வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7TH HISTORY வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

  • ராஜபுத்திர அரசுகளின் மிகவும் புகழ்பெற்றது = சித்தூர்.
  • சித்தூரை ஆண்ட “ராணா” மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக கட்டிய வெற்றித்தூண் = ஜெய ஸ்தம்பா.
  • “ஜெய ஸ்தம்பா” வெற்றித்தூணை நிறுவியவர் = ராணா.
  • பிரதிகாரர்களின் வீழ்ச்சி எந்த அரசுகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது = வங்காளத்தில் பாலர்களுக்கும், வடமேற்கு இந்தியாவின் சௌகான்களுக்கும்.
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

ராஜபுத்திர அரசர்கள்

  • சிந்துப் பகுதியை அரேபியர்கள் கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 712.
  • சிந்துப் பகுதியை அரேபியர்கள் கைப்பற்றிய பிறகும், இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சிக் காலத்தை தடுத்த முக்கிய அரசன் = யசோவர்மன்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

 

 

ராஜபுத்திரர்களின் தோற்றம்

  • “ராஜபுத்” என்னும் சொல் = சம்ஸ்கிருத சொல்.
  • “ராஜபுத்” என்னும் சொல் “ரஜ்புத்ர” எனும் சம்ஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டது.
  • “ராஜபுத்” என்னும் சொல்லின் பொருள் = அரசவம்ச ரத்தத்தின் வாரிசு (அல்லது) வழித்தோன்றல்.
  • ஹர்ஷர் மறைந்த ஆண்டு = கி.பி. 647.
  • கி.பி. 647 இல் ஹர்ஷரின் மறைவிற்கு பிறகு பல்வேறு ராஜபுத்திர அரசுகள் உருவாகின.
  • ராஜபுத்திரர்களின் மூன்று குலங்கள் = “சூரிய வம்சி” எனும் சூரிய குலம், “சந்திர வம்சி” எனும் சந்திர குலம், அக்னி குலம் (நெருப்பில் இருந்து தோன்றியவர்கள்).
  • சூரிய குல, சந்திர குல வழித்தோன்றல்களில் முக்கியமான ராஜபுத்திர அரசு = பந்தேல்கண்டின் சந்தேலர்கள்.
  • அக்னி குலத் தோன்றல்களில் மிக முக்கியமான ராஜபுத்திர அரசுகள் = பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள் (சாளுக்கியர்கள்), பரமாரர்கள்.
  • கி.பி. 1829 இல் 36 ராஜபுத்திர அரச குலங்களின் பட்டியலை வெளியிட்டவர் வெளிநாட்டு அறிஞர் = ஜேம்ஸ் டாட்.
  • ராஜபுத்திர அரசு குலங்கள் மொத்தம் எத்தனை = 36.
  • 36 அரசு குலங்களில் மிகவும் புகழ்பெற்ற ராஜபுத்திர அரசுகள் = பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள் (சாளுக்கியர்கள்), பரமாரர்கள்.

மும்முனைப் போர்

  • மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர்.
  • இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.

பிரதிகாரர்கள்

  • பிரதிகாரர்கள், “கூர்ஜரப் பிரதிகாரர்கள்” எனவும் அழைக்கப்படுவர்.
  • பிரதிகாரர்கள் ஆட்சி செய்த பகுதி = கூர்ஜராட்டிரா (ஜோத்பூர்).
  • கூர்ஜர பிரதிகார வம்சத்தை துவக்கி வைத்தவர் = ஹரிச்சந்திரா.
  • பிரதிகார அரசர்களில் மிகவும் முக்கியமானவர் = முதலாம் நாகபட்டர்.
  • சிந்துவின் மீது அரேபியர்கள் மேற்கொண்ட படையெடுப்பை தடுத்து நிறுத்திய ராஜபுத்திர அரசர் = முதலாம் நாகபட்டர் (பிரதிகாரர்கள்).
  • சிந்துவின் மீது அரேபியர்கள் மேற்கொண்ட படையெடுப்பை தடுத்து நிறுத்திய பிரதிகார அரசர் = முதலாம் நாகபட்டார்.
  • அரேபியர்களை வெற்றிகரமாக எதிர்த்த ராஜபுத்திர அரசர்கள் = பிரதிகாரர்கள்.
  • முதலாம் நாகபட்டருக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் = வத்சராஜா.
  • வத்சராஜாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த பிரதிகார அரசர்கள் = இரண்டாம் நாகபட்டார், ராமபத்ரா.
  • ராமபத்ராவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = ராமபத்ராவின் மகன் “மிகிரபோஜா”.
  • பிரதிகார அரசர்களில் மிகவும் வலிமை வாய்ந்தவர் = மிகிரபோஜர்.

பாலர்கள்

  • பாலர்களின் ஆட்சிப்பகுதி = வங்காளம்.
  • பால அரசவம்சத்தை துவக்கி வைத்தவர் = கோபாலர்.
  • அரசவம்ச பின்னணி இன்றி, திறமையின் காரணமாக மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் கோபாலர்.

தர்மபாலர்

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
  • கோபாலரின் மகன் = தர்மபாலர்.
  • தர்மபாலரின் ஆட்சிக்காலம் = கி.பி. 770 – 810.
  • வடஇந்திய அரசியலில் பால வம்சத்தை வலிமை மிக்க அரசாக மாற்றியவர் = தர்மபாலர்.
  • கன்னோஜூக்கு எதிராக வெற்றிகரமான படையெடுப்பை மேற்கொண்ட பால அரசர் = தர்மபாலர்.
  • தர்மபாலர் பின்பற்றிய சமயம் = பௌத்த சமயம்.
  • “விக்கிரமசீல மடாலயத்தை” உருவாக்கியவர் = தர்மபாலர்.

தேவபாலர்

  • தர்மபாலருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = தர்மபாலரின் மகன் தேவபாலர்.
  • பாலர்களின் ஆட்சியை “காமரூபம்” (அஸ்ஸாம்) வரை விரிவுபடுத்திய பால அரசர் = தேவபாலர்.
  • பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களை கொடையாக கொடுத்தவர் = தேவபாலர்.

ஆர்.சி. மஜும்தார்

  • “தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்” என கூறிய அறிஞர் = வரலாற்றறிஞர் ஆர்.சி. மஜும்தார்.
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

முதலாம் மகிபாலர்

  • பால வம்ச அரசர்களிலே மிகவும் சிறந்த அரசர் = முதலாம் மகிபாலர்.
  • பால வம்ச அரசர்களில் வலிமை மிக்க தலைச் சிறந்த அரசர் = முதலாம் மகிபாலர்.
  • “இரண்டாம் பால வம்சத்தை தோற்றுவித்தவர்” என அழைக்கப்படுபவர் = முதலாம் மகிபாலர்.
  • முதலாம் மகிபாலரின் ஆட்சிக்காலம் = கி.பி. 988 – 1038.
  • பிரதிகாரர்களின் வீழ்ச்சி மகிபாலரின் உயர்விற்கு வழிவகுத்தது.
  • முதலாம் மகிபாலரின் படையெடுப்பை தடுத்து நிறுத்திய சோழ அரசன் = முதலாம் ராஜேந்திர சோழன்.
  • மகிபாலரின் மறைவிற்கு பிறகு, பால வம்சம் வீழ்ச்சி அடைந்து, சேனா வம்சத்தின் வருகைக்கு வழிவிட்டது.

 

சௌகான்கள்

  • சௌகான்களின் ஆட்சிக்காலம் = கி.பி. 956 முதல் 1192 வரை.
  • சௌகான்களின் தலைநகரம் = சாகம்புரி.
  • சௌகான்கள் கி.பி.(பொ.ஆ) 956 முதல் 1192 வரை இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளைச் சாகம்பரி நகரில் தலைநகரை நிறுவி ஆட்சி புரிந்தவர்களாவர்.
  • சௌகான்கள் வம்சத்தை துவக்கி வைத்தவர் = சிம்மராஜ்.
  • “அஜ்மீர்” நகரை உருவாக்கிய மன்னர் = சிம்மராஜ் (சௌகான் அரசர்).
  • சௌகான்கள் யாருக்கு கீழ் குறுநில மன்னர்களாக இருந்தனர் = பிரதிகாரர்கள்.
  • அரேபியர்கள் படையெடுப்பை பிரதிகாரர்களுடன் சேர்ந்து தடுத்தி நிறுத்தியவர்கள் = சௌகான்கள்.
  • சௌகான்களின் கடைசி அரசர் = பிருதிவிராஜ் சௌகான்.
  • சௌகான் அரச வம்சத்தின் தலைச்சிறந்த அரசர் = பிருதிவிராஜ் சௌகான்.

பிருதிவிராஜ் சௌகான்

  • முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1191.
  • முதல் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் சௌகான் யாரை தோற்கடித்தார் = முகமது கோரி.
  • இரண்டாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1192.
  • இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் சௌகானை தோற்கடித்து கொன்றவர் = முகமது கோரி.
  • “பிருதிவிராஜ ராசோ” என்னும் நூலின் ஆசிரியர் = சந்த் பார்தை.
  • பிருதிவிராஜ் சௌகானின் காதல் கதையை கூறும் நூல் = பிருதிவிராஜ ராசோ.

ராஜபுத்திரர்களின் ஓவியக்கலை

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
  • பெரும்பாலும் சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட பாணியிலான ஓவியக்கலை மரபு ராஜபுத்திர அரசவைகளில் தோற்றம் பெற்றது.
  • ராஜபுத்திர அரசர்கள் பின்பற்றிய ஓவியக்கலை = ராஜஸ்தானி ஓவியங்கள்.

ராஜபுத்திரர்களின் கட்டிடக்கலை

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
  • ராஜஸ்தான் பகுதியில் ராஜபுத்திர அரசர்கள் கட்டிய கோட்டைகள் = சித்தோர்கார், ரான்தம்பூர், கும்பல்கார்.
  • மத்தியப்பிரதேசம் பகுதியில் ராஜபுத்திர அரசர்கள் கட்டிய கோட்டைகள் = மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார்.
  • ராஜபுத்திரர்களின் குடியிருப்புக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை = குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் (ஜெய்ப்பூர்) கோட்டை, உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை.
  • மலைகளின் மேல் கோட்டைகளை அமைத்தவர்கள் = ராஜபுத்திரர்கள்.
  • ராஜபுத்திரர்களின் கோவில் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குபவை = கஜுராகோ எனும் இடத்திலுள்ள கோவில்கள், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள தில்வாரா சமணக்கோவில், மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தர்யா கோவில்.
  • கஜுராகோ கோவில்கள் உள்ள இடம் = பந்தேல்கண்டு.
  • கஜுராகோ வளாகத்தில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை = 30.
  • கஜுராகோ கோவில்களின் சிறப்பு = கோவில்களின் சிகரங்கள்.
  • கஜுராகோ கோவில்கள் சமண தீர்த்தங்கரர்களுக்கும், சிவன், விஷ்ணு ஆகிய இந்துக் கடவுள்களுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன.
  • ஜோத்பூர் அருகே உள்ள “ஓசியான்” என்னுமிடத்தில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை = 16.
  • 16 இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ள இடம் = ஓசியான் (ஜோத்பூர் அருகே).
  • அபு குன்றின் மேலுள்ள சமணக் கோவில் = தில்வாரா சமணக் கோவில்.
  • அபு குன்றின் மேலுள்ள தில்வாரா சமணக் கோவிலில் எந்த நிறத்தினால் ஆன சலவைக் கற்களால் கூடம் கட்டப்பட்டுள்ளது = வெண்மைநிற சலவைக் கற்கள்.
  • கூடத்தின் மையத்தில் எத்தனை வட்டங்களைக் கொண்ட குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது = பதினொன்று.
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

வங்காள பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு

  • வங்காள பாலர்கள் பின்பற்றிய சமயம் = மகாயான பௌத்தம்.
  • புகழ்பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களை ஆதரித்தவர்கள் = பாலர்கள்.
  • “விக்கிரமசீல பல்கலைக்கழகத்தை” உருவாக்கியவர் = தர்மபாலர்.
  • யாருடைய முயற்சியின் காரணமாக திபத்தில் பௌத்த சமயம் நிறுவப்பட்டது = வங்காள பாலர்களின் கீழ் இருந்த பௌத்த சமயப் பரப்பாளர்கள்.
  • திபெத்திய பௌத்த சமயத்தை சீர்திருத்தம் செய்தவர் = அதிசா.
  • விக்கிரமசீலா மடாலயத்தின் தலைவராக இருந்தவர் = அதிசா.
  • பாலர்கள் யாருடன் சுமுகமான உறவை பேணினர் = சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன் பாலர்கள் சுமூகமான உறவைப் பேணினர்.
  • பாலர்கள் உருவாக்கிய புதிய கலைப்பள்ளி = ‘பாலர்களின் கலை அல்லது “கிழக்கு இந்தியக் கலை” என்று அழைக்கப்பட்டது.
  • இக்கலைப்பாணி பெரும்பாலும் செப்புச் சிலைகளிலும், பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் எனும் வடிவங்களில் வெளிப்பட்டன.

ரக்ஷாபந்தன் (ராக்கி)

  • ரக்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும்.
  • ‘ரக்ஷா’ எனில் பாதுகாப்பு என்றும், ‘பந்தன்’ என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும் பொருளாகும்.
  • இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும்.
  • 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
  • அவ்விழாவில் இந்து மற்றும் முஸ்லீம் பெண்கள் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த ஆடவர் கைகளில் ராக்கியைக் கட்டி அவர்களைச் சகோதரர்களாக ஏற்கவைத்தார்.
  • இந்து, முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இஸ்லாமின் தோற்றம்

  • இஸ்லாம் தோன்றிய இடம் = அரேபியாவில் உள்ள மெக்கா.
  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் = முகமது நபிகள்.
  • இஸ்லாமை பின்பற்றுபவர்கள் = முஸ்லிம்கள்.
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

கலீஃபத் என்றால் என்ன

  • ஓர் இஸ்லாமிய அரசு அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் ஒரே நபரால் ஆளப்பட்டால் அவ்வரசு கலீஃபத் என்றழைக்கப்பட்டது.
  • கலீஃபா என்னும் சொல்லுக்கு, இறைதூதர் முகமது நபிகளின் பிரதிநிதி என்று பொருளாகும்.
  • “உமையத்துகளும்” “அப்பாசித்துகளும்” தொடக்கக்கால கலீஃபத்துகளாகும்.

அல்ப்-டஜின்

  • கஜினியைத் தலைநகராகக் கொண்ட ஆட்சி செய்த துருக்கிய ஆளுநர் = அல்ப்-டஜின்.
  • அல்ப்-டஜினின் மருமகன் = சபக்டிஜின்.
  • சபக்டிஜின், வடமேற்குத் திசை வழியாக இந்தியாவைக் கைப்பற்ற விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்தை அவரது மகன் கஜினி மாமூது தான் நிறைவேற்றினார்.

கஜினி மாமூது

  • இந்தியாவில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிப்பதற்காக இந்தியாவின் மீது 17 முறை கஜினி மாமூது படையெடுப்பை நிகழ்த்தினார்.
  • 1001 ஆம் ஆண்டு ஷாகி அரசர் ஜெயபாலரை தோற்கடித்தார் கஜினி. இத்தோல்வியை பெருத்த அவமானமாக கருதிய ஜெயபாளர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
  • 1008 ஆம் ஆண்டு “வைகிந்த்” என்னுமிடத்தில் ஷாகி அரசர் ஆனந்தபாலரை தோற்கடித்தார் கஜினி.
  • 1011 இல் கஜினி எங்கு படையெடுப்பை நடத்தினார் = பஞ்சாபில் உள்ள நாகர்கோட், டெல்லிக்கு அருகே தானேஷ்வரம்.
  • கஜினி, புனித நகரான “மதுராவை” கொள்ளையடித்த ஆண்டு = 1018.
  • கன்னோஜின் அரசர் ராஜ்யபாலரை தோற்கடித்தார் கஜினி.
  • கி.பி. 1024 இல் சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரை தோற்கடித்து, “அன்கில்வாட்” நகரையும் கொள்ளையடித்தார்.
  • புகழ்பெற்ற சோமநாதபுர படையெடுப்பை கஜினி நிகழ்த்திய ஆண்டு = 1026.
  • சோமநாதபுர கோவிலை கொள்ளையடித்து, அங்கிருந்த சாமி சிலைகளை உடைத்தெறிந்தார் கஜினி.
  • கஜினி மாமூது மரணம் அடைந்த ஆண்டு = 1030.
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

முகமது கோரி (1149 – 1206)

  • கோர் பகுதியை ஆட்சி செய்து வந்த குறுநில மன்னர் = முகமது கோரி.
  • கஜினி மாமூதின் இறப்பிற்கு பிறகு சுதந்திர அரசாக செயல்படத் துவங்கி, கஜினி பகுதிகளை கைப்பற்றினார்.
  • கஜினி மாமூதை போல் இந்தியாவில் செல்வதை கொள்ளை அடிப்பதில் இல்லாமல், முகமது கோரி தனது பேரரசை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய விரும்பினார்.
  • முகமது கோரி முல்தானை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1175.
  • முகமது கோரி பஞ்சாப்பை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1186.
  • முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1191.
  • முதல் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் சௌகான் யாரை தோற்கடித்தார் = முகமது கோரி.
  • இரண்டாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1192.
  • இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் சௌகானை தோற்கடித்து கொன்றவர் = முகமது கோரி.
  • ராஜபுத்திரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய போர் = இரண்டாம் தரெய்ன் போர்.
  • இந்தியாவில் முதல் முஸ்லிம் அரசு நிறுவப்பட்ட இடம் = ஆஜ்மீர்.
  • முகமது கோரி மரணம் அடைந்த ஆண்டு = கி.பி. 1206.
  • முகமது கோரியின் தளபதி = குத்புதின் ஐபக்.
  • “டெல்லியின் முதல் சுல்தான்” என தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டவர் = குத்புதின் ஐபக்.

சிந்துவை அரேபியர் கைப்பற்றியதும் அதன் தாக்கமும்

  • சிந்துவின் மீது முகமது பின் காசிம் படையெடுத்த ஆண்டு = கி.பி. 712.
  • சிந்துவின் அரசர் = தாகீர்.
  • சிந்துவின் அரசர் தாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
  • சிந்துவின் தலைநகர் அரோர் கைப்பற்றப்பட்டது.
  • காசிம் முல்தானையும் கைப்பற்றினார்.
  • சிந்துப்பகுதிவாழ் மக்களுக்குப் “பாதுகாக்கப்பட்ட மக்கள்” எனும் தகுதி வழங்கப்பட்டது.
  • மக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் மதங்களிலும் எவ்விதத் தலையீடும் செய்யப்படவில்லை.
  • அரேபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
  • வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாகச் சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அரேபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
  • 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அதுவரையிலும் மேலைநாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.
  • ஐரோப்பியர்கள் கணிதம் தொடர்பான அதிக அறிவை அரேபியர் வாயிலாகப் பெற்றனர்.
  • பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
  • மேலைநாட்டவரும் அரேபியர்களும் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

Leave a Reply