TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15
TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 15 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸ்
- பாதுகாப்பு ஆய்வுகளுக்கான கல்வி நிறுவனத்தின் பெயரை, மறைந்த முன்னாள் மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது
- இது மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸ் (MP-IDSA – MANOHAR PARRIKAR INSTITUTE FOR DEFENCE STUDIES AND ANALYSES) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
உலகின் முதல் இலாப நோக்கற்ற நகரம் சவுதியில் திறப்பு
- சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 14 நவம்பர் 2021 அன்று உலகின் முதல் இலாப நோக்கற்ற நகரத்தை நிறுவுவதாக அறிவித்தார் / SAUDI ARABIA ANNOUNCES LAUNCH OF FIRST NON PROFIT CITY IN THE WORLD
- இந்த நகரம் உலகளவில் இலாப நோக்கற்ற துறையின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாகவும், இளைஞர்கள் மற்றும் தன்னார்வ குழுக்களுக்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கும் ஒரு காப்பகமாகவும் இருக்கும்.
- இது இளவரசர் முகமது பின் சல்மான் லாப நோக்கமற்ற நகரம் என்று அழைக்கப்படும் / IT WILL BE CALLED PRINCE MOHAMMED BIN SALMAN NONPROFIT CITY.
WePOWER இந்தியா பார்ட்னர்ஷிப் ஃபோரம்
- உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இணைந்து இந்தியாவில் “WePOWER இந்தியா பார்ட்னர்ஷிப் ஃபோரம்” என்ற கூட்டமைப்பை உருவாக்க உள்ளன / WORLD BANK AND ADB LAUNCHES ‘WEPOWER INDIA PARTNERSHIP FORUM”
- இந்தியாவில் தெற்காசியப் பெண்களுக்கான ஆற்றல் துறை நிபுணத்துவ வலையமைப்பை (WePOWER) அதிகரிக்க இது தொடங்கப்பட்டது. இதில் 168 முக்கிய எரிசக்தி துறை பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா மற்றும் வங்கதேச ராணுவம் இணைந்து சைக்கிள் பேரணியை நடத்தியது
- கொல்கத்தாவின் ஜெச்சோர் பகுதியில் இந்தியா மற்றும் வங்கதேச ராணுவத்தினர் இணைந்து நவம்பர் 15 முதல் 24 வரை சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர் / A JOINT CYCLING RALLY OF INDIAN AND BANGLADESHI ARMIES IS BEING HELD BETWEEN NOVEMBER 15- 24, 2021 COVERING JESSORE TO KOLKATA.
- பங்களாதேஷ் விடுதலையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையம் – ராணி கமலாபதி ரயில் நிலையம்
- இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமான புதிதாக புதுப்பிக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15, 2021 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் / PRIME MINISTER NARENDRA MODI DEDICATED THE NEWLY REVAMPED RANI KAMALAPATI RAILWAY STATION, INDIA’S FIRST WORLD CLASS RAILWAY STATION TO THE NATION ON NOVEMBER 15, 2021.
- ராணி கம்லாபதி போபாலின் கடைசி இந்து ராணி மற்றும் கோண்ட் சமூகத்தின் பெருமை.
- இந்த நிலையம் முன்பு ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் என்று அழைக்கப்பட்டது.
பத்ம விபூஷன் விருது பெற்ற வரலாற்றாசிரியர் பாபாசாகேப் புரந்தரே காலமானார்
- பாபாசாகேப் புரந்தரே என்று அழைக்கப்படும் வரலாற்று ஆசிரியரும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான பல்வந்த் மொரேஷ்வர் புரந்தர் காலமானார் / HISTORIAN AND PADMA VIBHUSHAN AWARDEE BALWANT MORESHWAR PURANDARE, POPULARLY KNOWN AS BABASAHEB PURANDARE, PASSED AWAY
- இவர் “ஷிவ் ஷாகிர் (சிவாஜியின் கவிஞர்)” என அழைக்கப்படுகிறார்
- 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் மற்றும் 2015 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர பூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
நியூசிலாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
- 14 நவம்பர் 2021 அன்று ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் இருபது 20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது / AUSTRALIA BEATS NEW ZEALAND TO WIN T20 WORLD CUP
- மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்தார்,
- டேவிட் வார்னர் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக 2021 டி20 உலகக் கோப்பைக்கான ‘பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்’ விருது பெற்றார்.
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 146வது பிறந்தநாள்
- 15 நவம்பர் 2021 அன்று பிர்சா முண்டாவின் 146வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது / 146TH BIRTH ANNIVERSARY OF TRIBAL LEADER BIRSA MUNDA
- அவர் முண்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர், மதத் தலைவர் மற்றும் நாட்டுப்புற ஹீரோ. இவர் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ராஞ்சியில் பிறந்தார்.
- 2021 ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்தநாளை “ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ்” (பழங்குடியினரின் கவுரவ தினம்) என்று கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.
லூயிஸ் ஹாமில்டன் பிரேசில் கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்
- நவம்பர் 14, 2021 அன்று நடந்த பிரேசிலிய கிராண்ட் பிரிக்ஸை மெர்சிடிஸ் டிரைவர் லூயிஸ் ஹாமில்டன் வென்றார் / LEWIS HAMILTON WINS BRAZILIAN GRAND PRIX
- ஏழு முறை உலக சாம்பியனான ஹாமில்டன், 10வது இடத்தில் இருந்து தொடங்கினாலும் வெர்ஸ்டாப்பனை வீழ்த்தினார்.
நேபாள ராணுவத் தளபதி பிரபு ராம் சர்மாவுக்கு இந்திய ராணுவத்தின் கெளரவப் பதவி
- ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பிரபு ராம் ஷர்மாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் ‘இந்திய ராணுவ ஜெனரல்’ என்ற கெளரவ பட்டம் வழங்கப்பட்டது / PRESIDENT RAM NATH KOVIND CONFERS HONORARY RANK OF GENERAL OF INDIAN ARMY ON NEPAL ARMY CHIEF PRABHU RAM SHARMA
- இது 1950 இல் தொடங்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி ஆகும்
இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்
- தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையிலுள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலக வளாகத்தில் நாட்டின் முதல் உணவு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது
- இந்த அருங்காட்சியத்தை இந்திய உணவுக் கழகமும், பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து உருவாக்கி உள்ளன.
சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
- சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
- தற்போது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக உள்ளது.இந்நிலையில் இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீடிக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
- இதன்படி, தற்போது பதவியில் உள்ள இயக்குநர்கள் தங்களது பதவிக்காலம் முடிந்த பிறகு, மேலும் 3 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும். இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால், உடனடியாக அமலுக்கு வந்தது.
வணிகர் பங்குத் திட்டத்தை அறிமுகம் செய்த BharatPe
- BharatPe தனது வணிக கூட்டாளர்களுக்காக உலகின் முதல் வணிக பங்குதாரர் திட்டத்தை (MSP – MERCHANT SHAREHOLDING PROGRAM) அறிமுகப்படுத்தியது.
- இதன் கீழ் நிறுவனம் தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு BharatPe இன் ஈக்விட்டி பங்குகளை வாங்குவதற்கும் ஒரு பங்குதாரராக ஆவதற்கும் வாய்ப்பளிக்கிறது
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக VVS லக்ஷ்மன் பொறுப்பேற்கிறார்
- இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியின் அடுத்த புதிய தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- டிசம்பர் 2021க்குள் லக்ஷ்மண் இந்தப் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 14
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 13
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 12
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 11
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 10
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 9
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 8
- TNPSC CURRENT AFFAIRS TAMIL NOV 7