ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை

ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை

ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை

ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை

                        இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் நீதித்துறைக்கு ஒருங்கிணைந்த (Integrated Judiciary) மற்றும் சுதந்திரமான (Independent Judiciary) அமைப்பாக செயல்படும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

                                   ஒருங்கிணைந்த நீதித்துறையில், முதன்மையாக உள்ளது உச்சநீதிமன்றம் (Supreme Court). நாட்டின் மிக உயரிய நீதிமன்றம அமைப்பு இதுவாகும். உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்தப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் உயர்நீதிமன்றங்கள் (High Courts) உருவாக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றங்களுக்கு அடுத்தப்படியாக மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் (District Courts), அடுத்து கீழ்நிலை நீதிமன்றங்கள் (Lower Courts) உள்ளன.

ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை

          இந்தியாவில் ஒற்றை முறை நீதிமன்ற (Single System of Courts) அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த அணைத்து நீதிமன்றங்களும் மத்திய, மாநில சட்டங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும். அனால் அமெரிக்க போன்ற நாடுகளில் கூட்டாட்சி சட்டங்களை விசாரிக்க தனி நீதிமன்றமும் (Federal Judiciary), மாநில சட்டங்களைப் பற்றி விசாரிக்க தனி நீதிமன்றமும் (State judiciary) உள்ளது.

ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை

                    இந்தியாவின் உயரிய நீதிமன்றம் உச்சநீதிமன்றம் ஆகும். மேல்முறையீடு செய்யும் கடைசி இடம் இதுவாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி ஆகும். மத்திய மாநிலச் சட்டங்கள் இம்மன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை. இம்மன்றமே அரசியல் அமைப்பு சட்டத்தின் காவலனாகவும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனாகவும் (the guarantor of the fundamental rights of the citizens and the guardian of the Constitution) உள்ளது.

                           நீதிமன்றங்களின் சுதந்திரத்தை பாதுகாக்க, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல விதிகள் உள்ளன. இந்த விதகளின் மூலம்,

ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை

  1. நீதிபதிகளின் பணிப் பாதுகாப்பு (Security of tenure of the Judges)
  2. நிலையான பனி நிபந்தனைகள் (Fixed Service Conditions of the Judges)
  3. ஊதிய உத்தரவாதம் (Expenses of Supreme Court)
  4. நீதிபதிகள் பற்றி விவாதிக்கக் கூடாது என்ற சட்டமன்றக் கட்டுப்பாடு (Prohibition of discussion on the conduct of Judges in Legislatures)
  5. பனி ஓய்வுக்கு பின் நீதிபதிகள் பணியை தொடரக் கூடாது (Ban on practice after Retirement)
  6. நீதிமன்ற நிந்தனையை தண்டிக்கும் அதிகாரம் (Power to punish for its contempt vested in the Supreme Court)
  7. சட்டத்துறையை நீதித்துறையிடமிருந்து பிரித்தல் (Separation of Judiciary from Executive)
  8. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விளக்கமளிக்கும் அதிகாரம் (Right to explain Constitutional Laws)
  9. சட்ட மறு ஆய்வு அதிகாரம் (Judicial Review) போன்றவை நீதித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளன.

                              எனவே  ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை இரட்டைச் சிறப்பியல்புகளாகும்.

 

Leave a Reply