Skip to content
12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்
12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்
12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்
“விருந்தினர் இல்லம்” என்ற கவிதையை எழுதியவர் = ஜலாலுத்தீன் ரூமி ஆவார்
மனித வாழ்க்கை என்பது விருந்தினர் இல்லம் போன்றது
இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புது வரவு என்கிறார் ரூமி
“வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” என்கிறார் ரூமி
வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என ரூமி கூறுவது = வக்கிரம், அவமானம், வஞ்சனை
வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் “ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு” என உருவகப்படுத்துகிறார் ரூமி
நூல் குறிப்பு
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் = கோல்மன் பார்க்ஸ்
அதனைத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பு = “தாகங்கொண்ட மீனொன்று”
தமிழில் மொழி பெயர்த்தவர் = என்.சத்தியமூர்த்தி
ஜலாலுத்தீன் ரூமி
ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில் கி.பி (பொ.ஆ) 1207 ஆம் ஆண்டில் பிறந்தார்
இவர் பாரசீகத்தின் மிகச்சிறந்த கவிஞர் ஆவார்
இவரது சூஃபி தத்துவப் படைப்பான “மஸ்னவி” (MASNAVI ) 25,600 பாடல்களை கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
மஸ்னவி என்பது = ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு
இவரின் புகழ்பெற்ற நூல் = திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி (COLLECTIVE POEMS OF SHAMS OF TABRIZ)
ஆசிரியர் – குறிப்புகள்
ஆசிரியரின் இயற்பெயர் = ஜலாலுத்தீன் முகம்மது பல்கி
இவரை “மௌலானா ரூமி” என்று அழைப்பர்
சிறப்பு பெயர் = மௌலவி (பொருள் = இறைவனுக்காக பணியாற்றுபவர்)
இவரின் கவிதைகள் அனைத்தும் எழுதப்பட்ட மொழி = பெர்சிய மொழி
இவரின் “திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி” என்ற நூல் 2500-க்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாகும்
மௌலானா ரூமி அவர்களின் கவிதைகள் உலகின் அனைத்து பிரதான மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் யுனெஸ்கோ 2007ம் ஆண்டை ரூமி ஆண்டாக பிரகடனப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கத்து.