OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

சர்வதேச முதியோர் தினம்

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

  • சர்வதேச முதியோர் தினம் (INTERNATIONAL DAY OF OLDER PERSONS), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
  • டிஜிட்டல் உலகில் வயது முதியோரின் கண்ணியத்தை காக்கவும், மரியாதை அளிக்கவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • 2021 ஆம் ஆண்டிற்கான கரு (THEME) = DIGITAL EQUITY FOR ALL AGES

சர்வதேச காபி தினம்

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

  • சர்வதேச காபி தினம் (INTERNATIONAL COFFEE DAY), உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
  • சர்வதேச காபி அமைப்பு (ICO – INTERNATIONAL COFFEE ORGANISATION), பல்வேறு காபி சங்கங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள காபி பிரியர்களால் இது கொண்டாடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான கரு (THEME) = COFFEE’S NEXT GENERATION

உலக சைவ தினம்

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

  • உலகா சைவ தினம் (WORLD VEGETARIAAN DAY), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதாம் 1 ஆம் தேதி உளாகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
  • சைவத்தின் நன்மைகளை எடுத்துரைப்பதற்காக இத்தினம் காடைபிடிக்கப்படுகிறது. சைவ வாழ்க்கை முறையின் ஆரோக்கியம் மற்றும் மனிதாபிமான நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சைவ தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஆக்டோபர் மாதம் 1 முதல் 7 ஆம் தேதி வரை,, “உலக சைவ வாரம்” (WORLD VEGETARIANN WEEK) கடைபிடிக்கப்படுகிறது.

பிரதமர் தலைமையில் 38 வது பிரகதி கூட்டம்

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

  • பிரதமர் தலைமையில் 38 வது பிரகதி (PRAGATI) கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது
  • பிரகதி என்பது ஐசிடி அடிப்படையிலான பல-மாதிரி தளத்திற்கான சுருக்கமாகும். இதன் விரிவாக்கம், “செயலில் உள்ள நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துதல்” (PRAGATI = PRO ACTIVE GOVERNANCE AND TIMELY IMPLEMENTATION) ஆகும்
  • இது பிஎம்ஓ எனப்படும் பிரதமர் அழ;அலுவலகம், மத்திய அரசு செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் அடங்கிய மூன்று அடுக்கு அமைப்பு ஆகும்.
  • இதன் நோக்கங்கள் = குறைகளை நிவர்த்தி செய்தல் (GRIEVANCE REDRESSAL), திட்டங்களை செயல்படுத்தல் (PROGRAMME IMPLEMENTATION), திட்ட கண்காணிப்பு (PROJECT MONITORING) ஆகும்.
  • இந்த தளம் சாமானியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டங்களை கண்காணித்து மதிப்பாய்வும் செய்கிறது.

அமேசான் நிறுவனத்தின் “உலகளாவிய கணினி அறிவியல் கல்வித் திட்டம்”

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

  • உலகப் புகழ் பெற்ற மின்-வணிக நிறுவனமான “அமேசான்” தனது “அமேசான் பியுச்சர் இஞ்சினியர்” (AMAZON FUTURE ENGINEER) என்ற திட்டத்தை “உலகளாவிய கணினி அறிவியல் கல்வித் திட்டம்” (GLOBAL COMPUTER SCIENCE EDUCATION PROGRAMME) மூலம் இந்தியாவில் துவங்க உள்ளது
  • குறைந்த பிரதிநிதித்துவம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தரமான கணினி அறிவியல் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை அணுக இத்திட்டம் உதவும் என தெரிவிக்கப் பட்டுள்ளது

இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை முதல் முறையாக விளையாடிய இந்திய மகளிர் அணி

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

  • செப்டம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்டனில் உள்ள கராரா ஓவலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இளஞ்சிவப்பு பந்து மூலம் நடத்தப்பட்டது (THE FIRST PINK-BALL DAY AND NIGHT TEST MATCH BETWEEN INDIA AND AUSTRALIAN WOMEN TEAM AT THE CARRARA OVAL IN QUEENSLANDON, AUSTRALIA)
  • மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதல் முறையாக இப்பந்து மூலம் விளையாடுகின்றன.

தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகையின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

OCTOBER 01 2021 TNPSC CURRENT AFFAIRS

  • தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகையின் (NSDL – NATIONAL SECURITIES DEPOSITORIES LTD) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குனராகவும் “பத்மஜா சுந்துரு” நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • இதற்கு முன்னர் இப்பதவியில் நாகேஸ்வர ராவ் என்பவர் இருந்து வந்தார்

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்சிப் போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா

  • அக்டோபர் 1, 2021 அன்று ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் (ASIAN TABLE TENNIS CHAMPIONSHIPS) இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
  • அரையிறுதியில் தென் கொரியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, வங்காளப் பதக்கத்திற்கான போட்டியில் ஈரானை வீழ்த்தியது.

மேகாலயா மாநிலத்தின் தலைமை செயலராக பதவி ஏற்ற, முதல் மேகாலயப் பெண்மணி

  • மேகாலயா மாநிலத்தின் தலைமை செயலராக பதவி ஏற்ற, முதல் மேகாலயப் பெண்மணி என்ற சிறப்பை, அம்மாநிலத்தின் ரெபேக்கா வனேசா சுச்சியாங் பெற்றுள்ளார்
  • மேகாலயாவின் தலைமைச் செயலாளர் எம்.எஸ். ராவ் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆர்.வி.சுச்சியாங்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

7-வது ஸ்வாச் சர்வேக்ஷன்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஸ்வச் சர்வேக்ஷனின் (SWACHH SURVEKSHAN) 7-வது பதிப்பினை அறிமுகம் செய்தது
  • ஸ்வாச் சர்வேக்ஷன் உலகின் மிகப்பெரிய நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பு ஆகும், இது ஸ்வச் பாரத் மிஷன்-அர்பன் (SBM-U – SWACHH BHARAT MISSION-URBAN) ஆல் நடத்தப்படுகிறது.

ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல்

  • 2021 ஆம் ஆண்டிற்கான ஹூரூன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் (HURUN INDIA RICH LIST 2021) வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 10-வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில உள்ளார்
  • 2-வது இடத்தை அதானி நிறுவன தலைவர், கவுத்தம் அதானி பிடித்துள்ளார். 3-வது இடத்தை  எச்.சி.எல் நிறுவனர் சிவநாடார் பிடித்துள்ளார்.

 

  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 29,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 28,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 27,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 26,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 25,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 24,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 23,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 22,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 21,2021

Leave a Reply