TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா சப்பல், லாஹவுலின் பின்னப்பட்ட காலுறைகள், கையுறைகள் புவிசார் குறியீட்டை பெற்றன

  • சம்பா சப்பல், லாஹவுலின் பின்னப்பட்ட காலுறைகள் மற்றும் கையுறைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுகள் பதிவாளரிடமிருந்து புவியியல் குறியீடுகள் (ஜிஐ) வழங்கப்பட்டுள்ளது / CHAMBA CHAPPAL, LAHAUL’S KNITTED SOCKS, GLOVES GET GI TAG
  • இவை புவிசார் குறியீட்டு சட்டம் 1999 படி பாதுகாக்கப்படும்

மும்பை-கர்நாடகா பகுதி ‘கிட்டூர் கர்நாடகா’ என பெயர் மாற்றம்

  • மும்பை-கர்நாடகா பகுதி ‘கிட்டூர் கர்நாடகா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது / MUMBAI-KARNATAKA REGION RENAMED AS ‘KITTUR KARNATAKA’
  • மும்பை-கர்நாடகா பகுதி, முன்பு பம்பாய் பிரசிடென்சியின் கீழ் இருந்தது, 1956 இல் கர்நாடகாவின் ஒரு பகுதியாக மாறியது.
  • 19 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர் கித்தூர் ராணி சென்னம்மாவின் நினைவாக இப்பகுதிக்கு பெயரிடப்பட்டது.
  • ஜான்சி ராணி லட்சுமிபாய்க்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே கிட்டூர் ராணி சென்னம்மா ஆங்கிலேயர்களிடம் விடுதலைக்காகப் போராடினார்.

விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்மணி வாங் யாப்பிங்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

  • விண்வெளி வீரர் வாங் யாப்பிங் விண்வெளியில் நடந்த முதல் சீன பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார் / ASTRONAUT WANG YAPING HAS BECOME THE FIRST CHINESE WOMAN TO WALK IN SPACE.
  • சீன விமானப்படை பெண் விமானியான வாங் யாபிங், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிக்காக விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார்
  • சீனா கட்டமைத்து வரும் “தியாங்காங்” என்ற சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு சென்று வந்தார்
  • இவர் சென்ற விண்கலம் = சென்ஷோ-13 ஆகும்.

சமையல் கலைஞர் செப் தாமுவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

  • லண்டனில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனிகள் விருது நிகழ்ச்சியில், தமிழகத்தின் பிரபல சமையல் கலைஞரான செப் தாமு எனப்படும் தாமோதரன் அவர்களுக்கு “சமையல் லெஜண்ட் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டது / CHENNAI’S CHEF DAMU GETS A LIFETIME ACHIEVEMENT AWARD IN LONDON
  • செப் தாமு தற்போது தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவர் ஆவார்

உலக நகர்ப்புற தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

  • உலக நகர்ப்புற தினம் (WORLD URBANISATION DAY OR WORLD TOWN PLANNING DAY) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உலக நகர திட்டமிடல் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • வாழக்கூடிய சமூகங்களை உருவாக்குவதில் திட்டமிடுதலின் பங்கை இது ஊக்குவிக்கிறது.
  • இந்த நாள் 1949 ஆம் ஆண்டு ப்யூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் மறைந்த பேராசிரியர் கார்லோஸ் மரியா டெல்லா பாலோராவால் நிறுவப்பட்டது.
  • இது நகரம் மற்றும் பிராந்திய திட்டமிடுபவர்களின் சர்வதேச சங்கத்தால் (ISOCARP – INTERNATIONAL SOCIETY OF CITY AND REGIONAL PLANNERS) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலையான விவசாயம் தொடர்பான COP26 செயல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

  • நிலையான விவசாயம் தொடர்பான COP26 செயல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த செயல்திட்டத்தில் இதுவரை 27 நாடுகள் கையெழுத்து இட்டுள்ளன / INDIA SIGNS UP TO COP26 ACTION AGENDA ON SUSTAINABLE AGRICULTURE
  • பருவநிலை மாற்ற மாநாடான COP26 மாநாட்டில், நிலையான விவசாயத்திற்கு மாறுவதற்கான நிலையான விவசாயக் கொள்கை நடவடிக்கை நிகழ்ச்சி நிரல் மற்றும் விவசாயத்தில் புதுமைக்கான உலகளாவிய நடவடிக்கை நிகழ்ச்சி நிரல் பற்றிய செயல்திட்டம் செயல்படுத்த உலக நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன

மெக்சிகோ சிட்டி கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை வென்ற மேக்ஸ் வெர்ஸ்டப்பான்

  • மெக்சிகோவில் நடைபெற்ற மெக்சிகோ சிடி கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியில் மேக்ஸ் வெர்ஸ்டப்பான் வெற்றி பெற்றார் / MAX VERSTAPPEN WINS THE MEXICO CITY GRAND PRIX ON 7 NOVEMBER 2021
  • இந்த ஆண்டு அவர் பெரும் 9-வது வெற்றி இதுவாகும்
  • 7 முறை உலகச் சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் 2-வது இடத்தை பிடித்தார்

அதிவிரைவாக கிராண்ட் மாஸ்டர் பட்டதை வென்ற முதல் இந்தியர்

  • செர்பியாவின் அரன்ஜெலோவாக்கில் நடைபெற்ற கிராண்ட்மாஸ்டர் ஆஸ்க் 3 ரவுண்ட்-ராபின் போட்டியில் 6.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் சங்கல்ப் குப்தா இந்தியாவின் 71வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் / SANKALP GUPTA HAS BECOME INDIA’S 71ST GRANDMASTER BY SCORING 5 POINTS AND FINISHING SECOND IN THE GRANDMASTER ASK 3 ROUND-ROBIN EVENT IN ARANDJELOVAC, SERBIA.
  • வெறும் 24 நாட்களில் மூன்று போட்டிகளில் விளையாடியதன் மூலம் இந்த சாதனயை படைத்துள்ளார். இதன் மூலம் குறுகிய நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெரும் முதல் இந்தியர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்
  • 71 -வது கிராண்ட் மாஸ்டர் = சங்கல்ப் குப்தா (நாக்பூர்)
  • 70 -வது கிராண்ட் மாஸ்டர் = ராஜா ரித்விக் (தெலுங்கானா)
  • 69 -வது கிராண்ட் மாஸ்டர் = ஹர்ஷித் ராஜா (பூனே)
  • 68 -வது கிராண்ட் மாஸ்டர் = அர்ஜுன் கல்யான் (தமிழ்நாடு)
  • 67 -வது கிராண்ட் மாஸ்டர் = லியோன் (கோவா)
  • 66 -வது கிராண்ட் மாஸ்டர் = ஜி ஆகாஷ் (தமிழ்நாடு)
  • இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் = விஸ்வநாதன் ஆனந்த் (தமிழ்நாடு)

உலக கதிரியக்க தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

  • நவம்பர் 8 ஆண்டுதோறும் உலக கதிரியக்க தினம் அல்லது சர்வதேச கதிரியக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது / NOVEMBER 8 IS OBSERVED ANNUALLY AS WORLD RADIOGRAPHY DAY OR INTERNATIONAL DAY OF RADIOLOGY.
  • இது நவம்பர் 8, 1895 இல் ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென் என்பவரால் எக்ஸ்ரேடியேஷன் அல்லது எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்ததை நினைவுகூருகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு = INTERVENTIONAL RADIOLOGY – ACTIVE CARE FOR THE PATIENT
  • 1901 ஆம் ஆண்டு இந்த சாதனைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசின் தொடக்க வெற்றியாளரானார்.

ஐஎஸ்எஸ்எப் பிரசிடென்ட் கோப்பை போட்டியில் சவுரப் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்

  • நவம்பர் 6, 2021 அன்று போலந்தின் வ்ரோக்லாவில் நடந்த ஜனாதிபதி கோப்பையின் தொடக்க பதிப்பில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர் / SAURABH CHAUDHARY WINS SILVER IN ISSF PRESIDENT’S CUP
  • ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு ISSF பிரசிடெண்ட்ஸ் கோப்பை ஆகும்.

தேசிய அனல்மின் நிலையத்தின் 47வது உதய தினம்

  • என்.டி.பி.சி எனப்படும் தேசிய அனல் மின் நிலையத்தின் 47வது உதய தினம் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்பட்டது / THE 47TH RAISING DAY OF NTPC (NATIONAL THERMAL POWER CORPORATION) WAS OBSERVED ON 7 NOVEMBER
  • NTPC லிமிடெட் என்பது 1975 இல் நிறுவப்பட்ட ஒரு இந்திய சட்டப்பூர்வ நிறுவனமாகும்.
  • இது மின்சார உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

37வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற நோவக் ஜோகோவிச்

  • உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் 7 நவம்பர் 2021 அன்று ஆறாவது பாரிஸ் பட்டத்தையும் 37வது மாஸ்டர்ஸ் கிரீடத்தையும் வென்றார் / WORLD NUMBER ONE NOVAK DJOKOVIC WON A SIXTH PARIS TITLE AND RECORD 37TH MASTERS CROWN ON 7 NOVEMBER
  • அவர் இறுதிப் போட்டியில் 2020 சாம்பியனான டேனியல் மெட்வெடேவை 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

பில்லி ஜீன் கிங் கோப்பையை வென்ற ரஷ்யா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 08

  • நவம்பர் 6, 2021 அன்று சுவிட்சர்லாந்தின் டாரியா கசட்கினா மற்றும் லியுட்மிலா சாம்சோனோவா ஆகியோரை தோற்கடித்து ரஷ்யா தனது ஐந்தாவது பில்லி ஜீன் கிங் கோப்பை பட்டத்தை வென்றது / RUSSIA BEAT SWITZERLAND TO WIN BILLIE JEAN KING CUP TITLE

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்

  • டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றார் / RASHID KHAN BECOMES FASTEST BOWLER TO TAKE 400 WICKETS IN T20 CRICKET
  • ஆப்கானிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான், நவம்பர் 7, 21 அன்று நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது போட்டி டி20 கிரிக்கெட்டில் தனது 400வது விக்கெட்டை எடுத்தார்.
  • இவரின் 400வது விக்கெட் = நியுசிலாந்தின் மார்டின் கப்டில்
  • டுவைன் பிராவோ (553), சுனில் நரைன் (425), இம்ரான் தாஹிர் (420) ஆகியோருக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 4வது பந்துவீச்சாளர் இவர் ஆவார்

சீனாவில் இருந்து வெளியேறும் யாஹூ நிறுவனம்

  • சீனாவில் கொண்டுவரப்பட புதிய தொழில்நுட்ப சட்டங்களால் பாதிக்கபட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறிய நிலையில், சீனாவில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த யாஹூ நிறுவனம் சீனாவில் தனது சேவையை நிறுத்த உள்ளது
  • சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்கடன் நிறுவனம் தனது சேவையை சீனாவில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் முதல் முறையாக மூங்கில் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப் உருவாக்கும் திரிபுரா

  • திரிபுரா மாநில அரசின் “மூங்கில் மற்றும் கரும்பு மேம்பாட்டு நிறுவனம்” (BAMBOO AND CANE DEVELOPMENT INSTITUTE (BCDI)) வடகிழக்கு தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ரீச் (NECTAR – NORTH EAST CENTRE OF TECHNOLOGY APPLICATION AND REACH) அமைப்புடன் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக மூங்கிலால் ஆனா கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டம்ப்களை உருவாக்கி உள்ளன / TRIPURA DEVELOPS COUNTRY’S ‘FIRST-EVER’ BAMBOO MADE CRICKET BAT, STUMPS
  • இந்த மட்டைகள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பயன்படுத்தப்படலாம். கிரிக்கெட் மட்டைகளின் உற்பத்திக்கு மிகவும் விருப்பமான மரம் வில்லோ ஆகும்

 

Leave a Reply