OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

                               OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

மூத்த குடிமக்களுக்கான SACRED தளம்

OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் சார்பில், மூத்த குடிமக்களுக்கான கண்ணியமான வேலைவாய்ப்பை மீண்டும் வழங்கும் “SACRED” என்ற இயங்குதளம் துவக்கி வைக்கப்பட்டது
  • SACRED = SENIOR ABLE CITIZENS FOR RE-EMPLOYMENT IN DIGNITY
  • இது பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் வயதானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்.
  • 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் போர்ட்டலில் பதிவு செய்து வேலைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை பெறலாம்
  • தன்னார்வ நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு பயனர் கட்டணம் இல்லாமல் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க உதவும்.

தேசிய வனவிலங்கு வாரம்

OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

  • இந்தியாவில் “தேசிய வனவிலங்கு வாரம்” (NATIONAL WILDLIFE WEEK), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டு இந்தியாவில் கொண்டாடப்பட்டது 67-வது தேசிய வனவிலங்கு வாரம் ஆகும்
  • இந்தியாவில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு (THEME) = FORESTS AND LIVELIHOODS: SUSTAINING PEOPLE AND PLANET

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்

OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

  • அக்டோபர் என்பது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும் (BREAST CANCER AWARENESS MONTH), இது மார்பக புற்றுநோய் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் ஒரு வருடாந்திர பிரச்சாரமாகும்.
  • மார்பக புற்றுநோய் புற்றுநோயின் மிகவும் பொதுவான வடிவமாகும். இந்த நோய் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
  • மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக மார்பகத்தில் கட்டிகள் உருவாகின்றன.

4-வது கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சி “AUSINDEX”

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் கடற்படை இணைந்து மேற்கொள்ளும் “AUSINDEX”, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் துவங்கியது
  • 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பயிற்சி, ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நான்காவது போர் பயிற்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது

மேலாண்மை குரு பேராசிரியர் பால வி பாலச்சந்திரன் காலமானார்

OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

  • இந்தியாவின் பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனமான, கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பேராசிரியர் பால வி பாலச்சந்திரன் காலமானார்.
  • அவருக்கு வயது 84. பாலச்சந்திரன் 5 ஜூலை 1937 அன்று தமிழ்நாட்டில் புதுப்பட்டியில் பிறந்தவர்.
  • அவர் ஒரு சிறந்த பேராசிரியர், வழிகாட்டி, கல்வியாளர், எழுத்தாளர், தொழிலதிபர், ஆலோசகர் மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் ஆவார்.

வங்கதேசத்தின் நொஹாலியில் காந்தி அருங்காட்சியகம் திறப்பு

  • மகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாளை முன்னிட்டு, வங்கதேசத்தில் உள்ள நொகாலியில் உள்ள காந்தி ஆசிரம அறக்கட்டளையின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
  • பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ கே அப்துல் மோமன், சட்ட அமைச்சர் வக்கீல் அனிசுல் ஹக் மற்றும் பங்களாதேஷிற்கான இந்திய ஆணையர் விக்ரம் துரைசாமி ஆகியோர் இதனைத் தொடங்கி வைத்தனர்.

இந்திய – இலங்கை கூட்டுப் பயிற்சியின் 8 வது பதிப்பு – மித்ரா சக்தி’21

OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

  • இந்தியா-இலங்கை இருதரப்பு கூட்டுப் பயிற்சி மித்ரா சக்தியின் எட்டாவது பதிப்பு 2021 அக்டோபர் 4 முதல் 15 வரை இலங்கையில் உள்ள அம்பாறை போர் பயிற்சி பள்ளியில் நடைபெற உள்ளது
  • கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் 120 வீரர்களைக் கொண்ட அனைத்து ஆயுதக் குழுக்களும் இலங்கை இராணுவத்தின் ஒரு பட்டாலியனுடன் பயிற்சியில் பங்கேற்கின்றன.

ஜல் ஜீவன் மிஷன் செயலி

OCTOBER 03 2021 TNPSC CURRENT AFFAIRS

  • பிரதமர் மோடி அவர்கள், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஜல் ஜீவன் இயக்க நிகழ்ச்சியில், “ஜல் ஜீவன் இயக்க செயலி” மற்றும் “ராஷ்ட்ரிய ஜல் ஜீவன் கோஷ்” ஆகியவற்றினை அறிமுகம் செய்து வைத்தார்
  • ஜல் ஜீவன் மிஷன் ஆப், பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகவும், மிஷனின் கீழ் திட்டங்களின் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுக்காகவும் தொடங்கப்பட்டது.

 

OCTOBER 01 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

OCTOBER 02 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

 

Leave a Reply