12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்

12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்

12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்
12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்

12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்

  • “விருந்தினர் இல்லம்” என்ற கவிதையை எழுதியவர் = ஜலாலுத்தீன் ரூமி ஆவார்
  • மனித வாழ்க்கை என்பது விருந்தினர் இல்லம் போன்றது
  • இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புது வரவு என்கிறார் ரூமி
  • “வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” என்கிறார் ரூமி
  • வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என ரூமி கூறுவது = வக்கிரம், அவமானம், வஞ்சனை
  • வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் “ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு” என உருவகப்படுத்துகிறார் ரூமி

நூல் குறிப்பு

  • ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் = கோல்மன் பார்க்ஸ்
  • அதனைத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பு = “தாகங்கொண்ட மீனொன்று”
  • தமிழில் மொழி பெயர்த்தவர் = என்.சத்தியமூர்த்தி

ஜலாலுத்தீன் ரூமி

12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்

  • ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில் கி.பி (பொ.ஆ) 1207 ஆம் ஆண்டில் பிறந்தார்
  • இவர் பாரசீகத்தின் மிகச்சிறந்த கவிஞர் ஆவார்
  • இவரது சூஃபி தத்துவப் படைப்பான “மஸ்னவி” (MASNAVI) 25,600 பாடல்களை கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
  • மஸ்னவி என்பது = ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு
  • இவரின் புகழ்பெற்ற நூல் = திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி (COLLECTIVE POEMS OF SHAMS OF TABRIZ)

ஆசிரியர் – குறிப்புகள்

  • ஆசிரியரின் இயற்பெயர் = ஜலாலுத்தீன் முகம்மது பல்கி
  • இவரை “மௌலானா ரூமி” என்று அழைப்பர்
  • சிறப்பு பெயர் = மௌலவி (பொருள் = இறைவனுக்காக பணியாற்றுபவர்)
  • இவரின் கவிதைகள் அனைத்தும் எழுதப்பட்ட மொழி = பெர்சிய மொழி
  • இவரின் “திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி” என்ற நூல் 2500-க்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாகும்
  • மௌலானா ரூமி அவர்களின் கவிதைகள் உலகின் அனைத்து பிரதான மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் யுனெஸ்கோ 2007ம் ஆண்டை ரூமி ஆண்டாக பிரகடனப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கத்து.

 

 

Leave a Reply