TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 24 AUGUST 2021

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 24 AUGUST 2021

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
       TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – 24 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

விஷ்ராம் படேகர் எழுதிய ‘போர்க்களம்’ புத்தகம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஜெர்ரி பின்டோ என்பவரால் மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தை, ஆங்கிலத்தில் போர்க்களம் எனப்பொருள் படும் “BATTLEFIELD” என்ற பெயரில் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் விஸ்ராம் படேகர்
  • இந்த புத்தகம் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஐரோப்பாவை விட்டு வெளியேறிய ஒரு இந்திய ஆணுக்கும் ஜெர்மன்-யூதப் பெண்ணுக்கும் இடையிலான கப்பல் காதல் கதையாகும்

உலகின் முதல் படிமங்கள் இல்லாத எஃகு

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகின் முதல் படிமங்கள் இல்லாத எஃகு, ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் HYBRIT என்ற எஃகு உற்பத்தி நிறுவனம், நிலக்கரியை பயன்படுத்தாமல் இவ்வகை எஃகினை உருவாக்கி உள்ளனர்
  • நிலக்கரி மற்றும் கோக்கிற்கு பதிலாக 100% புதைபடிவமில்லாத ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் “ஹைட்ரஜன் பிரிப்பு இரும்பு உற்பத்தி தொழில்நுட்பம்” மூலம், எஃகினை உருவாக்கி உள்ளனர்

இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி ‘நியோபோல்ட்’

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி வாகனம், “நியோபோல்ட்’ என்ற பெயரில் மெட்ராஸ் ஐ.ஐ.டி கல்விக் கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது
  • 55௦௦௦ ரூபாய் மதிப்பில் கிடைக்கபெறும் இவ்வாகனம், சாலைகளில் மட்டுமல்ல, சீரற்ற நிலப்பரப்புகளிலும் பயன்படுத்தப்படலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். உடல் குறைபாடு உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இவ்வாகனம், மிகவும் பயனுள்ளதாக அமையப்பெறும்.

உலக தண்ணீர் வாரம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக தண்ணீர் வாரம், இவ்வருடம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட உள்ளது
  • 1991 முதல் ஸ்டாக்ஹோம் சர்வதேச நீர் நிறுவனம் (SIWI) சார்பில், தண்ணீர் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய நீர் பிரச்சினைகள் மற்றும் நீருடன் தொடர்புடைய பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய இத்தினம் உருவாக்கப்பட்டது
  • இந்த ஆண்டிற்கான கரு = நெகிழ்ச்சியை வேகமாக உருவாக்குதல் / Building Resilience Faster

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழக பி.ஜே.பி கட்சியின் இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்த நிலையில், தற்போது புதிய ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 155 = ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஜனாதிபதியால் அவரது கையொப்பம் மற்றும் முத்திரை உத்தரவு மூலம் நியமிக்கப்படுவார்

மூன்று ‘வாட்டர் பிளஸ்’ சான்றளிக்கப்பட்ட நகரங்களைக் கொண்ட முதல் மாநிலம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • மூன்று ‘வாட்டர் பிளஸ்’ சான்றளிக்கப்பட்ட நகரங்களைக் கொண்ட முதல் மாநிலம் என்ற சிறப்பை ஆந்திரப் பிரதேசம் பெற்றுள்ளது
  • ஒன்றுக்கு மேற்பட்ட ‘வாட்டர் பிளஸ்’ சான்றிதழ் பெற்ற முதல் மாநிலமாக ஆந்திரா இப்போது மாறியுள்ளது. அம்மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாநகராட்சி (GVMC), விஜயவாடா மாநகராட்சி மற்றும் திருப்பதி மாநகராட்சி ஆகியவை, “வாடர் ப்ளஸ்” தர சான்றிதழை பெற்றுள்ளன
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் நெறிமுறையின்படி, ஒரு நகரம் திறந்தவெளி மலம் கழித்தல் (ODF/ODF+/ODF ++) என்ற நிலையை அடைந்த பிறகு மட்டுமே ‘வாட்டர் பிளஸ்’ சான்றிதழ் பெற்றதாக அறிவிக்க முடியும்.
  • இந்தியாவின் முதல் “வாடர் ப்ளஸ்” தரசான்று பெற்ற முதல் நகரம் = இந்தூர் (மத்தியப் பிரதேசம்)

உலக தொழில் முனைவோர் தினம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகம் முழுவதும் தொழில்முனைவு, புதுமை மற்றும் தலைமைத்துவத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆகஸ்ட் 21 ஒவ்வொரு ஆண்டும் உலக தொழில்முனைவோர் தினமாக (WED) கொண்டாடப்படுகிறது.
  • தொழில்முனைவோர் சந்தையில் புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர். தொழில்முனைவு என்பது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு மட்டுமல்ல, நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் சிக்கல் தீர்க்கும் ஒரு நம்பமுடியாத அத்தியாவசிய மற்றும் முக்கிய பகுதியாகும்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் – “உர்ஜா”

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதல் முறையாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில் செயல்படும் “சாட்பாட்”டை, பாரத் பெட்ரோலிய நிறுவனம் உருவாக்கி உள்ளது
  • “உர்ஜா” எனப் பெயரிடப்பட்டுள்ள சாட்போட் “AI/NLP (செயற்கை நுண்ணறிவு / இயற்கை மொழி செயலாக்கம்) திறன்களைக் கொண்ட ஒரு அறிவார்ந்த மெய்நிகர் உதவியாளர் ஆகும்.
  • இந்த மெய்நிகர் உதவியாளர் மெய்நிகர் உதவியாளர் எல்பிஜி புக்கிங், விலை மற்றும் கட்டண நிலை மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட எல்பிஜி சிலிண்டரின் விநியோக நிலை மற்றும் ரீஃபில் வரலாறு போன்ற சேவைகளை வழங்குகிறது. இது எல்பிஜி விநியோகஸ்தரை மாற்றவும், மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும், மெக்கானிக் சேவைகள் போன்ற பாரத்காஸ் விநியோகஸ்தர்களிடமிருந்து சேவைகளைக் கோரவும், இரட்டை பாட்டில் இணைப்பைப் பெறவும் பயனர்களை அனுமதிக்கிறது

ஸ்ரீநகரின் தால் ஏரியில் பாரத் ஸ்டேட் வங்கியின் மிதக்கும் ஏ.டி.எம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, ஸ்ரீநகரின் தால் ஏரியில் மிதக்கும் ஏ.டி.எம் வங்கி சேவையை துவக்கி உள்ளது
  • பாரத் ஸ்டேட் வங்கியின் முதல் மிதக்கும் ஏ.டி.எம், கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு வழிசெலுத்தல் கழகத்திற்கு (KSINC) சொந்தமான ஜங்கர் படகில் 2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது

புவியியல் திட்டமிடல் போர்ட்டல் ‘யுக்தாரா’

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • மத்திய அரசு, ஒரு புதிய புவியியல் திட்டமிடல் போர்ட்டலான ‘யுக்தாரா’வை அறிமுகப்படுத்தியது.
  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், தொலைதூர உணர்திறன் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான தரவைப் பயன்படுத்தி புதிய MGNREGA சொத்துக்களை (பண்ணை குளங்கள், அணைகள், தோட்டங்கள், சாலைகள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை) எளிதாக பயன்படுத்த இந்த போர்டல் உதவும்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் : தேசியக் கொடி ஏந்திய தேக் சந்த்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஜப்பானின் டோக்கியோ நகரில் 2020 பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின. இந்தியாவின் சார்பில் துவக்க நாள் நிகழ்வில், தேசியக் கோடி ஏந்தி சென்றார், ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த்.
  • முன்னதாக தேசியக் கொடி ஏந்தி செல்லும் வாய்ப்பு, மாரியப்பன் தங்கவேலுவிற்கு வழங்கபட்டு இருந்தது. இறுதி நேரத்தில் கொரோனோ தொற்றின் காரணமாக அவர், தனிமையில் இருப்பதால், இவ்வைப்பு தேக் சந்திற்கு வழங்கப்பட்டது

செவ்வாயின் நிலவில் இருந்து மண் மாதிரிகளை கொண்டவர ஜப்பான் திட்டம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், செவ்வாயின் நிலவான “ஃபோபோஸ்” க்கு வருகின்ற 2024 ஆம் ஆண்டு ராக்கெட்டை அனுப்பி, அங்கிருந்து 10 கிராம் அளவிற்கான மண் மாதிரிகளை சேகரித்து 2029 ஆம் ஆண்டிற்குள், மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் செயலில் இறங்கி உள்ளது
  • 2020 டிசம்பர் மாதம் ஜப்பானின் ஹயபுசா 2 என்ற விண்கலம், உலகின் முதல் முறையாக குறுங்கோளான “ரியுகு”வில் இருந்து 5 கிராம் அளவிற்கு மண் சொதநிகாக பூமிக்கு கொண்டுவரப்பட்டது

 

Leave a Reply