TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 29/08/2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 29/08/2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
இந்தியாவின் முதல் ஹேக்கத்தான் “மந்தன் 2021”
- அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுடன் (ஏஐசிடிஇ) போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (பிபிஆர் & டி) இணைந்து ‘மந்தன் 2021’ என்ற பெயரில், இந்தியாவில் முதல் ஹேக்கதான் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன
- இந்த ஹேக்கத்தானின் அடிப்படை நோக்கம், நாட்டின் உளவுத்துறை முகமைகள் எதிர்கொள்ளும் 21 ஆம் நூற்றாண்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான கருத்துகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை கண்டறிந்து இந்த அமலாக்க நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.
இந்தியாவின் முதல் குவாண்டம் கணினி சிமுலேட்டர் கருவித்தொகுப்பு – Qsim
- இந்தியாவின் முதல் ‘குவாண்டம் கணினி சிமுலேட்டர்’ – Qsim, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமான “மெய்டி” சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- Quantum Computer Simulator – QSim
- இது இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட ஒரு கருவித்தொகுப்பாகும். குவாண்டம் கணினிகளின் உதவியுடன் நிரலாக்கத்தின் நடைமுறை அம்சங்களைக் கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் இது ஒரு முக்கிய கருவியாகும்.
2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம்
- ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் பெற்று தந்தார்
- பெண்கள் ஒற்றையர் வகுப்பு 4 இல் அவர் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
- சீனாவின் ஜாவ் யிங் 11-7, 11-5, 11-6 என்ற செட் கணக்கில் பவினாவை வீழ்த்தி, தங்கம் வென்றார்
27 வது UPU காங்கிரஸில் நிர்வாக கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு
- அபிட்ஜானில் நடைபெறும் 27 வது யுனிவர்சல் தபால் யூனியன் (UPU) காங்கிரஸில் நிர்வாக கவுன்சிலுக்கு (CA) இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தெற்காசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து CA தேர்தலில் 134 வாக்குகளுடன் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்றது.
- அபிட்ஜானில் நடந்த 27 வது UPU காங்கிரஸில் 156 நாடுகளில் 106 வாக்குகளுடன் இந்தியா தபால் செயல்பாட்டு கவுன்சிலுக்கு (POC) தேர்ந்தெடுக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் நேற்று இந்திய நிர்வாக கவுன்சிலுக்கும், யுனிவர்சல் தபால் யூனியனின் தபால் செயல்பாட்டு கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது பற்றி அறிவித்தார்
20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்சிப்
- 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்சிப் போட்டிகள், கென்யா நாட்டின் நைரோபி நகரில் நடைபெற்று முடிந்தது
- இதில் இந்தியா 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 21-வது இடத்தை பிடித்தது
- இந்தியாவின் ஷைலி சிங், நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், 10000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமித்குமார் வெள்ளிப் பதக்கமும், 4X400 மீட்டர் கலப்பு ஓட்டப் பந்தயத்தில் வெண்கலமும் இந்தியா வென்றது
- இப்பட்டியலில் 8 தங்கம் உட்பட 16 பதக்கங்களை வென்று கென்யா முதல் இடத்தை பிடித்தது
நீரஜ் சோப்ரா மைதானம்
- டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதற்காக சுபேதார் நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் விதமாக மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள ராணுவ மைதானத்திற்கு “நீரஜ் சோப்ரா மைதானம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- ஒலிம்பிக் இந்திய வரலாற்றில் தடைகள் பிரிவில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை பெற்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா ஆவார்
தேசிய தொலைநிலை உணர்வு தினம்
- இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தேசிய தொலைநிலை உணர்வு தினம் ஆகஸ்ட் 12 (National Remote Sensing Day (August 12)) கொண்டாடப்படுகிறது.
- இந்திய ரிமோட் சென்சிங் சொசைட்டி (ஐஎஸ்ஆர்எஸ்), ஏறத்தாழ 5000 ஆயுள் உறுப்பினர்களைக் கொண்டு, நாடு மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ரிமோட் சென்சிங்கை பிரபலப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.
மின்சாரம் தயாரிக்கும் கிராமத்துக்கு பிரதமர் பாராட்டு
- மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து, மின் தேவையை தாங்களே பூர்த்தி செய்துக் கொள்வதை பாராட்டி உள்ளார்
- சிவகங்கை மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் ரூர்பன் திட்டத்தில் மூலம், காஞ்சிரங்காவில் 66 லட்ச ரூபாய் மதிப்பில், உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 28, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 27, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 26, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 25, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 24, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2021