11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

Table of Contents

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

  • பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர்.
  • அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும்.
  • புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு.

நாட்குறிப்பு என்றால் என்ன

  • நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும்,
  • இதனை ஆங்கிலத்தில் ‘டைரி’ என்று அழைப்பர்.
  • டைரியம் என்னும் இலத்தீன் சொல்லின் மூலமான ‘டைஸ்’ என்ற சொல்லில் இருந்து இச்சொல் உருவாயிற்று.

நாட்குறிப்புகளின் முன்னோடி

  • நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப் பெறும் கிரேக்கக் குறிப்பேடு ஆகும்.
  • EPHEMERIDES என்பதன் பொருள் = ஒரு நாளுக்கான முடிவு.
11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

நாட்குறிப்பு எழுத்தும் வழக்கம்

  • முகலாய மன்னர்களில் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
  • நாட்குறிப்பு எழுத தடை செய்யப்பட்ட ஆட்சி = அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில்
  • 1498 இல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்.
  • அவருடைய நாட்குறிப்புகள் ஆல்வாரோ வெல்லோ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனந்தரங்கர்

சிறந்த வரலாற்று ஆவணம்

  • இவருடைய நாட்குறிப்புகள் 25 ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதோடு, அக்காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழ்கின்றன.

ஆனந்தரங்கர் வாழ்க்கை குறிப்பு

  • பிரான்சுவா மர்த்தேனுக்கு பிறகு புதுச்சேரியின் தலைமை பொறுப்பை ஏற்றவர் = கியோம் ஆந்த்ரே
  • கியோம் ஆந்த்ரே அவர்களிடம் தரகராக பணியாற்றியவர் = நைனியப்பர்
  • நைனியப்பரின் மைத்துனர் = திருவேங்கடம்
  • திருவேங்கடத்தின் மகன் = ஆனந்தரங்கர்
  • ஆனந்தரங்கர் பிறப்பு = 1709 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள், இடம் = பெரம்பூர்

கிடங்குத்தலைவர்

  • தன்னுடைய 17 வயதில் தந்தையை இழந்த ஆனந்தரங்கர், பிரெஞ்ச் உயர் அதிகாரி “அலனுவார்” என்பவரின் உதவியால் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக்கும், சாயம் தேய்க்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தலைமை மொழிபெயர்ப்பாளர்

  • பிரெஞ்ச் ஆளுநர் “துய்ப்ளே” காலத்தின் அவ்வரசின் தலைமை மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.
  • புதுச்சேரியின் அதிகாரம் மிக்க ஒருவராக உயர்ந்தார்.

நாட்குறிப்பு நிகழ்வுகள்

  • ஆனந்தரங்கர், தம்முடைய நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்த நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டே செய்திகளை எழுதியுள்ளார்.

நாணய அச்சடிப்பு உரிமை

  • 09.1736 ஆம் நாள் குறிப்பு = பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றதை விளக்குகிறது. இந்த உரிமையைப் பெறுவதற்காக ஆளுநர் செலவழித்த பெருந்தொகையையும் ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
  • புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்றது.
  • இதற்கான ஆணையை 10.09.1736 அன்று கனகராயர் பல்லக்கில் வைத்து ஊருக்குள் கொண்டு வந்தார்.
  • 21 பீரங்கிகள் முழங்கின.

சென்னையை கைப்பற்றல்

  • ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை கைப்பற்றிய பிரெஞ்ச் தளபதி = 1746 இல் பிரெஞ்ச் கப்பல் தளபதி லெபூர்தொனே கைப்பற்றினார்
  • பிரெஞ்ச் அரசை எதிர்த்து ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் மகபூஸ்கான் போரிட்டார்.

வரலாற்று ஆசிரியர்

சென்னை கோட்டை முற்றுகை

  • 1758 இல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டார் = பிரெஞ்ச் அதிகாரி லல்லி
  • கோட்டையை இடித்தும் வீடுகளை தரைமட்டமாக்கியும் கூட லல்லியால் சென்னையை கைப்பற்ற முடியவில்லை.
  • சென்னை கோட்டையின் ஆளுநர் “மேஸ்தர் பிகட்” வெற்றி பெற்ற செய்திகளை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்குறிப்பு வெளிப்படுத்தும் சமுதாய செய்திகள்

  • 06.1739ஆம் நாள் குறிப்பு = புதுச்சேரியின் ஆளுநர் ‘துய்மா’ பிறப்பித்த ஆணையில், புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழிப் பகுதியிலும் பட்டணத்தின் வீதிகள் எவ்விடத்திலும் காலைக்கடன் கழிப்பவர்களுக்கு ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மீறியவர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டத்தொகையில் இரண்டு பணம் பிடித்துக் கொடுப்பவருக்கும், மீதி நான்கு பணம் சாவடிக்கும் உரியது என்று அறிவிக்கப்பட்டது.
  • இது தெரியாமல் பலரும் தண்டம் கட்டியதாக’ ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தண்டனை விவரங்கள்

  • நீதி வழங்குதல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளையும் இவருடைய நாட்குறிப்பு, பதிவு செய்துள்ளது.
  • தொடர்ந்து வீடுகளில் திருடி வரும் கும்பல் ஒன்று பிடிபட்டபோது, அவர்களுள் தலைமைத் திருடனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்கவிட்டனர்.
  • ஏனைய இருவருக்கும் இரண்டு காதுகளை அறுத்து, ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன.

வணிகச் செய்திகள்

  • ஆனந்தரங்கர் நாட்குறிப் பின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
  • ஆனந்தரங்கரும் பிறரும் வணிகத்திற்கு முதன்மை அளித்துள்ளதை உணரமுடியும்.
  • புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
  • ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய, கப்பல்களுக்கு ஆறு திங்கள் தேவைப்பட்டன.
  • 11.1737 அன்று பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் 08.05.1738 அன்று புதுச்சேரியை அடைந்துள்ளது. கப்பல் வந்தவுடன் பீரங்கி முழங்குதல் வழக்கத்தில் இருந்துள்ளது.
  • துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
  • 100க்கு 320 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்குப் பணத்தைச் செலுத்திவிடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
  • வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றைப் பெற்றுப் பாதுகாத்துள்ளார்.

ஆனந்தரங்கர் குறிப்பிடும் நாணயங்கள்

  • எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் 1730ஆம் ஆண்டு மே திங்களில் அறிவிக்கப்பட்டது.
  • பல்வேறு விதமான வராகன்களை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
    1. புதுச்சேரிப் பிறை வராகன்
    2. சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன்
    3. வட்ட வராகன்
    4. பரங்கிப் பேட்டை வராகன்
    5. ஆரணி வராகன்

பேரிடர் நிகழ்ச்சி

  • 1745 ஆம் ஆண்டு 21 ஆம் நாள் = வியாழக்கிழமை, புதுச்சேரியை பெரும் புயல் தாக்கியது
  • பேரிடரால் உணவுக்கு தவித்த மக்களுக்கு, அப்போது ஒழுகரையிலே கனகராயர், பெருஞ்சோறு அளித்துத் தமிழரின் இரக்கத்தையும் ஈரத்தையும் வெளிப்படுத்தியதை ஆனந்தரங்கர் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.

வணிகத் தடை

  • இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் பெரிதும் தடைபட்டது.
  • புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745ஆம் ஆண்டில் தடைபட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது.
  • புதுச்சேரி வணிகம் முழுவதும் வீழ்ந்தது.
  • 06.1746ஆம் நாள் லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தன.
  • கப்பல் வருகையை அறிந்த மக்களின் உள்ள மகிழ்ச்சியை காகிதத்தில் எழுத இயலாது என தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்

480 காசு

ஒரு ரூபாய்
60 காசு

ஒரு பணம்

8 பணம்

1 ரூபாய்
24 பணம்

ஒரு வராகன்

ஒரு பொன்

1/2 வராகன்
1 வராகன்

3 அல்லது 3.2 ரூபாய்

1 மோகரி

14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
1 சக்கரம்

1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்

ஆனந்தரங்கரின் இறுதிகால நாட்குறிப்புகள்

  • ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகள் ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகையையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் பற்றி குறிப்பிடுகிறது.
  • 1760 பிப்ரவரியில் புதுச்சேரியைத் தாக்க ஆங்கிலேயக் கப்பல்கள் வந்தன.
  • ஆங்கிலேயப் படைகள் சாரம் வரை வந்துவிட்டதைப் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
  • குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்ததும் புதுச்சேரி நகரில் பீதி நிலவியது.
  • தேவனாம்பட்டணத்தில் மேலும் மேலும் துருப்புகளை ஆங்கிலேயக் கப்பல்கள் இறக்கின.
  • புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
  • புதுச்சேரியின் இவ்வாறான சூழ்நிலையில் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு இருந்த ஆனந்தரங்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
  • 01.1761 திங்கள் கிழமை ஐந்து நாழிகைக்குப் பட்டணத்தின் மீது பீரங்கிக் குண்டுகள் விழுந்துகொண்டிருந்த வேளையில் ஆனந்தரங்கர் மறைந்தார்.

25 ஆண்டுகால தென்னிந்திய வரலாறு

  • 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் தொடங்கி ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றைப் பதிவுசெய்த ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 1761ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாளோடு முடிவடைந்துள்ளது.
  • புதுச்சேரியின் முற்றுகை பற்றிய முடிவினைக் கூறாமலேயே நாட்குறிப்பும் முடிந்துள்ளது.
  • ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தல்

  • புதுச்சேரியின் ஆளுநராக லெறி இருந்த காலத்தில், புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது.
  • அப்போது ஆளுநரிடம், ஆனந்தரங்கர், “இப்பட்டணத்தில் உம்முடைய அதிகாரம்தான் இறுதியானது. அநீதியாகவும் உண்மைக்கு மாறாகவும் நடக்க நீர் விரும்பினால் உம்மைத் தடுக்கும் அதிகாரம் ஒருவருக்கும் இல்லை.
  • ஆகவே, என்னைக் காவலில் போட விரும்பினால் உடனே செய்யலாம்.
  • பிற தண்டனையும் வழங்கலாம். இரண்டு சல்லிகூட நான் செலுத்த மாட்டேன்.
  • சிறையில் அடைத்துவிடுவீர் எனப் பயந்து ஒரு வாரத்தில் பணம் தருவேன் என்று நீர் கருத வேண்டாம்.
  • இவ்விவரம் தொகுதி 11 பக்கம் 81-84 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள்

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
  • “ஆனந்தரங்கன் கோவை” என்ற நூலை எழுதியவர் = தியாகராய தேசிகர்
  • “ஆனந்தரங்கன் பிள்ளைதமிழ்” என்ற நூலை எழுதியவர் = புலவரேறு அரிமதி தென்னகன்
  • “வானம் வசப்படும்” என்னும் நூலை எழுதியவர் = பிரபஞ்சன்

ஆனந்தரங்கர் பற்றி உ.வே.சா கூற்று

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
  • உ.வே.சா = “தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்கிறார்

ஆனந்தரங்கர் பற்றி வ.வே.சு ஐயர் கூற்று

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
  • வ.வே.சு ஐயர் = “அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர்” என்றார்.

நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
  • உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை எனப்படுபவர் = சாமுவேல் பெப்பிசு
  • சாமுவேல் பெப்பிசு, ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய அவர் ‘இரண்டாம் சார்லஸ்’ மன்னர் காலத்து நிகழ்வுகளை (1660 – 1669) நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார்.
  • “இந்தியாவின் பெப்பிசு” எனப்படுபவர் = ஆனந்தரங்கர்
  • ஆனந்தரங்கரும் 06.09.1736 முதல் 11.01.1761 வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார். இந்நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும்.

Leave a Reply