ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கான கடல்வழியை கண்டுபிடித்தவர் = போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோடகாமா.
இந்தியாவிற்கான கடல்வழியை வாஸ்கோடகாமா கண்டுபிடித்த ஆண்டு = 1498.
வங்காளத்தின் வெற்றியின் காரணமாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது.
இருட்டறை துயரச் சம்பவம் 1756
இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு = 1756.
வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைபிடித்து, கல்கத்தாவின் வில்லியம் கோட்டையின் காற்று புகாத ஒரு அறையில் ஒரு இரவு முழுவதும் சிறை வைத்தனர்.
மறுநாள் அறையின் கதவி திறந்த பொழுது அதில் 123 பேர் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.
இச்சம்பவமே “இருட்டறை துயரச் சம்பவம்” என்று அழைக்கப்படுகிறது.
பக்சார் = பக்சார் என்பது பீகாரின் பாட்னா நகர் அருகே கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.
பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு = 22 அக்டோபர் 1764.
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டவர்கள் = வங்காள நவாப் மீர்காசிம், அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலா மற்றும் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம்.
பக்சார் போரில் பங்கேற்ற ஆங்கிலேய படைத் தளபதி = ஹெக்டர் மன்றோ.
பக்சார் போரின் முடிவில், வங்காளத்தின் நவாப் ஆக மீண்டும் அமர்த்தப்பட்டவர் = மீர்ஜாபர்.
மீர்ஜாபர் மறைவிற்கு பிறகு வங்காளத்தின் நவாப்பாக அரியணை ஏறியவர் = மீர்ஜாபரின் மகன் நிஜாம்-உத்-தௌலா.
பக்சார் போரை முடிவிற்கு கொண்டு வந்த உடன்படிக்கை = அலகாபாத் உடன்படிக்கை.
அலகாபாத் உடன்படிக்கை
பக்சார் போரினால் ஏற்பட்ட உடன்படிக்கை = அலகாபாத் உடன்படிக்கை.
அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 20 பிப்ரவரி 1765.
அலகாபாத் உடன்படிக்கை நிபந்தனைகள்,
வங்காள நவாப் தன்னுடைய இராணுவத்தின் பெரும் பகுதியை கலைத்து விட வேண்டும்.
கம்பெனியால் நியமிக்கப்பட்ட சுபேதார் மூலம் வங்காளத்தில் வரி வசூலித்தல்.
வங்காளத்தில் இரட்டையாட்சி முறை
ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலா மற்றும் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம் ஆகிய இருவருடனும் தனித்தனியாக உடன்படிக்கை செய்துக் கொண்டார்.
இதன் மூலம் வங்காளத்தில் இரட்டையாட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
வங்காளத்தில் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தவர் = ராபர்ட் கிளைவ்.
கர்நாடகப் போர்கள்
மொத்தம் எத்தனை கர்நாடகப் போர்கள் நடைபெற்றன = மூன்று.
முதல் கர்நாடகப் போர் = 1746 – 1748.
இரண்டாம் கர்நாடகப் போர் = 1749 – 1754.
மூன்றாம் கர்நாடகப் போர் = 1756 – 1763.
கர்நாடகப் போர்களில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியும், பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியும் எதிரெதிர் அணியில் இருந்தன.
முதல் கர்நாடகப் போர் (1746 – 1748)
முதல் கர்நாடகப் போருக்கான காரணம் = ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசு உரிமை போர்.
ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் எதிரெதிர் அணிகளில் இருந்தன. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது.
அடையாறு போர் 1746
அடையாறு போர் நடைபெற்ற ஆண்டு = 1746.
போர் நடைபெற்ற இடம் = அடையாறு நதிக்கரையின் சாந்தோம் என்னுமிடத்தில்.
யாருக்கு இடையே போர் = கர்நாடக நவாப் அனுவாரூதீன் மற்றும் பிரெஞ்ச் படைகள் இடையே.
கர்நாடக நவாப் அன்வாரூதீன் ஆங்கிலேய உதவியை நாடினார்.
அடையாறு போரில் பிரெஞ்சு படைக்கு தலைமை தாங்கியவர் = கேப்டன் பாரடைஸ்.
அடையாறு போரில் கர்நாடக நவாப் படைக்கு தலைமை தாங்கியவர் = மாபூஸ்கான்.
மிகச்சிறிய பிரெஞ்சு படை வெற்றி பெற்றது.
நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்திய படையை வெற்றி பெற்று தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிய முதல் நிகழ்வு நடைபெற்ற போர் = அடையாறு போர்.
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை 1748
முதல் கர்நாடகப் போரை முடிவிற்கு கொண்ட வந்த உடன்படிக்கை = அய்-லா-சப்பேல் உடன்படிக்கை.
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு = 1748.
அய்-லா-சப்பேல் உடன்படிக்கையின் படி,
பிரிட்டன் = மதராஸ் (சென்னை) ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரான்ஸ் = வட அமெரிக்காவின் சில பகுதிகள் ஒப்படைப்பு.
இரண்டாம் கர்நாடகப் போர் (1749 – 1754)
இரண்டாம் கர்நாடகப் போருக்கான காரணம் = கர்நாடகம், ஹைத்ராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசு உரிமை போர்.
பிரிட்டன் ஆதரவு = கர்நாடக நவாப் பதவி கோரிய அன்வாரூதீன், ஹைதராபாத் நிசாம் பதவி கோரிய நாசிர்ஜங்கையும் ஆதரித்தனர் ஆங்கிலேயர்கள்.
பிரெஞ்சு ஆதரவு = கர்நாடக நவாப் பதவி கோரிய சந்தா சாகிப், ஹைதராபாத் நிசாம் பதவி கோரிய முசாபர்ஜங்கையும் ஆதரித்தனர் பிரெஞ்சுக்காரர்கள்.
ஆம்பூர் போர் 1749
ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு = 1749.
ஆம்பூர் போரின் பொழுது பிரெஞ்சு ஆளுநராக இருந்தவர் = டியூப்ளே.
போரில் கர்நாடக நவாப் அன்வாரூதீன் தோற்கடிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்.
கர்நாடக நவாப்பாக சந்தா சாகிப்பை அமர்த்தினர் பிரெஞ்சுக்காரர்கள்.
இதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்கள் பிரெஞ்சு அரசுக்கு வழங்கினார் நவாப்.
தக்காணத்தில் நாசிர்ஜங்கை தோற்கடித்து கொன்றனர் பிரெஞ்சு வீரர்கள்.
ஐதராபாத் நிஜாமாக முசாபர்ஜங் தேர்வு செய்யப்பட்டர்.
இதற்கு ஈடாக கிருஷ்ணா நதியின் தென் பகுதிகள் அனைத்திற்கும் டியூப்ளேவை ஆளுநராக நியமித்தார் நிஜாம்.
முசாபர் ஜங்கின் கொலையின் காரணமாக ஐதராபாத் நிஜாமாக நாசிர்ஜிங்கின் சகோதரர் “சலபத் ஜங்” தேர்வு செய்யப்பட்டார்.
ஹைதராபாத் நிஜாமாக சலபத்ஜங் தேர்வு செய்ய உதவிய பிரெஞ்சு படைத்தளபதி = புஸ்ஸி.
சலபத்ஜங் குண்டூர் மாவட்டத்தை தவிர பிற பகுதிகளை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார்.
ஆம்பூர் போரால் பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளேவின் அதிகாரம் உச்சநிலைக்கு சென்றது.
ஆற்காட்டுப் போர் 1751
ஆற்காட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு = 1751.
பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளே திருச்சி கோட்டையை தாக்க படைகளை அனுப்பினார்.
இவ்வேளையில் ஆற்காட்டை தக்க ஆங்கிலேய கவர்னராக இருந்த “சாண்டர்ஸிடம்” அனுமதி பெற்றார் ராபர்ட் கிளைவ்.
ஆற்காட்டுப் போரில் ஆங்கிலேய படைக்கு தலைமை தாங்கிய படைத்தளபதி = ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ்.
ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் உதவியுடன் ராபர்ட் கிளைவ், பிரெஞ்சுப் படைகளை ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் தோற்கடித்தார்.
ஆற்காட்டு நவாப்பாக அன்வாரூதீனின் மகன் “முகமது அலி” ஆங்கிலேயர் உதவியுடன் தேர்வு செய்யப்பட்டார்.
பிரெஞ்சுப் படைகளின் தோல்வியால் ஆளுநர் டியூப்ளேவை, பாரிஸ் நகருக்கு திருப்பி அழைத்துக் கொண்டது பிரெஞ்சு அரசாங்கம்.
பாண்டிச்சேரி உடன்படிக்கை 1755
டியூப்ளேவை அடுத்து பிரெஞ்சு ஆளுநராக பதவி ஏற்றவர் = கோதேயூ.
எந்த உடன்படிக்கையின் படி இரண்டாம் கர்நாடகப் போர் முடிவிற்கு வந்தது = பாண்டிச்சேரி உடன்படிக்கை 1755.
கோதேயூ, ஆங்கிலேயர்களுடன் “பாண்டிச்சேரி உடன்படிக்கையை” மேற்கொண்டார்.
பாண்டிச்சேரி உடன்படிக்கை படி,
இரு நாடுகளும் தங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது
போருக்கு முன்னர் பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைத்தல்.
புதிய கோட்டைகளை கட்டக்கூடாது.
கர்நாடக நவாப்பாக “முகமது அலியை” நியமித்தனர் ஆங்கிலேயர்கள்.
கர்நாடக பகுதியில் வலிமையின்றி இருந்தாலும், ஹைதராபாத் பகுதிகளில் வலிமையாக இருந்தனர் பிரெஞ்சுக்காரர்கள்.
மூன்றாம் கர்நாடகப் போர் (1756 – 1763)
மூன்றாம் கர்நாடகப் போருக்கான காரணம் = ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர்.
23 ஜூன் 1757 துவங்கிய பிளாசிப் போரில் வெற்றி பெற்று ஆங்கில ஆதிக்கத்தை நிலைநிறுத்திய ராபர்ட் கிளைவ், மூன்றாம் கர்நாடகப் போருக்கான நிதியையும் வழங்கினார்.
பிரெஞ்சுப் படைகளுக்கு தலைமை தாங்கியவர் = கவுண்-டி-லாலி.
ஆங்கிலேப் படைகளுக்கு தலைமை தாங்கியவர் = ஜெனரல் அயர்கூட்.
வந்தவாசிப் போர் 1760
வந்தவாசி போர் துவங்கிய தினம் = 22 ஜனவரி 1760.
பிரெஞ்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது.
கவுண்டி லாலி பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பி அழைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
எந்தப் போரின் மூலம் பிரெஞ்சுப் படைகள், இந்தியாவில் இருந்த தங்கள் அணைத்து குடியேற்றங்களையும் இழந்தனர் = மூன்றாம் கர்நாடகப் போர்.
பாரிஸ் உடன்படிக்கை 1763
எந்த உடன்படிக்கையின் மூலம் மூன்றாம் கர்நாடகப் போர் முடிவிற்கு வந்தது = பாரிஸ் உடன்படிக்கை 1763.
பாரிஸ் உடன்படிக்கையின் படி, பாண்டிச்சேரி உட்பட இந்தியாவில் இருந்த அணைத்து பிரெஞ்சு குடியேற்றங்களும் மீண்டும் பிரெஞ்சு வசம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்த போர் = மூன்றாம் கர்நாடகப் போர்.
கர்நாடகப் போர்கள்
வ. எண்
போர்
ஆண்டு
போருக்கான காரணம்
போர்கள்
உடன்படிக்கை
1
முதலாம் கர்நாடகப் போர்
1746 – 1748
ஆஸ்திரிய வாரிசு உரிமை போர்
அடையாறு போர் 1746
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை 1748
2
இரண்டாம் கர்நாடகப் போர்
1749 – 1754
கர்நாடகம், ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசு உரிமை போர்
ஆம்பூர் போர் 1749, ஆற்காட்டுப் போர் 1751
பாண்டிச்சேரி உடன்படிக்கை 1755
3
மூன்றாம் கர்நாடகப் போர்
1756 - 1763
ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர்
வந்தவாசிப் போர் 1760
பாரிஸ் உடன்படிக்கை 1763
ஆங்கிலேய மைசூர் போர்கள்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் விரிவாக்கதிற்காக பல்வேறு இடங்களில் போர்களை மேற்கொண்டனர்.
அதன்படி தென்னிந்தியாவில் மைசூர் பகுதியில் ஹைதர் அழியும், அவைர்ன் மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்தனர்.
இதுவே ஆங்கிலேய மைசூர் போர்களாகும்.
மொத்தம் எத்தனை ஆங்கிலேய மைசூர் போர்கள் நடைபெற்றன = நான்கு.
முதல் ஆங்கிலேய மைசூர் போர் (1767 – 1769)
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780 – 1784)
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790 – 1792)
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் (1799)
முதல் ஆங்கிலேய மைசூர் போர் (1767 – 1769)
முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள்
ஹைதர் அலியின் வளர்ச்சி மற்றும் அவரின் பிரெஞ்சு அரசுடான நட்பு ஆகியவை ஆங்கிலேயர்க்கு வெறுப்பை உண்டாக்கின.
ஹைதர் அலிக்கு எதிராக முப்படை கூட்டணியை உருவாக்கியவர்கள் = மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம், ஆங்கிலேயர்கள்.
முதல் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு
1767 இல் மைசூர் மீது ஹைதராபாத் நிஜாம் போர் தொடுத்தார்.
ஆங்கிலப் படைக்கு தலைமை தாங்கிய தளபதி = ஜோசப் ஸ்மித்.
ஆங்கிலப் படையை தோற்கடித்து எப்பகுதியை கைப்பற்றினார் ஹைதர் அலி = மங்களூர்.
மங்களூரை கைப்பற்றிய பிறகு ஹைதர் அலி எந்த நகரம் மீது படையெடுத்தார் = மதராஸ்.
மதராஸ் உடன்படிக்கை 1769
மதராஸ் உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 4 ஏப்ரல் 1769.
மதராஸ் உடன்படிக்கை செய்துக் கொண்டவர்கள் = ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேயர்கள்.
முதல் ஆங்கிலேய மைசூர் போர் முடிவிற்கு வர காரணம் = மதராஸ் உடன்படிக்கை.
மதராஸ் உடன்படிக்கையின் நிபந்தனைகள்,
போருக்கு முன்னர் இருந்த பகுதிகளை இருதரப்பினரும் திரும்பப் பெறுதல்.
மற்ற நாடு தாக்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொள்ளல்.
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780 – 1784)
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள்
மதராஸ் உடன்படிக்கை 1769 ஐ மீறினர் ஆங்கிலேயர்கள்.
1771 இல் ஹைதர் அலி மீது மராத்தியர்கள் தாக்கிய பொழுது “மதராஸ் உடன்படிக்கை” படி ஆங்கிலேயர்கள் உதவவில்லை.
ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்ட பிரெஞ்சு குடியேற்றமான “மாஹி” பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
ஆங்கிலப் படைக்கு எதிராக முக்கூட்டணியை உருவாக்கியவர்கள் = ஹைதர் அலி, ஹைத்ராபாத் நிஜாம், மராத்தியர்கள்.
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு
ஆங்கிலப் படைக்கு தலைமை தாங்கியவர் = சர் அயர்கூட்.
எங்கு நடைபெற்ற போரில் சர் அயர்கூட், ஹைதர் அலியை தோற்கடித்தார் = பரங்கிப்பேட்டை (போர்டோ நோவா).
மைசூர் படைகள் எங்கு நடைபெற்ற போரில் மீண்டும் தோல்வியை தழுவின = சோளிங்கர்.
போரின் இடையிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹைதர் அலி இறந்தார்.
ஹைதர் அலி புற்றுநோயால் இறந்த ஆண்டு = 1782.
ஹைதர் அலி இறப்பிற்கு பிறகு மைசூர் படைக்கு தலைமை தாங்கியவர் = ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான்.
திப்பு சுல்தான் எந்த ஆங்கிலேய படைத் தளபதியை கைது செய்தார் = பிரிகேடியர் மேத்யூஸ்.
மங்களூர் உடன்படிக்கை 1784
மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 7 மார்ச் 1784.
மங்களூர் உடன்படிக்கையை செய்துக் கொண்டவர்கள் = ஆங்கிலேயர்கள் மற்றும் திப்பு சுல்தான்.
மங்களூர் உடன்படிக்கையின் நிபந்தனைகள்,
இருபிரிவினரும் போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப ஒப்படைத்தல்.
கைதிகளை திரும்ப ஒப்படைத்தல்.
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் பொழுது இந்தியாவில் ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ்.
இந்த சமயத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவில் ஆங்கிலேயப் பகுதிகளை ஒருங்கிணைத்தார்.
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790 – 1792)
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான கரணங்கள்
ஆங்கிலேயர்க்கு எதிராக வெளிநாட்டு கூட்டணியை உருவாக்க ஏதுவாக பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கு தூதவர்களை அனுப்பினார் திப்பு சுல்தான்.
ஆங்கிலேய கூட்டணியில் இருந்த “திருவிதாங்கூர் சமஸ்தானத்தை” 1789 இல் தாக்கினார் திப்பு சுல்தான்.
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரில், திப்பு சுல்தானுக்கு எதிராக முக்கூட்டணியை உருவாக்கியவர்கள் = ஆங்கிலேயர்கள், மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம்.
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு
மூன்று கட்டங்களாக நடைபெற்ற ஆங்கிலேய மைசூர் போர் எது = மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்.
ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் பிரபு, தாமே படையை முன்னெடுத்து தாக்குதலை நடத்தினார்.
பல்வேறு இடங்களில் தோல்வியை தழுவிய திப்பு சுல்தான் இறுதியில் ஆங்கிலேயரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்படிக்கை 1792
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரை முடிவிற்கு கொண்டு வந்த உடன்படிக்கை = ஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்படிக்கை.
ஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்படிக்கையின் நிபந்தனைகள்,
திப்பு தன்னுடைய ஆட்சிப் பகுதியில் பாதியை ஒப்படைக்க வேண்டும்.
போர் இழப்பீட்டு தொகையாக 3.6 கோடி செலுத்த வேண்டும்.
திப்பு தன்னுடைய இரண்டு மகன்களை பிணையக்கைதிகளாக ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதன் மூலம் ஆங்கிலேயர்கள் மலபார், குடகு மலை, திண்டுக்கல், பாராமஹால் (கோவை, சேலம்) ஆகிய பகுதிகளை பெற்றனர்.
பாராமஹால் பகுதி என்பது = கோயம்புத்தூர், சேலம் பகுதிகள்.
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் (1799)
நான்காம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள்
ஆங்கிலேயருக்கு எதிராக அரேபியா, துருக்கி, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளை கூட்டணியில் சேர்க்க தூதவர்களை அனுப்பினார் திப்பு.
பிரான்ஸ் நாட்டின் நெப்போலியன் உடன் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்டார் திப்பு.
பிரெஞ்சு அதிகாரிகள் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் “ஜாக்கோபியன்கழகத்தை” நிறுவினர்.
பிரெஞ்சு அதிகாரிகள் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் “சுதந்திர மரத்தை” நட்டனர்.
நான்காம் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு
திப்புவின் மீது போர் தொடுத்தவர் = வெல்லஸ்லி பிரபு.
பம்பாய் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஆங்கிலேய தளபதி = ஸ்டூவர்ட்.
மதராஸ் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஆங்கிலேய தளபதி = வெல்லஸ்லி பிரபுவின் சகோதரர் ஆர்தர் வெல்லஸ்லி.
ஸ்ரீரங்கப்பட்டிணத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய தினம் = 4 மே 1799.
நான்காம் மைசூர் போரின் முடிவு
நான்காம் மைசூர் போரின் இறுதியில் “திப்பு சுல்தான்” கொள்ளப்பட்டார்.
ஸ்ரீரங்கப்பட்டிணம் கைப்பற்றப்பட்டது.
மைசூர் அரியணை இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த “மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்” வசம் ஒப்படைக்கப்பட்டது.
திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.
ஆங்கிலோ மைசூர் போர்கள்
போர்
வருடம்
மைசூர் பகுதியை ஆண்டவர்
வங்காள கவர்னர் ஜெனெரல்
உடன்படிக்கை
முக்கிய தகவல்கள்
முதலாம் ஆங்கிலோ – மைசூர் போர்
1767 – 1769
ஹைதர் அலி
காரன்வாலிஸ் பிரபு
மெட்ராஸ் உடன்படிக்கை (1769, ஏப்ரல் 4)
ஹைதர் அலி வெற்றி
இரண்டாம் ஆங்கிலோ – மைசூர் போர் (போர்டோ-நோவா போர்)
1780 – 1784
ஹைதர் அலி
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
மங்களூர் உடன்படிக்கை (1784 மார்ச் 7)
ஹைதர் அலி இறப்பு.
மூன்றாம் ஆங்கிலோ – மைசூர் போர்
1790 – 1792
திப்பு சுல்தான்
காரன் வாலிஸ் பிரபு
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை (1792)
திப்பு சுல்தான் தோல்வியின் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
நான்காம் ஆங்கிலோ – மைசூர் போர்
1799
திப்பு சுல்தான்
வெல்லஸ்லி பிரபு
திப்பு சுல்தான் மறைவு
ஆங்கிலேய மராத்திய போர்கள்
மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு = 1761.
மூன்றாம் பானிபட் போரில் தோல்வியில் இருந்து மீள மராத்தியர்களுக்கு பத்து ஆண்டுகள் ஆனது.
பேஷ்வா கட்டுப்பாட்டில் இருந்த மராத்தியம், ஐந்து சுதந்திர அரசுகளாக மாறின. அவை,
பூனா – பேஷ்வா
பரோடா – கெய்க்வாட்
நாக்பூர் – போன்ஸ்லே
இந்தூர் – ஹோல்கர்
குவாலியர் – சிந்தியா
ஐந்து சுதந்திர அரசுகளும் ஒருவரை இருவர் எதிர்த்தனர்.
ஆங்கிலேயர்கள் மற்றும் மராத்தியர்கள் இடையே மொத்தம் எத்தனை போர்கள் நடைபெற்றன = மூன்று. அவை,
முதல் ஆங்கிலேய மராத்திய போர் (1775 – 1782)
இரண்டாம் ஆங்கிலேயே மராத்திய போர் (1803 – 1805)
மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போர் (1817 – 1818)
முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் (1775 – 1782)
முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்கான காரணங்கள்
மராத்திய பேஷ்வா “நாராயணராவ்” மரணத்திற்கு பிறகு அடுத்த பேஷ்வா யார் என்ற வாரிசு பிரச்சனையில் ஆங்கிலேயர்கள் தலையிட்டனர்.
நாராயனராவிற்கு பிறகு பேஷ்வாவாக பதவி ஏற்றவர் = ரகுநாத ராவ் (ராகோபா).
ரகுநாத ராவை பேஷ்வாவாக ஏற்க மறுத்தவர் = நானா பட்னாவிஸ்.
நானா பட்னாவிஸ் யாரை பேஷ்வாவாக அறிவித்தார் = நாராயண ராவின் மகன் இரண்டாம் மாதவ ராவ்.
ரகுநாத ராவ் ஆங்கிலேயரின் உதவியை கோரினார்.
ஆங்கிலேயருக்கும், ரகுநாத ராவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை = சூரத் உடன்படிக்கை (1775).
சூரத் உடன்படிக்கையை கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்றுக்கொள்ளவில்லை.
நானா பட்னாவிஸ் உடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக யாரை அனுப்பியது ஆங்கிலேய கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் = கர்னல் அப்டன்.
நானா பட்னாவிஸ் (பூனாவின் பாதுகாப்பு அரசு) உடன் கர்னல் அப்டன் மேற்கொண்ட உடன்படிக்கை = “புரந்தர் உடன்படிக்கை” (1776).
பம்பாய் ஆங்கில அரசாங்கம் புரந்தார் உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்து.
முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் போக்கு
முதல் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஆங்கிலப் படைக்கு தலைமை தாங்கியவர் = கேப்டன் பாப்ஹாமின்.
கேப்டன் பாப்ஹாமின், மராத்திய தலைவர் “மகாதாஜி சிந்தியாவை” தோற்கடித்து குவாலியரை கைப்பற்றினார்.
சால்பை உடன்படிக்கை 1782
எந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் முடிவிற்கு வந்தது = சால்பை உடன்படிக்கை (1782).
சால்பை ஒப்பந்தம் யாருக்கு இடையே கையெழுத்தானது = மகாதாஜி சிந்தியா மற்றும் வாரன் ஹேஸ்டிங்ஸ்.
சால்பை ஒப்பந்தம் கையெழுத்தான தேதி = 17 மே 1782.
முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவுகள்
இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
ஆங்கிலேயர்களுக்கு “சால்செட்” பகுதி வழங்கப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கும் மராதியர்களுகும் அடுத்த 20 ஆண்டுகள் சமாதான உறவு நீடித்தது.
மராத்தியர்களின் உள்நாட்டு விவகாரம்
மராத்திய தலைவர்களின் ஆதிக்கப் போட்டி அதிகரித்துக்கொண்டே சென்றது.
1795 இல் பேஷ்வா இரண்டாம் மாதவ ராவ் தற்கொலை செய்துக் கொண்டார்.
அடுத்த பேஷ்வாவாக மாதவராவின் சகோதரர் “இரண்டாம் பாஜிராவ்” தேர்வானார்.
பேஷ்வா இரண்டாம் பாஜிராவிற்கு எதிராக போர் தொடுத்தவர் = ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர்.
பேஷ்வா இரண்டாம் பாஜிராவ், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த வெல்லஸ்லி பிரபுவிடம் உதவி கோரினார்.
வெல்லஸ்லி பிரபு மற்றும் இரண்டாம் பாஜிராவ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் = பஸ்ஸீன் உடன்படிக்கை (1802).
பஸ்ஸீன் உடன்படிக்கையின் படி, இரண்டாம் பாஜிராவ ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்.
ஆங்கிலேய படை “ஆர்தர் வெல்லஸ்லி” தலைமையில் சென்று மராத்திய தலைவர் ஹோல்கரின் படைகளை அழித்தன.
முதல் ஆங்கிலேய மராத்தியப் போரால் உருவான உடன்படிக்கைகள்
சூரத் உடன்படிக்கை (1775) = ஆங்கிலேயருக்கும், ரகுநாத ராவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை.
புரந்தர் உடன்படிக்கை (1776) = நானா பட்னாவிஸ் (பூனாவின் பாதுகாப்பு அரசு) உடன் கர்னல் அப்டன் மேற்கொண்ட உடன்படிக்கை.
சால்பை உடன்படிக்கை (1782) = மகாதாஜி சிந்தியா மற்றும் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்பட்ட உடன்படிக்கை.
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1803 – 1805)
இரண்டாம் ஆங்கிலேயப் மராத்தியப் போருக்கான காரணங்கள்
மராத்தியர்களின் சுதந்திரத்தை மீண்டும் காப்பாற்ற போராடியவர்கள் = தௌலத் ராவ் சிந்தியா மற்றும் ராகோஜி போன்ஸ்லே.
ஆங்கிலேயப் படைகளுக்கு தலைமை தாங்கினார் = ஆர்தர் வெல்லஸ்லி.
சிந்தியாவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = அஸ்ஸே.
போன்ஸ்லேவின் படைகள் என்று தோற்கடிக்கப்பட்டன = அரகான்.
இரண்டாம் ஆங்கிலேயப் மராத்தியப் போரின் போக்கு
ஆங்கிலேயர்கள் தௌலத் ராவ் சிந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் = சுர்ஜீ-அர்ஜூகான் உடன்படிக்கை.
ஆங்கிலேயர்கள் ரகோஜி போன்ஸ்லேவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் = தியோகான் உடன்படிக்கை.
எந்த ஆண்டு ஆங்கிலேயர்கள் சிந்தியாவுடனும், போன்ஸ்லேவுடனும் ஒப்பந்தம் செய்துக் கொண்டனர் = 1803.
1804 ஆம் ஆண்டு யஸ்வந்த் ராவ் ஹோல்கர், ஜெய்பூரின் மீது படையெடுக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார்.
எந்த உடன்படிக்கையின் படி, இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் முடிவிற்கு வந்தது = ராஜ்காட் உடன்படிக்கை.
ஆங்கிலேயர்கள் மற்றும் யஸ்வந்த் ராவ் ஹோகர் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை = ராஜ்காட் உடன்படிக்கை.
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் உருவான உடன்படிக்கைகள்
சுர்ஜீ-அர்ஜூகான் உடன்படிக்கை (1803) = ஆங்கிலேயர்கள் தௌலத் ராவ் சிந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம்.
தியோகான் உடன்படிக்கை (1803) = ஆங்கிலேயர்கள் ரகோஜி போன்ஸ்லேவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம்.
ராஜ்காட் உடன்படிக்கை (1805) = ஆங்கிலேயர்கள் மற்றும் யஸ்வந்த் ராவ் ஹோகர் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை.
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1817 – 1818)
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்கான காரணங்கள்
ஆங்கிலேய வீரர்கள் மராத்தியப் பகுதிகளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கினர்.
இந்த ஆக்கரமிப்பு போர்களுக்கு ஆங்கிலப் படைகளுக்கு தலைமை தாங்கியவர் = ஜெனரல் தாம்ச ஹிஸ்லாப்.
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போக்கு
பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = காட்கி போர் மற்றும் கோர்கான் போர்களில்.
நாக்பூரின் இரண்டாம் மூதோஜி போன்ஸ்லேவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = சித்தாபால்டி போர்.
இந்தூரின் மூன்றாம் மல்ஹர் ராவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = மகித்பூர் போர்.
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவுகள்
மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
பேஷ்வா பட்டம் ஒழிக்கப்பட்டது.
பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் ஆட்சிப் பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு சேர்க்கப்பட்டது.
மராத்தியத்தின் கடைசி பேஷ்வா = இரண்டாம் பாஜிராவ்.
மராட்டியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியமாக ரூபாய் எட்டு லட்சம் வழங்கப்பட்டது.
ஆங்கிலேய மராத்திய போர்கள்
1
முதல் ஆங்கிலேய மராத்தியப் போர்
1775 – 1782
சூரத் உடன்படிக்கை (1775), புரந்தர் உடன்படிக்கை (1776), சால்பை உடன்படிக்கை (1782)
இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய ஒப்புதல்.
2
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்
1803 – 1805
பஸ்ஸீன் உடன்படிக்கை (1802), சுர்ஜீ-அர்ஜூகான் உடன்படிக்கை (1803), தியோகான் உடன்படிக்கை (1803), ராஜ்காட் உடன்படிக்கை (1805)
மராத்தியர்களின் பகுதிகளை கைப்பற்றினர் ஆங்கிலேயர்கள்.
3
மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்
1817 - 1818
மராத்தியர்கள் முற்றிலுமாக தோற்கடிப்பு.
இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு
ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு நான்கு முதன்மை நிறுவனங்களாக இயங்கியது. அவை,
குடிமைப்பணிகள்
இராணுவம்
காவல்
நீதித்துறை
ஆங்கில அரசின் குடிமைப் பணிகள்
குடிமைப் பணிகள் (சிவில் சர்வீஸ்) என்ற வார்த்தையை முத்த முதலில் பயன்படுத்தியவர்கள் = ஆங்கிலேயர்கள்.
குடிமைப் பனியின் முதன்மை பணிகள் = சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், முறையாக வரி வசூலித்தல்.
குடிமைப் பணியாளர்கள் தனியார் வணிகத்தில் ஈடுபடுவதற்கு எதிராக சட்டங்களை இயற்றிய ஆங்கிலேய ஆளுநர் = காரன்வாலிஸ் பிரபு.
அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறையை துவக்கி வைத்தவர் = வெல்லஸ்லி பிரபு.
கல்கத்தா வில்லியம் கோட்டையில் மொழி, இலக்கியம், அறிவியல் ஆகிய துறையில் பயிற்சி வழங்க கல்லூரியை நிறுவியவர் = வெல்லஸ்லி பிரபு.
எந்த ஆண்டு வெல்லஸ்லி பிரபு, கல்கத்தா வில்லியம் கோட்டையில் பயிற்சிக் கல்லூரியை நிறுவினார் = 1800.
ஆனால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி எங்கு பயிற்சிக் கல்லூரியை நிறுவியது = 1803இல் இங்கிலாந்தில் “ஹெய்லிபரி” என்னுமிடத்தில் “கிழக்கிந்திய கல்லூரி” நிறுவப்பட்டது.
போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை அறிமுகம் செய்த சட்டம் = 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
“நியமனம் மற்றும் போட்டித் தேர்வு முறை” அறிமுகம் செய்த சட்டம் = 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
திறந்த முறையிலான போட்டித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1853.
1853 ஆம் ஆண்டு திறந்த முறையிலான போட்டித் தேர்வு முறையை உறுதி செய்த சட்டம் = 1858ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
1858 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் படி போட்டித் தேர்வு எழுத அதிகபட்ச வயது = 23 வயது.
எந்த ஆண்டு ஹெய்லிபரியில் நிறுவப்பட்ட “கிழக்கிந்திய கல்லூரி” நிறுத்தப்பட்டது = 1858.
எந்த ஆண்டு குடிமைப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பொறுப்பு “குடிமைப் பணியாளர் தேர்வாணையம்” வசம் ஒப்படைக்கப்பட்டது = 1858.
எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத அதிகபட்ச வயதாக 22 வயது நிர்ணயம் செய்யப்பட்டது = 1860.
எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத அதிகபட்ச வயதாக 21 வயது நிர்ணயம் செய்யப்பட்டது = 1866.
எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத அதிகபட்ச வயதாக 19 வயது நிர்ணயம் செய்யப்பட்டது = 1876.
எந்த ஆண்டு “இந்திய ஆட்சிப் பணி சட்டம்” (Indian Civil Service Act) இயற்றப்பட்டது = 1861.
எந்த சட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய பிரிட்டிஷ் பாராளுமன்றம் முடிவு செய்தது = 1861ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி சட்டம்.
எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத குறைந்தபட்ச் வயதாக 21 வயதும், அதிகபட்சமாக 23 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டது = 1892.
ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்
ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் = சத்யேந்திரநாத் தாகூர்.
எந்த ஆண்டு ஐசிஎஸ் தேர்வில் சத்யேந்திரநாத் தாகூர் தேர்ச்சி பெற்றார் = 1863.
சத்யேந்திரநாத் தாகூர் யாருடைய சகோதரர் ஆவார் = ரபீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.
1869 ஆம் ஆண்டு ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூன்று இந்தியர்கள் யார்? = சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திர தத், பிகாரி லால் குப்தா.
ராயல் கமிசன் 1912 (இஸ்லிங்டன் ஆணையம் 1912)
எந்த ஆண்டு குடிமைப் பணிகள் பற்றி ஆராய அரச ஆணையம் அமைக்கப்பட்டது = 1912.
ராயல் கமிசன் எவ்வாறு அழைக்கப்படுகிறது = இஸ்லிங்டன் ஆணையம் 1912.
யார் தலைமையில் 1912 ஆம் ஆண்டு அரசு பணிகளை பற்றி ஆராய ராயல் கமிசன் அமைக்கப்பட்டது = இஸ்லிங்டன் பிரபு.
இக்குழுவில் இருந்த இந்தியர்கள் = மூவர் (கோபால கிருஷ்ண கோகலே, அப்துர் ரஹீம், மகாதேவ் பாஸ்கர் சௌபால்).
அரசு பணிகளைப் பற்றி ஆராய அமைக்கபப்ட்ட இஸ்லிங்டன் ஆணையம் தனது பரிந்துரையை வெளியிட்ட ஆண்டு = 1917.
ஐசிஎஸ் தேர்வை இந்தியாவில் நடத்த பரிந்துரை செய்த ஆணையம் = இஸ்லிங்டன் ஆணையம் (1912).
மாண்டேகு செமஸ் போர்டு பரிந்துரை
இந்திய ஆட்சிப் பணியில் 1918இல் 33% (மூன்றில் ஒரு பங்கு) இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தவர்கள் = மாண்டேகு மற்றும் செமஸ் போர்டு.
இந்திய ஆட்சிப் பணியில் 1918இல் 33% இருந்து படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என எதில் கூறப்பட்டது = மாண்டேகு செமஸ்போர்டு பரிந்துரையில்.
லீ கமிசன் 1923
இந்திய ஆட்சிப் பணிகள் பற்றி ஆராய 1923 ஆம் ஆண்டு அமைக்கபப்ட்ட குழு = ராயல் லீ கமிசன்.
ராயல் லீ ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு = 1923.
இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி, காடுகள் பணி ஆகிய அணைத்து நியமனங்களும் இந்தியாவுக்கான அரசுச் செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்த ஆணையம் = லீ கமிசன் 1923.
“அரசுப் பணியாளர் தேர்வாணையம்” அமைக்க பரிந்துரை செய்த குழு = லீ கமிசன் 1923.
இந்திய அரசுச் சட்டம் 1935
இந்தியாவில் மத்தியில் “கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம்”, மாகாணங்களில் “மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம்” அமைக்க ஒப்புதல் அளித்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.
பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இராணுவம்
ஆங்கில சிப்பிகளை விட இந்திய வீரர்களுக்கு குறைவான ஊதிய வழங்கப்பட்டது.
1856இல் இந்திய வீரர் ஒருவருக்கு ரூ. 100 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது.
1857இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் 86% பேர் இந்திய வீரர்களாக இருந்தனர்.
இராணுவ உயர் பதவியும் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
ராணுவத்தில் இந்தியர்களுக்கான உயர் பதவி “சுபேதார்” மட்டுமே ஆகும்.
பிரிட்டிஷ் நிர்வாகத்தில் காவல் துறை
வங்காளத்தில் “திவானி” (வரிவசூல்) உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்ற ஆண்டு = 1765.
முகலாயர் காலத்தில் நகரங்களை நிர்வகிக்கும் காவல் அதிகாரிகள் = கொத்வால்.
இந்தியாவில் முதன் முதலில் காவல் துறையை உருவாக்கியவர் = காரன்வாலிஸ் பிரபு.
இந்தியாவில் முறையான காவல் துறை உருவாக்கப்பட்ட ஆண்டு = 1791.
காரன்வாலிஸ் ஏற்படுத்திய காவல் பகுதிகள் = தானாக்கள்.
காரன்வாலிஸ் ஏற்படுத்திய “தானாக்கள்” எனப்படும் காவல் பகுதிகளின் தலைவர் = தரோகா.
சௌகிதார்கள் = கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள்.
மதராஸ் மாகாணத்தில் “தரோகா” காவல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு = 1802.
“மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” பதவி உருவாக்கப்பட்ட ஆண்டு = 1808.
பிரிட்டிஷ் நிர்வாகத்தில் நீதித்துறை
“இரட்டை ஆட்சி முறை” ஒழிக்கப்பட்ட ஆண்டு = 1772.
“திவானி அதாலத்” என்றால் = சிவில் நீதிமன்றம்.
“பௌஜ்தாரி அதாலத்” என்றால் = குற்றவியல் நீதிமன்றம்.
எந்த சட்டத்தின் கீழ் கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1773 பட்டயச் சட்டம்.
எந்த ஆண்டு கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1773.
மதராஸ் மாகாணத்தில் எந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1801.
பம்பாய் மாகாணத்தில் எந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1823.
“ஜூரி” (நீதி அதிகார முறை) முறையை அறிமுகம் செய்தவர் = வில்லியம் பெண்டிங்.
எந்த ஆண்டு “ஜூரி” (நீதி அதிகார முறை) முறை அறிமுகம் செய்யப்பட்டது = 1832.
இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1861
எந்த சட்டத்தின் படி, உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன = இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1861.
1861 ஆம் ஆண்டு இந்திய உயர்நீதிமன்ற சட்டத்தின் படி, கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக மூன்று உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
கல்கத்தா உச்சநீதிமன்றத்தின் முதல் நீதிபதி
வங்காளத்தின் கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் = சர் எலிஜா இம்பே.
மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி
மதராஸ் உச்சநீதிமன்றத்தின் முதல் ஆங்கிலேய தலைமை நீதிபதி = சர் தாமஸ் ஆண்ட்ரீவ் லூமிஸ்டன்.
மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி = சர் திருவாரூர் முத்துசாமி.
துணைப்படைத் திட்டம் (1798)
துணைப்படைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1798.
துணைப்படைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் = வெல்லஸ்லி பிரபு.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை விரிவுப்படுத்த மிகச் சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்ட திட்டம் = துணைப்படைத் திட்டம்.
துணைப்படைத் திட்டத்தின் கீழ் சுதேச அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன = பாதுகாக்கப்பட்ட அரசுகள்.
இந்தியாவின் ஆங்கிலேயப் பேரரசு
துணைப்படைத் திட்டத்தின் மூலம், “இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு” என்பதனை “இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு” என மாற்றியவர் = வெல்லஸ்லி பிரபு.
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுதேச அரசுகள்
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் சுதேச அரசு = ஹைதராபாத் (1798).
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட இந்திய சுதேச அரசுகள்,
ஹைதராபாத் (1798).
தஞ்சாவூர் (1799).
அயோத்தி (1801)
பேஷ்வா (1802)
போன்ஸ்லே (1803)
குவாலியர் (1804)
இந்தூர் (1817)
ஜெய்பூர் (1818)
உதய்பூர் (1818)
ஜோத்பூர் (1818)
வாரிசு இழப்புக் கொள்கை (1848)
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பியாக இருந்தவர் = டல்ஹௌசி பிரபு.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட காரணமானவர்களில் முதன்மை சிற்பியாக இருந்தவர் = டல்ஹௌசி பிரபு.
வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகம் செய்தவர் = டல்ஹௌசி பிரபு.
வாரிசு இழப்புக் கொள்கை அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1848.
1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது = வாரிசு இழப்புக் கொள்கை (1848).
வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் இந்தியாவில் இணைக்கபப்ட்ட முதல் அரசு = சதாரா (1848).
வாரிசு இழப்புக் கொள்கையின் மூலன் இந்தியாவில் இணைக்கப்பட்ட அரசுகள்,
சதாரா (1848)
ஜெயித்பூர் (1849)
சம்பல்பூர் (1849)
பகத் (1850)
உதய்பூர் (1852)
ஜான்சி (1853)
நாக்பூர் (1854)
புத்தக வினாக்கள்
1757 ஆம் ஆண்டில் வங்காளத்தில் ஆட்சி செய்தவர் ______________ ? = சிராஜ்-உத்-தௌலா.
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு? = 1757.
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை? = அலகாபாத் உடன்படிக்கை.
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ________________ கர்நாடக போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது? = இரண்டாம்.
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு _____________? = 1761.
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது = ஆங்கிலேயர், திப்பு சுல்தான்.
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் __________________ ? = காரன்வாலிஸ் பிரபு.
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் ________________ ? = பேஷ்வா இரண்டாம் பாஜிராவ், வெல்லஸ்லி பிரபு.
மராத்திய பேரரசின் கடைசி பேஷ்வா ________________ ? = இரண்டாம் பாஜிராவ்.
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேசிய அரசு எது? = ஹைதராபாத்.
அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு ______________ ? = 9 பிப்ரவரி 1757.
சிராஜ் உத்-தௌலாவின் தலைமை படைத் தளபதி ________________ ? = மீர்ஜாபர்.
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் _____________ ? = கர்நாடகம், ஹைத்ராபாத் பகுதிகளில் ஏறபட்ட வாரிசு உரிமை பிரச்சனை.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____________ ?= டல்ஹௌசி பிரபு.
திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் ___________ ?= வெல்லஸ்லி பிரபு.
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் ________________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது? = மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்
1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் _______________ ?= வெல்லஸ்லி பிரபு.
அலிவர்திகான் மறைவிற்கு பின்னர் சிராஜ்-உத்-தௌலா வங்காளத்தின் அரியனை ஏறினார்? = சரி.
பிளாசிப் போரில் ஆங்கிலேய படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்? = தவறு. ராபர்ட் கிளைவ் தலைமை தாங்கினார்.
ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசு உரிமைப் போர், இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது?= தவறு.
வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சரி எலிஜா இம்பே ஆவார்?= சரி.
காரன்வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்? = சரி.