DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021

                 DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

சர்வதேச அனிமேசன் தினம்

DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021

  • சர்வதேச அனிமேசன் தினம் (WORLD ANIMATION DAY), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 ஆம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
  • அக்டோபர் 28 சர்வதேச அனிமேஷன் தினம். அனிமேஷன் திரைப்படங்கள் உட்பட அனிமேஷன் கலையின் பின்னணியில் உள்ள கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு கொண்டாடும் நாள் இது.

தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் – SAMBHAV

DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021

  • நாடு முழுவதும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் இளைஞர்களை ஈடுபடுத்த ஏதுவாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில் “SAMBHAV” என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது (TO PROMOTE ENGAGEMENT OF THE YOUTH IN PROMOTING ENTREPRENEURSHIP)
  • இப்பயிற்சி ஒரு மாத காலத்திற்கு வழங்கப்பட உள்ளது

ஆடியோவிஷுவல் பாரம்பரியத்திற்கான உலக தினம்

DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021

  • ஆடியோவிஷுவல் பாரம்பரியத்திற்கான உலக தினம் (THE WORLD DAY FOR AUDIOVISUAL HERITAGE), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது
  • இந்த நினைவு நாள் 2005 இல் யுனெஸ்கோவால் பதிவுசெய்யப்பட்ட ஒலி மற்றும் ஆடியோவிஷுவல் ஆவணங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்வு செய்யப்பட்டது.

பைசாபாத் ரயில் நிலையம் அயோத்தி கான்ட் எனப் பெயர் மாற்றம்

  • உத்திரப் பிரதேச மாநில அரசு, பைசாபாத் ரயில் நிலையத்தை அயோத்தியா கன்ட் என பெயர் மாற்றம் செய்துள்ளது / THE UTTAR PRADESH GOVERNMENT HAS DECIDED TO RENAME THE FAIZABAD JUNCTION TO AYODHYA CANTT RAILWAYS STATION.
  • 1874 இல் திறக்கப்பட்ட பைசாபாத் ரயில் நிலையம் வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் வருகிறது.
  • சமிபத்தில் அம்மாநில அரசு அலகாபாத் நகரினை பிரயாக்ராஜ் என்றும், முகல்சராய் ரயில் சந்திப்பினை பண்டிட் தீனதயாள் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

சையது சுல்தான் அகமது 7வது முறையாக தேசிய திரைப்பட விருதை பெற்றார்

  • புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சையத் சுல்தான் அகமதுவின் ‘ஆப்பிள்ஸ் அண்ட் ஆரஞ்சு’ குறும்படம் சிறந்த கல்வித் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது / SYED SULTAN AHMED RECEIVES THE NATIONAL FILM AWARD FOR THE 7TH TIME
  • சையத் சுல்தான் அகமது தயாரித்து தேசிய திரைப்பட விருது பெற்ற ஏழாவது படம் இது.

கண்டெய்னர் அடிப்படையிலான நடமாடும் மருத்துவமனை அமைக்கும் ஆசியாவின் முதல் நாடு – இந்தியா

  • ஆசியாவிலேயே முதன்முறையாக, சுகாதார அவசரநிலைக்கு தீர்வு காண ரயில் அல்லது விமானம் மூலம் செல்லக்கூடிய கொள்கலன் (கண்டெய்னர்) அடிப்படையிலான மொபைல் மருத்துவமனைகளை இந்தியா உருவாக்க உள்ளது / CENTRE GOVT TO SET UP ASIA’S FIRST CONTAINER-BASED MOBILE HOSPITALS
  • இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

காலநிலை தொழில்நுட்ப முதலீட்டில் உலகில் 9-வது இடத்தில் இந்தியா

DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் காலநிலை தொழில்நுட்ப முதலீட்டிற்கான முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது மற்றும் இந்திய காலநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் 2016- 2021 வரை துணிகர மூலதன நிதியில் $1 பில்லியன் பெற்றுள்ளன / INDIA RANKS NINTH IN THE LIST OF TOP 10 COUNTRIES FOR CLIMATE TECHNOLOGY INVESTMENT
  • லண்டன் & பார்ட்னர்ஸ் மற்றும் டீல்ரூம் என்ற ஆய்வு நிறுவனம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

ICGS ‘சர்தக்’ கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

DAILY CURRENT AFFAIRS 28 OCTOBER 2021

  • உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பல் ‘சர்தக்’ 28 அக்டோபர் 2021 அன்று கோவாவில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது / THE INDIGENOUSLY BUILT INDIA COAST GUARD SHIP ‘SARTHAK’ WAS COMMISSIONED AND DEDICATED TO THE NATION AT GOA
  • 105 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலானது, அதிகபட்சமாக 26 நாட்ஸ் வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட 9100 கிலோவாட் டீசல் என்ஜின்களால் இயக்கப்படுகிறது.

ராய்ப்பூரில் தேசிய பழங்குடியினர் நடன விழா

  • தேசிய பழங்குடியினர் நடன விழா ராய்பூரில் அக்டோபர் 28-30, 2021 வரை நடைபெறுகிறது / THE NATIONAL TRIBAL DANCE FESTIVAL IS BEING HELD IN RAIPUR FROM OCTOBER 28-30,
  • சத்தீஸ்கர் அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த விழா நடத்தப்படுகிறது.
  • உஸ்பெகிஸ்தான், நைஜீரியா, இலங்கை, உகாண்டா, சிரியா, மாலி, பாலஸ்தீனம் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்களை இதில் கலந்துக் கொள்ள உள்ளனர்

300 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த உலகின் மிகப்பெரிய பணக்காரர்

  • உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ள டெஸ்லா நிறுவன அதிபர்எலான் மஸ்க், 300 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்தார் (ELON MUSK BECOMES WORLD’S RICHEST PERSON, TOTAL WORTH TO TOUCH $300 BILLION)
  • அக்டோபர் 25 ஆம் தேதி, ஹெர்ட்ஸ் குளோபல் ஹோல்டிங்ஸ் இன்க் டெஸ்லாவிடமிருந்து 100,000 மின்சார வாகனங்களை ஆர்டர் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த ஒரேநாளில் அவர் 36 பில்லியன் டாலர் மதிப்பு சொத்தினை அடைந்தார்

கமலா ஹாரிஸின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்

  • புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சித்தானந்த் ராஜ்கட்டா, அமெரிக்காவின் (அமெரிக்காவின்) முதல் பெண் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் வாழ்க்கை வரலாற்றை, KAMALA HARRIS: PHENOMENAL WOMAN என்ற நூலில் எழுதி வெளியிட்டுள்ளார்
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலப்பு இனப் பெண் (இந்தியா மற்றும் ஜமைக்கா) கமலா ஹாரிஸின் வாழ்க்கை சம்பவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன

உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் எரிபொருள் செல் மின் நிலையம் தென் கொரியாவில் துவக்கம்

  • உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் எரிபொருள் செல் மின் நிலையம் தென் கொரியாவின் இன்சியான் நகரில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது / WORLD’S LARGEST HYDROGEN FUEL CELL POWER PLANT WAS BUILT IN KOREA
  • 78 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது இந்த ஆலை. இதன் மூலம் ஓர் ஆண்டிற்கு சுமார் 2.5 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.

இந்திய கடற்படை போர்க்கப்பல் துஷில் ரஷ்யாவில் தொடக்கம்

  • பி 6 வகையைச் சேர்ந்த ஏழாவது இந்திய கடற்படை போர்க்கப்பல், ரஷ்யாவில் உள்ள கலினின்கிராடில் அமைந்துள்ள யந்தர் கப்பல் தளத்தில் ரஷ்யாவுக்கான (மாஸ்கோ) இந்திய தூதர் திரு டி பால வெங்கடேஷ் வர்மா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
  • கப்பலுக்கு துஷில் என்று திருமதி டத்லா வித்யா வர்மா பெயரிட்டார். துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாப்பு கவசம் என்ற பொருள்.

முதல் லடாக் பறவைகள் திருவிழா

  • வனவிலங்குப் பாதுகாப்புத் துறை, லடாக்கின் செக்யூர் ஹிமாலயா திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த முதல் 3-நாள் லடாக் பறவைத் திருவிழா (LADAKH BIRD FESTIVAL), அக்டோபர் 28 ஆம் தேதி லேவில் தொடங்கியது.
  • இந்த நிகழ்வின் போது “கருப்பு கழுத்து கொக்கு / BLACK NECKED CRANE” அதிகாரப்பூர்வமாக லடாக் மாநில பறவையாக (STATE BIRD OF LADAKH) அறிவிக்கப்பட்டது

பிரம்மபுத்திரா மெயில்: மின்சார இழுவையில் இயங்கும் முதல் பயணிகள் ரயில்

  • வடகிழக்கு பிராந்தியத்தில் முழுவதுமாக மின்சார இழுவையில் இயங்கும் முதல் பயணிகள் ரயில் 28 அக்டோபர் 2021 அன்று அஸ்ஸாமின் குவாஹாட்டியில் உள்ள காமாக்யா நிலையத்திற்கு வந்தது / BRAHMAPUTRA MAIL: 1ST PASSENGER TRAIN TO RUN ON ELECTRIC TRACTION
  • ரயில் எண். 05956 டெல்லி-காமக்யா (பிரம்மபுத்ரா) அஞ்சல் சிறப்பு ரயில் மின்சார இழுவையில் 2000 கி.மீ.க்கு மேல் பயணித்தது.
  • முன்னதாக அக்டோபர் 21, 2021 அன்று, வடகிழக்கு எல்லை ரயில்வே தனது முதல் பார்சல் ரயிலை காமாக்யா நிலையம் வரை மின்சார இழுவையில் இயக்கியது

Leave a Reply