DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

                                 DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

டிமென்சியா – நட்பு நகரமாக “கொச்சி” அறிவிப்பு

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

  • டிமென்சியா (DEMENTIA) = ஒரு வகை மறதி நோய் ஆகும். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொச்சியை ‘டிமென்ஷியா-நட்பு நகரம்’ (KOCHI DECLARED AS DEMENTIA-FRIENDLY CITY) என்று அறிவித்தார்.
  • டிமென்ஷியா உள்ளவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்போத் திட்டத்தை (PROJECT UDBODH) தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் டிமென்ஷியா கிளினிக்குகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்

சீனாவின் முதல் சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள்

  • சீனா, தனது முதல் சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள், XIHE என்ற பெயரில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது (CHINA LAUNCHES FIRST SOLAR OBSERVATION SATELLITE – XIHE)
  • 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், அடுத்த 3 ஆட்னுக்ளுகு சூரியனை சுற்றி கண்காணிக்கும்.
  • இது சீன எச்-ஆல்பா சோலார் எக்ஸ்ப்ளோரர் (CHASE – CHINESE H-ALPHA SOLAR EXPLORER) என்று அழைக்கப்படும் ஒரு இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டருடன் பொருத்தப்பட்டுள்ளது

ஐ.பி.எல் 2021 கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

  • 14-வது ஐ.பி.எல் கிரிகெட் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. இறுதி ஆட்டத்தில் மகேந்திர சிங் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்து நான்காவது முறையாக கோப்பையை வென்றது
  • சென்னை அணி இதற்கு முன் 2010, 2011, 2018 ஆகிய வருடங்களில் கோப்பையி வென்றது

வெற்றி அணி

சென்னை சூப்பர் கிங்ஸ்

2-வது இடம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆரஞ்ச் தொப்பி (தொடரில் அதிக ரன்)

ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை)

பர்பில் தொப்பி (போட்டியில் அதிக விக்கெட்டுகள்)

ஹர்ஷல் பட்டேல் (ஆர்சிபி)
ஃபேர் ப்ளே விருது

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்)

வளர்ந்து வரும் வீரர்

ருதுராஜ் கெய்க்வாட் (CSK)
மிகவும் மதிப்புமிக்க வீரர்

ஹர்ஷல் பட்டேல் (ஆர்சிபி)

தொடரின் சக்தி வீரர்

வெங்கடேஷ் ஐயர் (கே.கே.ஆர்)
சீசன் கேம் சேஞ்சர்

ஹர்ஷல் பட்டேல் (ஆர்சிபி)

சீசன் சூப்பர் ஸ்ட்ரைக்கர்

சிம்ரான் ஹெட்மியர் (டிசி)
சீசனில் அதிக சிக்ஸர்கள்

கேஎல் ராகுல் (பிபிகேஎஸ்)

பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சர்வதேச கோல் சாதனையை முறியடித்த சுனில் சேத்ரி

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

 

  • இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, மாலத்தீவுக்கு எதிரான 2021 SAFF சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலேவின் சர்வதேச கோல் சாதனையை முறியடித்தார்
  • பீலே இதுவரை 77 சர்வதேச கோல்களை அடித்துள்ளார். சுனில் சேத்ரி தற்போது 79 சர்வதேச கோல்களை அடித்துள்ளார்.
  • உலக அளவில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 6-வது இடத்தில உள்ளார்
  • தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்த வீரர்களில் 3-வது இடத்தில உள்ளார். முதல் இரு இடங்களில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்ளனர்

முதல் முறையாக சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து ரேடியோ கதிர்கள் கேட்பு

  • நெதர்லாந்தில் அமைந்துள்ள உலகின் மிக சக்திவாய்ந்த வானொலி ஆண்டெனாவான குறைந்த அதிர்வெண் வரிசை (LOFAR – LOW-FREQUENCY ARRAY) சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகத்திலிருந்து சமிக்ஞைகளை எடுத்தது (FOR FIRST TIME, EARTH RECEIVES RADIO SIGNALS FROM OUTSIDE SOLAR SYSTEM)
  • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் டாக்டர் பெஞ்சமின் போப் மற்றும் டச்சு தேசிய ஆய்வகமான ஆஸ்ட்ரோனில் உள்ள அவரது சகாக்கள் முதன்முறையாக வானொலி சமிக்ஞைகளை வெளியிடும் நட்சத்திரங்களைக் கண்டறிந்தனர்.

மறைந்து வரும் “ப்ளுட்டோ” கிரகம்

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

  • ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வின்படி, புளூட்டோவின் வளிமண்டலம் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகி மறைந்து வருகிறது.
  • பனிக்கட்டி குள்ள கிரகத்தின் வளிமண்டலம் முக்கியமாக நைட்ரஜனால் ஆனது.
  • குள்ள கிரகம் பூமியிலிருந்து சுமார் 4.8 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கைபர் பெல்ட்டில் அமைந்துள்ளது.
  • புளூட்டோவின் வளிமண்டலம் மறைந்து போகிறது என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

உலகளாவிய காசநோய் அறிக்கை 2021

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

  • உலக சுகாதார அமைப்பால் “உலகளாவிய காசநோய் அறிக்கை 2021” (GLOBAL TUBERCULOSIS REPORT 2021)வெளியிடப்பட்டுள்ளது
  • காசநோய் ஒலிப்பில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளதாக அவ்வறிக்கை தெரிவித்துள்ளது
  • இந்தியா கடந்த சில ஆண்டுகளில் 41% அளவிற்கு காசநோயினை குறைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயினை ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது
  • இந்தியாவின் முதல் காசநோய் இல்லா யூனியன் பிரதேசம் என்ற சிறப்பை லட்சத்தீவுகள் பெற்றுள்ளது.

தடுப்பூசி மைத்ரி திட்டம்

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

  • இந்தியா மீண்டும் தன்னுடைய “தடுப்பூசி மைத்ரி” (VACCINE MAITRI PROGRAMME) திட்டத்தை துவக்கி உள்ளது. இதன்படி வங்கதேசம், நேபால், மியான்மர் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு கொரொனோ தடுப்பூசிகளை நட்பு நாடுகள என்ற அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது
  • இத்திட்டம் முதன் முதலில் ஜனவரி 2021 இல் துவங்கப்பட்டது

குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடும் முதல் மாநிலமாக தமிழகம் மாற உள்ளது

  • மதிய அரசின் ஒப்புதல் கிடைத்த உடன், நாட்டிலேயே முதல் மாநிலமாக குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் மாநிலமாக தமிழக மாற உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார் (TAMIL NADU SET TO BE 1ST STATE TO GIVE KIDS COVID VACCINE: HEALTH MINISTER)
  • கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸுடன் 93 சதவிகித மக்களுக்கும், இரண்டாவது டோஸுடன் 37 சதவிகிதத்திற்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் கோயம்புத்தூர் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது என்றும் கூறினார்

மிஸ் எர்த் இந்தியா 2021 அழகிப் பட்டம்

  • மிஸ் எர்த் இந்தியா 2021 அழகிப் பட்டதை பெங்களூரு அங்கரை சேர்ந்த மருந்து நிறுவன தொழில் முனைவோரான 27 வயதான “ராஷ்மி மாதுரி” வென்றார் (RASHMI MADHURI CROWNED MISS EARTH INDIA 2021)
  • இவருக்கு முன்னாள் அழகியான தான்வி கரோடே மகுடம் சூட்டினர்

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக வென்ற இந்தியா

  • மாலத்தீவுகளின் மாலே நகரின் தேசிய மைதானத்தில் நடைபெற்று வந்த தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்சிப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி 3-0 என்ற கணக்கில் நேபாள அணியால் வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டதை கைப்பற்றியது (INDIA CROWNED SAFF CHAMPIONS FOR 8TH TIME)

உலக உடற்காய தினம்

  • உலக உடற்காய தினம் (WORLD TRAUMA DAY), ஒவ்வொரு ஆடணும் அக்டோபர் 17 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஓர் உயிரைப் பாதுகாத்து, உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்க்கக் கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடித்து நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே உலக உடற்காய தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

  • வறுமையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (INTERNATIONAL DAY FOR THE ERADICATION OF POVERTY) ஆண்டுதோறும் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கரு = BUILDING FORWARD TOGETHER: ENDING PERSISTENT POVERTY, RESPECTING ALL PEOPLE AND OUR PLANET

உலகளாவிய அமைதி புகைப்பட விருதை வென்ற முதல் இந்தியர்

DAILY CURRENT AFFAIRS 17 OCTOBER 2021

  • பெங்களூருவை சேர்ந்த 7 வயது சிறுமி, ஆத்யா அரவிந்த், உலகளாவிய அமைதி புகைப்பட விருதை வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் (A 7-YEAR-OLD GIRL FROM BENGALURU AADHYAA ARAVIND HAS WON GLOBAL PEACE PHOTO AWARD (CHILDREN’S PEACE IMAGE OF THE YEAR)
  • அவளது விருதை வென்ற புகைப்படம் அவளின் தாய், அவரின் தாயாரின் மடியில் ஓய்வெடுப்பதைக் காட்டுகிறது

 

Leave a Reply