TNPSC Daily Current Affairs in Tamil 4 July 2021

Table of Contents

TNPSC Daily Current Affairs in Tamil 4 July 2021(நடப்பு நிகழ்வுகள் 4 ஜுலை , 2021)

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 4 JULY 2021 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 4, 2021 நாளிட்ட நிகழ்வுகள், போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் தயார் செய்யப்பட்டு இங்கு பதிவிடப்படுகிறது.

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

உத்திரக்கான்ட் மாநிலத்தின் புதிய முதல்வர்:

  • உத்திரக்கான்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த திரத் சிங் ராவத், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அம்மாநிலத்தின் 11-வது புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 3 = சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம்:

  • உலகம் முழுவதம் ஜூலை 3-ஆம் தேதி, பிளாஸ்டிக் (நெகிழி) பை இல்லாத சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டது (International Plastic Bag Free Day, July 3rd)
  • பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் அதிகரித்துவரும் பயன்பாட்டைத் தடுக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தற்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பழுதுபார்க்கும் உரிமைச் சட்டம்:

  • இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் “பழுதுபார்க்கும் உரிமை” (Right to Repair Law) சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்சக்தி கருவிகளை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் நுகர்வோருக்கு பொருட்களின் உதிரி பாகங்களை சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும்.
  • இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதன் நோக்கம் மின்சாரப் பொருட்களின் பயன்பாட்டை 10 ஆண்டுகளாக அதிகரிப்பதாகும்

ஆத்ம நிர்பார் வேளாண் செயலி:

  • நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு, விவசாயம் மற்றும் வானிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு சமீபத்தில் “ஆத்மநிர்பார் க்ரிஷி ஆப்” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது (The Central Government has recently launched “Atmanirbhar Krishi App” to provide information about agriculture and weather in advance to the farmers of the country)
  • இந்த பயன்பாடு 12 உள்ளூர் மொழிகளில் கிடைக்கும்

இந்தியாவின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானம் ஜெய்ப்பூரில் அமைய உள்ளது:

  • சுமார் 1௦௦ கோடி ருபாய் மதிப்பில், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் அமைய உள்ளது (India’s second-largest stadium in Jaipur)
  • 75௦௦௦ பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இது கட்டப்பட உள்ளது
  • குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள “மோடேரா மைதானம் எனப்படும் நரேந்திர மோடி மைதானம்”, இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும். இங்கு 132௦௦௦ பேர் அமர்ந்து பார்க்க இயலும் (The Narendra Modi Stadium, also known as the Motera Stadium, is the largest cricket stadium in India as well as in the world. It has a seating capacity of 132,000 spectators)

ஜப்பானிய ஜென் தோட்டம், அகமெதபாத்தில் திறப்பு:

  • குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில், “ஜப்பானிய ஜென் தோட்டம் – கைசன் அகடெமி” ஆகியவற்றை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் (The Japanese ‘Zen Garden – Kaizen Academy’ at the Ahmedabad in Gujarat was virtually inaugurated by Indian Prime Minister Narendra Modi)
  • ஜப்பானிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு, ஒரு ரேசன் அட்டை:

  • ஜூலை 31-ஆம் தேதிக்குள், இந்தியாவின் அணைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் யாவும், “ஒரு நாடு, ஒரு ரேசன் அட்டை” திட்டத்தை செயல்படுத்தி ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (On July 31, 2021, the Supreme Court ordered all states and Union Territories (UT) to implement the One Nation, One Ration Card (ONORC) system)
  • பொது வழங்கல் துறையில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை தீர்த்து, சீர்திருத்தம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மாற்றுத்திறநாளிகளுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

  • ஒரு ஊனமுற்ற நபர் வழக்கமான பிரிவில் பணியமர்த்தப்பட்டாலும் அல்லது வேலையைத் தொடங்கிய பின்னர் இயலாமையை அடைந்தாலும் பதவி உயர்வு இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது (The Supreme Court ruled that a disabled person can receive the benefit of promotion reservation even if he or she was hired in the regular category or developed the disability after starting work.)
  • 1995 சட்டம் (1995 இன் மாற்றுத்திறனாளிகள் சட்டம்) இயலாமை காரணமாக சேவையில் நுழைந்த நபருக்கும், சேவையில் நுழைந்த பின்னர் இயலாமையைப் பெற்ற நபருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என கூறியுள்ளது.
  • குறிப்பு = இந்திரா சாவ்னி வழக்கில் (1992) உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு கொள்கையை பதவி உயர்வுக்கு பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது.
  • குறிப்பு = 77 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் (77th Constitutional Amendment Act) அரசியலமைப்பு சட்ட விதி 16 (Article 16) உட்பிரிவு 4a படி பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாட்டை மீட்டெடுத்தது

ஆக்சிஜனி – ஒருங்கிணைந்த மொபைல் ஆக்சிஜன் செறிவூட்டி:

  • இந்திய ஆராய்ச்சியாளர்கள் “ஆக்ஸிஜனி” என்ற பெயரில், “மொபைல் ஒருங்கிணைந்த ஆக்ஸிஜன் செறிவை” வடிவமைத்தனர் (Indian researchers designed a sturdy, mobile integrated oxygen concentrator named “OxyJani“)
  • ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள், இதனை உருவாக்கி உள்ளனர்
  • இதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் = Pressure Swing Adsorption (PSA) technology

சரல் சஞ்சார் சேவையமைப்பு:

  • மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், “சரல் சஞ்சார்” இணைய சேவையை விரிவு படுத்தியுள்ளது
  • ‘SARAL SANCHAR’ (Simplified Application For Registration and Licenses)
  • பல்வேறு உரிமங்கள் மற்றும் பதிவு சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய (web based) அடிப்படையிலான போர்டல் இது

உலகின் முதல் ஊனமுற்ற விண்வெளி வீரர்:

  • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், உலகின் முதல் ஊனமுற்ற விண்வெளி வீரரை தேர்வு செய்து, விண்வெளிக்கு அனுப்ப உள்ளது என தெரிவித்துள்ளது / The European Space Agency will employ and launch the world’s first physically disabled astronaut
  • 22௦௦௦ பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளதாக அம்மையம் தெரிவித்தது.

உலகின் 2-வது பெரிய நீர்-மின் அணை:

  • சீனாவில், உலகின் 2-வது பெரிய நீர்-மின் அணை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. “பைஹெட்டன் அணை” எனப்படும் இந்த அணை, சீனாவின் ஜின்சா நதியில் கட்டப்பட்டுள்ளது / Baihetan Dam, the world’s second-biggest hydroelectric dam
  • 289 மீட்டர் உயரமுடைய இந்த அணையில், 16 மின்சார உற்பத்தி அலகுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 1 மில்லியன் கிலோவாட் மின்சார உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம் மொத்த அணையின் மூலம் 16 மில்லியன் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய “காபி தாவர இனம்”:

  • தாவிர காபி குடும்பத்தைச் சேர்ந்த “பைரோஸ்ட்ரியா லால்ஜி” என்ற புதிய இனம் சமீபத்தில் அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது / Pyrostria laljii, a new species belonging to the coffee family
  • இந்தியாவில் பைரோஸ்ட்ரியா இனத்தை சேர்ந்த முதல் காபி தாவர இனம் இதுவாகும். இது 15 மீட்டார் உயரம் வளரக்கூடியது

ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம்:

  • ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தில் (ABRY – Atmanirbar Bharat Rojgar Yojana), பயனாளிகள் பதிவு செய்ய 9 மாதங்கள் கூடுதல் (மார்ச் 2௦22) அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
  • சமூக பாதுகாப்பு சலுகைகள் மற்றும் வேலை இழப்பை மீட்டெடுப்பது ஆகியவற்றுடன் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முதலாளிகளை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது இத்திட்டம் / incentivize employers for creation of new employment along with social security benefits and restoration of loss of employment

இந்தியாவின் முதல் விவசாய ஏற்றுமதி வசதி மையம்:

  • இந்தியாவின் முதல் விவசாய ஏற்றுமதி வசதி மையம், மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரில் அமைக்கப்பட்டுள்ளது (India’s first AEFC (Agriculture Export Facilitation Center) was launched in Pune)
  • நபார்டு வங்கி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், வேளாண் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய சிறந்த வசதிகளை கொண்டுள்ளது.

வால்மீகி புலிகள் காப்பகம்:

  • பீகார் மாநிலத்தின் ஒரே புலிகள் காப்பகமான, “வால்மீகி புலிகள் காப்பகத்தில்” கழுகுகளை பாதுகாப்பதற்கான திட்டம் துவங்கப்பட்டுள்ளது / Valmiki Tiger Reserve have started planning for conservation of vultures
  • இப்பகுதியில் சமிபத்தில் 15௦ கும் மேற்பட்ட கழுகுகள் தென்பட்டதால், அம்மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

ஆசிய யானைகள்:

  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், “ஆசிய பெண் யானைகளை காட்டிலும், ஆசிய ஆண் யானைகள் குறைவான சமூக அறிவினை” கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது / asian male elphants were found them less social than females
  • ஆசிய யானைகள் மூன்று இனங்களில் உள்ளன. இந்திய, சுமத்ரா மற்றும் இலங்கை.

ஸ்பின்னர் (சுழல்) டால்பின்:

  • ஒடிசா மாநில கடற்கரையோரம் அறிய வகை “ஸ்பின்னர் டால்பினின்” உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது / The carcass of Spinner dolphin found in Odisha
  • இது உலகெங்கிலும் உள்ள கரையோர வெப்பமண்டல ஆழமான நீரில் காணப்படும் ஒரு சிறிய டால்பின் ஆகும்

4,000 ஆண்டுகள் பழமையான குடியேற்றம்:

  • ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தின், துர்காதேவி கிராமத்தில் 4,000 ஆண்டுகள் பழமையான குடியேற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது / 4,000-year-old settlement found in Durgadevi
  • அகழ்வாராய்ச்சி இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூன்று கலாச்சார கட்டங்களின் தனித்துவமான தடயங்களை கண்டுபிடித்துள்ளனர்

தால் எரிமலை:

  • பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா தீவுகளில் உள்ள “தால் எரிமலை” (Taal Volcano) வெடிக்கத் துவங்கியுள்ளதால், அருகே உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்
  • தால் எரிமலை பிலிப்பைன்ஸின் இரண்டாவது மிக செயல்பாடு எரிமலை, இது “மிகச் சிறியது ஆனால் ஆபத்தான எரிமலை

இஸ்தான்புல் மாநாட்டில் இருந்து துருக்கி வெளியேறியது:

  • சமீபத்தில், துருக்கி பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான இஸ்தான்புல் மாநாட்டிலிருந்து விலகியது / Turkey has pulled out of Istanbul Convention on violence against women
  • இம்மாநாடு, ஐரோப்பிய கவுன்சிலால் உருவாக்கப்பட்டது.
  • குறிப்பு = 2௦11-இல் இஸ்தான்புல் மாநாட்டிற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு துருக்கி தான்.

6-வது பிரிக்ஸ் கலாசார அமைச்சர்கள் கூட்டம்:

  • பிரிக்ஸ் நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்களின் 6-வது கூட்டம், காணொளி மூலம் நடத்தப்பட்டது / 6th meeting of BRICS Culture Ministers
  • இக்கூட்டத்திற்கு இந்தியக் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பிரகலாத்சிங் படேல் தலைமை தாங்கினார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் முதல் திருநங்கை தடகள வீராங்கனை:

  • நியுசிலாந்து நாட்டின் “லாரல் ஹப்பர்ட்” என்பவர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் முதல் திருநங்கை தடகள வீராங்கனை ஆவார் / First transgender Woman Athlete Laurel Hubbard to compete at Olympics
  • இவர் 87 கிலோ பளுதூக்கும் பெண்கள் பிரிவில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.

ஆல் இந்தியா ரேடியோவின் புதிய டைரக்டர் ஜெனரல்:

  • அகில இந்திய வானொலியின் இயக்குநர் ஜெனரலாக ஐ.ஐ.எஸ் அதிகாரியான என் வேணுதர் ரெட்டி பொறுப்பேற்றார்
  • திரு ரெட்டி முன்னதாக நிதி அமைச்சகத்தின் கீழ் முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் இணை செயலாளராக பணியாற்றினார்

“கடற்காற்று 2௦21” போர் பயிற்சி:

  • பன்னாட்டு கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சியான, “கடல் காற்று 2௦21”, உக்ரைன் மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொண்டன (Maritime Exercise “Sea Breeze 2021” (Ex-SB21) between Ukraine and US Navy)
  • இப்பயற்சி கருங்கடல் பகுதியில் நடைபெற்றன.

சன் பார்மா நிறுவனத்தின் “சங்கல்ப்” இயக்கம்:

  • சன் பார்மா மருந்து நிறுவனம் மருத்துவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்கள் சமூகத்தின் நலனுக்காக ‘சங்கல்ப்’ (SANKALP) என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது.

தேசிய தோட்டக்கலை வாரிய மையம்:

  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில், “தேசிய தோட்டக்கலை வாரிய மையம்” அமைக்கப்பட்டுள்ளது (The Ministry of Agriculture and Farmers Welfare has opened the National Horticulture Board (NHB) centre in Gwalior, Madhya Pradesh)
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் இதனை அமைத்துள்ளது.

இந்திய கடற்படை வீரர், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி:

  • இந்திய கடற்படையை சேர்ந்த தடகள வீரரான “எம்.பி.ஜாபிர்”, தடை தாண்டும் 400 மீ ஓட்டப்பந்தய ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் (Indian Navy’s ace athlete MP Jabir qualified for the Tokyo Olympics in 400m hurdles)
  • 400 மீ தடை ஓட்டப்பந்தயப் போட்டியில் பங்குபெறும் இந்தியாவின் முதல் வீரர் இவராவார் (He would be the first Indian male athlete to participate in the 400m hurdles in Olympics)

“முதல் நன்னீர் சுரங்க மீன்வளத்தை” திறந்த ரயில்வே:

  • ரயில்வே துரையின் சார்பில், முதல் முறையாக “நன்னீர் சுரங்க மீன்வள மையம்” பெங்களூரு ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது ( In a first, an aquatic kingdom has been set up at a Bengaluru Railway station)
  • இது அமேசான் நதி கருத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகச்சிறிய தொழில்நுட்பம்:

  • இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகச்சிறிய தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். இதன் தடிமன் அளவு இரண்டு அணுக்கள் மட்டுமே (Israeli researchers have engineered the world’s tiniest technology, with a thickness of only two atoms.)
  • அடர்த்தி, வேகம், ஆற்றல் நுகர்வு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால மின்னணு சாதனங்களை இது மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2௦21 ஆம் ஆண்டின் சிறந்த விமான நிறுவனம்:

  • விமானத்துறையின் ஆஸ்கார் விருது எனப்படும், சிறந்த விமான விருதான “2௦21 சிறந்த விமான நிறுவன” விருது, “கொரிய ஏர்” (Korean Air: 2021 Airline of the Year) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • போஸ்டன் நகரில் இவ்விருது வழங்கப்பட்டது.

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY – 3, 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY – 2, 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY – 1, 2021

1 thought on “TNPSC Daily Current Affairs in Tamil 4 July 2021”

Leave a Reply