OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS
OCTOBER 02 2021 TNPSC CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சர்வதேச அகிம்சை தினம்
- ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம், “சர்வதேச அகிம்சை தினமாக” (INTERNATIONAL DAY OF NON-VIOLENCE) ஆக கொண்டாடப்படுகிறது
- 15 ஜூன் 2007 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, அக்டோபர் 2 அகிம்சை தினமாக கடைபிடிக்க வலியுறுத்தியது
- இந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று குறிப்பிடப்படுகிறது
- உலக அமைதி சின்னமாக கருதப்படும் காந்தி, அக்டோபர் 2, 1869 அன்று குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். இந்த ஆண்டு அவரின் 152-வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது
இந்திய விளம்பரதார சங்கத்தின் புதிய தலைவர்
- இந்திய விளம்பரதார சங்கத்தின் (ISA – INDIAN SOCIETY OF ADVERTISERS) புதிய தலைவராக “சுனில் கட்டாரியா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- கோட்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் தலைவராக பல ஆண்டுகள் இவர் பணிபுரிந்துள்ளார்
ஆப்பிரிக்காவின் முதல் இலக்கிய நோபல் பரிசு பெற்ற வோல் சோயின்காவின் புதிய புத்தகம்
- ஆப்பிரிக்காவின் முதல் இலக்கிய நோபல் பரிசு பெற்ற வோல் சோயின்காவின் புதிய புத்தகம் “CHRONICLES FROM THE LAND OF THE HAPPIEST PEOPLE ON EARTH” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது
- இவர் இஐதியாக 1973 ஆம் ஆண்டு “SEASON OF ANOMY” என்ற நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். சுமார் 50 ஆண்டுகள் பிறகு தற்போது புதிய நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரூபிந்தர் பால் சிங் ஹாக்கியிலிருந்து ஓய்வு
- டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரூபிந்தர் பால் சிங் ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
- சமிபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஹக்கி பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. இந்த அணியில் ரூபிந்தர் பால் சிங்கும் விளையாடி இருந்தார்
- 30 வயதான ரூபீந்தர் தனது 13 வருட ஹாக்கி வாழ்க்கையில் 223 போட்டிகளில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடி உள்ளார்.
டிஜிசக்சம்
- மத்திய தொழிலாளர் அமைச்சகமும், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க “டிஜிசக்சம்” என்ற டிஜிட்டல் கல்வி முறை திட்டத்தை துவங்கி உள்ளன
- இந்த கூட்டு முயற்சி கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை திறம்பட செயல்படுத்த ஏதுவாக திறன் வளர்ச்சி பயிற்சிகளை அளிக்க உள்ளது
- முதல் வருடத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அடிப்படை திறன்கள் மற்றும் மேம்பட்ட கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திறன்களில் இலவச பயிற்சி அளிக்கப்படும்.
- ஆகா கான் கிராமப்புற ஆதரவு திட்டம் இந்தியா (AKRSP- I = AGA KHAN RURAL SUPPORT PROGRAMME INDIA) மூலம் இத்திட்டம் இந்ஹியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது
2021 உலகளாவிய தலைமை விருது
- அமெரிக்க இந்தியா பிசினஸ் கவுன்சில் (USIBC – UNITED STATES INDIA BUSINESS COUNCIL) அதன் 2021 உலகளாவிய தலைமை விருதை இந்தியாவின் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் டபே நிறுவன தலைவர் மல்லிகா சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது
- மல்லிகா சீனிவாசன், டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE – TRACTORS AND FARM EQUIPMENTS LIMITED) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.
உலக பண்ணை விலங்குகள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, “உலக பண்ணை விலங்குகள் தினம்” (WORLD DAY FOR FARMED ANIMALS – WDFA) கடைபிடிக்கப்படுகிறது
- பண்ணை விலங்கு நலனின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் காட்டுவதற்காக சர்வதேச விலங்குகள் நல அமைப்பான உலக விலங்குகள் பாதுகாப்பு மற்றும் விலங்குகளுக்கான கூட்டமைப்பால் இந்த நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உணவுக்காக வளர்க்கப்பட்டு படுகொலை செய்யப்படும் வளர்க்கப்படும் விலங்குகளின் தேவையற்ற துன்பம் மற்றும் இறப்பை வெளிப்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய காதி தேசியக் கொடி லடாக்கின் லேவில் ஏற்றப்பட்டது
- அக்டோபர் 02, 2021 அன்று மகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாளை முன்னிட்டு, காதி துணியால் ஆன உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி லடாக் லேவில் நிறுவப்பட்டது.
- காதி தேசியக் கொடியை லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் திறந்து வைத்தார்.
- இந்த கொடி காதி கிராமம் மற்றும் தொழில்கள் ஆணையத்துடன் (KVIC – KHADI VILLAGE AND INDUSTRIES COMMISSION) இணைந்த மும்பையில் உள்ள காதி டயர்ஸ் மற்றும் பிரிண்டர்ஸ் (KHADI DYERS AND PRINTERS) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
- மூவர்ணம் 225 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டது. இதன் எடை சுமார் 1,000 கிலோ / THE TRICOLOUR IS 225-FEET LONG AND 150-FEET WIDE. IT WEIGHS AROUND 1,000
- கொடியை இந்திய இராணுவத்தின் 57 பொறியாளர் படைப்பிரிவு தயாரித்துள்ளது.
- இந்த கொடி இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கையால் கட்டப்பட்ட மற்றும் கையால் செய்யப்பட்ட பருத்தி காதி கொடி ஆகும்.
ஆயுதப்படை இயக்குநரகத்தின் முதல் தலைமை இயக்குனர்
- R. ஷேக் ஆயுதப்படை இயக்குநரகத்தின் (ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள்) முதல் தலைமை இயக்குநராகப் (FIRST DIRECTOR-GENERAL OF THE ORDNANCE DIRECTORATE (CO-ORDINATION AND SERVICES)) பொறுப்பேற்றார்.
- ஷேக் 1984 ஆம் ஆண்டின் இந்திய ஆயுதக் தொழிற்சாலை சேவை (IOFS) அதிகாரி ஆவார். வரன்கான் ஆயுத தொழிற்சாலையில் சிறிய ஆயுத வெடிமருந்து தயாரிப்பதற்கான நவீன உற்பத்தி வரி அமைப்பை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
உலக புன்னகை தினம்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம் (WORLD SMILE DAY IS CELEBRATED ON THE FIRST FRIDAY IN OCTOBER) கொண்டாடப்படுகிறது.
- 2021 இல், இந்த நாள் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
- 1999 இல், முதல் உலக புன்னகை தினம் கொண்டாடப்பட்டது.
- ஹார்வி பால் என்பவர், ஸ்மைலி எனப்படும் சிரித்த முகத்தை வரைந்ததை நினைவூட்டும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது
- ஹார்வி பால் மாசசூசெட்ஸின் வோர்செஸ்டரைச் சேர்ந்த ஒரு கலைஞர்.