TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸ்

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15

  • பாதுகாப்பு ஆய்வுகளுக்கான கல்வி நிறுவனத்தின் பெயரை, மறைந்த முன்னாள் மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது
  • இது மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸ் (MP-IDSA – MANOHAR PARRIKAR INSTITUTE FOR DEFENCE STUDIES AND ANALYSES) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

உலகின் முதல் இலாப நோக்கற்ற நகரம் சவுதியில் திறப்பு

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15

  • சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 14 நவம்பர் 2021 அன்று உலகின் முதல் இலாப நோக்கற்ற நகரத்தை நிறுவுவதாக அறிவித்தார் / SAUDI ARABIA ANNOUNCES LAUNCH OF FIRST NON PROFIT CITY IN THE WORLD
  • இந்த நகரம் உலகளவில் இலாப நோக்கற்ற துறையின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாகவும், இளைஞர்கள் மற்றும் தன்னார்வ குழுக்களுக்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் ஒரு காப்பகமாகவும் இருக்கும்.
  • இது இளவரசர் முகமது பின் சல்மான் லாப நோக்கமற்ற நகரம் என்று அழைக்கப்படும் / IT WILL BE CALLED PRINCE MOHAMMED BIN SALMAN NONPROFIT CITY.

WePOWER இந்தியா பார்ட்னர்ஷிப் ஃபோரம்

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15

  • உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இணைந்து இந்தியாவில் “WePOWER இந்தியா பார்ட்னர்ஷிப் ஃபோரம்” என்ற கூட்டமைப்பை உருவாக்க உள்ளன / WORLD BANK AND ADB LAUNCHES ‘WEPOWER INDIA PARTNERSHIP FORUM”
  • இந்தியாவில் தெற்காசியப் பெண்களுக்கான ஆற்றல் துறை நிபுணத்துவ வலையமைப்பை (WePOWER) அதிகரிக்க இது தொடங்கப்பட்டது. இதில் 168 முக்கிய எரிசக்தி துறை பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா மற்றும் வங்கதேச ராணுவம் இணைந்து சைக்கிள் பேரணியை நடத்தியது

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15

  • கொல்கத்தாவின் ஜெச்சோர் பகுதியில் இந்தியா மற்றும் வங்கதேச ராணுவத்தினர் இணைந்து நவம்பர் 15 முதல் 24 வரை சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர் / A JOINT CYCLING RALLY OF INDIAN AND BANGLADESHI ARMIES IS BEING HELD BETWEEN NOVEMBER 15- 24, 2021 COVERING JESSORE TO KOLKATA.
  • பங்களாதேஷ் விடுதலையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையம் – ராணி கமலாபதி ரயில் நிலையம்

  • இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமான புதிதாக புதுப்பிக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15, 2021 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் / PRIME MINISTER NARENDRA MODI DEDICATED THE NEWLY REVAMPED RANI KAMALAPATI RAILWAY STATION, INDIA’S FIRST WORLD CLASS RAILWAY STATION TO THE NATION ON NOVEMBER 15, 2021.
  • ராணி கம்லாபதி போபாலின் கடைசி இந்து ராணி மற்றும் கோண்ட் சமூகத்தின் பெருமை.
  • இந்த நிலையம் முன்பு ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் என்று அழைக்கப்பட்டது.

பத்ம விபூஷன் விருது பெற்ற வரலாற்றாசிரியர் பாபாசாகேப் புரந்தரே காலமானார்

  • பாபாசாகேப் புரந்தரே என்று அழைக்கப்படும் வரலாற்று ஆசிரியரும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான பல்வந்த் மொரேஷ்வர் புரந்தர் காலமானார் / HISTORIAN AND PADMA VIBHUSHAN AWARDEE BALWANT MORESHWAR PURANDARE, POPULARLY KNOWN AS BABASAHEB PURANDARE, PASSED AWAY
  • இவர் “ஷிவ் ஷாகிர் (சிவாஜியின் கவிஞர்)” என அழைக்கப்படுகிறார்
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் மற்றும் 2015 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நியூசிலாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15

  • 14 நவம்பர் 2021 அன்று ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் இருபது 20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது / AUSTRALIA BEATS NEW ZEALAND TO WIN T20 WORLD CUP
  • மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்தார்,
  • டேவிட் வார்னர் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக 2021 டி20 உலகக் கோப்பைக்கான ‘பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்’ விருது பெற்றார்.

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 146வது பிறந்தநாள்

  • 15 நவம்பர் 2021 அன்று பிர்சா முண்டாவின் 146வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது / 146TH BIRTH ANNIVERSARY OF TRIBAL LEADER BIRSA MUNDA
  • அவர் முண்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர், மதத் தலைவர் மற்றும் நாட்டுப்புற ஹீரோ. இவர் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ராஞ்சியில் பிறந்தார்.
  • 2021 ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாளை “ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ்” (பழங்குடியினரின் கவுரவ தினம்) என்று கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

லூயிஸ் ஹாமில்டன் பிரேசில் கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்

  • நவம்பர் 14, 2021 அன்று நடந்த பிரேசிலிய கிராண்ட் பிரிக்ஸை மெர்சிடிஸ் டிரைவர் லூயிஸ் ஹாமில்டன் வென்றார் / LEWIS HAMILTON WINS BRAZILIAN GRAND PRIX
  • ஏழு முறை உலக சாம்பியனான ஹாமில்டன், 10வது இடத்தில் இருந்து தொடங்கினாலும் வெர்ஸ்டாப்பனை வீழ்த்தினார்.

நேபாள ராணுவத் தளபதி பிரபு ராம் சர்மாவுக்கு இந்திய ராணுவத்தின் கெளரவப் பதவி

  • ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பிரபு ராம் ஷர்மாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் ‘இந்திய ராணுவ ஜெனரல்’ என்ற கெளரவ பட்டம் வழங்கப்பட்டது / PRESIDENT RAM NATH KOVIND CONFERS HONORARY RANK OF GENERAL OF INDIAN ARMY ON NEPAL ARMY CHIEF PRABHU RAM SHARMA
  • இது 1950 இல் தொடங்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி ஆகும்

இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்

  • தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையிலுள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலக வளாகத்தில் நாட்டின் முதல் உணவு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது
  • இந்த அருங்காட்சியத்தை இந்திய உணவுக் கழகமும், பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து உருவாக்கி உள்ளன.

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு

  • சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
  • தற்போது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக உள்ளது.இந்நிலையில் இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீடிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
  • இதன்படி, தற்போது பதவியில் உள்ள இயக்குநர்கள் தங்களது பதவிக்காலம் முடிந்த பிறகு, மேலும் 3 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும். இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால், உடனடியாக அமலுக்கு வந்தது.

வணிகர் பங்குத் திட்டத்தை அறிமுகம் செய்த BharatPe

  • BharatPe தனது வணிக கூட்டாளர்களுக்காக உலகின் முதல் வணிக பங்குதாரர் திட்டத்தை (MSP – MERCHANT SHAREHOLDING PROGRAM) அறிமுகப்படுத்தியது.
  • இதன் கீழ் நிறுவனம் தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு BharatPe இன் ஈக்விட்டி பங்குகளை வாங்குவதற்கும் ஒரு பங்குதாரராக ஆவதற்கும் வாய்ப்பளிக்கிறது

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக VVS லக்ஷ்மன் பொறுப்பேற்கிறார்

  • இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியின் அடுத்த புதிய தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • டிசம்பர் 2021க்குள் லக்ஷ்மண் இந்தப் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply