DAILY CURRENT AFFAIRS 23 OCTOBER 2021
DAILY CURRENT AFFAIRS 23 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சர்வதேச பனிசிறுத்தை தினம்
- சர்வதேச பனி சிறுத்தை தினம் (INTERNATIONAL SNOW LEOPARD DAY) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 23 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது
- பனி சிறுத்தையின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான பிஷ்கெக் பிரகடனத்தின் (BISHKEK DECLARATION) ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகயில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது
மோல் தினம்
- வேதியியல் அறிஞர்கள் இடையே பிரபலமான “மோல் தினம்” (MOLE DAY), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 23 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
- இந்த நாள் கொண்டாட்டம் காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை வேதியியல் அளவீட்டு அலகு நினைவாக நடைபெறுகிறது.
- நேரம் மற்றும் தேதி அவகாட்ரோ எண்ணிலிருந்து (AVAGADRO NUMBER) பெறப்பட்டது, இது தோராயமாக 6.02 × 1023 ஆகும், இது ஏழு அடிப்படை எஸ்ஐ அலகுகளில் ஒன்றான ஒரு மோல் (மோல்) துகள்களின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கையை வரையறுக்கிறது.
ஸ்ரீ தன்வந்திரி ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர் திட்டம்
- சத்திஸ்கர் மாநிலத்தின் “ஸ்ரீ தன்வந்திரி ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர் திட்டம்” (SHRI DHANWANTRI GENERIC MEDICAL STORE SCHEME) துவக்கி வைக்கப்பட்டுள்ளது
- இந்த திட்டம் மக்களுக்கு பொதுவான மருந்துகளின் எம்ஆர்பி (சந்தை விலை விலை) மீது 50.09 முதல் 71% வரை தள்ளுபடியை வழங்கும்.
- இத்திட்டம் மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு குறைந்த விலையில் பொதுவான மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
கடலோரப் படகோட்டம் ரெகாட்டா நிகழ்ச்சி
- ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் நினைவாக, இந்திய கடற்படை இந்திய கடற்படை படகோட்டம் சங்கத்தின் (INSA – INDIAN NAVY SAILING ASSOCIATION) கீழ் கடலோர படகோட்டம் ரேகாட்டாவை நடத்துகிறது (TO COMMEMORATE AZADI KA AMRIT MAHOTSAV, INDIAN NAVY IS CONDUCTING AN OFFSHORE SAILING REGATTA UNDER THE AEGIS OF INDIAN NAVAL SAILING ASSOCIATION (INSA))
- கடலோரப் படகோட்டம் ரெகாட்டா கொச்சியிலிருந்து கோவாவுக்கு நடத்தப்படுகிறது.
- இந்த நிகழ்வில், தாரிணி, மஹடே, நீல்காந்த், புல்புல், கடல் புரா மற்றும் ஹரியல் ஆகிய ஆறு இந்திய கடற்படை கப்பல் படகுகள் பங்கேற்கின்றன.
ஜெய்நகர்-குர்தா ரயில் இணைப்பு நேபாளத்திற்கு ஒப்படைக்கப்பட்டது
- பீகாரில் உள்ள ஜெயநகர் மற்றும் நேபாளத்தின் குர்தாவை இணைக்கும் 9 கிமீ நீளமுள்ள எல்லை தாண்டிய ரயில் இணைப்பை இந்தியா நேபாள அரசிடம் ஒப்படைத்துள்ளது (JAYNAGAR-KURTA RAIL LINK HANDED OVER TO NEPAL)
- இந்த விழா அக்டோபர் 22, 2021 அன்று நேபாளத்துக்கான இந்திய தூதர் வினய் எம். குவாத்ரா மற்றும் நேபாளத்தின் உடல் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் ரேணுகுமாரி யாதவ் ஆகியோருடன் நடைபெற்றது.
பிபா கால்பந்து தரவரிசை 2021
- 2021 ஆம் ஆண்டிற்கான உலக கால்பந்து அணிகளுக்கான பிபா தரவரிசை (FIFA FOOTBAAL RANKINGS 2021) வெளியிடப்பட்டதில், இந்திய கால்பந்து அணி 106-வது இடத்தை பிடித்துள்ளது
- 107-வது இடத்தில இருந்த இந்திய அணி, தெற்காசிய கால்பந்து கோப்பையை வென்றதன் மூலம் தரவரிசை பட்டியில் ஒரு இடம் முன்னேறி உள்ளது.
- முதல் 3 இடங்கள் = பெல்ஜியம், பிரேசில், பிரான்ஸ்
அதிவேக அபியாஸ் இலக்கு விமான சோதனை வெற்றி
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் உருவாக்கப்பட்ட அதிவேக ‘அபியாஸ்’ என்னும் இலக்கு விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் சோதனையின்போது இலக்காக இந்த விமானம் பயன்படுத்தப்படும் என்று தகவல்.
- ஒடிசா மாநிலம், சண்டிபூா் அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியில் டிஆர்டிஓ-வின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைத் தளத்தில், இந்த இலக்கு விமானத்தின் சோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது
56-வது தேசிய கிராஸ் கண்ட்ரி சாம்பியன்சிப் போட்டிகள்
- 56-வது தேசிய கிராஸ் கண்ட்ரி சாம்பியன்சிப் போட்டிகள், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாகாலாந்தின் கோஹிமாவில் நடைபெற உள்ளது (NAGALAND TO HOST 56TH NATIONAL CROSS COUNTRY CHAMPIONSHIP)
- மேலும் 2022 தெற்காசிய கூட்டமைப்பு கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப் போட்டிகளும் அங்கு நடைபெற உள்ளது
- நாகாலாந்து நடத்தும் முதல் தேசிய தடகளப் போட்டி இதுவாகும்
2700 ஆண்டுகள் பழமையான ஒயின் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
- ஈராக்கில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன்பு அசீரிய மன்னர்களின் ஆட்சியில் இருந்து ஒரு பெரிய அளவிலான ஒயின் தொழிற்சாலையை கண்டுபிடித்ததாக அறிவித்தனர் (2,700-YEAR-OLD WINE PRESS, CARVINGS DISCOVERED IN IRAQ)
- உலகின் ஆரம்பகால நகரங்கள் சிலவற்றின் பிறப்பிடமாக ஈராக் இருந்தது.
சினோ கமிசன்
- பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி பிரிவினருக்கு கிரீமி லேயர் அளவாக 8 லட்சம் நிர்ணயம் செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது
- சினோ கமிசன் அறிக்கையின் அடிப்படையில் இது நிர்ணயம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
மெலியோடோசிஸ்
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அரோமாதெரபி ஸ்ப்ரே அமெரிக்காவில் உள்ள சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களில் பர்கோல்டேரியா சூடோமல்லி என்னும் பாக்டீரியா இருப்பதை உறுதி செய்துள்ளனர் (THE SPRAY WAS REPORTED TO CONTAIN A BACTERIUM, BURKHOLDERIA PSEUDOMALLEI)
- இந்த பாக்டீரியா மூலம் மெலியோடோசிஸ் என்னும் நோய் பரவுகிறது (MELIOIDOSIS IS ALSO CALLED WHITMORE’S DISEASE). இந்நோயினை விட்மோர் நோய் என்றும் அழைக்கப்படுகிறது
இந்தியர்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது – அறிக்கை
- கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது.
- சர்வதேச மக்கள்தொகை ஆய்வுக் கழகத்தின் (ஐஐபிஎஸ்) விஞ்ஞானிகளின் புள்ளிவிவர பகுப்பாய்வு மூலம் இது தெரியவந்துள்ளது (THE LIFE EXPECTANCY AT BIRTH IN 2019 WAS 5 YEARS FOR MEN AND 72 YEARS FOR WOMEN, WHICH CAME DOWN TO 67.5 YEARS AND 69.8 YEARS, RESPECTIVELY, IN 2020)
- 2019 ஆம் ஆண்டில் பிறக்கும் போது ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 72 ஆண்டுகள் ஆகும், இது 2020 இல் முறையே 67.5 மற்றும் 69.8 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக நான்கு மாநகராட்சிகள்
- கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது
- இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர உள்ளது
- தமிழகத்தின் 16-வது மாநகராட்சி = கும்பகோணம்
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு முதல் முறையாக பொருத்தி சாதனை
- சோதனை முயற்சியாக மரபணு மாற்றப்பட்ட “கால்சேப்” என்றழைக்கப்படும் பன்றிகளின் உடலுறுப்புகளை பொருத்தும் சோதனை நடைபெற்று வந்தது
- நியுயார்க்கை சேர்ந்த என்.யு.யு லாங்கோன் மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த ஒருவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில், டாக்டர் ராபர்ட் மாண்ட கோமரி தலைமையிலான மருத்துவ குழு, பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்துள்ளனர்
- OCTOBER 22 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 21 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 20 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 19 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 18 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 17 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 16 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 15 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL