TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 22
TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOV 22 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக எம்என் பண்டாரி பதவியேற்றார்
- நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி 22 நவம்பர் 2021 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் / M N BHANDARI TAKES CHARGE AS ACTING CHIEF JUSTICE OF MADRAS HIGH COURT
- தற்போதைய நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட பிறகு அவர் நியமிக்கப்பட்டார்.
- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதன்முதலில் அகில இந்திய அளவில் வீட்டு வேலையாட்கள் கணக்கெடுப்பு துவங்கியது
- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், 22 நவம்பர் 2021 அன்று முதல் அகில இந்திய அளவில் வீட்டுப் பணியாளர்கள் கணக்கெடுப்பைத் தொடங்கி வைத்தார் / FIRST-EVER ALL ALL INDIA SURVEY ON DOMESTIC WORKERS
- இது சண்டிகரில் உள்ள தொழிலாளர் பணியகத்தால் நடத்தப்படுகிறது.
இந்தியாவிலேயே ‘சிறந்த செயல்திறன் கொண்ட கடல் மாவட்டம்’ விருது
- நாட்டின் சிறந்த கடல்சார் மாவட்டம் = பாலசோர். முதன்முறையாக ஒடிசா மாவட்டத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது / BEST MARINE DISTRICT IN THE COUNTRY.
- சிறந்த கடல்சார் மாநில விருது / BEST MARINE STATE = ஆந்திரப்பிரதேசம்
- சிறந்த உள்நாட்டு மாநில விருது / BEST INLAND STATE AWARD = தெலுங்கானா
- சிறந்த உள்நாட்டு மாவட்ட விருது / BEST INLAND DISTRICT = மத்தியப்பிரதேசம்
மேஜர் மகேஷ்குமார் பூரேவுக்கு சௌர்ய சக்ரா விருது
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 22 நவம்பர் 2021 அன்று மேஜர் மகேஷ்குமார் பூரேக்கு சௌர்ய சக்ரா வீர விருதை வழங்கினார் / SHAURYA CHAKRA AWARDED TO MAJOR MAHESHKUMAR BHURE
- 2018 இல் ஆறு உயர்மட்ட பயங்கரவாத தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்கினார்.
அபிநந்தன் வர்தமானுக்கு வீர் சக்ரா விருது
- இந்திய விமானப்படையின் ஏஸ் பைலட் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு 22 நவம்பர் 2021 அன்று நடந்த முதலீட்டு விழாவில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது / IAF GROUP CAPT ABHINANDAN VARTHAMAN AWARDED VIR CHAKRA
- 2019 இல் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு பிப்ரவரி 27 அன்று வான்வழிப் போரின் போது வர்தமான் பாகிஸ்தான் F-16 போர் விமானத்தை சுட்து வீழ்த்தி இருந்தார்
உகாண்டா பாரா பேட்மிண்டனில் இந்திய அணி 47 பதக்கங்களை வென்றது
- உகாண்டாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணி 47 பதக்கங்களை வென்றுள்ளது / INDIAN CONTINGENT WIN 47 MEDALS AT UGANDA PARABADMINTON
- 16 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது
கத்தார் எஃப்1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி
- கத்தார் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடிஸ் அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார் / MERCEDES’ LEWIS HAMILTON WINS INAUGURAL QATAR F1 GRAND PRIX
- ஹாமில்டன் தனது ஏழாவது சீசன் வெற்றியையும் ஒட்டுமொத்தமாக 102வது வெற்றியையும் பெற்றார்.
புனைகதைக்கான தேசிய புத்தக விருது 2021
- 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய புத்தக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
- இதன்படி, ஜேசன் மோட் தனது “ஹெல் ஆஃப் எ புக்” நாவலுக்காக புனைகதைக்கான 2021 தேசிய புத்தக விருதை வென்றார், இது ஒரு கறுப்பின எழுத்தாளரின் சாகசத்தைப் பற்றிய கதை ஆகும் / JASON MOTT WON 2021 NATIONAL BOOK AWARD FOR FICTION
ஐசிசியின் நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் நியமனம்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸை நியமித்துள்ளது / GEOFF ALLARDICE APPOINTED AS PERMANENT CEO OF ICC
- அவர் எட்டு மாதங்களுக்கும் மேலாக இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்ஃபினிட்டி ஃபோரம்
- பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 3 ஆம் தேதி ‘இன்ஃபினிட்டி ஃபோரத்தை’ தொடங்கி வைக்க உள்ளார். இது FinTech பற்றிய இரண்டு நாள் தலைமை மன்றமாகும் / PRIME MINISTER NARENDRA MODI WILL INAUGURATE THE ‘INFINITY FORUM’ ON 3RD DECEMBER.
- GIFT City மற்றும் Bloomberg உடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) இந்த நிகழ்வை நடத்துகிறது.
தமிழக முதல்வரின் ”நம்மை கக்கும் 48 திட்டம்”
- சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை அரசு மேற்கொள்ளும் வகையில், “நம்மைக் காக்கும் 48 – அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்
- இந்த புதிய திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்
தமிழக அரசின் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம்
- புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
- இத்திட்டத்தின் பெயர் = “நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்”
- இத்திட்டத்தின் படி 72 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 2 வயது தமிழக சிறுவன்
- சென்னையை சேர்ந்த 2 வயது ரித்தின் கலிகோட் என்னும் சிறுவன், இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்
- இச்சிறுவன் 1 முதல் 30 வரையிலான எங்கள், 10 வகை நிறங்கள், 20 நாடுகளின் தேசிய கொடிகள், 9 கிரகங்கள், 20 வன விலங்குகள், 10 வீட்டு விலங்குகள் போன்றவற்றை துல்லியமாக கூறி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்.
பிரபல எழுத்தாளர் கோவி. மணிசேகரன் காலமானார்
- சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கோவி.மணிசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்
- “யாகசாலை” என்னும் இவரின் சமூக நாவலுக்காக உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது
- இவர் 1992 ஆம் ஆண்டு எழுதிய “குற்றாலக் குறவஞ்சி” என்னும் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது
தமிழகத்தில் முதல் முறையாக, கருத்தடை செய்யும் ஆண்களுக்கு “தங்கத் தந்தை” விருது
- தமிழகத்திலேயே முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் கருத்தடை செய்யு, ஆண்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகையு, “தங்கத் தந்தை” விருதும் வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்
2025 ஆசிய யூத் பாரா கேம்ஸ் தாஷ்கண்டால் நடத்தப்படும்
- ஆசிய யூத் பாரா கேம்ஸ் 2025ன் (2025 ASIAN YOUTH PARA GAMES) 5வது பதிப்பு உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெறவுள்ளது.
- முதல் முறையாக ‘ஆசிய இளைஞர் விளையாட்டு 2025’ (ASIAN YOUTH GAMES 2025) மற்றும் ‘ஏசியன் யூத் பாரா கேம்ஸ் 2025’ (ASIAN YOUTH PARA GAMES 2025) ஆகியவை ஒரே நகரத்திலும் அதே மைதானங்களிலும் நடத்தப்படும்.
40-வது எம்.எஸ்.எம்.ஈ வர்த்த கண்காட்சி புதுதில்லியில் நடைபெற்றது
- மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சர், 40-வது இந்திய சர்வதேச எம்.எஸ்.எம்.ஈ வர்த்தக கண்காட்சியை டெல்லியில் துவக்கி வைத்தார்
- இக்கண்காட்சியில் ஆயுஸ், செராமிக்ஸ், ரசாயனம், பின்னல் வேலை, உணவு, காலனி, கைவினைப் பொருட்கள் போன்ற 20 துறைகளின் பொருட்கள் இடம்பெற்றன.
ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டதுஇது ப்ராஜெட் 15பி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் கப்பலாகும்.
- இக்கப்பல் 7400 தன் எடை கொண்டதாகும். இதில் அதிநவீன ரேடார் வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.
உலகின் முதல் மின்சார தானியங்கி கார்கோ கப்பல்
- நார்வே நாட்டின் பிரபல உர தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது
- இக்கப்பலின் பெயர் = யாரா பிர்க்லேண்ட்
- முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்த சரக்கு கப்பலால் ஆண்டுக்கு 1000 தன் கார்பன் அளவை குறைக்கும்
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 21
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 20
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 19
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 18
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 17
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 16
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 15
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 14
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 13
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 12
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 11
- TNPSC CURRENT AFFAIRS DAILY IN TAMIL NOVEMBER 10