7TH HISTORY டெல்லி சுல்தானியம்
7TH HISTORY டெல்லி சுல்தானியம்
- இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை முதன் முதலில் நிறுவியவர்கள் = துருக்கியர்கள்.
- இந்தியாவில் முதன் முத்தலில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியவர் = முகமது கோரி.
- இந்தியாவில் எந்த நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சி நிறுவப்பட்டது = பனிரெண்டாம் நூற்றாண்டு.
- டெல்லி சுல்தான்களில் கீழ் இந்தியாவில் ஆட்சி செய்த வம்சங்கள்,
-
-
- அடிமை வம்சம் = கி.பி. 1206 – 1290 (84 ஆண்டுகள்).
- கில்ஜி வம்சம் = கி.பி. 1290 – 1320 (30 ஆண்டுகள்)
- துக்ளக் வம்சம் = கி.பி. 1320 – 1414 (94 ஆண்டுகள்)
- சையது வம்சம் = கி.பி. 1414 – 1451 (37 ஆண்டுகள்)
- லோடி வம்சம் = கி.பி. 1451 – 1526 (75 ஆண்டுகள்)
-
-
- டெல்லி சுல்தான்களில் மிக அதிக காலம் ஆட்சி செய்த வம்சம் = துக்ளக் வம்சம்.
- டெல்லி சுல்தான்களில் மிக குறைந்த காலம் ஆட்சி செய்த வம்சம் = கில்ஜி வம்சம்.
- டெல்லி சுல்தான்களில் முதல் மன்னர் = குத்புதின் ஐபெக் (அடிமை வம்சம்).
- டெல்லி சுல்தான்களில் கடைசி மன்னர் = இப்ராகிம் லோடி (லோடி வம்சம்).
- டெல்லி சுல்தான்களில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் = பகலூல் லோடி (39 ஆண்டுகள்).
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
முகமது கோரி
- பனிரெண்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் முதன் முதலில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியவர் = முகமது கோரி.
- அவருக்கு மகன்கள் இல்லை.
- “பன்டகன்” என்றால் என்ன = பன்டகன் என்பது ஒரு பாரசீகச் சொல். பன்டகன் என்பதன் பொருள் = இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் என்பதாகும்.
- முகமது கோரி இவ்வடிமைகளை தனது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களுக்கு ஆளுநராக நியமித்தார்.
- முகமது கோரி இறந்த ஆண்டு = 1206.
- முகமது கோரியின் மறைவிற்கு பிறகு, இந்தியாவில் இருந்த அவரின் துருக்கிய பகுதிகளுக்கு ஆளுநராக இருந்த “குத்புதின் ஐபெக்” தன்னை அரசராக அறிவித்துக் கொண்டார்.
அடிமை வம்சம் (1206 – 1290)
- இந்தியாவில் அடிமை வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = குத்புதின் ஐபெக்.
- இந்தியாவில் அடிமை வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் = கைகுபாத்.
- அடிமை வம்ச அரசை “மாம்லுக்” அரச வம்சம் என்றும் கூறுவர்.
- “மாம்லுக்” என்பது ஒரு அரேபியச் சொல் ஆகும். மாம்லுக் என்பதன் பொருள் = அடிமை.
- அடிமை வம்சத்தின் முக்கிய அரசர்கள் = குத்புதின் ஐபெக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதின் பால்பன்.
- இந்தியாவில் அடிமை வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 84.
- அடிமை வம்ச ஆட்சியாளர்கள்,
-
-
- குத்புதின் ஐபெக் = 1206 – 1210.
- இல்துமிஷ் = 1210 – 1236.
- ரஸ்ஸியா = 1236 – 1240.
- கியாசுதின் பாலப்ன் = 1266 – 1287.
- கைகுபாத் = 1287 – 1290.
-
-
- அடிமை வம்ச ஆட்சியாளர்களில் அதிக ஆண்டு ஆட்சி செய்தவர் = இல்துமிஷ் (26 ஆண்டுகள்).
குத்புதின் ஐபெக் (1206 – 1210)
- குத்புதின் ஐபெக்கின் தலைநகரம் = லாகூர்.
- குத்புதின் ஐபெக் லாகூரில் இருந்து எந்த நகரத்திற்கு தலைநகரை மாற்றினார் = டெல்லி.
- தானே தலைமையேற்று சென்று பல பகுதிகளை கைப்பற்றினார்.
- கீழ் கங்கைச் சமவெளி பகுதிகளான பீகார், வங்காலாம் ஆகியவற்றை கைப்பற்றும் பொறுப்பை யாருக்கு வழங்கினார் குத்புதின் ஐபெக் = பக்தியார் கில்ஜியிடம்.
- குத்புதின் ஐபெக் டெல்லியில் கட்டிய மசூதி = குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித்.
- இந்தியாவில் உள்ள மசூதிகளிலே மிகவும் பழமையான மசூதி = குத்புதின் ஐபெக் கட்டிய குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித்.
- குதுப்மினார் கட்ட அடிக்கல் நாட்டியவர் = குத்புதின் ஐபெக்.
- குதுப்மினாரை கட்டி முடித்தவர் = இல்துமிஷ் (ஐபெக்கின் மருமகன்).
- எந்த விளையாட்டின் பொழுது குத்புதின் ஐபெக் குதிரையில் இருந்து கீழே விழுந்து இறந்தார் = போலோ.
- குத்புதின் ஐபெக் இறந்த ஆண்டு = 1210.
இல்துமிஷ் (1210 – 1236)
- குத்புதின் ஐபெக்கின் மகன் = ஆரம் ஷா.
- ஆரம் ஷா திறமையற்றவராக இருந்ததால் இல்துமிஷ் (குத்புதின் ஐபெக்கின் மருமகன்) சுல்தானாக தேர்வு செய்யப்பட்டார்.
- எந்த டெல்லி சுல்தான் ஆட்சியில் பொழுது “செங்கிஸ்கான்” தலைமையிலான மங்கோலியப் படை இந்திய எல்லையை தாக்கியது = இல்துமிஷ்.
- இல்துமிஷிடம் தஞ்சம் கேட்டு வந்த மன்னர் = குவாரிஜம் ஷா ஜலாலுதீன்.
- செங்கிஸ்கானால் விரட்டப்பட்ட குவாரிஜம் ஷா ஜலாலுதீன், இல்துமிஷிடம் தஞ்சம் கேட்க, அதனை ஏற்க மறுத்து மங்கோலியப் படையெடுப்பை தவிர்த்தார் இல்துமிஷ்.
- மங்கோலியப் படையெடுப்பை தடுக்க இல்துமிஷ் உருவாக்கிய குழு = நாற்பதின்மர் குழு (சகல்கானி).
- “சகல்காணி” அல்லது “நாற்பதின்மர் குழுவை” உருவாக்கியவர் = இல்துமிஷ்.
- “சகல்கானி” என்றால் என்ன = மங்கோலிய படையெடுப்பை எதிர்கொள்ள இல்துமிஷ் உருவாக்கிய துருக்கிய பிரபுக்களை கொண்ட நாற்பது பேர் கொண்ட குழு.
- தனது படைகளில் பணியாற்றிய ராணுவ அதிகாரிகளுக்கு “இக்தாக்களை” (நிலங்கள்) வழங்கினார்.
- “இக்தா” என்றால் என்ன = இக்தா என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ள ஊதியத்திற்கு பதிலாக வழங்கப்படும் நிலங்கள்.
- “முக்தி” என்றால் என்ன = இக்தா நிலங்களை பெற்ற வீரர்களை “இக்தாதார்” அல்லது “முக்தி” என்று கூறுவர்.
- குதுப்மினார் கட்ட அடிக்கல் நாட்டியவர் = குத்புதின் ஐபெக்.
- குதுப்மினாரை கட்டி முடித்தவர் = இல்துமிஷ் (ஐபெக்கின் மருமகன்).
- இல்துமிஷ் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 26.
- இல்துமிஷ் மறைந்த ஆண்டு = 1236 ஏப்ரல்.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
ரஸ்ஸியா (1236 – 1240)
- இல்துமிஷின் மகன் = ருக்குதீன் பெரோஸ்.
- இல்துமிஷின் மகன் மரணம் அடைந்ததால், அவரின் மகளான “ரஸ்ஸியா” பேகத்தை தனக்கு பிறகு டெல்லி சுல்தானாக இருக்க வேண்டும் எண்டு அறிவித்திருந்தார் இல்துமிஷ்.
- ரஸ்ஸியா சுல்தானுக்கு எதிராக செயல்பட்டவர்கள் = துருக்கிய இனத்தை சாராத பிரபுக்கள்.
- ரஸ்சியா அதிக நம்பிய அவரின் அடிமை = ஜலாலுதீன் யாகுத் எனப்படும் எத்தியோப்பிய அடிமை.
- துருக்கிய பிரபுக்கள் சதியால் ரஸ்ஸியா பேகம் கொலை செய்யபப்ட்ட ஆண்டு = 1240.
கியாசுதின் பால்பன் (1266 – 1287)
- ரஸ்ஸியாவின் மரணத்திற்கு பிறகு மூன்று அடிமை வம்ச ஆசியாளர்கள் ஆண்டனர்.
- அவர்களுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் = கியாசுதின் பால்பன்.
- “சகல்காணி” அல்லது “நாற்பதின்மர் குழுவை” ஒழித்தவர் = கியாசுதின் பால்பன்.
- “சகல்காணி” அல்லது “நாற்பதின்மர் குழுவை” உருவாக்கியவர் = இல்துமிஷ்.
- “ஒற்றர்” துறையை உருவாக்கிய டெல்லி சுல்தான் = கியாசுதின் பால்பன்.
- பால்பனுக்கு எதிராக கலகம் செய்த வங்காள ஆளுநர் = துக்ரில்கான்.
- “மியோக்கள்” என்போர் யார் = வடமேற்கு இந்தியாவில் இருந்த ராஜபுத்திர முஸ்லிம்கள்.
- பால்பனின் எதிரிகள் = மீவாட்டை சேர்ந்த மியோக்கள்.
- மங்கோலியர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டார் பால்பன்.
- செங்கிஸ்கானின் பேரன் = குலகுகான்.
- செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய ஆளுநரான “குலகுகான்” என்பவரிடம் இருந்து “மங்கோலியர்கள் சட்லஜ் நதியை தாண்டி படையெடுத்து வரமாட்டார்கள்” என்ற உறுதிமொழியை பெற்றார் பால்பன்.
- பால்பன் ஆதரித்த பாரசீக அறிஞர் = அமீர் குஸ்ரூ.
- பால்பன் மரணம் அடைந்த ஆண்டு = 1287.
- பால்பனின் மகன் = கைகுபாத்.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
கைகுபாத் (1287 – 1290)
- அடிமை வம்சத்தின் கடைசி சுல்தான் = கைக்குபாத்.
- கைகுபாத்தின் தளபதி = மாலிக் ஜலாலுதீன் கில்ஜி.
- “நாயிப்” என்றால் என்ன = அரசுப் பிரதிநிதி.
- நாயிப் எனப்படும் அரசுப் பிரதிநிதியாக பொறுப்பேற்றார் = மாலிக் ஜலாலுதீன் கில்ஜி.
- சுல்தான் கைகுபாத்தின் பெயரால் ஜலாலுதீன் கில்ஜி நாட்டை ஆண்டார்.
- தனது ஆட்கள் மூலம் கைக்குபாதை கொலை செய்த ஜலாலுதீன் கில்ஜி, அரியணையை கைப்பற்றி கில்ஜி வம்சத்தை துவக்கி வைத்தார்.
கில்ஜி வம்சம் (1290 – 1320)
- கில்ஜி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = மாலிக் ஜலாலுதீன் கில்ஜி.
- கில்ஜி வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 30 ஆண்டுகள்.
- கில்ஜி வம்ச ஆட்சியாளர்கள்,
-
-
- மாலிக் ஜலாலுதீன் கில்ஜி = 1290 – 1296.
- அலாவுதின் கில்ஜி = 1296 – 1316 (20 ஆண்டுகள்).
-
-
ஜலாலுதீன் கில்ஜி (1290 – 1296)
- ஜலாலுதீன் கில்ஜி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- ஜலாலுதீன் கில்ஜியின் தளபதி = அலாவுதீன் கில்ஜி.
- ஜலாலுதீன் கில்ஜி ஆட்சியின் பொழுது எந்த மாகானா ஆளுநராக இருந்தவர் அலாவுதீன் கில்ஜி = காரா.
- அலாவுதீன் கில்ஜியின் முக்கிய படையெடுப்பு = தக்காண தேவகிரி அரசர் ராமச்சந்திரனுக்கு எதிரானது ஆகும்.
- தேவகிரி அரசரை வீழ்த்தி,எ நன்கரை கொள்ளையடித்து, அதில் கிடைத்த செல்வங்களை முக்கிய பிரபுக்களுக்கும் தளபதிகளுக்கும் கொடுத்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் அலாவுதீன் கில்ஜி.
- பின்னர் ஜலாலுதீன் கில்ஜியை கொன்று ஆட்சியைப் பிடித்தார் அலாவுதீன் கில்ஜி.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
அலாவுதீன் கில்ஜி (1296 – 1316)
- அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி = மாலிக்கபூர்.
- தென்னிந்தியாவின் மீது படையெடுப்பு நிகழ்த்திய முதல் டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
- கி.பி. 1310 இல் மாலிக்கபூர் தலைமையிலான படை தென்னிந்தியாவின் மதுரை வரை படையெடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- தென்னிந்திய அரசர்கள் (பாண்டிய அரசர்கள் உட்பட) அலாவுதீன் கில்ஜியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
- அலாவுதீன் கில்ஜியின் சிறப்பு = அவரின் அரசியல் நிர்வாக சீர்திருத்தங்கள்.
- டெல்லியை சுற்றியுள்ள வேளாண் நிலங்களை முறையாக அளந்து அதற்கான நிலவரியை விதித்தார்.
- வரிகளை வசூல் செய்யும் பொறுப்பு ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
- “கட்டாய உணவு தானியக் கொள்முதல்” முறையை கொண்டுவந்த டெல்லி சுல்தான் = அலாவுதீன் கில்ஜி.
- அலாவுதீன் கில்ஜி மரணம் அடைந்த ஆண்டு = கி.பி. 1316.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
சித்தூர் சூறையாடல் (கி.பி. 1303)
- கி.பி. 1303 இல் அலாவுதீன் கில்ஜியின் படைகள் சித்தூர் அரசு மீது படையெடுத்து, அந்நகரை சூறையாடியது.
- ராஜபுத்திர வம்ச ஆண்களும் பெண்களும் தங்களின் பண்டைய “ஜவ்ஹர்” முறைப்படி ஆடவர் போர்க்களத்தில் இறந்தனர், பெண்கள் தீயில் குதித்து தங்களை மாய்த்துக் கொண்டனர்.
துக்ளக் வம்சம் (1320 – 1414)
- அலாவுதீன் கில்ஜியின் மரணத்திற்கு பிறகு திறமையற்ற ஆட்சியாளர்கள் பதவி ஏற்றதால் ஏற்பட்ட கலகத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு “கியாசுதின் துக்ளக்”, ஆட்சியை கைப்பற்றி துக்ளக் வம்ச ஆட்சியை நிறுவினார்.
- துக்ளக் வம்ச ஆட்சியாளர்கள்,
-
-
- கியாசுதின் துக்ளக் = 1320 – 1324.
- முகமது பின் துக்ளக் = 1325 – 1351 (25 ஆண்டுகள்)
- பிரோஸ் ஷா துக்ளக் = 1351 – 1388 (38 ஆண்டுகள்)
-
-
கியாசுதின் துக்ளக் (1320 – 1324)
- அலாவுதீன் கில்ஜியின் மரணத்தால் உருவாகிய புதிய அரசுகளை மீண்டும் டெல்லி சுல்தானியத்திற்கு கீழ் கொண்டு வந்தார் கியாசுதின் துக்ளக்.
- கியாசுதின் துக்ளக்கின் மகன் = ஜூனாகான்.
- வாராங்கல் அரசர் பிரதாப ருத்ரானை வீழ்த்தி பெரும் செல்வத்தை கொள்ளையடித்து வந்தான் ஜூனாகான்.
- “துக்ளதாபாத்” என்னும் புதிய நகரை உருவாக்கியவர் = கியாசுதின் துக்ளக்.
- ஜூனாகான் தனது தந்தையை கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
- ஜூனாகான் தனது பெயரை “முகமது பின் துக்ளக்” என மாற்றிக் கொண்டு ஆட்சி புரிந்தார்.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
முகமது பின் துக்ளக் (1325 – 1351)
- முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் = ஜூனாகான்.
- மிகுந்த கல்வி அறிவு பெற்றவர்.
- முகமது பின் துக்ளக், தலைநகரை “டெல்லியில்” இருந்து எங்கு மாறினார் = தேவகிரி (தௌலதாபாத்).
- தேவகிரி நகரின் பெயரை தௌலதாபாத் என்ற மாற்றிய டெல்லி சுல்தான் = முகமது பின் துக்ளக்.
- டெல்லியில் இருந்து தேவகிரிக்கு நடந்து செல்ல 40 நாட்கள் ஆனது. தேவகிரி நகருக்கு செல்லாமல் டெல்லியில் தலைமறைவாக இருந்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.
- தனது தலைநகர் மாற்றம் திட்டம் தவறு என உணர்ந்த டெல்லி சுல்தான், மீண்டும் மக்களை டெல்லிக்கே திரும்பி செல்ல உத்தரவிட்டார்.
- முகமது பின் துக்ளக்குடன் டெல்லி திரும்பிய வெளிநாட்டு பயணி = மொராக்கோ நாட்டு பயணி இபின் பதூதா.
- டெல்லியை அடைந்த பொழுது “டெல்லி நகரம் காலியாக, கைவிடப்பட்டதாக ஆனால் குறைந்தளவு மக்களுடன் இருந்தது” என தனது பயணக் குறிப்பில் கூறியுள்ளார் இபின் பதூதா.
- நிலவரியை “தானியமாக” பெரும் முறையை கையாண்டவர் = அலாவுதீன் கில்ஜி.
- நிலவரியை “பணமாக” வசூலிக்கும் முறையை கொண்டுவந்தவர் = முகமது பின் துக்ளக்.
- முகமது பின் துக்ளக் “செப்பு நாணயங்களை” அச்சிட்டு வெளியிட்டார்.
- பொதுமக்கள் கள்ளத்தனமாக செப்பு நாணயங்களை உருவாக்கியதன் விளைவாக நாட்டில் பணப் பொருளாதாரம் சீர்கெட்டது.
- இதனால் செப்பு நாணயங்களை மீண்டும் திரும்பப் பெற்றார் முகமது பின் துக்ளக்.
- அரசு திவால் ஆனது.
- பொருளாதாரத்தை ஈடுகட்ட நிலவரியை உயர்த்தி, விவசாயிகளின் எதிர்ப்பை பெற்றார். விவசாயிகள் வேளாண்மை செய்வதை நிறுத்தினர். நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.
- முகமது பின் துக்ளக் சுல்தானாக ஆட்சி செய்த ஆண்டுகள் = 25.
- நாட்டில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களால், பல்வேறு மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டன.
- சுல்தானிடம் பணியாற்றிய “பாமினி” என்பவர் தௌலதாபாத் உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிணைத்து “பாமினி அரசை” உருவாக்கிக் கொண்டார்.
- மதுரை தனி சுல்தானிய அரசாக உருவான ஆண்டு = கி.பி. 1335.
- முகமது பின் துக்ளக் மறைந்தது = 23 மார்ச் 1351.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
பிரோஸ் ஷா துக்ளக் (1351 – 1388)
- கியாசுதின் துக்ளக்கின் சகோதரர் மகன் = பிரோஸ் ஷா துக்ளக்.
- “இரக்கமுள்ள அரசர்” என பெயர் பெற்ற டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக்.
- மிக அதிக காலம் ஆட்சி செய்த துக்ளக் வம்ச ஆட்சியாளர் = பிரோஸ் ஷா துக்ளக்.
- 38 ஆண்டுகள் ஆட்சி செய்த டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக் (38 ஆண்டுகள்).
- இவர் பிரிந்து சென்ற பகுதிகளை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை.
- ஏழை முஸ்லிம்களுக்கு உதவுவதற்கு அறக்கட்டளைகளை நிறுவினார்.
- கொடிய தண்டனைகளை ஒழித்தார்.
- இஸ்லாமிய சட்டங்களில் இல்லாத வரிகளை நீக்கினார்.
- விவசாய கடன்களை ரத்து செய்த டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக்.
- 1200 புதிய தோட்டங்களை உருவாக்கிய டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக்.
- “பிரோஷாபாத்” என்னும் புதிய நகரை உருவாக்கிய டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக்.
- “ஜான்பூர்” நகரை உருவாக்கிய டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக்.
- “ஹிசார்” நகரை உருவாக்கிய டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக்.
- “பிரோஸ்பூர்” நகரை உருவாக்கிய டெல்லி சுல்தான் = பிரோஸ் ஷா துக்ளக்.
- அமைதியான முயற்சிகள் மூலம் நாட்டை கட்டிக்காக்க முயன்றார்.
- இவரின் மகன் “முகமதுகான்”, தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தான்.
- பிரோஸ் ஷா துக்ளக் மறைந்த ஆண்டு = 1388 (83 வயதில்).
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
தைமூர் படையெடுப்பு (1398 டிசம்பர்)
- தைமூர் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு = கி.பி. 1398.
- “தாமர்லைன்” என்று அழைக்கப்பட்டவர் = தைமூர்.
- சாமர்கண்ட் பகுதியை ஆட்சி செய்தவர் = தைமூர்.
- டெல்லி மீது தைமூர் படையெடுத்த ஆண்டு = 1398 டிசம்பர்.
- தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்து மிக அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதி = பஞ்சாப்.
- டெல்லியை விட்டு செல்லும் முன் யாரை தனது பிரதிநிதியாக நியமித்தார் தைமூர் = கிசிர்கான்.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
சையது வம்சம் (1414 – 1451)
- கி.பி. 1414 இல் கிசிர்கான் சையது வம்ச ஆட்சியை இந்தியாவில் துவக்கி வைத்தார்.
- சையது வம்சம் இந்தியாவை 37 ஆண்டுகள் ஆட்சி செய்தது.
- சையது வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் = சுல்தான் அலாவுதீன் ஆழம் ஷா.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்
லோடி வம்சம் (1451 – 1526)
- டெல்லி சுல்தான்களின் கடைசி வம்சம் = லோடி வம்சம்.
- லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டுகள் = 75 ஆண்டுகள்.
- லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் = பகலூல் லோடி.
- லோடி வம்ச ஆட்சியாளர்கள்
-
-
- பகலுள் லோடி = 1451-1489
- சிக்கந்தர் லோடி = 1489-1517
- இப்ராகிம் லோடி = 1517-1526
-
-
- டெல்லி சுல்தான்களில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் = பகலூல் லோடி (39 ஆண்டுகள்).
- பகலூல் லோடியின் மகன் = சிக்கந்தர் லோடி.
- “ஆக்ரா” நகரை உருவாக்கிய டெல்லி சுல்தான் = சிக்கந்தர் லோடி.
- “ஆக்ரா” நகரை தலைநகராக அறிவித்த டெல்லி சுல்தான் = சிக்கந்தர் லோடி.
- சிக்கந்தர் லோடியின் மகன் = இப்ராகிம் லோடி.
- டெல்லி சுல்தான்களில் கடைசி மன்னர் = இப்ராகிம் லோடி.
- முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1526.
- பானிபட் போரில் இப்ராகிம் லோடியை தோற்கடித்தவர் = பாபர்.
- லோடி அரசை வீழ்த்தி முகலாய ஆட்சியை இந்தியாவில் துவக்கி வைத்தவர் = பாபர்.
இந்தோ சாராசானிக் கலைவடிவம்
- டெல்லி சுல்தான்கள் உருவாக்கிய கட்டிட கலைவடிவம் = இந்தோ சாராசானிக் கலைவடிவம்.
- இந்தோ சாராசானிக் கலைவடிவம் என்பது = கட்டிடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும், அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்தவை ஆகும்.
- இந்தோ சாராசானிக் கலைவடிவ கட்டிடங்கள் = அலெய் தார்வாசா, குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்தி மசூதி, இல்துமிஷ் கல்லறை, பால்பன் கல்லறை, தௌலதாபாத் கோட்டை.
- 7TH HISTORY டெல்லி சுல்தானியம்