டெல்லிச் சுல்தானியம்

டெல்லிச் சுல்தானியம்

டெல்லிச் சுல்தானியம்

டெல்லிச் சுல்தானியம்

  • முதன் முதலில் இந்தியாவின் மேல் படையெடுத்த முஸ்லிம்கள் = அரேபியர்கள்.
  • பற்பல குழுக்களாக இருந்த அரேபியர்கள், முகமது நபியின் இஸ்லாம் மதத்தின் காரணமாக அரேபியர்கள் ஒன்றிணைந்து பெரும் சக்தியாக உருவெடுத்தனர்.
  • முகமது நபியின் மறைவிற்கு பிறகு, அவரின் பிரதிநிதிகளான “கலிஃபாக்கள்” (Khalifah) பெரும் அரேபியப் பேரரசை உருவாக்கினர்.
  • அரேபியர்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் சிந்துப் பகுதி மேல் படையெடுத்தனர்.
  • சிந்துவின் மீது படையெடுக்க கட்டளையிட்ட கலிஃபா = அல் வாலித்.
  • கலிஃபாவின் கட்டளைக்கு இணங்க சிந்துவின் மீது படையெடுக்க “முகமது பின் காசிமை” அனுப்பிய பாரசீகத் தலைவர் = அல்ஹஜாஜ்.
  • சிந்துவின் மீது முகமது பின் காசிம் படையெடுத்த ஆண்டு = கி.பி. 711.
  • முகமது பின் காசிமின் படையெடுப்பின் பொழுது சிந்துவின் மன்னராக இருந்தவர் = தாகிர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிந்து படையெடுப்பிற்கான காரணங்கள்

  • அரேபியர்கள் சிந்துவின் மீது படையெடுக்க பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அவை,
    1. இஸ்லாத்தின் பிரச்சாரம்
    2. இந்தியாவின் அற்புதமான செல்வம்
    3. இந்தியாவின் அரசியல் நிலை
    4. உடனடி காரணம்
டெல்லிச் சுல்தானியம்
டெல்லிச் சுல்தானியம்

சிந்து மீது படையெடுப்பதற்கான உடனடி காரணம்

  • இலங்கை மன்னன் கலிஃபாவிற்கு அனுப்பிய அன்பளிப்பு பொருள்கள் அடங்கிய எட்டு கப்பல்களை சிந்து நாட்டின் கொள்ளைக் கும்பல் கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்தது. கொள்ளைக் கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காததால் சிந்துவின் மீது படையெடுப்பு துவங்கியது.

ராவர் போர் கி.பி. 712

  • முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்த ஆண்டு = கி.பி. 711.
  • முதலில் சிந்துவின் துறைமுக நகரம் “தெபால்” (Debal) கைப்பற்றப்பட்டது.
  • பின்னர் “நிருன்” (Nirun) நகரம் கைப்பற்றப்பட்டது.
  • அதற்கடுத்து “சேவான்” (Sehwan) நகரமும் காசிமால் கைப்பற்றப்பட்டது.
  • ராவர் (Rawar) போர் நடைபெற்ற ஆண்டு = கி.பி. 712.
  • கி.பி. 712 இல் “ரேவார்’ என்னுமிடத்தில் நடைபெற்ற போரில், முகமது பின் காசிம், சிந்துவின் அரசர் தாகிரை கொன்று, சிந்து தேசம் முழுவதையும் அரேபியர்கள் கீழ் கொண்டு வந்தார்.
  • கி.பி. 713 இல் முல்தான் நகரை கைப்பற்றினார்.
  • முல்தான் நகரில் அளவற்ற தங்கத்தை கைப்பற்றிய காசிம், முல்தான் நகரை “தங்க நகரம்” (City of Gold) என்று வர்ணித்தார்.

அரேபியர்களின் ஆதிக்கம்

  • முகமது பின் காசிம் கி.பி. 715 இல், கன்னோசி நகர் மீது போர் துவக்கும் வேளையில், காலிஃபாவால் மீண்டும் அரேபியாவிற்கு அழைக்கப்பட்டு, துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
  • இந்தியாவில் அரேபியர்களின் ஆதிக்கம் காசிமின் மறைவோடு நின்றுவிட்டது.
  • கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள், இந்தியப் பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியவில்லை.

ஸ்டான்லி லேன்பூல்

  • அரேபியரின் சிந்துப் படையெடுப்பு “ஒரு பயனற்ற வெற்றி” அல்லது “விளைவுகள் இல்லாத வெற்றி” (a triumph without results) என்று கூறியவர் = ஸ்டான்லி லேன்பூல்.
  • அரேபியரின் சிந்துப் படையெடுப்பு, “இந்திய வரலாற்றிலும், இஸ்லாமிய வரலாற்றிலும் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி” (It was a mere episode in the history of India and affected only a small portion of the fringe of that vast country.) என்று கூறியவர் = ஸ்டான்லி லேன்பூல்.
டெல்லிச் சுல்தானியம்
டெல்லிச் சுல்தானியம்

வோல்ஸ்லி ஹெய்க்

  • வோல்ஸ்லி ஹெய்க் (Wolsely Haig) என்பார் அரேபியர்களின் சிந்துப் படையெடுப்பை பற்றி “இது இந்திய வரலாற்றில் ஒரு அத்தியாயம் மற்றும் அந்த பரந்த நாட்டின் விளிம்பில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பாதித்தது” (It was a mere episode in the history of India and affected only a small portion of the fringe of that vast country) என்று கூறியுள்ளார்.

சிந்து படையெடுப்பின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள்

  • அரேபியர்களின் சிந்து படையெடுப்பின் காரணமாக இந்தியர்களின் கணிதம், வானியல், மருத்துவம் போன்ற கலைகள் அரேபியாவில் பரவி, அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பரவ வழிவகுத்தது.
  • இந்தியர்களிடம் இருந்து எண்ணிக்கை முறையை (Numerical Figures) கற்றுக் கொண்டனர்.
  • அரேபியர்களின் படையெடுப்பால் இந்தியாவில் பெரிய அளவில் எவ்வித ரசியல் மாறுபாடுகளும் ஏற்படவில்லை.
  • முஸ்லிம்கள் அல்லாத இந்தியர்களை அரேபியர்கள் “சிம்மிக்கள்” (Zimmis) என்றனர்.

 

Leave a Reply