DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021

DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021

                          DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

ரஜினிகாந்துக்கு தாதாஷாகிப் பால்கே விருது

DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021

  • தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்திற்கு, 51-வது தாதா ஷாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது (51ST DADASAHEB PHALKE AWARD)
  • இந்திய சினிமா உலகிற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது

ஜோசப் ஏ. குஷ்மன் விருது

DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021

  • ஜோசப் ஏ. குஷ்மன் விருது, இந்த ஆண்டு டாக்டர் ராஜீவ் நிகம் (முன்னாள் தலைமை விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர்-தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனம், கோவா, இந்தியா) அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது ( RAJIV NIGAM (FORMER CHIEF SCIENTIST, CSIR-NATIONAL INSTITUTE OF OCEANOGRAPHY, GOA, INDIA), SELECTED AS 2022 RECIPIENT OF J.A. CUSHMAN AWARD FOR EXCELLENCE IN FORAMINIFERAL RESEARCH)
  • குஷ்மேன் அறக்கட்டளையின் மிக உயர்ந்த கவுரவமான இந்த விருது, ஃபோராமினிஃபெரா ஆராய்ச்சித் துறையில் டாக்டர். நிகாமின் வாழ்நாள் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை உருவாக்ககும் GAIL

  • அரசுக்கு சொந்தமான கெயில் (இந்தியா) லிமிடெட் அடுத்த 12-14 மாதங்களில் இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை உருவாக்கவுள்ளது (STATE-OWNED GAIL (INDIA) LTD WILL BUILD INDIA’S LARGEST GREEN HYDROGEN PLANT IN THE NEXT 12-14 MONTHS)
  • அது இயற்கை எரிவாயு வணிகத்தை கார்பன் இல்லாத எரிபொருளுடன் சேர்க்கிறது

ரஸ்கின் பாண்டின் புதிய புத்தகம்

DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021

  • புகழ் பெற்ற எழுத்தாளரான ரஸ்கின் பான்ட், தந்து புதிய தொகுப்பு நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூலிற்கு WRITING FOR MY LIFE எனப் பெயரிடப்பட்டுள்ளது
  • இவரின் முதல் தெகுப்பு நூலான THE BEST OF RUSKIN BOND, வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த தொகுப்பு நூல வெளியிடப்பட்டுள்ளது

இந்திய தேர்தல் ஆணையத்தின் கருடா செயலி

  • இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் “கருடா” என்ற புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (ELECTION COMMISSION OF INDIA LAUNCHES GARUDA APP)
  • இதன் மூலம் தேர்தல் பணிகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், சரியான நேரத்திலும் முடிக்க இயலும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இராணுவ தளபதிகள் மாநாடு புது தில்லியில் துவங்கியது

  • 2021 ஆம் ஆண்டின் 2வது ராணுவ தளபதிகள் மாநாடு இன்று அக்டோபர் 25 முதல் அக்டோபர் 28, 2021 வரை புது தில்லியில் நடைபெற உள்ளது (FOUR-DAY ARMY COMMANDERS’ CONFERENCE BEGINS ON OCTOBER 25 IN NEW DELHI)
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் உயர்மட்ட தளபதிகளுடன் உரையாடி உரையாட உள்ளார்
  • இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் ஒரு உச்ச அளவிலான இரு வருட நிகழ்வாகும்.

நாசாவின் DART விண்வெளி திட்டம்

  • தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA – NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATION) இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனையை (DART – DOUBLE ASTEROID REDIRECTION TEST) தொடங்க தயாராகி வருகிறது.
  • ஒரு சிறுகோளுடன் பூமியின் மோதலைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்களின் ஒரு கிரக பாதுகாப்பு உந்துதல் சோதனை ஆகும்.

அசோக் லேலாண்டின் “மும்கின்” திட்டம்

DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021

  • அசோக் லேலாண்ட் நிறுவனம் சார்பில் ஜம்மு காஸ்மீர் இளைஞர்களுக்கு 500 சிறிய ரக தோஸ்த் வாகனம் வழங்கப்பட்டது (ASHOK LEYLAND HANDS OVER 500 VEHICLES TO ‘PROJECT MUMKIN’ FOR JK YOUTH)
  • இளைஞர்கள் இடையே தொழில் ஆர்வத்தை அதிகரிக்க ஏதுவாக் அசோக் லேலாண்ட் நிறுவனம் சார்பில் இந்த வாகனங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

சர்வதேச கலைஞர்கள் தினம்

DAILY CURRENT AFFAIRS 25 OCTOBER 2021

  • கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவைக் நினைவு கூறும் வகையில் அவரது பிறந்தநாள் அக்டோபர் 25 இல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது

சர்வதேச குள்ளத்தன்மை விழிப்புணர்வு தினம்

  • சர்வதேச குள்ளத்தன்மை விழிப்புணர்வு தினம் (International Dwarfism Awareness Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த நாள் குள்ளவாதத்தை ஏற்படுத்தும் எலும்பு வளர்ச்சி கோளாறான அகோண்ட்ரோபிளாசியாவுக்கான விழிப்புணர்வை பரப்புகிறது. இது ஒவ்வொரு 15,000 இல் ஒருவருக்கும் ஏற்படுகிறது.

72-வது இன்டர் சர்விசஸ் கால்பந்து சாம்பியன்சிப்

  • 72-வது இன்டர் சர்விசஸ் கால்பந்து சாம்பியன்சிப் போட்டிகள், கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது (THE 72ND INTER-SERVICES FOOTBALL CHAMPIONSHIP WAS HELD AT MAHARAJA STADIUM, KOCH)
  • ஆர்மி ரெட் மற்றும் ஏர் ஃபோர்ஸ் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. சாம்பியன் பட்டத்தை இந்திய விமானப்படை வென்றது.

தமிழகத்தில் “இ-முன்னேற்றம்”, “தகவல் தொழில்நுட்ப நண்பன்” இணையதளங்கள்

  • தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” ஆகிய இணையதளங்களை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்
  • புதிய தமிழ் விசைப்பலகை குறியீடுகளும் அப்பொழுது வெளியிடப்பட்டன

உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம்

International Dwarfism Awareness Day

  • உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் (GLOBAL MEDIA AND INFORMATION LITERACY WEEK), அக்டோபர் 24 முதல் 31 ஆம் தேதிவரை கொண்டாடப்பட உள்ளது
  • உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் 2021 தென்னாப்பிரிக்காவால் நடத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மொராக்கோவில் உள்ள ஃபெஸ் நகரில் உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் முதலில் நடத்தப்பட்டது

Leave a Reply