7TH மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
- மராத்தியர்களின் எழுச்சி முகலாயர்களுக்கு ஆபத்தை உருவாக்கியது.
- ஷாஜகான் காலத்திலே சிவாஜியின் தந்தையான “ஷாஜி போன்ஸ்லே” முகலாயர்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்.
- ஷாஜி போனஸ்லேவின் மகனான”சிவாஜி” முகலாயர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார்.
- அவரின் வளர்ச்சி முகலாயர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
- மராத்தியர்களின் வலிமை பெருகிய பொழுது, முகலாயர்களின் வலிமை குன்றியது.
- தக்காணம் முழுவதும் “சௌத், சர்தேஷ்முகி” ஆகிய வரிகளை வசூலிக்கும் உரிமையை மராத்தியர்கள், முகலாயர்களிடம் இருந்து பெற்றனர்.
- பேஷ்வாக்கள் என்று அழைக்கபடும் “மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள்”, ஷாகுவின் காலம் முதல் உச்சநிலையை அடைந்தனர்.
மராத்தியர்களின் எழுச்சிக்கான காரணங்கள்
- புவியியல் கூறுகள்
- பக்தி இயக்கமும் மராத்தியரும்
- மராத்தியரின் மொழியும், இலக்கியமும்
மராத்தியர்களின் புவியியல் கூறுகள்
- மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களுக்கு இடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன.
- பாறைகளும் குன்றுகளும் நிறைந்த பகுதியானதால், அது மராத்தியர்களுக்கு அரணாக விளங்கியது.
- கொரில்லா போர்முறைக்கு (மறைந்திருந்து தாக்குதல்) உகந்த இடமாய் விளங்கியது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பக்தி இயக்கமும் மராத்தியரும்
- மராத்திய மக்களிடம் விழிப்புணர்வும், இணக்கமும் ஏற்பட காரணமாக இருந்தது = மகாராஸ்டிராவில் பரவிய பக்தி இயக்கம்.
- மராத்திய பக்தி இயக்கத்தில் குறிப்பிடத்தக்கோர் = ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ்.
- சத்திரபதி சிவாஜியின் வாழ்வில் தொடர்புடைய பக்தி இயக்கத்தினர் = துக்காராம், ராம்தாஸ்.
சத்ரபதி என்பதன் பொருள்
- “சத்ரபதி” என்பது சம்ஸ்கிருத சொல்.
- சத்ர (குடை) + பதி (தலைவன்) = சத்ரபதி (அரசன் அல்லது பேரரசன்).
சத்திரபதி சிவாஜி
- சிவாஜி பிறந்த ஆண்டு = 1627.
- சிவாஜியின் தந்தை = ஷாஜி போன்ஸ்லே.
- சிவாஜியின் தாயார் = ஜீஜாபாய்.
- சிவாஜியின் ஆசிரியர், பாதுகாவலர் மற்றும் குரு = தாதாஜி கொண்டதேவ்.
- எந்த வயதில் சிவாஜி முதன் முதலில் ராணுவப் பணியில் சேர்ந்தார் = பதினெட்டாவது வயதில் (1645).
- சிவாஜி முதன் முதலில் கைப்பற்றிய கோட்டை = கோண்டுவானா கோட்டை (1645).
- சிவாஜி கைப்பற்றிய கோட்டைகள் = கோண்டுவானா கோட்டை தோர்னா கோட்டை ரெய்கார் கோட்டை.
- சிவாஜியின் படையில் வலிமையான வீரர்கள் = மாவலி காலாட்படை வீரர்கள்.
- சிவாஜி முகலாயர் வசமிருந்த எந்த கோட்டையை கைப்பற்றினார்? = புரந்தர் கோட்டை.
- சிவாஜியின் தந்தை ஷாஜி போன்ஸ்லேவை சிறை வைத்தவர் = பிஜப்பூர் சுல்தான்.
- சிவாஜி “ஜாவலி” நகரை கைப்பற்றிய ஆண்டு = 1656 (மராத்திய தலைவர் சந்திர ராவ் மோர் என்பவரிடம் இருந்து கைப்பற்றினார்).
- சிவாஜி, பிஜப்பூர் சுல்தானின் படைத்தளபதியான “அப்சல்கானை” கொன்ற ஆண்டு = 1659.
- சிவாஜி, அவுரங்கசீப்பின் மாமனாரும், முகலாய தளபதியாமான “ஷெஸ்டகானை” காயப்படுத்தி துரத்திய ஆண்டு = 1663.
- சிவாஜி, முகலாயர்களின் முக்கிய துறைமுகமான “சூரத்தை” சூறையாடிய ஆண்டு = 1664.
- சிவாஜியை அழிக்க, யாரை அனுப்பினார் அவுரங்கசீப் = ராஜா ஜெய்சிங் என்னும் ராஜபுத்திர தளபதி.
- சிவாஜி மற்றும் ராஜா ஜெய்சிங் இடையே அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- அவுரங்கசீப்பை சந்திக்க ஆக்ரா சென்ற சிவாஜியை, கைது செய்து சிறையில் அடைத்தார் அவுரங்கசீப்.
- பழக்கூடை ஒன்றில் ஒளிந்து அங்கிருந்து தப்பினார் சிவாஜி.
- சிவாஜி, இரண்டாவது முறையாக சூரத் நகரை கொள்ளையடித்த ஆண்டு = 1670.
- சிவாஜிக்கு “சத்ரபதி” என்ற பட்டத்துடன், “மணிமுடி” சூட்டப்பட்ட ஆண்டு = 1674.
- சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற இடம் = ரெய்கார் கோட்டை.
- சிவாஜி இறந்த ஆண்டு = 1680.
மராத்தியர் நிர்வாகம்
- “சௌத்” வரி = மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை (1/4) “பாதுகாப்பு கட்டணமாக” வழங்க வேண்டும்.
- “சர்தேஷ்முகி” வரி = பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கு கட்டணமாக வழங்க வேண்டும்.
- நிலவரி = ஐந்தில் மூன்று பங்கு விவசாயிக்கும், ஐந்தில் இரண்டு பங்கு அரசுக்கும் வழங்கப்பட்டது.
- மராத்திய நிர்வாகத்தில் 20 முதல் 100 வரையிலான கிராமங்களை நிர்வகித்தவர் = தேஷ்முக்.
- மராத்திய நிர்வாகத்தில் கிராமத்தில் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = பட்டீல்.
- கிராமத் தலைவர் (பட்டீல்) என்பவருக்கு உதவியாக இருந்த ஆவணக் காப்பாளர் = குல்கர்னி.
அஷ்டபிரதான் என்றால் என்ன
- சிவாஜி உருவாக்கிய எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு “அஷ்டபிரதான்” என்று பெயர்.
- பந்த்பீரதான் / பேஷ்வா = பிரதம அமைச்சர்
- அமத்தியா / மஜீம்தார் = நிதியமைச்சர்
- சுர்நாவிஸ் / சச்சீவ் = செயலர்
- வாக்கிய-நாவிஸ் = உள்துறை அமைச்சர்
- சர்-இ–நௌபத் / சேனாபதி = தலைமைத் தளபதி
- சுமந்த் / துபிர் = வெளியுறவுத்துறை அமைச்சர்
- நியாயதிஸ் = தலைமை நீதிபதி
- பண்டிட்ராவ் = தலைமை அர்ச்சகர்
- மராத்தியர்களிடம் “பேஷ்வாக்களாக” இருந்தவர்கள் “ஷாகு” மன்னர் காலத்தில் “மராத்திய அரசர்களாக” உயர்ந்தனர்.
சாம்பாஜி
- சிவாஜிக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் = சாம்பாஜி.
- அவுரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்தவர்கள் = துர்காதாஸ் மற்றும் அவுரங்கசீப்பின் மகன் அக்பர்.
- துர்காதாஸ், அக்பர் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்தவர் = ஷாம்பாஜி.
- 1668 இல் அவுரங்கசீப் ஷாம்பாஜியை கொன்று தனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.
- ஷாம்பாஜியின் பாதுகாவலர் = கவிகலாஷ்.
- ஷாம்பாஜியின் குடும்ப அர்ச்சகர் = கவிகலாஷ்.
- ஷாம்பாஜியை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர் = கவிகலாஷ்.
ஷாகு மகாராஜா
- சிவாஜியின் பேரன் = ஷாகு மகாராஜா.
- ஷாகு ஆட்சி புரிந்த காலம் = 1708 – 1749.
- இவருக்கு ஷாகு என பெயர் வைத்தவர் = அவுரங்கசீப்.
- சிவாஜிக்கு பிறகு யாருடைய ஆட்சிக் காலத்தில் வலுவான அரசுக் கட்டமைப்பு உருப்பெறத் தொடங்கியது = ஷாகு மகாராஜா.
பாலாஜி விஸ்வநாத் (1713 – 1720)
- பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பதவி ஏற்றது = 1713.
- பாலாஜி விஸ்வநாத்திற்கு அடுத்து பேஷ்வாவாக, பாலாஜி விஸ்வநாத்தின் மகன் “பாஜிராவை” நியமனம் செய்தார் ஷாகு மகாராஜா.
பாஜிராவ் (1720 – 1740)
- பாஜிராவ் பேஷ்வாவாக பதவி ஏற்ற பொழுது, மராத்தியத்தில் முக்கியமாக இருந்த குடும்பங்கள்,
- கெய்க்வாட் = பரோடா
- பான்ஸ்லே = நாக்பூர்
- ஹோல்கார் = இந்தூர்
- சிந்தி (சிந்தியா) = குவாலியர்
- பேஷ்வா = புனே
- மாளவம், குஜராத் அரசுகளுக்கு எதிராக போரை துவக்கி வெற்றி பெற்றார் பாஜிராவ்.
- முகலாயப் படைகளை தோற்கடித்தார் பாஜிராவ்.
- “மகாராஸ்டிராவின் அரசன்” எனவும் “தக்காணத்தின் தலைவன்” எனவும் ஷாகு மகாராஜாவை அறிவித்தார் பாஜிராவ்.
- தக்காணப் பகுதியில் இருந்து அனுப்பப்படும் கப்பங்களை பெற ஏதுவாக “புனே” நகரை நிதி நிர்வாக நகராக உருவாக்கினார் பாஜிராவ்.
பாலாஜி பாஜிராவ் (1740 – 1761)
- பாலாஜி பாஜிராவ் பேஷ்வாவாக இருந்த பொழுது “ஷாகு” மகாராஜா 1749 இல் காலமானார்.
- தலைநகரை “சத்தாராவில்” இருந்து “புனே” நகருக்கு மாற்றியவர் = பாலாஜி பாஜிராவ்.
- யாருடைய ஆட்சியின் பொழுது மராத்திய விவசாயப் போர் வீரர்களின் காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது = பாலாஜி பாஜிராவ்.
- யாருடைய ஆட்சியின் பொழுது மராத்திய அரசின் எல்லை டெல்லிக்கு அருகே வரை பரவி இருந்தது = பாலாஜி பாஜிராவ்.
- 1745 முதல் 1751 வரை ஒவ்வொரு ஆண்டும் மராத்திய தளபதி “ரகுஜி பான்ஸ்லே”வின் தலைமையில் கொள்ளை அடிப்பதை நோக்கமாக கொண்ட படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
பேஷ்வாக்களின் கீழ் மராத்தியர் நிர்வாகம்
- பேஷ்வாக்களின் வருவாய்த்துறையின் முக்கிய அதிகாரி = காமவிஸ்தார்.
- முகலாயர்களோடு ஒப்பிடுகையில் பேஷ்வாக்களின் ஆட்சி நவீனமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- முகலாயரின் வீழ்ச்சிக்கு ராணுவ ரீதியாக பங்களிப்பு செய்தவர்கள் = பேஷ்வாக்கள்.
மராத்தியர்களின் வீழ்ச்சி
- பஞ்சாப்பை கடந்து தங்களின் ஆட்சி எல்லை விரிவு படுத்த மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி, ஆப்கானிய அரசர் “அகமதுஷா அப்தாலியால்” தடுக்கப்பெற்றது.
- மராத்தியர்கள் மற்றும் ஆப்கானிய அரசர் அகமதுஷா அப்தாலி இடையே நடைபெற்ற மூன்றாவது பானிபட் போருடன், மராத்தியர்களின் வீழ்ச்சி துவங்கியது.
மூன்றாம் பானிபட் போர் 1761
- மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு = 1761.
- 1761 க்கு முன்னர் அப்தாலி டெல்லி மீது எட்டு முறை படையெடுத்து வந்துள்ளார்.
- டெல்லி மீது தனது ஒன்பதாவது படையெடுப்பில் “மூன்றாம் பானிபட் போரில்” மராத்தியர்களை வீழ்த்தினார்.
- மூன்றாம் பானிபட் போரில் வெற்றியை தீர்மானித்தது = பீரங்கிப் படைகள்.
- ஆப்கானியர்களின் பீரங்கிப்படை, மராத்தியர்களின் காலாட்படை, குதிரைப்படையை எளிதாக வீழ்த்தியது.
புத்தக வினாக்கள்
- சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்? = தாதாஜி கொண்ட தேவ்
- மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்? = பேஷ்வா
- சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்? = கவிகலாஷ்
- சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்ப கட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது? = காலட்படை.
- குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்? = பாஜிராவ்
- மகாராஷ்டிராவில் பரவிய _____________ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது ? = பக்தி
- பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் __________ ? = காமவிஸ்தார்.
- மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு _____________ இடத்தில் சோகமாய் முடிந்தது? = டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில்.
- அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ___________? = சுமந்த் (அ) துபிர்.
- சிவாஜியைத் தொடர்ந்து ______________ வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்? = அனாஜி தத்தோ.
- மலை மற்றும் மலைப் பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப் பாளர்களிடமிருந்து பாதுகாத்தது? = தவறு. பாறைகளும் குன்றுகளும் மராத்தியர்களை அந்நிய படையெடுப் பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
- பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன? = தவறு. மராத்திய பக்தி இயக்கத்தின் பாடல்கள் மராத்திய மொழியில் இயற்றப்பட்டன.
- சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்? = சரி.
- தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்? = தவறு. அவர்கள் 20 முதல் 100 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்
- அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்? = தவறு. ஒன்பது முறை.
- 7TH HISTORY முகலாயப் பேரரசு
- 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
- 7TH HISTORY பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்
- 7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
- மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
- மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
- மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
- மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி