SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு

SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு

SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு

  • கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் “SYMBOL” என ஆளப்படுகிறது.
  • “சிம்பல்” (SYMBOL) என்பதற்கு “ஒன்று சேர்” என்பது பொருள்.
  • ஏதேனும் ஒரு வகையில் இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும்.
  • அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம். அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம்.

குறியீடு என்றால் என்ன?

  • பெண்ணை , விளக்கு என்று அழைப்பதற்கு, பண்பு காரணமாக இருக்கிறது. பறவையான வெண்புறா,சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது. கருவியான தராசு நீதியின் குறியீடாக இருக்கிறது. விலங்கான சிங்கம் வீரத்தின் குறியீடாக இருக்கிறது.
  • இவ்வாறு மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் ‘குறியீடு’ எனப்படுகிறது.

குறியீட்டியம் என்றால் என்ன

  • குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் (symbolism) எனப்படுகிறது.
  • குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.

குறியீட்டுக் கவிதையை வளர்த்தவர்கள்

  • பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்.
  • குறியீடு பற்றிய கொள்கை 19ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் அனைத்து மொழி இலக்கியங்களிலும் குறியீட்டைப் பயன்படுத்தும் வழக்கம், முன்பிருந்தே உள்ளது.

உள்ளுறை உவமம்

  • தமிழைப் பொறுத்தவரை, தொல்காப்பியர் காலம் முதல் இப்பயன்பாட்டை அறிய முடிகிறது.
  • சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக்குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், ‘உள்ளுறை உவமம்’ என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.
  • தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார்.
  • இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது.

குறியீட்டுக் கவிதையின் அடிப்படை

  • உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை.
  • இதுவே குறியீட்டின் அடிப்படையுமாகும்.

SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு

குறியீட்டு உத்தி

  • சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் இன்னொன்றைக் கூறிக் குறிப்பால் உணர்த்துவது குறியீடு.
  • இது புதிர் போல அமைந்து இன்பமளிக்கிறது; உணர்வளிக்கிறது; புரிதலை அளிக்கிறது. மறைத்துச் சொல்லவும், மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் குறியீடு பயன்படுகிறது.

குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணம்

  • குறியீடு எனும் இவ்வுத்தியின் அடிப்படை இலக்கணங்களாவன:
    1. சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்
    2. சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்
    3. இத்தொடர் பின் வாயிலாகக் குறியீட்டுப்பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

சங்க இலக்கியங்களில் குறியீடு

  • குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று.
  • சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இலக்கிய உத்தியும் இன்றைக்குக் குறியீடு என்று நாம் குறிப்பிடும் உத்தியும் ஒன்றுதான்.
  • சங்ககாலந்தொட்டே தமிழர்க்குக் குறியீட்டுச் சிந்தனை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது.
  • உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாதவை, மறைக்கவேண்டுபவை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.
  • குறியீடு என்பது அகம், புறம் என எல்லா வகைக் கவிதைகளிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்

 

SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு SAMACHEER KALVI 12TH TAMIL குறியீடு

Leave a Reply