9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது.
இளமைக்காலம்
- ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர்.
- இவரின் தந்தை = திருவேங்கடம்
- இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார்.
- இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார்.
புதுவைக்கு செல்லுதல்
- இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.
- அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
துபாசி
- ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார்.
- “துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.
-
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு
- ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
- தம் நாட்குறிப்புக்கு “தினப்படிச் செய்திக்குறிப்பு”, “சொஸ்த லிகிதம்” எனப் பெயரிட்டார்.
வரலாற்றுச் செய்திகள்
- பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது.
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது.
வணிகச் செய்தி
- துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும்.
- புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர்.
- அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்து போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் ஒளவும், தேவாமிர்த்ததைச் சுவைத்துபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார்.
தண்டனைச் செய்தி
- நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
- திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிகப்படுள்ளது.
பண்பாட்டு நிலை
- ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார்.
ஆனந்தரங்கர் பெற்ற சிறப்புகள்
- முசபர்சங், ஆனந்தரங்கருக்கு மூவாயிரம் குதிரைகளை வழங்கி, அவருக்கு “மண்சுபேதார்” என்னும் பட்டம் வழங்கினார்.
- பின்பு செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும், பின்பு அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார்.
- ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.
- அவர் தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார்.
-
பெப்பிசு
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி = பெப்பிசு
- இந்தியாவின் பெப்பிசு = ஆனந்தரங்கர்
- நாட்குறிப்பு வேந்தர் = ஆனந்தரங்கர்
பிறமொழி சொற்கள்
- சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய
- லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம்
- வளவு = வீடு
- துபாசி = இருமொழிப்புலமை உடையவர்(மொழிப்பெயர்ப்பாளர்)
- டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள்.
- இச்சொல்லில் இருந்து டைரியம் என்னும் இலத்தின் சொல் உருவானது.
- இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது.
பிற குறிப்புகள்
- அருணாச்சலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.
- கே.கே.பிள்ளை, “ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” என்றார்.
- “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” – வ.வே.சு
ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்
- ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர்
- கள்வன் நொண்டிச் சிந்து
- ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன்
- ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனிவாசக்கவி (வடமொழி)
- ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கச்தூரிரங்கக்கவி (தெலுங்கு)