OCTOBER 10 2021 CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சத்தீஸ்கரில் இந்தியாவின் புதிய புலிகள் காப்பகம்
இந்திய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சத்திஸ்கர் அரசின் புதிய புலிகள் காப்பகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது
குரு காசிதாஸ் தேசிய பூங்கா மற்றும் தமோர் பிங்லா வனவிலங்கு சரணாலயத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளை ஒருங்கிணைந்து புதிய புலிகள் காப்பகத்தை அம்மாநில அரசு உருவாக்கி உள்ளது. இது அம்மாநிலத்தின் நான்காவது புலிகள் காப்பகம் ஆகும்.
உலகளாவிய FinTech Hackathon தொடர் I-Sprint’21
IFSCA எனப்படும் சர்வதேச நிதி சேவை மைய ஆணையம் சார்பில் GIFT CITY ஆகியவை இணைந்து, உலகளாவிய நிதி தொழில்நுட்ப ஹெக்கதான் தொடரான “I-Sprint’21” நிகழ்ச்சி துவங்கப்பட்டது
ஐசிஐசிஐ வங்கி, எச்எஸ்பிசி வங்கி, ஐகிரேட், மண்டல தொடக்கங்கள் மற்றும் முதலீடு-இந்தியா ஆகியவை ஹேக்கத்தானின் பங்கு பெரும் வங்கிகளாகும்.
புதிய வகை பள்ளி இனம் Cnemaspis Jackieii
பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் மற்றும் பெங்களூரு தேசிய உயிரியல் அறிவியல் மையம் இணைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிய வகை பள்ளி இனம் கண்டுபிடித்துள்ளனர்
ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வகை பள்ளி இனத்திற்கு, Cnemaspis Jackieii அல்லது Jackie’s Day Gecko என்று பெயரிட்டுள்ளனர்.
தேசிய தன்னார்வ இரத்த தான தினம்
இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்த தான தினம் (NATIONAL VOLUNTARY BLOOD DONATION DAY, OCTOBER 1ST) கொண்டாடப்படுகிறது.
இந்த வருட இரத்த தான நிகழ்வின் கருப்பொருள் “இரத்தத்தை கொடுங்கள் மற்றும் உலகத்தை துடிக்க வைத்துக்கொள்ளுங்கள்” (GIVE BLOOD AND KEEP THE WORLD BEATING) என்பதாகும்.
இந்திய தேசிய அஞ்சல் தினம்
இந்தியாவில் தேசிய அஞ்சல் தினம் (INDIAN NATIONAL POST DAY), அக்டோபர் மாதத்தின் 10 ஆம் தேதி, ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. உலக அஞ்சல் தினம் (WORLD POST DAY), அக்டோபர் 9 ஆம் தேதி ஆகும்
தேசிய அஞ்சல் தினம், கடந்த 150 ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறை ஆற்றிய பங்கை நினைவுகூருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது 1854 ஆம் ஆண்டில் லார்ட் டல்ஹசியால் நிறுவப்பட்டது.
உலக மனநல தினம்
உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக இழிவுகளுக்கு எதிராக வாதிடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 அன்று உலக மனநல தினம் (WORLD MENTAL HEALTH DAY) கடைபிடிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கரு = MENTAL HEALTH IN AN UNEQUAL WORLD
இந்த நாள் முதன்முதலில் 2003 இல் மரண தண்டனைக்கு எதிரான உலக கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டது
19-வது உலக மரண தண்டனை எதிர்ப்பு தினத்தின் கரு = WOMEN SENTENCED TO DEATH: AN INVISIBLE REALITY
மிகப்பெரிய செமி கிரையோஜெனிக் ப்ரொபெல்லன்ட் டேங்க்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL – HINDUSTAN AERONAUTICAL LIMITED) உருவாக்கிய மிகப்பெரிய செமி கிரையோஜெனிக் ப்ரொபெல்லன்ட் டேங்க் (THE HEAVIEST SEMI CRYOGENIC PROPELLANT TANK (SC120 LOX) EVER FABRICATED BY HINDUSTAN AERONAUTICS LIMITED) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) வழங்கப்பட்டது.
அரை கிரையோ திரவ ஆக்ஸிஜன் (LOX) தொட்டி – முதல் வளர்ச்சி பற்றவைக்கப்பட்ட வன்பொருள் இதுவாகும்.