8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

  • ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கான கடல்வழியை கண்டுபிடித்தவர் = போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோடகாமா.
  • இந்தியாவிற்கான கடல்வழியை வாஸ்கோடகாமா கண்டுபிடித்த ஆண்டு = 1498.
  • வங்காளத்தின் வெற்றியின் காரணமாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது.

இருட்டறை துயரச் சம்பவம் 1756

  • இருட்டறை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு = 1756.
  • வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைபிடித்து, கல்கத்தாவின் வில்லியம் கோட்டையின் காற்று புகாத ஒரு அறையில் ஒரு இரவு முழுவதும் சிறை வைத்தனர்.
  • மறுநாள் அறையின் கதவி திறந்த பொழுது அதில் 123 பேர் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.
  • இச்சம்பவமே “இருட்டறை துயரச் சம்பவம்” என்று அழைக்கப்படுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சிராஜ்-உத்-தௌலா

  • வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேயர் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தி, வங்காளத்தின் “காசிம் பஜாரில்” உள்ள வணிக மையத்தை கைப்பற்றினார்.
  • சிராஜ்-உத்-தௌலா கல்கத்தா வில்லியம் கோட்டையை கைப்பற்றிய ஆண்டு = 20 ஜூன் 1756.
  • ஆனால் ஆங்கில படைத்தளபதி “இராபர்ட் கிளைவ்”, நாவாபிடம் இருந்து கல்கத்தா நகரை மீட்டார்.

அலிநகர் உடன்படிக்கை 1757

  • வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா மற்றும் ஆங்கிலேய தளபதி ராபர்ட் கிளைவ் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை = அலிநகர் உடன்படிக்கை.
  • அலிகார் உடன்படிக்கை = 9 பிப்ரவரி 1757.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

பிளாசிப் போர் 1757

  • மார்ச் 1757 இல் ஆங்கிலேயர்கள் கல்கத்தா அருகே உள்ள பிரெஞ்சுக்காரர்களின் “சந்திர நாகூர்” பகுதியை கைப்பற்றினர்.
  • சிராஜ்-உத்-தௌலா மற்றும் பிரெஞ்ச் படைகள் இனைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்தது.
  • பிளாசிப் போர் துவங்கிய தினம் = 23 ஜூன் 1757.
  • பிளாசிப் போரில் பங்கேற்ற ஆங்கிலேய படைத்தளபதி = ராபர்ட் கிளைவ்.
  • சிராஜ்-உத்-தௌலாவின் படைத்தளபதி = மீர்ஜாபர்.
  • போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.
  • ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் துவக்கி வைத்த போர் = பிளாசிப் போர் 1757.
  • இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை நீட்டிக்க செய்தப் போர் = பிளாசிப் போர் 1757.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

24 பர்கானா

  • 1757 பிளாசிப் போருக்கு பின் ஆங்கிலேயர்கள் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய இடங்கலில் எவற்றை பெற்றனர் = தடையில்லா வணிக உரிமை.
  • ஆங்கிலேயர்கள் பெற்ற “24 பர்கானா” என்னும் பகுதி எங்குள்ளது = வங்காளம்.
  • பிளாசிப் போருக்கு பிறகு வங்காள நவாப் ஆகா அரியணை ஏறியவர் = மீர்ஜாபர்.
  • ஆங்கிலேயர்கள் “மீர்ஜாபருக்கு” பதிலாக யாரை வங்காளத்தின் நவாப்பாக அமர வைத்தனர் = மீர்ஜாபரின் மருமகன் மீர்காசிம்.
  • வங்காளத்தின் தலைநகரை “மூர்ஷிதாபாத்தில்” இருந்து “மாங்கீர்க்கு” மாற்றியவர் = மீர்காசிம்.
  • “தஸ்தக்” என்றால் என்ன = சுங்கவரி விலக்கு ஆணை.
  • ஆங்கிலேயர்கள் தஸ்தக் என்னும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்தியதால், மீர்காசிம் ஆங்கிலேயர்களை தாக்கினார்.
  • ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு அயோத்திக்கு தப்பி ஓடினார்.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

பக்சார் போர் 1764

  • பக்சார் = பக்சார் என்பது பீகாரின் பாட்னா நகர் அருகே கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்.
  • பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு = 22 அக்டோபர் 1764.
  • ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டவர்கள் = வங்காள நவாப் மீர்காசிம், அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலா மற்றும் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம்.
  • பக்சார் போரில் பங்கேற்ற ஆங்கிலேய படைத் தளபதி = ஹெக்டர் மன்றோ.
  • பக்சார் போரின் முடிவில், வங்காளத்தின் நவாப் ஆக மீண்டும் அமர்த்தப்பட்டவர் = மீர்ஜாபர்.
  • மீர்ஜாபர் மறைவிற்கு பிறகு வங்காளத்தின் நவாப்பாக அரியணை ஏறியவர் = மீர்ஜாபரின் மகன் நிஜாம்-உத்-தௌலா.
  • பக்சார் போரை முடிவிற்கு கொண்டு வந்த உடன்படிக்கை = அலகாபாத் உடன்படிக்கை.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

அலகாபாத் உடன்படிக்கை

  • பக்சார் போரினால் ஏற்பட்ட உடன்படிக்கை = அலகாபாத் உடன்படிக்கை.
  • அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 20 பிப்ரவரி 1765.
  • அலகாபாத் உடன்படிக்கை நிபந்தனைகள்,
    1. வங்காள நவாப் தன்னுடைய இராணுவத்தின் பெரும் பகுதியை கலைத்து விட வேண்டும்.
    2. கம்பெனியால் நியமிக்கப்பட்ட சுபேதார் மூலம் வங்காளத்தில் வரி வசூலித்தல்.

வங்காளத்தில் இரட்டையாட்சி முறை

  • ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் அயோத்தி நவாப் சுஜா-உத்-தௌலா மற்றும் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம் ஆகிய இருவருடனும் தனித்தனியாக உடன்படிக்கை செய்துக் கொண்டார்.
  • இதன் மூலம் வங்காளத்தில் இரட்டையாட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
  • வங்காளத்தில் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தவர் = ராபர்ட் கிளைவ்.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

கர்நாடகப் போர்கள்

  • மொத்தம் எத்தனை கர்நாடகப் போர்கள் நடைபெற்றன = மூன்று.
    1. முதல் கர்நாடகப் போர் = 1746 – 1748.
    2. இரண்டாம் கர்நாடகப் போர் = 1749 – 1754.
    3. மூன்றாம் கர்நாடகப் போர் = 1756 – 1763.
  • கர்நாடகப் போர்களில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியும், பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியும் எதிரெதிர் அணியில் இருந்தன.

முதல் கர்நாடகப் போர் (1746 – 1748)

  • முதல் கர்நாடகப் போருக்கான காரணம் = ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசு உரிமை போர்.
  • ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் எதிரெதிர் அணிகளில் இருந்தன. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது.

அடையாறு போர் 1746

  • அடையாறு போர் நடைபெற்ற ஆண்டு = 1746.
  • போர் நடைபெற்ற இடம் = அடையாறு நதிக்கரையின் சாந்தோம் என்னுமிடத்தில்.
  • யாருக்கு இடையே போர் = கர்நாடக நவாப் அனுவாரூதீன் மற்றும் பிரெஞ்ச் படைகள் இடையே.
  • கர்நாடக நவாப் அன்வாரூதீன் ஆங்கிலேய உதவியை நாடினார்.
  • அடையாறு போரில் பிரெஞ்சு படைக்கு தலைமை தாங்கியவர் = கேப்டன் பாரடைஸ்.
  • அடையாறு போரில் கர்நாடக நவாப் படைக்கு தலைமை தாங்கியவர் = மாபூஸ்கான்.
  • மிகச்சிறிய பிரெஞ்சு படை வெற்றி பெற்றது.
  • நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்திய படையை வெற்றி பெற்று தங்கள் மேலாண்மையை நிலைநாட்டிய முதல் நிகழ்வு நடைபெற்ற போர் = அடையாறு போர்.

அய்-லா-சப்பேல் உடன்படிக்கை 1748

  • முதல் கர்நாடகப் போரை முடிவிற்கு கொண்ட வந்த உடன்படிக்கை = அய்-லா-சப்பேல் உடன்படிக்கை.
  • அய்-லா-சப்பேல் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு = 1748.
  • அய்-லா-சப்பேல் உடன்படிக்கையின் படி,
    • பிரிட்டன் = மதராஸ் (சென்னை) ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பிரான்ஸ் = வட அமெரிக்காவின் சில பகுதிகள் ஒப்படைப்பு.

இரண்டாம் கர்நாடகப் போர் (1749 – 1754)

  • இரண்டாம் கர்நாடகப் போருக்கான காரணம் = கர்நாடகம், ஹைத்ராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசு உரிமை போர்.
  • பிரிட்டன் ஆதரவு = கர்நாடக நவாப் பதவி கோரிய அன்வாரூதீன், ஹைதராபாத் நிசாம் பதவி கோரிய நாசிர்ஜங்கையும் ஆதரித்தனர் ஆங்கிலேயர்கள்.
  • பிரெஞ்சு ஆதரவு = கர்நாடக நவாப் பதவி கோரிய சந்தா சாகிப், ஹைதராபாத் நிசாம் பதவி கோரிய முசாபர்ஜங்கையும் ஆதரித்தனர் பிரெஞ்சுக்காரர்கள்.

ஆம்பூர் போர் 1749

  • ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு = 1749.
  • ஆம்பூர் போரின் பொழுது பிரெஞ்சு ஆளுநராக இருந்தவர் = டியூப்ளே.
  • போரில் கர்நாடக நவாப் அன்வாரூதீன் தோற்கடிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்.
  • கர்நாடக நவாப்பாக சந்தா சாகிப்பை அமர்த்தினர் பிரெஞ்சுக்காரர்கள்.
  • இதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்கள் பிரெஞ்சு அரசுக்கு வழங்கினார் நவாப்.
  • தக்காணத்தில் நாசிர்ஜங்கை தோற்கடித்து கொன்றனர் பிரெஞ்சு வீரர்கள்.
  • ஐதராபாத் நிஜாமாக முசாபர்ஜங் தேர்வு செய்யப்பட்டர்.
  • இதற்கு ஈடாக கிருஷ்ணா நதியின் தென் பகுதிகள் அனைத்திற்கும் டியூப்ளேவை ஆளுநராக நியமித்தார் நிஜாம்.
  • முசாபர் ஜங்கின் கொலையின் காரணமாக ஐதராபாத் நிஜாமாக நாசிர்ஜிங்கின் சகோதரர் “சலபத் ஜங்” தேர்வு செய்யப்பட்டார்.
  • ஹைதராபாத் நிஜாமாக சலபத்ஜங் தேர்வு செய்ய உதவிய பிரெஞ்சு படைத்தளபதி = புஸ்ஸி.
  • சலபத்ஜங் குண்டூர் மாவட்டத்தை தவிர பிற பகுதிகளை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார்.
  • ஆம்பூர் போரால் பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளேவின் அதிகாரம் உச்சநிலைக்கு சென்றது.

ஆற்காட்டுப் போர் 1751

  • ஆற்காட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு = 1751.
  • பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளே திருச்சி கோட்டையை தாக்க படைகளை அனுப்பினார்.
  • இவ்வேளையில் ஆற்காட்டை தக்க ஆங்கிலேய கவர்னராக இருந்த “சாண்டர்ஸிடம்” அனுமதி பெற்றார் ராபர்ட் கிளைவ்.
  • ஆற்காட்டுப் போரில் ஆங்கிலேய படைக்கு தலைமை தாங்கிய படைத்தளபதி = ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ்.
  • ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் உதவியுடன் ராபர்ட் கிளைவ், பிரெஞ்சுப் படைகளை ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் தோற்கடித்தார்.
  • ஆற்காட்டு நவாப்பாக அன்வாரூதீனின் மகன் “முகமது அலி” ஆங்கிலேயர் உதவியுடன் தேர்வு செய்யப்பட்டார்.
  • பிரெஞ்சுப் படைகளின் தோல்வியால் ஆளுநர் டியூப்ளேவை, பாரிஸ் நகருக்கு திருப்பி அழைத்துக் கொண்டது பிரெஞ்சு அரசாங்கம்.

பாண்டிச்சேரி உடன்படிக்கை 1755

  • டியூப்ளேவை அடுத்து பிரெஞ்சு ஆளுநராக பதவி ஏற்றவர் = கோதேயூ.
  • எந்த உடன்படிக்கையின் படி இரண்டாம் கர்நாடகப் போர் முடிவிற்கு வந்தது = பாண்டிச்சேரி உடன்படிக்கை 1755.
  • கோதேயூ, ஆங்கிலேயர்களுடன் “பாண்டிச்சேரி உடன்படிக்கையை” மேற்கொண்டார்.
  • பாண்டிச்சேரி உடன்படிக்கை படி,
    • இரு நாடுகளும் தங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது
    • போருக்கு முன்னர் பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைத்தல்.
    • புதிய கோட்டைகளை கட்டக்கூடாது.
  • கர்நாடக நவாப்பாக “முகமது அலியை” நியமித்தனர் ஆங்கிலேயர்கள்.
  • கர்நாடக பகுதியில் வலிமையின்றி இருந்தாலும், ஹைதராபாத் பகுதிகளில் வலிமையாக இருந்தனர் பிரெஞ்சுக்காரர்கள்.

மூன்றாம் கர்நாடகப் போர் (1756 – 1763)

  • மூன்றாம் கர்நாடகப் போருக்கான காரணம் = ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர்.
  • 23 ஜூன் 1757 துவங்கிய பிளாசிப் போரில் வெற்றி பெற்று ஆங்கில ஆதிக்கத்தை நிலைநிறுத்திய ராபர்ட் கிளைவ், மூன்றாம் கர்நாடகப் போருக்கான நிதியையும் வழங்கினார்.
  • பிரெஞ்சுப் படைகளுக்கு தலைமை தாங்கியவர் = கவுண்-டி-லாலி.
  • ஆங்கிலேப் படைகளுக்கு தலைமை தாங்கியவர் = ஜெனரல் அயர்கூட்.

வந்தவாசிப் போர் 1760

  • வந்தவாசி போர் துவங்கிய தினம் = 22 ஜனவரி 1760.
  • பிரெஞ்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது.
  • கவுண்டி லாலி பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பி அழைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
  • எந்தப் போரின் மூலம் பிரெஞ்சுப் படைகள், இந்தியாவில் இருந்த தங்கள் அணைத்து குடியேற்றங்களையும் இழந்தனர் = மூன்றாம் கர்நாடகப் போர்.

பாரிஸ் உடன்படிக்கை 1763

  • எந்த உடன்படிக்கையின் மூலம் மூன்றாம் கர்நாடகப் போர் முடிவிற்கு வந்தது = பாரிஸ் உடன்படிக்கை 1763.
  • பாரிஸ் உடன்படிக்கையின் படி, பாண்டிச்சேரி உட்பட இந்தியாவில் இருந்த அணைத்து பிரெஞ்சு குடியேற்றங்களும் மீண்டும் பிரெஞ்சு வசம் வழங்கப்பட்டது.
  • இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்த போர் = மூன்றாம் கர்நாடகப் போர்.

கர்நாடகப் போர்கள்

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
வ. எண்போர்ஆண்டுபோருக்கான காரணம்போர்கள்உடன்படிக்கை
1முதலாம் கர்நாடகப் போர்1746 – 1748ஆஸ்திரிய வாரிசு உரிமை போர்அடையாறு போர் 1746அய்-லா-சப்பேல் உடன்படிக்கை 1748
2இரண்டாம் கர்நாடகப் போர்1749 – 1754கர்நாடகம், ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசு உரிமை போர்ஆம்பூர் போர் 1749, ஆற்காட்டுப் போர் 1751பாண்டிச்சேரி உடன்படிக்கை 1755
3மூன்றாம் கர்நாடகப் போர்1756 - 1763ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர்வந்தவாசிப் போர் 1760பாரிஸ் உடன்படிக்கை 1763

ஆங்கிலேய மைசூர் போர்கள்

  • இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் விரிவாக்கதிற்காக பல்வேறு இடங்களில் போர்களை மேற்கொண்டனர்.
  • அதன்படி தென்னிந்தியாவில் மைசூர் பகுதியில் ஹைதர் அழியும், அவைர்ன் மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்தனர்.
  • இதுவே ஆங்கிலேய மைசூர் போர்களாகும்.
  • மொத்தம் எத்தனை ஆங்கிலேய மைசூர் போர்கள் நடைபெற்றன = நான்கு.
    1. முதல் ஆங்கிலேய மைசூர் போர் (1767 – 1769)
    2. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780 – 1784)
    3. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790 – 1792)
    4. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் (1799)
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

முதல் ஆங்கிலேய மைசூர் போர் (1767 – 1769)

முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள்

  • ஹைதர் அலியின் வளர்ச்சி மற்றும் அவரின் பிரெஞ்சு அரசுடான நட்பு ஆகியவை ஆங்கிலேயர்க்கு வெறுப்பை உண்டாக்கின.
  • ஹைதர் அலிக்கு எதிராக முப்படை கூட்டணியை உருவாக்கியவர்கள் = மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம், ஆங்கிலேயர்கள்.

முதல் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு

  • 1767 இல் மைசூர் மீது ஹைதராபாத் நிஜாம் போர் தொடுத்தார்.
  • ஆங்கிலப் படைக்கு தலைமை தாங்கிய தளபதி = ஜோசப் ஸ்மித்.
  • ஆங்கிலப் படையை தோற்கடித்து எப்பகுதியை கைப்பற்றினார் ஹைதர் அலி = மங்களூர்.
  • மங்களூரை கைப்பற்றிய பிறகு ஹைதர் அலி எந்த நகரம் மீது படையெடுத்தார் = மதராஸ்.

மதராஸ் உடன்படிக்கை 1769

  • மதராஸ் உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 4 ஏப்ரல் 1769.
  • மதராஸ் உடன்படிக்கை செய்துக் கொண்டவர்கள் = ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேயர்கள்.
  • முதல் ஆங்கிலேய மைசூர் போர் முடிவிற்கு வர காரணம் = மதராஸ் உடன்படிக்கை.
  • மதராஸ் உடன்படிக்கையின் நிபந்தனைகள்,
    • போருக்கு முன்னர் இருந்த பகுதிகளை இருதரப்பினரும் திரும்பப் பெறுதல்.
    • மற்ற நாடு தாக்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொள்ளல்.

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780 – 1784)

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள்

  • மதராஸ் உடன்படிக்கை 1769 ஐ மீறினர் ஆங்கிலேயர்கள்.
  • 1771 இல் ஹைதர் அலி மீது மராத்தியர்கள் தாக்கிய பொழுது “மதராஸ் உடன்படிக்கை” படி ஆங்கிலேயர்கள் உதவவில்லை.
  • ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்ட பிரெஞ்சு குடியேற்றமான “மாஹி” பகுதியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
  • ஆங்கிலப் படைக்கு எதிராக முக்கூட்டணியை உருவாக்கியவர்கள் = ஹைதர் அலி, ஹைத்ராபாத் நிஜாம், மராத்தியர்கள்.

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு

  • ஆங்கிலப் படைக்கு தலைமை தாங்கியவர் = சர் அயர்கூட்.
  • எங்கு நடைபெற்ற போரில் சர் அயர்கூட், ஹைதர் அலியை தோற்கடித்தார் = பரங்கிப்பேட்டை (போர்டோ நோவா).
  • மைசூர் படைகள் எங்கு நடைபெற்ற போரில் மீண்டும் தோல்வியை தழுவின = சோளிங்கர்.
  • போரின் இடையிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹைதர் அலி இறந்தார்.
  • ஹைதர் அலி புற்றுநோயால் இறந்த ஆண்டு = 1782.
  • ஹைதர் அலி இறப்பிற்கு பிறகு மைசூர் படைக்கு தலைமை தாங்கியவர் = ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான்.
  • திப்பு சுல்தான் எந்த ஆங்கிலேய படைத் தளபதியை கைது செய்தார் = பிரிகேடியர் மேத்யூஸ்.

மங்களூர் உடன்படிக்கை 1784

  • மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தான தினம் = 7 மார்ச் 1784.
  • மங்களூர் உடன்படிக்கையை செய்துக் கொண்டவர்கள் = ஆங்கிலேயர்கள் மற்றும் திப்பு சுல்தான்.
  • மங்களூர் உடன்படிக்கையின் நிபந்தனைகள்,
    • இருபிரிவினரும் போரில் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப ஒப்படைத்தல்.
    • கைதிகளை திரும்ப ஒப்படைத்தல்.
  • இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் பொழுது இந்தியாவில் ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • இந்த சமயத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவில் ஆங்கிலேயப் பகுதிகளை ஒருங்கிணைத்தார்.

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790 – 1792)

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான கரணங்கள்

  • ஆங்கிலேயர்க்கு எதிராக வெளிநாட்டு கூட்டணியை உருவாக்க ஏதுவாக பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கு தூதவர்களை அனுப்பினார் திப்பு சுல்தான்.
  • ஆங்கிலேய கூட்டணியில் இருந்த “திருவிதாங்கூர் சமஸ்தானத்தை” 1789 இல் தாக்கினார் திப்பு சுல்தான்.
  • மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரில், திப்பு சுல்தானுக்கு எதிராக முக்கூட்டணியை உருவாக்கியவர்கள் = ஆங்கிலேயர்கள், மராத்தியர்கள், ஹைதராபாத் நிஜாம்.

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு

  • மூன்று கட்டங்களாக நடைபெற்ற ஆங்கிலேய மைசூர் போர் எது = மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்.
  • ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் பிரபு, தாமே படையை முன்னெடுத்து தாக்குதலை நடத்தினார்.
  • பல்வேறு இடங்களில் தோல்வியை தழுவிய திப்பு சுல்தான் இறுதியில் ஆங்கிலேயரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்படிக்கை 1792

  • மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரை முடிவிற்கு கொண்டு வந்த உடன்படிக்கை = ஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்படிக்கை.
  • ஸ்ரீரங்கப்பட்டிணம் உடன்படிக்கையின் நிபந்தனைகள்,
    • திப்பு தன்னுடைய ஆட்சிப் பகுதியில் பாதியை ஒப்படைக்க வேண்டும்.
    • போர் இழப்பீட்டு தொகையாக 3.6 கோடி செலுத்த வேண்டும்.
    • திப்பு தன்னுடைய இரண்டு மகன்களை பிணையக்கைதிகளாக ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • இதன் மூலம் ஆங்கிலேயர்கள் மலபார், குடகு மலை, திண்டுக்கல், பாராமஹால் (கோவை, சேலம்) ஆகிய பகுதிகளை பெற்றனர்.
    • பாராமஹால் பகுதி என்பது = கோயம்புத்தூர், சேலம் பகுதிகள்.

நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் (1799)

நான்காம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள்

  • ஆங்கிலேயருக்கு எதிராக அரேபியா, துருக்கி, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளை கூட்டணியில் சேர்க்க தூதவர்களை அனுப்பினார் திப்பு.
  • பிரான்ஸ் நாட்டின் நெப்போலியன் உடன் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்டார் திப்பு.
  • பிரெஞ்சு அதிகாரிகள் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் “ஜாக்கோபியன்கழகத்தை” நிறுவினர்.
  • பிரெஞ்சு அதிகாரிகள் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் “சுதந்திர மரத்தை” நட்டனர்.

நான்காம் ஆங்கிலேய மைசூர் போரின் போக்கு

  • திப்புவின் மீது போர் தொடுத்தவர் = வெல்லஸ்லி பிரபு.
  • பம்பாய் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஆங்கிலேய தளபதி = ஸ்டூவர்ட்.
  • மதராஸ் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஆங்கிலேய தளபதி = வெல்லஸ்லி பிரபுவின் சகோதரர் ஆர்தர் வெல்லஸ்லி.
  • ஸ்ரீரங்கப்பட்டிணத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய தினம் = 4 மே 1799.

நான்காம் மைசூர் போரின் முடிவு

  • நான்காம் மைசூர் போரின் இறுதியில் “திப்பு சுல்தான்” கொள்ளப்பட்டார்.
  • ஸ்ரீரங்கப்பட்டிணம் கைப்பற்றப்பட்டது.
  • மைசூர் அரியணை இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த “மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்” வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆங்கிலோ மைசூர் போர்கள்

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
போர்வருடம்மைசூர் பகுதியை ஆண்டவர்வங்காள கவர்னர் ஜெனெரல்உடன்படிக்கைமுக்கிய தகவல்கள்
முதலாம் ஆங்கிலோ – மைசூர் போர்1767 – 1769ஹைதர் அலிகாரன்வாலிஸ் பிரபுமெட்ராஸ் உடன்படிக்கை (1769, ஏப்ரல் 4)ஹைதர் அலி வெற்றி
இரண்டாம் ஆங்கிலோ – மைசூர் போர் (போர்டோ-நோவா போர்)1780 – 1784ஹைதர் அலிவாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுமங்களூர் உடன்படிக்கை (1784 மார்ச் 7)ஹைதர் அலி இறப்பு.
மூன்றாம் ஆங்கிலோ – மைசூர் போர்1790 – 1792திப்பு சுல்தான்காரன் வாலிஸ் பிரபுஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை (1792)திப்பு சுல்தான் தோல்வியின் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
நான்காம் ஆங்கிலோ – மைசூர் போர்1799திப்பு சுல்தான்வெல்லஸ்லி பிரபுதிப்பு சுல்தான் மறைவு

ஆங்கிலேய மராத்திய போர்கள்

  • மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு = 1761.
  • மூன்றாம் பானிபட் போரில் தோல்வியில் இருந்து மீள மராத்தியர்களுக்கு பத்து ஆண்டுகள் ஆனது.
  • பேஷ்வா கட்டுப்பாட்டில் இருந்த மராத்தியம், ஐந்து சுதந்திர அரசுகளாக மாறின. அவை,
    1. பூனா – பேஷ்வா
    2. பரோடா – கெய்க்வாட்
    3. நாக்பூர் – போன்ஸ்லே
    4. இந்தூர் – ஹோல்கர்
    5. குவாலியர் – சிந்தியா
  • ஐந்து சுதந்திர அரசுகளும் ஒருவரை இருவர் எதிர்த்தனர்.
  • ஆங்கிலேயர்கள் மற்றும் மராத்தியர்கள் இடையே மொத்தம் எத்தனை போர்கள் நடைபெற்றன = மூன்று. அவை,
    1. முதல் ஆங்கிலேய மராத்திய போர் (1775 – 1782)
    2. இரண்டாம் ஆங்கிலேயே மராத்திய போர் (1803 – 1805)
    3. மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போர் (1817 – 1818)
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் (1775 – 1782)

முதல் ஆங்கிலேய மராத்தியப் போருக்கான காரணங்கள்

  • மராத்திய பேஷ்வா “நாராயணராவ்” மரணத்திற்கு பிறகு அடுத்த பேஷ்வா யார் என்ற வாரிசு பிரச்சனையில் ஆங்கிலேயர்கள் தலையிட்டனர்.
  • நாராயனராவிற்கு பிறகு பேஷ்வாவாக பதவி ஏற்றவர் = ரகுநாத ராவ் (ராகோபா).
  • ரகுநாத ராவை பேஷ்வாவாக ஏற்க மறுத்தவர் = நானா பட்னாவிஸ்.
  • நானா பட்னாவிஸ் யாரை பேஷ்வாவாக அறிவித்தார் = நாராயண ராவின் மகன் இரண்டாம் மாதவ ராவ்.
  • ரகுநாத ராவ் ஆங்கிலேயரின் உதவியை கோரினார்.
  • ஆங்கிலேயருக்கும், ரகுநாத ராவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை = சூரத் உடன்படிக்கை (1775).
  • சூரத் உடன்படிக்கையை கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • நானா பட்னாவிஸ் உடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக யாரை அனுப்பியது ஆங்கிலேய கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் = கர்னல் அப்டன்.
  • நானா பட்னாவிஸ் (பூனாவின் பாதுகாப்பு அரசு) உடன் கர்னல் அப்டன் மேற்கொண்ட உடன்படிக்கை = “புரந்தர் உடன்படிக்கை” (1776).
  • பம்பாய் ஆங்கில அரசாங்கம் புரந்தார் உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்து.

முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் போக்கு

  • முதல் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஆங்கிலப் படைக்கு தலைமை தாங்கியவர் = கேப்டன் பாப்ஹாமின்.
  • கேப்டன் பாப்ஹாமின், மராத்திய தலைவர் “மகாதாஜி சிந்தியாவை” தோற்கடித்து குவாலியரை கைப்பற்றினார்.

சால்பை உடன்படிக்கை 1782

  • எந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் முடிவிற்கு வந்தது = சால்பை உடன்படிக்கை (1782).
  • சால்பை ஒப்பந்தம் யாருக்கு இடையே கையெழுத்தானது = மகாதாஜி சிந்தியா மற்றும் வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • சால்பை ஒப்பந்தம் கையெழுத்தான தேதி = 17 மே 1782.

முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவுகள்

  • இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
  • ஆங்கிலேயர்களுக்கு “சால்செட்” பகுதி வழங்கப்பட்டது.
  • ஆங்கிலேயர்களுக்கும் மராதியர்களுகும் அடுத்த 20 ஆண்டுகள் சமாதான உறவு நீடித்தது.

மராத்தியர்களின் உள்நாட்டு விவகாரம்

  • மராத்திய தலைவர்களின் ஆதிக்கப் போட்டி அதிகரித்துக்கொண்டே சென்றது.
  • 1795 இல் பேஷ்வா இரண்டாம் மாதவ ராவ் தற்கொலை செய்துக் கொண்டார்.
  • அடுத்த பேஷ்வாவாக மாதவராவின் சகோதரர் “இரண்டாம் பாஜிராவ்” தேர்வானார்.
  • பேஷ்வா இரண்டாம் பாஜிராவிற்கு எதிராக போர் தொடுத்தவர் = ஜஸ்வந்த் ராவ் ஹோல்கர்.
  • பேஷ்வா இரண்டாம் பாஜிராவ், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த வெல்லஸ்லி பிரபுவிடம் உதவி கோரினார்.
  • வெல்லஸ்லி பிரபு மற்றும் இரண்டாம் பாஜிராவ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் = பஸ்ஸீன் உடன்படிக்கை (1802).
  • பஸ்ஸீன் உடன்படிக்கையின் படி, இரண்டாம் பாஜிராவ ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்.
  • ஆங்கிலேய படை “ஆர்தர் வெல்லஸ்லி” தலைமையில் சென்று மராத்திய தலைவர் ஹோல்கரின் படைகளை அழித்தன.

முதல் ஆங்கிலேய மராத்தியப் போரால் உருவான உடன்படிக்கைகள்

  1. சூரத் உடன்படிக்கை (1775) = ஆங்கிலேயருக்கும், ரகுநாத ராவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை.
  2. புரந்தர் உடன்படிக்கை (1776) = நானா பட்னாவிஸ் (பூனாவின் பாதுகாப்பு அரசு) உடன் கர்னல் அப்டன் மேற்கொண்ட உடன்படிக்கை.
  3. சால்பை உடன்படிக்கை (1782) = மகாதாஜி சிந்தியா மற்றும் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்பட்ட உடன்படிக்கை.

இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1803 – 1805)

இரண்டாம் ஆங்கிலேயப் மராத்தியப் போருக்கான காரணங்கள்

  • மராத்தியர்களின் சுதந்திரத்தை மீண்டும் காப்பாற்ற போராடியவர்கள் = தௌலத் ராவ் சிந்தியா மற்றும் ராகோஜி போன்ஸ்லே.
  • ஆங்கிலேயப் படைகளுக்கு தலைமை தாங்கினார் = ஆர்தர் வெல்லஸ்லி.
  • சிந்தியாவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = அஸ்ஸே.
  • போன்ஸ்லேவின் படைகள் என்று தோற்கடிக்கப்பட்டன = அரகான்.

இரண்டாம் ஆங்கிலேயப் மராத்தியப் போரின் போக்கு

  • ஆங்கிலேயர்கள் தௌலத் ராவ் சிந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் = சுர்ஜீ-அர்ஜூகான் உடன்படிக்கை.
  • ஆங்கிலேயர்கள் ரகோஜி போன்ஸ்லேவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் = தியோகான் உடன்படிக்கை.
  • எந்த ஆண்டு ஆங்கிலேயர்கள் சிந்தியாவுடனும், போன்ஸ்லேவுடனும் ஒப்பந்தம் செய்துக் கொண்டனர் = 1803.
  • 1804 ஆம் ஆண்டு யஸ்வந்த் ராவ் ஹோல்கர், ஜெய்பூரின் மீது படையெடுக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார்.
  • எந்த உடன்படிக்கையின் படி, இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் முடிவிற்கு வந்தது = ராஜ்காட் உடன்படிக்கை.
  • ஆங்கிலேயர்கள் மற்றும் யஸ்வந்த் ராவ் ஹோகர் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை = ராஜ்காட் உடன்படிக்கை.

இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் உருவான உடன்படிக்கைகள்

  1. சுர்ஜீ-அர்ஜூகான் உடன்படிக்கை (1803) = ஆங்கிலேயர்கள் தௌலத் ராவ் சிந்தியாவுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம்.
  2. தியோகான் உடன்படிக்கை (1803) = ஆங்கிலேயர்கள் ரகோஜி போன்ஸ்லேவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம்.
  3. ராஜ்காட் உடன்படிக்கை (1805) = ஆங்கிலேயர்கள் மற்றும் யஸ்வந்த் ராவ் ஹோகர் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை.

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1817 – 1818)

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்கான காரணங்கள்

  • ஆங்கிலேய வீரர்கள் மராத்தியப் பகுதிகளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கினர்.
  • இந்த ஆக்கரமிப்பு போர்களுக்கு ஆங்கிலப் படைகளுக்கு தலைமை தாங்கியவர் = ஜெனரல் தாம்ச ஹிஸ்லாப்.

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போக்கு

  • பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = காட்கி போர் மற்றும் கோர்கான் போர்களில்.
  • நாக்பூரின் இரண்டாம் மூதோஜி போன்ஸ்லேவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = சித்தாபால்டி போர்.
  • இந்தூரின் மூன்றாம் மல்ஹர் ராவின் படைகள் எங்கு தோற்கடிக்கப்பட்டன = மகித்பூர் போர்.

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவுகள்

  • மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
  • பேஷ்வா பட்டம் ஒழிக்கப்பட்டது.
  • பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் ஆட்சிப் பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு சேர்க்கப்பட்டது.
  • மராத்தியத்தின் கடைசி பேஷ்வா = இரண்டாம் பாஜிராவ்.
  • மராட்டியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியமாக ரூபாய் எட்டு லட்சம் வழங்கப்பட்டது.

ஆங்கிலேய மராத்திய போர்கள்

8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
1முதல் ஆங்கிலேய மராத்தியப் போர்1775 – 1782சூரத் உடன்படிக்கை (1775), புரந்தர் உடன்படிக்கை (1776), சால்பை உடன்படிக்கை (1782)இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய ஒப்புதல்.
2இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்1803 – 1805பஸ்ஸீன் உடன்படிக்கை (1802), சுர்ஜீ-அர்ஜூகான் உடன்படிக்கை (1803), தியோகான் உடன்படிக்கை (1803), ராஜ்காட் உடன்படிக்கை (1805)மராத்தியர்களின் பகுதிகளை கைப்பற்றினர் ஆங்கிலேயர்கள்.
3மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்1817 - 1818மராத்தியர்கள் முற்றிலுமாக தோற்கடிப்பு.

இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு

  • ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு நான்கு முதன்மை நிறுவனங்களாக இயங்கியது. அவை,
    1. குடிமைப்பணிகள்
    2. இராணுவம்
    3. காவல்
    4. நீதித்துறை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

ஆங்கில அரசின் குடிமைப் பணிகள்

  • குடிமைப் பணிகள் (சிவில் சர்வீஸ்) என்ற வார்த்தையை முத்த முதலில் பயன்படுத்தியவர்கள் = ஆங்கிலேயர்கள்.
  • குடிமைப் பனியின் முதன்மை பணிகள் = சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், முறையாக வரி வசூலித்தல்.
  • குடிமைப் பணியாளர்கள் தனியார் வணிகத்தில் ஈடுபடுவதற்கு எதிராக சட்டங்களை இயற்றிய ஆங்கிலேய ஆளுநர் = காரன்வாலிஸ் பிரபு.
  • அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறையை துவக்கி வைத்தவர் = வெல்லஸ்லி பிரபு.
  • கல்கத்தா வில்லியம் கோட்டையில் மொழி, இலக்கியம், அறிவியல் ஆகிய துறையில் பயிற்சி வழங்க கல்லூரியை நிறுவியவர் = வெல்லஸ்லி பிரபு.
  • எந்த ஆண்டு வெல்லஸ்லி பிரபு, கல்கத்தா வில்லியம் கோட்டையில் பயிற்சிக் கல்லூரியை நிறுவினார் = 1800.
  • ஆனால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி எங்கு பயிற்சிக் கல்லூரியை நிறுவியது = 1803இல் இங்கிலாந்தில் “ஹெய்லிபரி” என்னுமிடத்தில் “கிழக்கிந்திய கல்லூரி” நிறுவப்பட்டது.
  • போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை அறிமுகம் செய்த சட்டம் = 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
  • “நியமனம் மற்றும் போட்டித் தேர்வு முறை” அறிமுகம் செய்த சட்டம் = 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
  • திறந்த முறையிலான போட்டித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1853.
  • 1853 ஆம் ஆண்டு திறந்த முறையிலான போட்டித் தேர்வு முறையை உறுதி செய்த சட்டம் = 1858ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
  • 1858 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் படி போட்டித் தேர்வு எழுத அதிகபட்ச வயது = 23 வயது.
  • எந்த ஆண்டு ஹெய்லிபரியில் நிறுவப்பட்ட “கிழக்கிந்திய கல்லூரி” நிறுத்தப்பட்டது = 1858.
  • எந்த ஆண்டு குடிமைப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பொறுப்பு “குடிமைப் பணியாளர் தேர்வாணையம்” வசம் ஒப்படைக்கப்பட்டது = 1858.
  • எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத அதிகபட்ச வயதாக 22 வயது நிர்ணயம் செய்யப்பட்டது = 1860.
  • எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத அதிகபட்ச வயதாக 21 வயது நிர்ணயம் செய்யப்பட்டது = 1866.
  • எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத அதிகபட்ச வயதாக 19 வயது நிர்ணயம் செய்யப்பட்டது = 1876.
  • எந்த ஆண்டு “இந்திய ஆட்சிப் பணி சட்டம்” (Indian Civil Service Act) இயற்றப்பட்டது = 1861.
  • எந்த சட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய பிரிட்டிஷ் பாராளுமன்றம் முடிவு செய்தது = 1861ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி சட்டம்.
  • எந்த ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வாணைய தேர்வெழுத குறைந்தபட்ச் வயதாக 21 வயதும், அதிகபட்சமாக 23 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டது = 1892.

ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்

  • ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் = சத்யேந்திரநாத் தாகூர்.
  • எந்த ஆண்டு ஐசிஎஸ் தேர்வில் சத்யேந்திரநாத் தாகூர் தேர்ச்சி பெற்றார் = 1863.
  • சத்யேந்திரநாத் தாகூர் யாருடைய சகோதரர் ஆவார் = ரபீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஆவார்.
  • 1869 ஆம் ஆண்டு ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூன்று இந்தியர்கள் யார்? = சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திர தத், பிகாரி லால் குப்தா.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

ராயல் கமிசன் 1912 (இஸ்லிங்டன் ஆணையம் 1912)

  • எந்த ஆண்டு குடிமைப் பணிகள் பற்றி ஆராய அரச ஆணையம் அமைக்கப்பட்டது = 1912.
  • ராயல் கமிசன் எவ்வாறு அழைக்கப்படுகிறது = இஸ்லிங்டன் ஆணையம் 1912.
  • யார் தலைமையில் 1912 ஆம் ஆண்டு அரசு பணிகளை பற்றி ஆராய ராயல் கமிசன் அமைக்கப்பட்டது = இஸ்லிங்டன் பிரபு.
  • இக்குழுவில் இருந்த இந்தியர்கள் = மூவர் (கோபால கிருஷ்ண கோகலே, அப்துர் ரஹீம், மகாதேவ் பாஸ்கர் சௌபால்).
  • அரசு பணிகளைப் பற்றி ஆராய அமைக்கபப்ட்ட இஸ்லிங்டன் ஆணையம் தனது பரிந்துரையை வெளியிட்ட ஆண்டு = 1917.
  • ஐசிஎஸ் தேர்வை இந்தியாவில் நடத்த பரிந்துரை செய்த ஆணையம் = இஸ்லிங்டன் ஆணையம் (1912).

மாண்டேகு செமஸ் போர்டு பரிந்துரை

  • இந்திய ஆட்சிப் பணியில் 1918இல் 33% (மூன்றில் ஒரு பங்கு) இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தவர்கள் = மாண்டேகு மற்றும் செமஸ் போர்டு.
  • இந்திய ஆட்சிப் பணியில் 1918இல் 33% இருந்து படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என எதில் கூறப்பட்டது = மாண்டேகு செமஸ்போர்டு பரிந்துரையில்.

லீ கமிசன் 1923

  • இந்திய ஆட்சிப் பணிகள் பற்றி ஆராய 1923 ஆம் ஆண்டு அமைக்கபப்ட்ட குழு = ராயல் லீ கமிசன்.
  • ராயல் லீ ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு = 1923.
  • இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி, காடுகள் பணி ஆகிய அணைத்து நியமனங்களும் இந்தியாவுக்கான அரசுச் செயலாளரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பரிந்துரை செய்த ஆணையம் = லீ கமிசன் 1923.
  • “அரசுப் பணியாளர் தேர்வாணையம்” அமைக்க பரிந்துரை செய்த குழு = லீ கமிசன் 1923.

இந்திய அரசுச் சட்டம் 1935

  • இந்தியாவில் மத்தியில் “கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம்”, மாகாணங்களில் “மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம்” அமைக்க ஒப்புதல் அளித்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.

பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இராணுவம்

  • ஆங்கில சிப்பிகளை விட இந்திய வீரர்களுக்கு குறைவான ஊதிய வழங்கப்பட்டது.
  • 1856இல் இந்திய வீரர் ஒருவருக்கு ரூ. 100 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது.
  • 1857இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் 86% பேர் இந்திய வீரர்களாக இருந்தனர்.
  • இராணுவ உயர் பதவியும் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
  • ராணுவத்தில் இந்தியர்களுக்கான உயர் பதவி “சுபேதார்” மட்டுமே ஆகும்.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

பிரிட்டிஷ் நிர்வாகத்தில் காவல் துறை

  • வங்காளத்தில் “திவானி” (வரிவசூல்) உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்ற ஆண்டு = 1765.
  • முகலாயர் காலத்தில் நகரங்களை நிர்வகிக்கும் காவல் அதிகாரிகள் = கொத்வால்.
  • இந்தியாவில் முதன் முதலில் காவல் துறையை உருவாக்கியவர் = காரன்வாலிஸ் பிரபு.
  • இந்தியாவில் முறையான காவல் துறை உருவாக்கப்பட்ட ஆண்டு = 1791.
  • காரன்வாலிஸ் ஏற்படுத்திய காவல் பகுதிகள் = தானாக்கள்.
  • காரன்வாலிஸ் ஏற்படுத்திய “தானாக்கள்” எனப்படும் காவல் பகுதிகளின் தலைவர் = தரோகா.
  • சௌகிதார்கள் = கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள்.
  • மதராஸ் மாகாணத்தில் “தரோகா” காவல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு = 1802.
  • “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” பதவி உருவாக்கப்பட்ட ஆண்டு = 1808.

பிரிட்டிஷ் நிர்வாகத்தில் நீதித்துறை

  • “இரட்டை ஆட்சி முறை” ஒழிக்கப்பட்ட ஆண்டு = 1772.
  • “திவானி அதாலத்” என்றால் = சிவில் நீதிமன்றம்.
  • “பௌஜ்தாரி அதாலத்” என்றால் = குற்றவியல் நீதிமன்றம்.
  • எந்த சட்டத்தின் கீழ் கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1773 பட்டயச் சட்டம்.
  • எந்த ஆண்டு கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1773.
  • மதராஸ் மாகாணத்தில் எந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1801.
  • பம்பாய் மாகாணத்தில் எந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1823.
  • “ஜூரி” (நீதி அதிகார முறை) முறையை அறிமுகம் செய்தவர் = வில்லியம் பெண்டிங்.
  • எந்த ஆண்டு “ஜூரி” (நீதி அதிகார முறை) முறை அறிமுகம் செய்யப்பட்டது = 1832.

இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1861

  • எந்த சட்டத்தின் படி, உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன = இந்திய உயர்நீதிமன்ற சட்டம் 1861.
  • 1861 ஆம் ஆண்டு இந்திய உயர்நீதிமன்ற சட்டத்தின் படி, கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக மூன்று உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

கல்கத்தா உச்சநீதிமன்றத்தின் முதல் நீதிபதி

  • வங்காளத்தின் கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் = சர் எலிஜா இம்பே.

மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி

  • மதராஸ் உச்சநீதிமன்றத்தின் முதல் ஆங்கிலேய தலைமை நீதிபதி = சர் தாமஸ் ஆண்ட்ரீவ் லூமிஸ்டன்.
  • மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி = சர் திருவாரூர் முத்துசாமி.
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

துணைப்படைத் திட்டம் (1798)

  • துணைப்படைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1798.
  • துணைப்படைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் = வெல்லஸ்லி பிரபு.
  • இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை விரிவுப்படுத்த மிகச் சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்ட திட்டம் = துணைப்படைத் திட்டம்.
  • துணைப்படைத் திட்டத்தின் கீழ் சுதேச அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன = பாதுகாக்கப்பட்ட அரசுகள்.

இந்தியாவின் ஆங்கிலேயப் பேரரசு

  • துணைப்படைத் திட்டத்தின் மூலம், “இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு” என்பதனை “இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு” என மாற்றியவர் = வெல்லஸ்லி பிரபு.

துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட சுதேச அரசுகள்

  • துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் சுதேச அரசு = ஹைதராபாத் (1798).
  • துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட இந்திய சுதேச அரசுகள்,
    • ஹைதராபாத் (1798).
    • தஞ்சாவூர் (1799).
    • அயோத்தி (1801)
    • பேஷ்வா (1802)
    • போன்ஸ்லே (1803)
    • குவாலியர் (1804)
    • இந்தூர் (1817)
    • ஜெய்பூர் (1818)
    • உதய்பூர் (1818)
    • ஜோத்பூர் (1818)
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

வாரிசு இழப்புக் கொள்கை (1848)

  • இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பியாக இருந்தவர் = டல்ஹௌசி பிரபு.
  • இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட காரணமானவர்களில் முதன்மை சிற்பியாக இருந்தவர் = டல்ஹௌசி பிரபு.
  • வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகம் செய்தவர் = டல்ஹௌசி பிரபு.
  • வாரிசு இழப்புக் கொள்கை அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1848.
  • 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது = வாரிசு இழப்புக் கொள்கை (1848).
  • வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் இந்தியாவில் இணைக்கபப்ட்ட முதல் அரசு = சதாரா (1848).
  • வாரிசு இழப்புக் கொள்கையின் மூலன் இந்தியாவில் இணைக்கப்பட்ட அரசுகள்,
    • சதாரா (1848)
    • ஜெயித்பூர் (1849)
    • சம்பல்பூர் (1849)
    • பகத் (1850)
    • உதய்பூர் (1852)
    • ஜான்சி (1853)
    • நாக்பூர் (1854)

புத்தக வினாக்கள்

  1. 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தில் ஆட்சி செய்தவர் ______________ ? = சிராஜ்-உத்-தௌலா.
  2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு? = 1757.
  3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை? = அலகாபாத் உடன்படிக்கை.
  4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ________________ கர்நாடக போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது? = இரண்டாம்.
  5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு _____________? = 1761.
  6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது = ஆங்கிலேயர், திப்பு சுல்தான்.
  7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் __________________ ? = காரன்வாலிஸ் பிரபு.
  8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் ________________ ? = பேஷ்வா இரண்டாம் பாஜிராவ், வெல்லஸ்லி பிரபு.
  9. மராத்திய பேரரசின் கடைசி பேஷ்வா ________________ ? = இரண்டாம் பாஜிராவ்.
  10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேசிய அரசு எது? = ஹைதராபாத்.
  11. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு ______________ ? = 9 பிப்ரவரி 1757.
  12. சிராஜ் உத்-தௌலாவின் தலைமை படைத் தளபதி ________________ ? = மீர்ஜாபர்.
  13. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் _____________ ? = கர்நாடகம், ஹைத்ராபாத் பகுதிகளில் ஏறபட்ட வாரிசு உரிமை பிரச்சனை.
  14. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____________ ?= டல்ஹௌசி பிரபு.
  15. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் ___________ ?= வெல்லஸ்லி பிரபு.
  16. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் ________________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது? = மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்
  17. 1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் _______________ ?= வெல்லஸ்லி பிரபு.
  18. அலிவர்திகான் மறைவிற்கு பின்னர் சிராஜ்-உத்-தௌலா வங்காளத்தின் அரியனை ஏறினார்? = சரி.
  19. பிளாசிப் போரில் ஆங்கிலேய படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்? = தவறு. ராபர்ட் கிளைவ் தலைமை தாங்கினார்.
  20. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசு உரிமைப் போர், இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது?= தவறு.
  21. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சரி எலிஜா இம்பே ஆவார்?= சரி.
  22. காரன்வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்? = சரி.

 

  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 7TH HISTORY TAMIL MEDIUM
  • 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
  • 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Leave a Reply