DAILY CURRENT AFFAIRS 27 OCTOBER 2021
DAILY CURRENT AFFAIRS 27 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
- இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (DRDO – DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION) டி.ஆர்.டி.ஒ சார்பில், ஓடிசாவின் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவுகளில் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது
- 17 மீ நீளமும், 2 மீ அகலமும் கொண்ட இந்த ஏவுகணை 5000 தூரம் வரை பாயும் திறன் கொண்டதாகும்.
16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு
- அக்டோபர் 27, 2021 அன்று நடைபெறும் 16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் (16TH EAST ASIA SUMMIT) பிரதமர் நரேந்திர மோடி, இனைய வழியில் கலந்துக் கொண்டார்
- அக்டோபர் 28, 2021 அன்று நடைபெறும் 18வது ஆசியான்-இந்தியா உச்சி (18TH ASEAN-INDIA SUMMIT) மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.
- பிரதமர் பங்கேற்கும் ஒன்பதாவது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு இதுவாகும்.
இராணுவ கண்காட்சி 2022 தூதர்கள் வட்டமேசை கருத்தரங்கம்
- 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள ராணுவ கண்காட்சி தொடர்பாக பல்வேறு நாடுகளின் தூதர்கள் கலந்துக் கொண்ட தூதர்கள் வட்டமேசை கருத்தரங்கம் (AMBASSADORS’ ROUND TABLE FOR DEFEXPO 2022) புது தில்லியில் ராணுவ அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
- இது ஆசியாவின் மிகப்பெரிய இராணுவ கண்காட்சி ஆகும்.
இந்திய-பசிபிக் பிராந்திய உரையாடல் 2021
- முதன்முதலில் 2018 இல் நடத்தப்பட்ட, இந்திய-பசிபிக் பிராந்திய உரையாடல் (IPRD – INDO-PACIFIC REGIONAL DIALOGUE 2021) என்பது இந்திய கடற்படையின் உச்ச சர்வதேச வருடாந்திர மாநாடு ஆகும்
- இந்த ஆண்டு IPRD ஆனது “21 ஆம் நூற்றாண்டின் கடல்சார் உத்தியில் பரிணாமம்: கட்டாயங்கள், சவால்கள் மற்றும், முன்னோக்கி செல்லும் வழி / EVOLUTION IN MARITIME STRATEGY DURING THE 21ST CENTURY: IMPERATIVES, CHALLENGES, AND, WAY AHEAD” என்ற பரந்த கருப்பொருளின் கீழ் எட்டு குறிப்பிட்ட துணை கருப்பொருள்களில் கவனம் செலுத்தும்.
பிரான்சின் ராணுவ தொடர்பு செயற்கைகோள் – சிராகுஸ் 4A
- பிரெஞ்ச் கயனாவில் இருந்து பிரான்ஸ் நாடு அதிநவீன “சிராகுஸ் 4A” என்ற ராணுவ தொடர்பு செயற்கைக் கோளினை வெற்றிகரமாக ஏவி உள்ளது / FRANCE LAUNCHED MILITARY COMMUNICATIONS SATELLITE “SYRACUSE 4A”
- உலகெங்கிலும் உள்ள பிரான்சின் ஆயுதப் படைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தொடர்பு கொள்ள ஏதுவாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கனடாவின் புதிய ராணுவ அமைச்சர் – அனிதா ஆனந்த்
- கனடா நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார் (INDO-CANADIAN ANITA ANAND APPOINTED CANADA’S DEFENCE MINISTER)
- கனடா நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள 2-வது பெண்மணி இவராவார்
இந்திய ராணுவத்தின் 75-வது காலாட்படை தினம்
- இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய சண்டைப் படையான காலாட்படையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் 75வது காலாட்படை தினம் 27 அக்டோபர் 2021 அன்று கொண்டாடப்பட்டது / THE 75TH INFANTRY DAY TO COMMEMORATE THE CONTRIBUTIONS OF INFANTRY, THE LARGEST FIGHTING ARM OF THE INDIAN ARMY WAS CELEBRATED ON 27 OCTOBER 2021
- 1947 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் காலாட்படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை முறியடித்த தினத்தை போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பிடம் மற்றும் மின்சாரவசதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்
- ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பிடம் மற்றும் மின்சாரவசதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை கோவா மாநிலம் பெற்றுள்ளது / GOA HAS ACHIEVED OPEN DEFECATION FREE (ODF) AND ELECTRICITY FOR EVERY HOUSEHOLD.
- “ஹர் கர் ஜல் மிஷன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் தண்ணீரை வழங்கும் முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது / GOA HAS ALSO BECOME THE FIRST STATE TO PROVIDE TAP WATER TO EVERY HOUSEHOLD UNDER THE “HAR GHAR JAL MISSION”.
- அதுமட்டுமல்லாமல், ஏழை மற்றும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்க கோவா 100 சதவீத இலக்கை எட்டியுள்ளது / GOA ACHIEVED 100 PER CENT TARGET TO PROVIDE FREE RATION TO THE POOR AND NEEDY.
- இது கோவிட்-19 தடுப்பூசியின் 100 சதவீத முதல் டோஸை நிறைவு செய்துள்ளது.
34 குழந்தைகள் நட்பு காவல் நிலையங்களை அமைக்கும் ஒடிசா
- ஒடிசா மாநிலத்தில் 34 குழந்தைகள் நட்பு காவல் நிலையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது / THE ODISHA GOVERNMENT HAS DECIDED TO SET UP 34 CHILDREN-FRIENDLY POLICE STATIONS IN THE STATE.
- இந்த அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான சிறப்பு வசதிகள் இருக்கும்.
- அவர்கள் சிறப்பு சின்னங்கள் மற்றும் பிளெக்குகள், அத்துடன் குழந்தைகளுக்கான சிறிய நூலகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
கே.ஆர் நாராயணின் 101வது பிறந்தநாள்
- இந்தியாவின் 10வது ஜனாதிபதி கே.ஆர். நாராயணின் 101வது பிறந்தநாள் 27 அக்டோபர் 2021 அன்று அனுசரிக்கப்பட்டது.
- 1992ல் ஒன்பதாவது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணன், 1997ல் ஜனாதிபதியானார்.
- இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி இவராவார்
உலக தொழில்சார் சிகிச்சை தினம்
- உலக தொழில்சார் சிகிச்சை தினம் (WORLD OCCUPATIONAL THERAPY DAY) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது முதன்முதலில் 27 அக்டோபர் 2010 அன்று தொடங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கரு = BE YOU
காந்தியவாதி சுப்பா ராவ் காலமானார்
- மூத்த காந்தியத் தலைவர் சேலம் நஞ்சுடையா சுப்பா ராவ் காலமானார். அவருக்கு வயது 92 ஆகும் / GANDHIAN SUBBA RAO PASSES AWAY IN OCTOBER 2021
- அவர் தனது “ஷ்ரம்தான்” (தொழிலாளர்களின் தன்னார்வ பங்களிப்பு) நடவடிக்கைகள் மற்றும் முகாம்களுக்கு பிரபலமானவர்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 13 வயதில் கைது செய்யப்பட்டார்.
இந்தியா ஸ்வீடன் புத்தாக்க தினம்
- 8வது இந்திய ஸ்வீடன் புத்தாக்க தினம், அக்டோபர் 26 ஆம் நாள் கொண்டாடப்பட்டு பல்வேறு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது / THE 8TH ANNUAL INDIA SWEDEN INNOVATION DAY 2021 WAS CONCLUDED SUCCESSFULLY ON 26TH OCTOBER 2021
- ஸ்வீடன் மற்றும் லாட்வியாவிற்கான இந்திய தூதரகம், ஸ்வீடன்-இந்தியா வணிக கவுன்சில் (SIBC), மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு நாள் மெய்நிகர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
- OCTOBER 26 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 25 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 24 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 23 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 22 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 21 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 20 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
- OCTOBER 19 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL