DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 23
DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 23 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23 டிசம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்தியா
ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 53 பேர் கொண்ட குழு
- ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 53 பேர் கொண்ட விரிவான குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
- இக்குழுவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகம்
மீண்டும் மஞ்சப்பை திட்டம்
- பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தை தமிழக அரசு துவக்கி உள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மின்னணு தகவல் பலகை திட்டம்
- தமிழக அரசின் சார்பில், அரசின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த “மின்னணு தகவல் பலகை திட்டத்தை” தமிழா முதல்வர் துவக்கி வைத்தார்.
- மின்னணு தகவல் பலகை திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழு = பி,டபள்யு.சி டேவிதார் குழு
- தமிழக அரசில் 42 துறைகள் உள்ளன. இந்தத் துறைகளில் உள்ள நலத் திட்டங்கள், செயல்பாடுகள் ஒரு இடத்தில் மட்டுமே இருந்து கண்காணிக்கும் வகையிலான என்ம பலகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் முதல் முறையாக ஊட்டியில் மண் சரிவை தடுக்க “ஹைட்ரோ சீடிங்” தொழில்நுட்பம்
- நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் புதிய தொழில்நுட்பத்துடன் நிலச்சரிவை தடுக்கும் பசுமை தொழில்நுட்ப முறைகளான சணல் வளை அமைத்தல் மற்றும் ஹைட்ரோ சீடிங் எனப்படும் நீர் விதைப்பு முறை மேற்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் தமிழகத்திலேயே முதல் முறையாக ஊட்டியில் உள்ள கோடப்பமந்து பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதன் முதல்
4-வது தடுப்பூசி செலுத்தும் உலகின் முதல் நாடு
- ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து பல வெளிநாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனாவுக்கு எதிராக 4-வது டோஸ் தடுப்பூசி (2-வது பூஸ்டர் டோஸ்) போடுகிற உலகின் முதல் நாடு என்ற பெயரை பெறப்போகிறது.
முதல் கோவிட்-19 துருப்பிடிக்காத ஸ்டீல்
- ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் (HKU) திட்டக் குழு, முதல் கோவிட்-19 துருப்பிடிக்காத ஸ்டீலைத் தயாரித்துள்ளது.
- இது அதன் மேற்பரப்பில் உள்ள கடுமையான சுவாச நோய்க்குறியான கொரோனா வைரஸ் 2 (SARS-Cov-2) ஐக் கொல்லும். கோவிட்-19 எதிர்ப்பு எஃகு H1N1 வைரஸ் மற்றும் coli ஐ அதன் மேற்பரப்பில் செயலிழக்கச் செய்யும்.
விளையாட்டு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி – இந்தியா 3-வது இடம்
- 5 அணிகள் பங்கேற்ற 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது
- இதில் சாம்பியனாக தென்கொரியா கோப்பையை வென்றது. 2-வது இடத்தை ஜப்பான் பிடித்தது. இந்நிலையில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.
- இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய பெண்கள் கால்பந்து – இந்தியா 2-வது இடம்
- தெற்காசிய கால்பந்து (19 வயது) பைனலில் இந்திய அணி, வங்கதேச அணியிடம் வீழ்ந்தது. இதன் மூலம் 2-வது இடத்தை பிடித்தது
- வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்சிப் பட்டதை வங்கதேசம் கைப்பற்றியது.
அமெரிக்காவில் ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அனாஹத் சிங் பெற்றார்
- அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடந்த U-15 பெண்கள் பிரிவில் ஜூனியர் யுஎஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங் வென்றார்.
- அமெரிக்காவில் ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அனாஹத் சிங் பெற்றார்
- அவர் இறுதிப் போட்டியில் எகிப்தின் ஜெய்தா மரேயை 11-9 11-5 8-11 11-5 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
அறிவியல், தொழில்நுட்பம்
வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிரிகள்
- வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இறக்கலாம் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
- இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், எம்.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வீனஸ் கிரகத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி செய்து, அக்கிரகத்தின் மேகங்களில் அம்மோனியா இருக்குமானால் அங்கு நுண்ணுயிர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
நாசா-இஸ்ரோ ஆராய்ச்சி திட்டத்தில் கேரளாவின் KUFOS பங்குதாரராக தேர்வு
- NASA- ISRO கூட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் ஆதரவுடன் ஒரு ஆராய்ச்சி திட்டத்தில் சேர கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம் (KUFOS – KERALA UNIVERSITY OF FISHERIES AND OCEAN STUDIES) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- நாசாவும் இஸ்ரோவும் இணைந்து 2023 ஜனவரியில் ஏவப்படும் விண்வெளியில் பரவும் செயற்கை துளை ரேடாரை (NISAR – NASA-ISRO SYNTHETIC APERTURE RADAR MISSION) உருவாக்கி வருகின்றன.
இடங்கள்
19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கோப்பை 2021
- 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கோப்பை 2021 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் துவங்கியது.
- முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகல மொத உள்ளன. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் யாஷ் துல் ஆவார்.
நாட்கள்
தேசிய விவசாயிகள் தினம்
- இந்தியா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 அன்று தேசிய விவசாயிகள் தினம் அல்லது கிசான் திவாஸ் (NATIONAL FARMERS DAY OR KISAN DIWAS) கொண்டாடுகிறது. இந்த நாள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
- அவர் ஜூலை 28, 1979 முதல் ஜனவரி 14, 1980 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். அவர் ஒரு விவசாயி தலைவராக இருந்தார்.
- டிசம்பர் 23, 1978 இல், அவர் கிசான் அறக்கட்டளையை நிறுவினார், இது இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அநீதிக்கு எதிராக கல்வி கற்பதை நோக்கமாகக் கொண்டது.
பட்டியல், மாநாடு
‘யூனிகார்ன்’ நிறுவனங்களின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளிய இந்தியா
- 100 கோடி டாலர் மதிப்பைக் கொண்ட ‘யூனிகார்ன்’ நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஆண்டில் 33 நிறுவனங்கள் இணைந்ததை அடுத்து, பிரிட்டனை இந்தியா பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளது
- யூனிகார்ன் = ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 100 கோடி டாலர் மதிப்பை கொண்ட நிறுவனங்கள் யுனிகார்ன் நிறுவனங்கள் எனப்படும்
- முதல் இடம் = அமேரிக்கா
- 2-வது இடம் = சீனா
- 3-வது இடம் = இந்தியா
- இந்திய அளவில் அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் கொண்ட னகரமாக பெங்களூரு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மும்பை நகரம் உள்ளது.
- இந்திய யுனிகார்ன் நிறுவனங்களில் முதல் இடத்தில் பைஜூஸ் நிறுவனம் உள்ளது.
இந்தியாவின் ஊடகங்களில் அதிகம் காணக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள்
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வருவாய், லாபம் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான, 2021 Wizikey News ஸ்கோர் தரவரிசையில் இந்தியாவின் ஊடகங்களில் அதிகம் காணக்கூடிய கார்ப்பரேட்டாக முதலிடத்தைப் பிடித்தது.
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளன.
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 22
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 21
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 20
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 19
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 18
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 17
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 16
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 15
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 14
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 13
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 12
- DAILY TNPSC CURRENT AFFAIRS 2021 DEC 11