DAILY CURRENT AFFAIRS – 11/10/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (INTERNATIONAL DAY OF THE GIRL CHILD, OCTOBER 11TH), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதி, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
இத்தினத்தை பெண்கள் தினம் (DAY OF GIRLS) என்றும் சர்வதேச பெண் தினம் (INTERNATIONAL DAY OF GIRLS) என்றும் அழைப்பர்
2021 ஆம் ஆண்டிற்கான கரு = DIGITAL GENERATION : OUR GENERATION
பதுக்கம்மா திருவிழா
தெலுங்கானா மாநிலத்தின், பிரபல பதுக்கம்மா திருவிழா (BATHUKAMMA FESTIVAL) துவங்கியது
9 நாள் மலர் திருவிழாவான இந்நிகழ்ச்சி, மஹாலய அம்மாவாசையில் துவங்கி துர்காஷ்டமி தினத்தில் நிறைவடையும்
டூன் டிரோன் மேலா
உத்திரக்காண்டு மாநிலத்தின் டேராடூன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர், “டூன் டிரோன் மேலா” (DOON DRONE MELA) விழாவினை துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில், பாரா கிளைடிங் மற்றும் டிரோன் பயன்பாடுகள், அதன் நிறுவனங்களின் செயல்பாடுகள் போன்றவை விளக்கப்பட்டது
பஞ்சாப் நேசனல் வங்கியின் ‘6S’ பிரச்சாரம்
பஞ்சாப் நேசனல் வங்கியின் சார்பில், வங்கி நிதி சேவைகளை நீட்டிக்க வாடிக்கையாளர் தொடர்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ‘6S’ பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது
6S = SWABHIMAN, SAMRUDDHI, SAMPARK, SHIKHAR, SANKALP AND SWAGAT
நாட்டில் நிதிச் சேவைகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுப்பது மற்றும் கடன் வளர்ச்சியை துரிதப்படுத்துதல் போன்றவற்றை முன்னெடுத்து செல்கிறது இந்த பிரச்சாரம்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2021 அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பொருளாதார வல்லுநர்கள், டேவிட் கார்ட், ஜோசுவா டி ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோருக்கு “பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2021” (NOBEL PRIZE 2021 FOR ECONOMICS) வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சந்தைகளில் குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வியின் தாக்கம் குறித்த “இயற்கை பரிசோதனைகளின் பயன்பாடு” குறித்த பணிக்காக அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பரிசின் ஒரு பாதி டேவிட் கார்டுக்கு வழங்கப்பட்டது, மற்ற பாதி பரிசு ஜோசுவா ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ இம்பென்ஸால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
வயலார் விருது
45-வது வயலார் ராமவர்மா நினைவு இலக்கிய விருது, பிரபல மலையாள எழுத்தாளர் பென்யமினுக்கு வழங்கப்பட்டது (MALAYALA WRITER BENYAMIN BAGGED 45TH VAYALAR RAMAVARMA MEMORIAL LITERARY AWARD)
அவரின் “மாந்தளிரிலே 20 கம்யுனிஸ்ட் வருஷங்கள்” என்ற புத்தகத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது
ஆர்யபட்டா விருது
இந்திய வானவியல் சங்கத்தின் (ASTRONAUTICAL SOCIETY OF INDIA) சார்பில், “இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின்” (DRDO – DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION) தலைவரான ஜி.சதீஷ் ரெட்டி அவர்களுக்கு புகழ்மிக்க “ஆர்யபட்டா விருது” (ARYABHATTA AWARD) வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது
இந்திய வானியல் துறையில், அவரின் வாழ்நாள் பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது
துருக்கி கிராண்ட் பிரிக்ஸ் 2021
துருக்கியில் நடைபெற்ற எப்1 துருக்கி கிராண்ட் பிரிக்ஸ் 2021 (VALTTERI BOTTAS WINS TURKISH GRAND PRIX 2021) கார் பந்தய போட்டியில், வால்ட்டேரி போட்டாஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்
2-வது இடத்தை மேக்ஸ் வேர்ஷ்டப்பன் பிடித்தார்
உலக நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு தினம்
உலக நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு தினம் (WORLD HOSPICE AND PALLIATIVE CARE DAY, 2ND SATURDAY OF OCTOBER), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது
உலக நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு தினம் என்பது உலகெங்கிலும் உள்ள நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பைக் கொண்டாடுவதற்கும் ஆதரிப்பதற்கும் ஆண்டு ஒருங்கிணைந்த நடவடிக்கை நாளாகும்.
இந்த ஆண்டிற்கான கரு = LEAVE NO-ONE BEHIND – EQUITY IN ACCESS TO PALLIATIVE CARE
ஈரானின் முதல் அதிபர் காலமானார்
ஈரான் நாட்டின் முதல் அதிபரான அபோல்ஹாசன் பனிசதர், உடல் நலக்குறைவு காரணமாக பாரிஸ் நகரில் காலமானார்
அவருக்கு வயது 88. இவரின் காலத்தில் ஈரானில் புரட்சி ஏற்பட்டு, இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
120 மொழிகளில் 120 பாடல்களை பாடி புதிய கின்னஸ் சாதனை படைத்த இந்திய சிறுமி
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட “சுசேதா சதீஷ்” என்ற 16 வயது சிறுமி, துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120 மொழிகளில் 120 பாடல்களை பாடி புதிய கின்னாஸ் உலக சாதனை படைத்துள்ளார்
இவர் இப்பாடல்களை சுமார் 7 மணி நேரம் 20 நிமிடங்களில் பாடியுள்ளார்
இவர் 29 இந்திய மொழிகளிலும், 71 வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமரின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதை வென்ற 6 வயது இந்திய வம்சாவளி சிறுமி
இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வயது சிறுமியான “அலிசா கதியா”, காடுகள் அழிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதை வென்றுள்ளார் (AN INDIAN-ORIGIN GIRL NAMED ALEESHA GADHIA, AGED SIX, HAS WON BRITISH PRIME MINISTER BORIS JOHNSON’S POINTS OF LIGHT AWARD)
மழைக்காடுகள், வனங்கள் போன்றவற்றை பாதுக்காப்பதற்காக “கூல் எர்த்” என்ற இயக்கத்தை துவக்கி, இதுவரை 3000 இங்கிலாந்து பவுண்டுகள் வரை நிதி பெற்றுள்ளார்