TNPSC CURRENT AFFAIRS – 20 AUGUST 2021

TNPSC CURRENT AFFAIRS – 20 AUGUST 2021

       TNPSC CURRENT AFFAIRS – 20 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

உலகளாவிய கிரிப்டோ குறியீடு

TNPSC CURRENT AFFAIRS

  • உலகளாவிய கிரிப்டோ தத்தெடுப்பு குறியீட்டில், இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில வியட்நாம் உள்ளது. இப்பட்டியலில் முதல் 5 இடங்களில் ஆசிய நாடுகளே உள்ளன.
  • பிளாக்செயின் தரவு தளமான சைனாலிசிஸின் படி, உலகளவில் கிரிப்டோ தத்தெடுப்பதில் வியட்நாமிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்துள்ளது
  • அறிக்கையின்படி, உலகளாவிய கிரிப்டோ தத்தெடுப்பு ஜூன் 2020 மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் 880% அதிகரித்துள்ளது.

தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தினம்

TNPSC CURRENT AFFAIRS

  • இந்தியாவில் தேசிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தினம் (அல்லது) “அக்ஷய் ஊர்ஜா திவாஸ்” தினம் (Akshay Urja Diwas (Renewable Energy Day)), ஆண்டு தோறும் ஆகஸ்ட் 2௦ ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சி மற்றும் தத்தெடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 அன்று அக்ஷய் ஊர்ஜா திவாஸ் (புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தினம்) கடைபிடிக்கப்படுகிறது.

உலக கொசுக்கள் தினம்

TNPSC CURRENT AFFAIRS

  • உலகம் முழுவதும் ஆகஸ்ட் 2௦ ஆம் தேதி உலக கொசுக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • மலேரியா ஏற்பட காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 அன்று உலக கொசு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் உலக கொசு தினத்தன்று, கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், 2021 உலக கொசு தினத்தின் கருப்பொருள் “பூஜ்ஜிய மலேரியா இலக்கை அடைதல்” ஆகும்.

மத நல்லிணக்க தினம்

TNPSC CURRENT AFFAIRS

  • மத நல்லிணக்க தினம் எனப்படும் “சத்பவான திவாஸ்” தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 2௦ ஆம் தேதி இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது
  • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 அன்று இந்தியா சத்பவனா திவாஸை அனுசரிக்கிறது.
  • இந்த ஆண்டு ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது

நாசாவின் எம்எஸ்ஐ பெல்லோஷிப் மெய்நிகர் பட்டியலில் இந்திய சிறுமி

TNPSC CURRENT AFFAIRS

  • நாசாவின் எம்எஸ்ஐ பெல்லோஷிப் மெய்நிகர் பட்டியலில் இந்திய சிறுமியான 14 வயதான தீக்ஷா சிண்டே தேர்வாகி உள்ளார்
  • மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 14 வயது இந்திய பெண், தீக்ஷா ஷிண்டே நாசாவின் எம்எஸ்ஐ பெல்லோஷிப் விர்ச்சுவல் பேனலில் பேனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 முயற்சிகளுக்குப் பிறகு நாசாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டை எழுதியதாக திக்ஷா ஷிண்டே தெரிவித்துள்ளார்

2௦ வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்சிப்

TNPSC CURRENT AFFAIRS

  • 2௦ வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்சிப் போட்டிகள் கென்யாவின் நைரோபி நகரில் துவங்கியது
  • இந்திய அணியில் ஈட்டி எறிதல் வீரர், குன்வர் அஜய் ராஜ் சிங் மற்றும் நீளம் தாண்டுதல் வீரர் ஷைலி சிங் ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளனர்

இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம்

TNPSC CURRENT AFFAIRS

  • இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் வருகின்ற 2௦22 ஆம் ஆண்டிற்குள், ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா பகுதியில் கட்டி முடிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது
  • “பிர்சா முண்டா சர்வதேச ஹக்கி மைதானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இம்மைதானம், 2௦௦௦௦ பார்வையாளர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது
  • பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் ஆகியவற்றுடன், ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2023 ஐ நடத்தும் இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன

3 குழந்தை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள சீனா

  • சீனாவில் 3 கோல்ந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி அழிக்கும் சட்டத்திற்கு, சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது
  • இந்த நடவடிக்கை உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் இரண்டு குழந்தைகள் கொள்கை விதிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. பழ வருடங்களாக சீனாவில் இரு குழந்தை திட்டத்தின் காரணமாக மக்கள் தொகை வளர்ச்சி மிகவும் குறைவாக வளர்ச்சி அடைந்ததால், இம்முடிவை சீன அரசு எடுத்துள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமர்

  • மலேசிய நாட்டின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • இதற்கான அறிவிப்பை, மலேசிய அரசர் அல் சுல்தான் அப்துல்லா வெளியிட்டார். முன்னாள் பிரதமர் முகைதின் யாசின், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இவர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்

2-வது ஐக்கிய நாடுகள் சபையின் உலக புவியியல் தகவல் மாநாடு

TNPSC CURRENT AFFAIRS

  • 2-வது ஐக்கிய நாடுகள் சபையின் உலக புவியியல் தகவல் மாநாடு, வருகின்ற 2௦22 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹைதராபாத் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • இம்மாநாட்டின் கரு = உலகளாவிய கிராமத்தை புவி-செயல்படுத்தும் நோக்கி”.
  • 2018 ஆம் ஆண்டில் சீனா அக்டோபரில் முதல் முறையாக UNWGIC ஐ நடத்தியது.

 

 

Leave a Reply