SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம்

SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம்

SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம்

SAMACHEER KALVI 12TH TAMIL வ சுப மாணிக்கம்

  • தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப. மாணிக்கம்.
  • ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.
  • அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றிய போது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.

வ சுப மாணிக்கம்

  • திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
  • சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர்.
  • தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர்.
  • ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.

Leave a Reply