெரோஸ்” ஒரு மொழியியல் அறிஞரும், கவிஞரும் ஆவார்.
  • பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர் = சுல்தான் பெரோஸ்.
  • பீடாரில் உலகப் புகழ்பெற்ற “மதரசா” (கல்வி நிலையம்) யாரால் கட்டப்பட்டது = மகமது கவான்.
  • பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மகமது கவானின் “மதரசா” (கல்வி நிலையம்) 3000 கையெழுத்து பிரதிகளை கொண்ட அரிய நூலகத்தை கொண்டுள்ளது.
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

பாமினி அரசின் அமைச்சர்கள்

  • பாமினி அரசில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் = எட்டு. அவை,
        1. வக்கீல் உஸ் சல்தானா = அரசின் பிரதம அல்லது முதலமைச்சர். அரசருக்கு அடுத்த நிலையில் துணையதிகாரியாகச் செயல்பட்டவர்.
        2. பேஷ்வா = நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்.
        3. வஸிரி-குல் = ஏனையஅமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர்.
        4. அமிர் – இ – ஜூம்லா = நிதியமைச்சர்.
        5. நஷீர் = உதவி நிதியமைச்சர்
        6. வஷிர்-இ-அசாரப் = வெளியுறவுத்துறை அமைச்சர்
        7. கொத்தவால் = காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்.
        8. சதார்-இ-ஜகான் = தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.
  • கொத்தவால் என்போர் யார் = பாமினி அரசில் காவல்துறைத் தலைவராகவும், நகர குற்றவியல் நடுவராகவும் பணியாற்றியவர்.
  • 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்

 

 

Leave a Reply