7TH HISTORY முகலாயப் பேரரசு
7TH HISTORY முகலாயப் பேரரசு
- இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் = பாபர்.
- முகலாயப் பேரரசு பெரும் புகழுடன் ஆட்சி செய்த ஆண்டுகள் = கி.பி. 1526 முதல் 1707 வரை.
- இடைப்பட்ட காலத்தில் ஷெர்ஷா சூரி சிறிது காலம் ஆட்சி செய்தார்.
- முகலாயப் பேரரசில் சிறப்பு மிக்க ஆட்சியாளர்கள் = ஆறு பேர். அவர்கள்,
-
-
- பாபர் = 1526 – 1530 (5 ஆண்டுகள்).
- ஹுமாயுன் = 1530 – 1540 மற்றும் 1555 – 1556 (12 ஆண்டுகள். இடையில் 1540 முதல் 1555 வரையிலான சுமார் 15 ஆண்டுகள் ஷெர்ஷா சூரியின் ஆட்சிக்காலம்).
- அக்பர் = 1556 – 1605 (50 ஆண்டுகள்).
- ஜகாங்கீர் = 1605 – 1627 (23 ஆண்டுகள்).
- ஷாஜகான் = 1627 – 1658 (31 ஆண்டுகள்).
- அவுரங்கசீப் = 1658 – 1707 (49 ஆண்டுகள்).
-
-
- 1707இல் அவுரங்கசீப் மறைவிற்கு பிறகு பேரரசு சிதையத் துவங்கியது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாபர் (1526 – 1530)
- இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியர் = ஜாகிருதீன் முகமது பாபர்.
- “முகல்” என்னும் சொல் பாபரின் மூதாதையர்களை குறிக்கிறது.
- பாபர் தந்தையர் வழியில் யாரின் கொள்ளுபேரன் ஆவார் = தைமூரின் கொள்ளுப்பேரன்.
- பாபர் அவரது தந்தையின் வழியில் தைமூரின் ஐந்தாவது வழித்தோன்றல் மற்றும் தாய்வழியில் இருந்து செங்கிஸ் கானின் பதினான்காவது சந்ததியாவார்.
- பாபர் தாய் வழியில் செங்கிஸ்கான் வழித்தோன்றல் ஆகும்.
- பாபரின் தாயின் தந்தை = யூனிஸ்கான் (பாபரின் தாத்தா). இவர் செங்கிஸ்கானின் பதிமூன்றாவது தலைமுறை வாரிசு ஆவார்.
- பாபர் பிறந்த தினம் = 14 பிப்ரவரி 1483.
- பாபரின் இயற் பெயர் = ஜாகிருதீன் முகமது பாபர்.
- “ஜாகிருதீன்” என்பதன் பொருள் = நம்பிக்கையைக் காப்பவர்.
- தனது பன்னிரெண்டாவது வயதில் (1495) “பர்கானாவின்” அரசராக நியமிக்கப்பட்டார்.
- தனது இருபத்தி இரண்டாவது வயதில் (கி.பி. 1505), அதாவது பத்து ஆண்டுகளுக்கு பிறகு காபூலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
- பாபர் காபூலை கைபற்றிய ஆண்டு = 1505.
- பாபர் முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுப்பு நடத்திய ஆண்டு = 1505.
- பாபர் காபூலை ஆட்சி செய்த பொழுது இந்தியாவை ஆண்டு வந்த டெல்லி சுல்தான் = இப்ராகிம் லோடி.
- பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வரும் படி கோரியவர்கள் = தௌலத்கான், தௌலத்கானின் மகன் திலாவர் கான் மற்றும் இப்ராகிம் லோடியின் மாமனார் ஆலம்கான்.
- பாபர் டெல்லியின் மீது படை எடுத்த ஆண்டு = 1526.
- முதலாம் பானிபட் போர் யாருக்கு இடையே நடைபெற்றது = பாபர் மற்றும் இப்ராகிம் லோடி.
- முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு = 1526.
- 1526 இல் நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர் இப்ராகிம் லோடியை தோற்கடித்து “டெல்லி சுல்தானிய” ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து தனது முகலாய ஆட்சியை இந்தியாவில் துவக்கி வைத்தார்.
- “கன்வா போர்” எப்பொழுது நடைபெற்றது = 1527.
- கன்வா போரில் பாபர் யாரை தோற்கடித்தார் = ராணா சங்கா.
- “சந்தேரி போர்” நடைபெற்ற ஆண்டு = 1528.
- சந்தேரி போரில் பாபர் யாரை தோற்கடித்தார் = சந்தேரி தலைவர் மேதினிராய்.
- பாபர் எந்த ஆண்டு பீகார், வங்காளப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த ஆப்கானிய தலைவர்களை வீழ்த்தினார் = 1529.
- பாபர் இறந்த ஆண்டு = 1530.
- பாபர் அறிந்த மொழிகள் = துருக்கி, பாரசீகம்.
- பாபரின் சுயசரிதை நூல் = துசுக்-இ-பாபரி.
- பாபர் தனது சுயசரிதை நூலான “துசுக்-இ-பாபரி” நூலில் விலங்குகள், செடிகள், மரங்கள், மலர்கள், கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
- பாபர் இறக்கும் முன் தனது வாரிசாக ஹுமாயுனை அறிவித்தார்.
பாபர் காலக்கோடு
- 14 பிப்ரவரி 1483 = பாபர் பிறந்த தினம்.
- 1495 = பாபர் 12 வது வயதில் பர்கானாவின் அரியணை ஏறினார்.
- 1505 = காபூலை பாபர் கைப்பற்றினார்.
- 1505 = பாபர் முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுப்பு மேற்கொண்ட ஆண்டு.
- 1526 = முதலாம் பானிபட் போர். இப்ராகிம் லோடியை தோற்கடித்தார். முகலாய் ஆட்சி இந்தியாவில் துவக்கம்.
- 1527 = கன்வா போர். ரானா சந்காவை தோற்கடித்தல்.
- 1528 = சந்தேரி போர். சந்தேரி அரசர் மேதினிராயை தோற்கடித்தல்.
- 1529 = காக்ரா போர். ஆப்கன் கூட்டுப்படையை தோற்கடித்தல்.
- 1530 = பாபர் மரணம்.
ஹுமாயுன் (1530-1540, 1555-1556)
- பாபருக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் = ஹுமாயுன்.
- பாபரின் மகன்கள் = நால்வர் (ஹுமாயுன், கம்ரான், ஹிண்டல், அஸ்காரி).
- ஹுமாயுன் அரசப் பதவி ஏற்றவுடன், தனது சகோதர்களுக்கு ஆட்சிப் பகுதிகளை பிரித்து கொடுத்தார்.
- பீகார், வங்காளம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்து வந்த ஆப்கானிய இனத்தை சேர்ந்த “ஷெர்ஷா சூர்” என்பவர் ஹுமாயுனை தொர்கடிதி டெல்லியை கைப்பற்றினார்.
- ஷெர்ஷா சூர், எந்த இடத்தில் ஹுமாயுனை தோற்கடித்தார் = 1539 இல் “சௌசா” போரிலும், மீண்டும் 1940 இல் “கன்னோஜ் போரிலும்” தோற்கடித்தார்.
- ஹுமாயுன் நாட்டை விட்டு ஈரானுக்கு தப்பி ஓடினார்.
- ஹுமாயுனுக்கு மீண்டும் டெல்லியை கைப்பற்ற உதவியவர் = பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா-தாமஸ்ப்.
- ஹுமாயுன் மீண்டும் எந்த ஆண்டு டெல்லியை கைப்பற்றினார் = 1555.
- ஹுமாயுன் மறைந்த ஆண்டு = 1556.
ஷெர்ஷா (1540 – 1545)
- பீகார், வங்காளப் பகுதியை ஆண்டு வந்த ஆப்கானிய பிரபுவான “ஹசன்சூரி” என்பவற்றின் மகன் = ஷெர்ஷா சூர்.
- டெல்லியில் சூர் வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = ஷெர்ஷா சூர்.
- குறுகிய காலத்தில் வங்காளம் முதல் சிந்து வரை (காஷ்மீர் மட்டும் இல்லை) கைப்பற்றினார்.
- நல்ல பயன் தரும் “நில வருவாய்” முறையை அறிமுகம் செய்தார் ஷெர்ஷா.
- இந்தியாவில் பல சாலைகளை அமைத்த முஸ்லிம் மன்னர் = ஷெர்ஷா சூரி.
- நிறுத்தல், முகத்தல் அளவுகளை “தர அளவுப் படுத்திய” முஸ்லிம் அரசர் = ஷெர்ஷா சூர்.
அக்பர் (1556 – 1605)
- எந்த வயதில் அக்பர் முடிசூட்டப்பட்டார் = பதினான்கு வயதில்.
- எந்த ஆண்டு அக்பர் அரசராக முடிசூட்டப்பட்டார் = 1560.
- அக்பர் சிறுவனாக இருந்ததால் “பகர ஆளுநராக” இருந்து ஆட்சியை கண்காணித்தவர் = பைரம்கான்.
- எந்த வருடம் சூர் வம்ச ஆட்சியாளர் “ஹெமு” டெல்லியையும், ஆக்ராவையும் கைப்பற்றினார் = 1556.
- இரண்டாம் பானிபட் போர் எப்பொழுது நடைபெற்றது = 1556.
- இரண்டாம் பானிபட் போர் யாருக்கு இடையில் நடைபெற்றது = ஹெமு, பைரம்கான் (அக்பரின் படைத்தளபதி).
- 1556 இல் நடைபெற்ற இரண்டாம் பானிபட் போரில், பைரம்கான் ஹெமுவை தோற்கடித்து கொன்றார்.
- பைரம்கானின் அதிகாரம் ஆட்சியில் அதிகம் இடம்பெற்றதை விரும்பாத் அக்பர், அவரை தனது ஆட்கள் மூலம் குஜராத்தில் கொன்றார்.
பெண் ஆட்சியாளர்கள் மீது அக்பர் படையெடுத்தல்
- மத்திய இந்தியப் பகுதியை சேர்ந்த “ராணி துர்காவதியை” அக்பர் போரில் தோற்கடித்தார்.
- தென்னிந்தியாவின் அகமதுநகர் அரசின் “பகர ஆட்சியாளராக” இருந்த “ராணி சந்த் பீவியின்” மீதும் போர் தொடுத்தார் அக்பர்.
- ஆனால் ராணியின் கடும் எதிர்ப்பை எதிர்ப்பார்க்காத முகலாயப்படை, பின்னர் அவரிடம் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டது.
ஹால்டிகாட் போர் (1576)
- 1568 இல் அக்பர், மேவார் அரசனான “ராணா உதய்சிங்கை” தோற்கடித்தார்.
- மேலும் 1568 இல் சித்தூரையும், 1569 இல் ராந்தம்பூரையும் கைப்பற்றினார்.
- “ஹால்டிகாட் போர்” நடைபெற்ற ஆண்டு = 1576.
- ஹால்டிகார் போர் யாருக்கு இடையே நடைப்பெற்றது = அக்பர், மேவார் அரசர் ராணா உதய்சிங்கின் மகனான “ராணா பிரதாப்”.
- அக்பர், ரானா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார் = ஹால்டிகாட் போர் (1576).
- போரில் ராணா பிரதாப் தோல்வியடைந்தாலும் “சேத்தக்” என்னும் தன்னுடைய குதிரையில் ஏறி காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்று அங்கிருந்து போரை தொடர்ந்தார்.
குஜராத்தை கைப்பற்றல்
- குஜராத்தை அக்பர் கைப்பற்றிய நிகழ்வு, குஜராத் கடல்பகுதியில் வாணிகம் செய்துக் கொண்டிருந்த அரேபியரையும், ஐரோப்பியரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர உதவியது.
வடமேற்குப் படையெடுப்புகள்
- நாடுகளை கைப்பற்றும் நோக்கில் அக்பர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் முக்கியமானது = வடமேற்கு படையெடுப்பு ஆகும்.
- இதன் மூலம் அக்பர் காண்டகார், காஷ்மீர், காபுல் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார்.
அக்பர் கல்லறை
- அக்பர் எந்த ஆண்டு இயற்கை எய்தினார் = 1605.
- அக்பரின் கல்லறை எங்கு உள்ளது = சிக்கந்தரா.
அக்பரின் கொள்கை
- இந்து மக்கள் மற்றும் இந்து பிரபுக்களின் ஆதரவை பெற முயற்சி செய்தார் அக்பர்.
- முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த “ஜிசியா” வரியை நீக்கினார் அக்பர்.
- இந்துக்களின் புனிதப் பயண வரியையும் நீக்கினார் அக்பர்.
- ராஜபுத்திர உயர்குடிப் பெண்களை மணந்துக் கொண்டார் அக்பர். தன மகனுக்கும் ராஜபுத்திர இளவரசியை மணம் முடித்து வைத்தார்.
- ஜெய்ப்பூரின் “ராஜா மான்சிங்”யை காபூலின் ஆளுநராக நியமித்தார்.
- அக்பர் அணைத்து மதத்தை சார்ந்தோரையும் சமமாக நடத்தினார்.
- அக்பரின் அளவில்லா மதிப்பை பெற்ற மதத்துறவிகள் = சூபி துறவி சலீம் சிஷ்டி மற்றும் சீக்கிய குரு ராம்தாஸ்.
- அக்பரால் போற்றப்பட்ட சூபி துறவி = சலீம் சிஷ்டி.
- அக்பரால் போற்றப்பட்ட சீக்கிய குரு = குரு ராம்தாஸ்.
- குரு ராமதாஸ்க்கு அமிர்தசரசில் இடத்தை பரிசாக வழங்கினார் அக்பர். பின்னாளில் இவ்விடத்தில் தான் சீக்கிய குருவான “ஹர்மிந்தர் சிங்கின்” கருவறை கட்டப்பட்டது.
இபாபத்கானா
- இபாபத்கானா கட்டப்பட்டுள்ள இடம் = பதேப்பூர் சிக்கிரி.
- அக்பரின் எந்த அவையில் அணைத்து மதத்தின் அறிஞர்களும் ஒன்றுக்கூடி உரையாடினர் = இபாபத்கானா.
அக்பரின் பண்பாட்டு பங்களிப்பு
- அக்பரின் சொந்த நூலகத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து பிரதிகளை கொண்ட நூல்கள் இருந்தன.
- அக்பரின் அவையில் இருந்த சிறந்த அறிஞர்கள் = அபுல்பசல், அப்துல் பெய்சி, அப்து ரகீம், கான்-இ-கான், பீர்பால், ராஜா தோடர்மால், ராஜா பகவன்தாஸ், ராஜா மான்சிங்.
- அக்பரின் அவையில் இருந்த புகழ்பெற்ற இசை மேதை = தான்சேன்.
- அக்பரின அவையில் இருந்த புகழ்பெற்ற ஓவியர் = தஸ்வந்த்.
ஜகாங்கீர் (1605 – 1627)
- அக்பருக்கும், இந்து ராஜபுத்திர இளவரசிக்கும் பிறந்தவர் ஜகாங்கீர்.
- ஜகாங்கீரின் இயற் பெயர் = சலீம் நூருதீன் முகமது.
- “ஜகாங்கீர்” என்பதன் பொருள் = உலகத்தை கைப்பற்றியவர்.
- கலைகள், ஓவியம், தோட்டங்கள், இயற்கை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஜகாங்கீர்.
- ஜகாங்கீரின் மனைவி = நூர்ஜகான் (மெகருன்னிசா).
- ஆட்சியின் உண்மையான அதிகாரம் நூர்ஜகானிடம் இருந்தது.
- தனக்கு எதிராக கலகம் செய்த தன்னுடைய மகன் குஸ்ரூவிற்கு உதவியதாக கூறி சீக்கிய தலைவர் “குரு அர்ஜுன் சிங்கை” தூக்கில் இட்டார் ஜகாங்கீர்.
- இதுவே முகலாயருக்கும் சீக்கியருக்கும் பகை ஏற்பட காரணமாக இருந்தது.
- போர்ச்சுகீசியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் வணிக உரிமைகளை வழங்கினார் ஜகாங்கீர்.
- ஜகாங்கீரின் அவைக்கு வந்த ஆங்கிலேயப் பிரதிநிதி = தாமஸ்ரோ.
- தாமஸ்ரோ யாரின் ஆணைக்கு இணங்க இந்தியா வந்தார் = முதலாம் ஜேம்ஸ்.
- ஆங்கிலேயர்கள் தங்களின் முதல் வணிக மையத்தை எங்கு நிறுவினர் = சூரத்.
ஷாஜகான் (1627 – 1658)
- ஜகாங்கீருக்கு பிறகு அவரின் மகன் “குர்ரம்” ஆட்சிக்கு வந்தார்.
- குர்ரம், “ஷாஜகான்” என்ற பெயரில் ஆட்சியை நடத்தினார்.
- “ஷாஜகான்” என்பதன் பொருள் = உலகத்தின் அரசர்.
- ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் மராத்திய படைத் தளபதிகள் ஒன்றிணைந்து முகலாயர்களுக்கு எதிராக போர் புரியத் துவங்கினர்.
- இத்தளபதிகளில் ஒருவர், சத்திரபதி சிவாஜியின் தந்தை = ஷாஜி போன்ஸ்லே.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் முகலாயர்களின் புகழ் உச்ச நிலையை அடைந்தது = ஷாஜகான்.
- ஷாஜகானின் மகன்கள் = நால்வர் (தாரா, சூஜா, முராத், அவுரங்கசீப்).
- அவுரங்கசீப் தனது மூன்று சகோதரர்களையும் கொன்று ஷாஜகானை சிறைப்படுத்தி ஆட்சியை கைப்பற்றினார்.
- ஷாஜகான் தனது வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை ஒரு கைதியாக ஆக்ரா கோட்டையில் உள்ள “ஷாபர்ஜ் அரண்மனையில்” கழித்தார்.
அவுரங்கசீப் (1658 – 1707)
- முகலாய மாமனர்களில் கடைசி மன்னர் = அவுரங்கசீப்.
- அவுரங்கசீப் தனக்கு தானே சூட்டிக் கொண்டப் பட்டப்பெயர் = ஆலம்கீர் (உலகை கைப்பற்றியவர்).
- அவுரங்கசீப் இஸ்லாம் மதத்தை தவிர பிற அணைத்து மதத்தையும் வெறுத்தார்.
- இந்துக்களின் மீது மீண்டும் “ஜிசியா” வரியை விதித்தார்.
- இந்துக்களை அரசுப் பணிகளில் பணியமர்த்துவதைத் தவிர்த்தார்.
- இந்தியாவின் பெரும் பகுதியை கைப்பற்றிய அவுரங்கசீப் “அகோம் மக்களின் அசாம்” (காமரூபா) பகுதியை கைப்பற்ற முடியவில்லை.
- அவுரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்த அவரின் மகன் = இளவரசர் அக்பர்.
- இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான “சாம்பாஜியுடன்” ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.
- 1674 இல் சிவாஜி மராட்டிய பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
- சிவாஜியின் எழுச்சியை அவுரங்கசீப்பால் தடுக்க முடியவில்லை.
- ஆனால் சிவாஜியின் மகனான “சாம்பாஜியை” கைது செய்து கொலை செய்தார் அவுரங்கசீப்.
- தன்னுடைய தொண்ணூறாவது வயதில், 1707 இல் மரணம் அடைந்தார் அவுரங்கசீப்.
- அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் வணிக மையத்தை “பாண்டிச்சேரியில்” நிறுவினர்.
முகலாயர் நிர்வாகம்
- முகலாய கட்டமைப்பின் உச்சபட்ச அதிகாரம் மிக்கவர் = அரசரே.
- அரசருக்கு உதவக்கூடிய அமைச்சர்கள் குழுவில் உள்ள அதிகாரிகள்,
-
-
- வக்கீல் = பிரதம மந்திரி
- வஜீர் அல்லது திவான் = வருவாய்த்துறை மற்றும் செலவுகள்
- மீர்பாக்க்ஷி = இராணுவத்துறை அமைச்சர்.
- மீர்சமான் = அரண்மனை நிர்வாகம்.
- குவாஜி = தலைமை நீதிபதி.
- சதா-உஸ்-சுதூர் = இஸ்லாமிய சட்டங்கள் (சாரியா) நடைமுறைப் படுத்துபவர்.
-
-
முகலாயர் கால மாகாண நிர்வாகம்
- பேரரசு, “சுபாக்கள்” (மாகாணங்கள் / மாநிலங்கள்) ஆக பிரிக்கப்பட்டிருந்தது.
- “சுபாக்களை” நிர்வகிக்கும் அதிகாரி = சுபேதார்.
- ஒவ்வொரு சுபாவும், ‘சர்கார்களாக (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன.
- சர்கார்கள் “பர்கானாக்களாகப்” பிரிக்கப்பட்டிருந்தன.
- “பர்கானாக்கள்”, பல கிராமங்களாக பிரிக்கப்பட்டிருந்தன.
- முகலாயர் ஆட்சியில் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = பேரரசு – சுபா (மாகாணம் / மாநிலம்) – சர்கார் (மாவட்டம்) – பர்கானா – கிராமம்.
முகலாயர் கால உள்ளாட்சி நிர்வாகம்
- முகலாயர் ஆட்சியில் நகரங்கள், பெருநகரங்களை நிர்வாகம் செய்யும் அதிகாரி = கொத்தவால்.
- கொத்தவால் என்போர் யார் = முகலாயர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரி.
மன்சப்தாரி முறை
- மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் = அக்பர்.
- இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்றிணைக்கப்பட்டன.
- மன்சப் = தகுதி அந்தஸ்து அல்லது படிநிலை.
- மன்சப் தகுதியை பெற்றவர் “மன்சப்தார்” ஆவார்.
- மன்சப்தார் இரண்டு விடயங்களை சார்ந்தது = சாட் (தகுதி), சவார் (பராமரிக்க வேண்டிய குதிரைகளின் எண்ணிக்கை).
- அக்பரின் ஆட்சிக் காலத்திற்கு பிறகு மன்சப்தார் பதவி பரம்பரை பதவியாக மாறியது.
முகலாயர் கால நிலவருவாய் நிர்வாகம்
- எந்த முகலாய மன்னர் ஆட்சிக் காலத்தில் நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது = அக்பர்.
- அக்பரின் வருவாய்துறை அமைச்சர் = ராஜா தோடர்மால்.
- அக்பர், ராஜா தோடர்மால் யாரின் நிலநிர்வாக முறையை பின்பற்றினர் = ஷெர்ஷா சூர்.
- ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த நிலநிர்வாக முறை = ஜப்த்.
- அக்பர் ஆட்சி காலத்தில் நிலத்தில் எவ்வளவு பங்கு வரியாக நிர்ணயம் செய்யப்பட்டது = பத்தாண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு ( 1/3 ) வரியாக நிர்ணயம் செய்யப்பட்டது.
- “ஜப்த்” (ஜப்தி) முறை யாருடைய ஆட்சிக்காலத்தில் வடஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது = அக்பர்.
- “ஜப்த்” (ஜப்தி) முறை யாருடைய ஆட்சிக்காலத்தில் தக்காணப் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது = ஷாஜகான்.
ஜாகீர் என்றால் என்ன
- “இக்தா” முறையை “ஜாகீர்” எனப் பெயரிட்டு அறிமுகம் செய்தனர் முகலாய அரசர்கள்.
- ஜாகீர் என்றால் என்ன = இம்முறையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலவரி வசூல் செய்யும் உரிமை மற்றும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பு இரண்டையும் “ராணுவ அல்லது சிவில் அதிகாரியிடம்” ஒப்படைக்கப்பட்டது.
- ஜாகீர் வசூலிக்கும் அதிகாரி “ஜாகீர்தார்” ஆவார்.
- தங்களது ஊதியத்தை சம்பளமாக பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் = ஜாகீர்தார் ஆவர்.
- “அமில் குஜார்” என்போர் யார் = முகலாயர் ஆட்சியில் மாவட்ட அளவில் நிலவரியை வசூல் செய்யும் அதிகாரி.
- முகலாயர் ஆட்சியில் மாவட்ட அளவில் வசூல் செய்யும் அதிகாரியான “அமில் குஜார்” என்பாருக்கு உதவக்கூடிய துணைநிலை அதிகாரிகள் யாவர் = பொட்டாதார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம்.
- “முக்காதம்” என்போர் யாவர் = முகலாயர் ஆட்சியில் நிலவரியை வசூல் செய்யும் துணைநிலை அதிகாரி.
- பொட்டாதார் என்போர் யார் = முகலாயர் ஆட்சியில் நிலவரியை வசூல் செய்யும் துணைநிலை அதிகாரி.
ஜமீன்தாரி முறை
- “ஜமீன்தார்கள்” என்போர் யார் = முகலாயர் ஆட்சியில் நில உரிமையாளர்களிடம் இருந்து நிலவரியை வசூல் செய்பவர்கள்.
- மேலும் ஜமீன்தார்கள் சட்டம், ஒழுங்கு, அமைதி ஆகியவற்றையும் பாதுகாத்தனர்.
- எந்த நூற்றாண்டின் இறுதியில் ஜமீன்தார்களுக்கு தங்களின் ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது = பதினாறாம் நூற்றாண்டின் இறுதி காலத்தில்.
சுபயூர்கள் என்றால் என்ன
- “சுபயூர்கள்” என்றால் என்ன = முகலாயர் ஆட்சிக்காலத்தில் அறிஞர்களுக்கும், சமயம் சார்ந்த பெரியோர்கள், சமயம் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரசர் வழங்கிய வரிவிலக்கு அழைக்கப்பட்ட நிலங்கள் “சுபயூர்கள்” எனப்பட்டன.
அக்பரின் “தீன்-இலாகி”
- முகலாயப் பேரரசர்களில் அக்பர் மட்டுமே முற்போக்கு சிந்தனை உள்ளவராக இருந்தார்.
- எந்த முகலாய மன்னரின் அவையில் போர்த்துகீசிய கிறித்துவப் பாதிரியார்கள் இருந்தனர் = அக்பர்.
- “தீன்-இலாகி” என்றால் என்ன = அக்பர் அணைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து “தீன்-இலாகி” (தெய்வீக மதம்” என்னும் புதிய சமயத்தை அறிவித்தார்.
- “தீன்-இலாகி” எனும் புதிய சமயத்தை அறிவித்தவர் = அக்பர்.
- அக்பரின் மதக் கொள்கையை பின்பற்றிய முகலாய மன்னர்கள் = ஜகாங்கீர், ஷாஜகான்.
அவுரங்கசீப்பின் மதக் கொள்கை
- தீவிர இஸ்லாம் கொள்கையை பின்பற்றியவர் அவுரங்கசீப்.
- இவர் அக்பர் நீக்கிய “ஜிசியா” (இந்துக்கள் மீதான வரி) வரியை மீண்டும் கொண்டு வந்தார்.
முகலாயர் கால கலை கட்டிடக்கலை
- பாரசீக கட்டிடக்கலையை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் = பாபர்.
- பாபர் இந்தியாவில் கட்டிய கட்டிடங்கள் = பாபர் இந்தியாவில் ஆக்ரா, ப்யானா, டோலாப்பூர், க்யூல் (அலிகார்) ஆகிய இடங்களில் பாரசீக முறையிலான கட்டிடங்களை கட்டினார்.
- ஹுமாயூன் டெல்லியில் கட்டிய கட்டிடம் = “தீன்-இ-பானா” (இது ஷெர்ஷா சூரியால் பிற்காலத்தில் இடிக்கப்பட்டது).
- ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார் = ஹுமாயுனின் “தீன்-இ-பானா” அரண்மனை.
- “புரான கிலா”வை கட்டியவர் = ஷெர்ஷா சூர்.
- ஹுமாயுனின் “தீன்-இ-பானா” இருந்த இடத்தில் ஷெர்ஷா “புரான கிலாவை” கட்டினார்.
- ஷெர்ஷா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான கட்டிடம் = பீகாரில் உள்ள “சசாரம் கல்லறை மாடம்”.
- அக்பர் கட்டிய கட்டிடங்கள் = திவான்-இ-காஸ், திவான்-இ-ஆம், பஞ்ச் மகால் (பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்குக் கட்டிடம்), ரங் மகால், சலீம் சிஷ்டியின் கல்லறை, புலந்தார்வாசா.
- அக்பரின் கல்லறை கட்டிடம் உள்ள இடம் = சிக்கந்தரா.
- சிக்கந்தராவில் அக்பரின் கல்லறையை கட்டி முடித்தவர் = ஜகாங்கீர்.
- நூர்ஜகானின் தந்தை = இம்மத்-உத்-தௌலா.
- நூர்ஜகானின் தந்தையான “இம்மத்-உத்-தௌலா”வின் கல்லறையை கட்டியவர் = ஜகாங்கீர்.
- நூர்ஜகானின் தந்தையான “இம்மத்-உத்-தௌலா”வின் கல்லறை கட்டப்பட்டுள்ள இடம் = ஆக்ரா.
யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயப் பேரரசு உச்ச நிலையை எட்டியது
- யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயப் பேரரசு அதன் உச்ச நிலையை அடைந்தது = ஷாஜகான்.
- பேரரசர் அமர்வதற்கான “மயிலாசனம்” ஷாஜகான் காலத்தில் உருவாக்கப்பட்டது.
- புகழ்பெற்ற தாஜ்மகால் எந்த நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது = யமுனை நதி.
- ஆக்ராவில் உள்ள “மோதி மசூதி” (முத்து மசூதி) யாரால் கட்டப்பட்டது = ஷாஜகான்.
- டெல்லியில் உள்ள மிகப்பெரிய “ஜூம்மா மசூதி” யாரால் கட்டப்பட்டது = ஷாஜகான்.
பிபிகா மக்பாரா
- அவுரங்கசீப்பின் மகன் “ஆஜாம் ஷா”வால் தனது தாயாரின் அன்பை போற்றும் வகையில் அவுரங்காபாத்தில் “பிபிகா மக்பாரா” என்ற கல்லறை கட்டிடம் கட்டப்பட்டது.
செங்கோட்டை
- “லால் குய்லா” என்று அழைக்கப்படுவது = டெல்லி செங்கோட்டை.
- டெல்லி “செங்கோட்டையை” கட்டியவர் = ஷாஜகான்.
- முகலாயப் பேரரசர்களின் வாழ்விடம் = டெல்லி செங்கோட்டை.
- டெல்லி செங்கோட்டை கட்டப்பட்ட ஆண்டு = 1639.
- ஷாஜகானின் தலைநகரம் = ஷாஜகானாபாத்.
- சிவப்புநிற கற்களால் கட்டப்பட்டது செங்கோட்டை.