TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 5, 2௦21

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 5, 2௦21

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 5, 2021, TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 5, 2௦21 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL - JULY 5, 2021

 

17-வது கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி கூட்டம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • கர்ப்பப்பைவாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி தொடர்பான 17-வது உலக காங்கிரஸ் கூட்டம் இணையதள மூலமாக மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இது முதல் முறையாக ஆசியக் கண்டத்தில், இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றது (17th World Congress of IFCPC (Indian Society of Colposcopy and Cervical Pathology))
  • இந்நிகழ்ச்சியினை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார்
  • இக்கூட்டத்தின் கரு = Eliminating Cervical Cancer : Call for Action
  • 2030 ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி நோயினை ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
மங்கோலியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது:
  • மங்கோலிய நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருதான , “The Order of Polar Star” விருது, இந்தியாவினை சேர்ந்த “இன்ஜினியர்ஸ் இந்தியா” நிறுவனத்தின் தலைவரான “ஆர்.கே.சபர்வால்” அவர்களுக்கு வழங்கப்பட்டது
  • மங்கோலிய நாட்டில் முதல் என்னை சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது
400 மீ தடை ஓட்டப்பந்தயத்தின் புதிய உலகச் சாதனை:
  • நார்வே தலைநகர் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற “டைமண்ட் லீக்” தடகள போட்டியின் 400 மீ தடை ஓட்டப்பந்தயத்தில், நார்வே நாட்டினை சேர்ந்த “கர்ஸ்டன் வார்ஹோல்ம்” என்பவர் 46.70 நொடிகளில் ஓடி புதிய உலகச் சாதனை படைத்துள்ளார் (Norway’s Karsten Warholm broke Kevin Young’s 29-year-old 400m hurdles world record when he completed the race in 46.70 seconds at the Diamond League meeting in Oslo on Thursday)
  • 1992 ஆம் வருடம் ஒலிம்பிக் போட்டியில், யங் என்பவர் 46.78 நொடிகளில் ஓடியதே உலகச் சாதனையாக இருந்தது. 29 வருடங்களுக்கு பிறகு இச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.டி.ஒ வின் செயற்கை நுண்ணறிவு வழிமுறை:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) செயற்கை நுண்ணறிவு வழிமுறையான ‘ஏடிமேன் ஏஐ’ ஒன்றை உருவாக்கியுள்ளது, இது மார்பு எக்ஸ்-கதிர்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கோவிட் -19 நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும் (According to its developers, the tool named Atman AI used for Chest X-ray screening has shown an accuracy rate of 96.73 per cent)
  • அதன் உருவாக்கியவர்கள் கூற்றுப்படி, மார்பு எக்ஸ்ரே ஸ்கிரீனிங்கிற்கு பயன்படுத்தப்படும் ‘ஏடிமேன் ஏஐ’ என்ற கருவி 96.73 சதவீத துல்லிய விகிதத்தைக் காட்டியுள்ளது
உத்திரப்பிரதேசத்தில் சுகாதார ஏ.டி.எம்கள்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உத்தரபிரதேசத்தில், மாநில மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சுகாதார ஏடிஎம்களை நிறுவ அம்மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது (In Uttar Pradesh, the government is planning to establish Health ATMs to provide better health facilities to the people in state)
  • மாநிலத்தில் சுகாதார சோதனை வசதிகளை அதிகரிக்க இது உதவும் என்றும், கிராமங்களில் மக்களுக்கு இது உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது
கருப்பு கொய்யாப்பழம்:
  • பீகார் மாநிலத்தின் பாகல்பூரில் உள்ள “பீகார் வேளாண்மை பல்கலைக்கழக” ஆராய்ச்சியாளர்கள், தனித்துவமான “கருப்பு கொய்யாப்பழத்தை” உருவாக்கி உள்ளனர் (Bihar Agriculture University develops Black Guava)
  • இந்த பிரத்தியேக வகை கருப்பு கொய்யா உள்ளே ரெட்‌பல்ப் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது
2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிகண்ட கல்:
  • திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அக்கமநாயக்கண்புதூரில் உள்ள செங்கழனி அம்மன் கோவில் அருகே 2-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிகண்ட கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ்ல் இடம்பிடித்த தமிழக மாணவிகள்:
  • திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் சுபகீதா மற்றும் சுஜிதா ஆகியோர், இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ்ல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்
  • இவர்கள் 2 இலட்சத்து 25 ஆயிரம் விதைப் பந்துகளை தயாரித்து, தமிழகம் முழுவதும் சென்று பல்வேறு பகுதிகளில் தூவியுள்ளனர்.
அனைவருக்கும் எழுத்தறிவு வழங்கும் “நிபுண் பாரத்” திட்டம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • 2௦2௦ ஆம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கையின் ஒர் அங்கமாக நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவு வழங்கும் “நிபுண் பாரத்” திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
  • NIPUN BHARAT = NATIONAL INITIATIVE FOR PROFICIENCY IN READING WITH UNDERSTANDING AND NUMERACY
  • நோக்கம் = 2௦26-27 ஆம் ஆண்டிற்குள் 3-ஆம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் ஒவொரு குழந்தையும் புரிதலுடனான எழுத்து வாசிப்பிலும், என்னைறிவில் போதிய தகுதியை பெறுவதற்கும் ஏதுவான சூழலியலை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
உலகில் ஆழமான நீருக்கடியில் இயக்கச் சோதனை:
  • மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, சென்னையை சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 27 விஞ்ஞானிகள் கொண்ட குழுவானது, உலகின் ஆழமான கடலுக்கு அடியில் 5.2 கிலோமீட்டர் ஆழத்தில் இயக்கச் சோதனையை மேற்கொண்டனர். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கடற்பரப்பு கிராலர் அடிப்படையிலான சுரங்க இயந்திரம் மூலம் இச்சோதனை நடத்தப்பட்டது (A 27-member scientific crew from the Chennai-based National Institute of Ocean Technology (NIOT), created history this April by conducting the world’s deepest underwater locomotion trials of an indigenously-developed seabed crawler-based mining machine in the Central Indian Ocean Basin))
பயோனிச்சியூரஸ் தமிலென்சிஸ்:
  • உதகமண்டலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஒரு அரிய வகை பூச்சியைக் கண்டுபிடித்தனர். ஸ்பிரிங்டெயில் என அழைக்கப்படும் இந்த பூச்சி ஒரு மிமீ நீளமுள்ள பறக்காத இனமாகும் (Researchers discovered a rare species of insect in The Nilgiris. Known as springtails, named as Bionychiurus tamilensis as it is recorded in Tamil Nadu)
  • இது பொதுவாக அதிக உயரத்தில் காணப்படுகிறது. இது இந்தியாவில் கண்டறிவது இதுவே முதல் முறையாகும், இதனால் இது தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பயோனிச்சியூரஸ் தமிலென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்தாலியில் இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச்சின்னம்:
  • இத்தாலியின் புகழ்பெற்ற காசினோ நகரில், “இந்திய ராணுவ வீரர்களின் நினைவகத்தை”, இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.என்.நரவானே திறந்து வைக்கிறார் (Indian Army Memorial in the famous town of Cassino, Italy. In the Battle of Monte Cassino during World War II, over 5,000 Indian soldiers laid down their lives)
  • இரண்டாம் உலகப் போரின், “மாண்டி காசினோ போரில்”, இந்தியாவின் 5௦௦௦ க்கும் மேற்பட்ட வீரர்கள், பாசிச சக்திக்கு எதிராக போர் புரிந்து உயிரை நீத்தனர்.
பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த மிதாலி ராஜ்:
  • இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்களைப் அடித்து, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸை முந்தினார் (India captain Mithali Raj became the highest run-getter in women’s cricket across formats, overtaking former England skipper Charlotte Edwards)
  • எட்வர்ட்ஸின் 1௦273 ரன்களை கடந்து புதிய உலக சாதனையி நிகழ்த்தி உள்ளார் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ்.
ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை வென்றார் மேக்ஸ் வெர்ஷ்டபன்:
  • 2௦21 ஆம் ஆண்டி ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், மேக்ஸ் வெர்ஷ்டபன் முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றினார் (Max Verstappenwon the Austrian Grand Prix)
  • இரண்டாவது இடத்தை போட்டாஸ் பிடித்தார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை பற்றிய புத்தகம்:
  • வரலாற்றில் தெரியாமல் போன இந்தியாவின் பெண் மருத்துவரை பற்றிய புத்தகம் இது. கவிதா ராவ் என்பவர் எழுதிய “Lady Doctors: The Untold Stories of India’s First Women in Medicine” எனும் இப்புத்தகம் “ருக்மபாய் ராவுத்” என்பவரை பற்றி கூறுகிறது.
விண்வெளிக்கு பறக்க உள்ள இந்திய வம்சாவழியை சேர்ந்த 3-வது பெண்மணி:
  • விண்வெளிக்கு பறக்க உள்ள 3-வது இந்திய வம்சாவழி பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார் = சிரிஷா பந்தலா (Indian origin Women Sirisha Bandla, becames 3rd women to go space)
  • மேலும் இந்தியாவில் பிறந்து, கல்பனா சாவ்லாவிற்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் 2-வது பெண்மணி இவராவார் (Indian-originSirisha Bandla is set to become the second Indian-born woman to fly into space after Kalpana Chawla)
  • இவர் VSS UNITY 22 என்ற விண்கலம் மூலம் ஜூலை 11 ஆம் தேதி, மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்கு செல்ல உள்ளார்
  • இதற்கு முன்னர் விண்வெளிக்கு சென்ற 2 இந்திய வம்சாவளி பெண்மணிகள் = கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆவர்.
தேசிய அதிவேக ரயில் கர்ப்பரேசனின் புதிய இயக்குனர்:
  • தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனின் (NHSRCL = National High Speed Rail Corporation Limited) புதிய மேலான் இயக்குனராக, “சதீஷ் அக்னிஹோத்ரி” நியமிக்கப்பட்டுள்ளார்
  • ரயில்வே துறையில் 2௦ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் இவர்.
149 ஆண்டுகள் பழமையான “தர்பார் நகர்வு” முடிவுக்கு வந்தது.
  • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் 149 ஆண்டுகள் பழமையான “தர்பார் நகர்வு” (Darbar Move) முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
  • தர்பார் நகர்வு = ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் கோடை தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் குளிர்கால தலைநகர் ஜம்மு இடையே அலுவலகங்களை மாற்றுதல் ஆகும்.
  • 1872 ஆம் ஆண்டு அப்போதைய டோக்ரா இன மன்னர், “மகாராஜா குலாப் சிங்”, கோடைக்காலதிற்கு ஒரு அலுவலகமும், குளிர் காலத்திற்கு ஒரு அலுவலகமும் என்ற முறையை துவக்கி வைத்தார்.
ஜி-2௦ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு:
  • ஜி-2௦ அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்குபெற்ற மாநாடு, இத்தாலியின் “மடேரா” நகரில் நடைபெற்றது (G-20 Foreign Ministers meeting was held in the Italian city of Matera)
  • ஜி-2௦ அமைப்பில் 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளன. இதில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது.
எல்சா புயல்:
  • கியூபா நாட்டினை வெப்பமண்டல “எல்சா புயல்” தாக்கியது (Cuba hits by Tropical Elsa Storm)
  • பல்வேறு தீவுகளில் இருந்து சுமார் 180000 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
பஞ்சுமுளி ஏரியில் இருந்து முதலைகள் இடமாற்றம்:
  • குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள வல்லபாய் படேல் ஒற்றுமை சிலை அருகே உள்ள “பஞ்சுமுளி ஏரியில்” இருந்து 194 முதலைகள் வெளியேற்றப்பட்டு வெளி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன (relocation of crocodiles from Panchmuli Lake near the Statue of Unity in Narmada district, Gujarat)
  • சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நோக்கத்தில், அம்மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
காவலர்களுக்கு வருடத்தில் ஒரு மாதம் கட்டாய விடுப்பு வழங்கிய அஸ்ஸாம்:
  • காவல்துறை ஊழியர்களான, கான்ஸ்டபிள் பதவியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாத கட்டாய விடுப்பு வழங்க அசாம் அமைச்சரவை முடிவு செய்தது.
  • காவலர் குடியிருப்புகளில் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருப்பவர்களுக்கு 10 நாள் வருடாந்திர விடுப்பு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
சில்வர் லேக் 2௦21 சதுரங்க போட்டியில் தங்கம் வென்ற இந்தியா:
  • செர்பியாவில் நடைபெற்ற சில்வர் லேக் 2௦21 சதுரங்க போட்டியில், இந்தியாவின் 17 வயது “நிகில் சரின்” தங்கம் வென்றார் (Nihal Sarin Clinches Silver Lake Open 2021 Chess Tournament
  • 2-வது இடத்தை இந்தியாவின் ரவுனக் சத்வாணி பிடித்தார்
ஜூலை 4 = சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்:
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 ஆம் தேதி, சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1893 ஆம் ஆண்டு அவரின் சிகாகோ உரை, இன்றளவும் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
ஜூலை 4 = முன்னால் பிரதமர் குல்சரிலால் நந்தா பிறந்த தினம்:
  • முன்னால் இந்தியப் பிரதமர் குல்சரிலால் நந்தாவின் பிறந்த தினம் ஜூலை 4 ஆம் தேதி ஆகும். இவர் 2 முறை இந்தியப் பிரதமராக குறுகிய காலம் இருந்தவர்
  • 1964 இல் ஜவஹர்லால் நேரு இறந்த பொழுதும், 1966 இல் லால்பகதூர் சாஸ்திரி இறந்த பொழுதும் குறுகிய காலத்திற்கு பிரதமராக இருந்தார். 1997 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான ஆண் மனிதர்:
  • உலகில் அதிக வயது வாழும் ஆண் மனிதர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார், போர்டோ ரிகோ நாட்டினை சேர்ந்த எமிலியோ ப்லோராஸ் மார்க்ஸ் (The Guinness World Records, officially named Puerto Rico’s Emilio Flores Márquez as the world’s oldest person (male) living with a confirmed age of 112 years and 326 days)
  • இவர் 112 ஆண்டுகள் 326 நாட்களை கடந்து வாழ்ந்து வருகிறார்.
அசைபோடும் விலங்குகளில் இருந்து மீத்தேனை கட்டுப்படுத்தும் “ஹரித் தாரா”:
  • இந்திய வேளான ஆராய்ச்சி கழகம் உருவாக்கியுள்ள புதிய மீதேன் எதிர் உணவு பொருளான “ஹரித் தாரா”, அசைபோடும் விலங்குகளின் முதல் இரப்பையில் உள்சென்று, விலங்குகள் வெளியேற்றும் மீதேனின் அளவை 17 – 2௦% வரை குறைத்து, பால் உற்பத்தி அளவை அதிகரிக்க செய்கிறது (HARIT DHARA, an anti-methanogenic feed supplement, cuts down methane emissions by 17-20% and boosts milk production)
25 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உத்திரப்பிரதேசம் சாதனை:
  • ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் “வன விழா / வான மகோற்சவம்” விழாவினை முன்னிட்டு, உத்திரப் பிரதேச மாநில அரசு, ஜூலை 4 ஆம் தேதி, மாநிலம் முழுவதும் சுமார் 25 கோடி மரக்கன்றுகளை நட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
சிந்து நதி ஒப்பந்தம்:
  • 1960 ஆம் ஏற்படுத்தப்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தின் படி, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அதிகப்படியான நீரின் அளவை குறைத்து, இந்தியப் பாசனத்திற்கு திருப்பி விடப்படும் என இந்தியா அறிவித்துள்ளது (India is working on its rights to stop excess water flowing to Pakistan under Indus Waters Treaty of 1960 to irrigate its own lands)

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 4, 2௦21

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 3, 2௦21

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 2, 2௦21

Leave a Reply