TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 6, 2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 6, 2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 6, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 6, 2௦21 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

ஜூலை 6 = உலக விலங்குவழி நோய்கள் தினம்:
  • உலகம் முழுவதும் ஜூலை 6 ஆம் தேதி, உலக விலங்குவழி நோய்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கரு = Let’s Break the Chain of Zoonotic Transmission
  • ஜூனோசிஸ் என்பது ஒரு நோய்க்கிருமியால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும் (இது பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் போன்ற ஒரு தொற்று முகவராக இருக்கலாம்) இது முதுகெலும்பு விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் அல்லது அதற்கு நேர்மாறாக பரவலாம்.
  • பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர், ஜூனோடிக் நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியை ஜூலை 6, 1885 அன்று வெற்றிகரமாக வழங்கினார்.
  • தொற்று கட்டுப்பாடு படி, இந்த சாதனையை கவுரவிப்பதற்காக உலக ஜூனோசஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் முதல் வானிலை செயற்கைக்கோள் ஏவிய சீனா:
  • உலகின் முதல் வானிலை செயற்கைக்கோளினை சீனா வெற்றிகரமாக ஏவியது
  • FENGYUN-3E (FY-3E) எனப்படும் இந்த செயற்கைக்கோள், வானிலை தொடர்பான அறிவிப்பு, தகவல் பரிமாற்றங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யும் (FY-3E, which will be the world’s first meteorological satellite)
  • 8 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைக் கோளில் 11 பேலோடுகள் இணைக்கப் பட்டுள்ளன.
சமூக சேவகர் “ஸ்டான் சாமி” மறைந்தார்:
  • சமூக சேவகரான ஸ்டான் சாமி (Stan Swamy), மும்பையில் காலமானார். அவருக்கு வயது
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய எல்கார் பரிசத் வழக்கில், உபா சட்டத்தின் (UAPA Act) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இவர் பார்கின்சன் நோயினால் (Parkinson Disease) அவதிப்பட்டு வந்தார்.
1 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற முதல் தமிழ் யூடியுப் சானல்:
  • புதுகோட்டை மாவட்டத்தின் சின்ன வீரமன்கலம் பகுதியை சேர்ந்த விவச்ச்யிகள் சேர்ந்து துவக்கிய “வில்லேஜ் குக்கிங் சானல்” என்ற யுடியுப் சானல், தமிழ் முதல் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற சானல் என்ற சிறப்பை பெற்றுள்ளது. (Village Cooking Channel, First Tamil YouTube channel to get 1 crore subscribers)
அமேசான் நிறுவனத்தின் புதிய தலைவர்:
  • உலகப் புகழ் பெற்ற மின்-வர்த்தக நிறுவனமான, அமேசானின் தலைவரான ஜெப் பெசொஸ், தனது பதவியை விட்டு விலகினார்.
  • அமேசான் நிறுவனத்தின் புதிய தலைவர் = ஏண்டி ஜஸ்ஸி (New CEO of Amazon)
ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியேந்தி செல்லும் மேரி கோம், மன்ப்ரீத் சிங் மற்றும் பஜ்ரங் பூனியா:
  • இம்மாதம் 23 ஆம் தேதி முதல் துவங்க உள்ள ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் கலந்துக் கொள்ளும் அணிக்கு தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கும் வாய்ப்பு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (Mary Kom) மற்றும் ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் (Manpreet Singh) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2௦21 ஆகஸ்ட் 8 ஆம் தேதி, ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாள் விழாவில், இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பு, மல்யுத்த வீரர் “பஜ்ரங் பூனியா” (Bajrang Punia) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் “பாலின சமத்துவத்தை” (Gneder Parity) உறுதிப்படுத்த இந்தியா முதன்முறையாக இரண்டு கொடி ஏந்தும் வாய்ப்பு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உயிர் காக்கும் காவலர் விருது:
  • மத்திய அரசு சார்பில் வீரதீர செயல்களில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படும் பிரதம மந்திரியின் உயிர் கக்கும் காவலர் விருதுக்கு, தமிழகதின் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முதல்நிலை காவலர் எஸ்.ராஜ் கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பழத் தினம், ஜூலை 1:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகம் முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி, சர்வதேச பழ தினம் (International Fruit Dya) கொண்டாடப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கரு = Create Change Together
  • 2௦21 ஆம் ஆண்டின் பழமாக தேர்வுசெய்யப்பட்டது = தர்பூசணி (Watermelon)
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு 2௦21 ஆம் வருடத்தை “சர்வதேச பழங்கள் மற்றும் காய்கள் ஆண்டாக” (2021 – International Year of Fruits and Vegetables) ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
52-வது சர்வதேச இந்தியத் திரைப்பட திருவிழா 2௦21:
  • வருகின்ற நவம்பர் மாதம், இந்தியாவின் கோவா மாநிலத்தில் 52-வது சர்வதேச இந்தியத் திரைப்பட திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது (52nd International Film Festival of India (IFFI), will be held in GOA)
  • மேலும் இந்த ஆண்டு முதல் விழாவில், “சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்கர் விஸ்தாரி புலிகள் காப்பகம்:
  • ராஜஸ்தான் மாநிலத்தின் “ராம்கர் விஸ்தாரி சரணாலயத்தை” புலிகள் காப்பக சரணாலயமாக அங்கீகரித்து மதிய அரசு உத்தரவிட்டுள்ளது (Ramgarh Vishdhari Sanctuary as the fourth tiger sanctuary in Rajasthan)
  • இதன் மூலம் ராம்கர் விஸ்தாரி புலிகள் சரணாலயம், ராஜஸ்தான் மாநிலத்தின் நான்காவது புலிகள் சரணாலயமாக உருவெடுத்துள்ளது.
ரஞ்சனா பிரகாஷ் தேசாய் குழு:
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஏதுவாக, சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு சீய ஏதுவாக “ரஞ்சனா பிரகாஷ் தேசாய்” தலைமையிலான “டீலிமிட்டேசன் கமிசன்” ஸ்ரீநகர் சென்றுள்ளது (The Delimitation Commission is headed by Justice (retd) Ranjana Prakash Desai)
மத்திய காதி கமிசனின் “போல்ட்” திட்டம்:
  • மத்திய காதி மற்றும் கிராமக் தொழிலக கமிசன் (KVIC – Kadhi and Village Industries Commission) சார்பில், ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தில், வரட்சியான பகுதிகளில் மூங்கில் வளர்க்கும், “போல்ட்” திட்டத்தினை செயல்படுத்த உள்ளது
  • BOLD = BAMBOO OASIS ON LANDS IN DROUGHT
  • இந்தியாவில் முதல் முறையாக இவ்வகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 5௦௦௦ மூங்கில் மரங்கள் நடப்பட்டு வறட்சியை சமாளிக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது
  • ஒரே நாளில் 5௦௦௦ மூங்கில் மரக்கன்றுகள் நட்டு, காதி கமிசன் புதிய உலக சாதனை படைத்துள்ளது (KVIC created a new World record of planting the highest number of bamboo saplings on a single day at single location)
முதல் தர கிரிக்கெட் போட்டியில் 1௦௦௦ விக்கெட்டுகளை எடுத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்:
  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், சர்வதேச முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1௦௦௦ விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் (Veteran England fast bowler James Anderson completed 1000 wickets in first-class cricket)
  • முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1௦௦௦ விக்கெட்டுகளை வீழ்த்திய 14-வது வீரர் இவராவார். வேகப் பந்து வீச்சாளர்களில் இவர் 5-வது ஆவார்.
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்:
  • இந்திய குடியரசுத் தலைவர் “ராம்நாத் கோவிந்த்”, எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    1. கர்நாடகா = தவர்சந்த் கெல்காட்
    2. மத்தியப் பிரதேசம் = மன்குபாய் சகன்பாய் படேல்
    3. மிசோராம் = ஹரி பாபு கம்பம்பதி
    4. ஹிமாச்சலப் பிரதேசம் = ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
    5. கோவா = சஸ்ரீதரன் பிள்ளை
    6. திரிபுரா = சத்யதேவ் நாராயணன் ஆர்யா
    7. ஜார்கண்ட் = ரமேஷ் பயஸ்
    8. ஹரியானா = பந்தாரு தத்தாரையா
  • இந்திய அரசியல அமைப்பு சட்ட விதி 155 படி, மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரில் நியமிக்கப்படுகிறார்கள்.
கோபாலக்ருஷ்ண காந்தியை பற்றிய புத்தகம்:
  • வேணு மகாதேவ் கோவிந்து மற்றும் ஸ்ரீநாத் ராகவன் ஆகியோர் எழுதிய “The Fourth Lion: Essays for Gopalkrishna Gandhi”, இப்புத்தகத்தில் கோபால கிருஷ்ணா காந்தியின் வாழ்கையின் சந்திந்த நபர்களை பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
கொரோனாவில் இருந்து குணமானவர்களை தாக்கும் “எலும்பு இறப்பு” நோய்:
  • கொரோனா நோயில் இருந்து குணமானவர்களை தற்போது “அவஸ்குலார் நெக்ரோசிஸ் எனப்படும் எலும்பு இறப்பு” நோய் தாக்குவதாக அறிக்கை தெரிவித்துள்ளது (Avascular Necrosis (AVN) or ‘bone death’ or Osteonecrosis)
  • இந்நோயினால், “இரத்தக் குறைவால் எலும்பில் உள்ள திசுக்கள் இறப்பதாக” (death of bone tissue due to lack of blood supply) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிக்கின் “கடைசி பனிப் பகுதி”:
  • கிரீன்லாந்தின் வடக்கே ஆர்க்டிக் பனியில் அமைந்துள்ள ‘கடைசி பனிப் பகுதி’, விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே உருகத் தொடங்கியது (The ‘Last Ice Area’ (LIA), which is located in the Arctic ice north of Greenland, has begun melting earlier than expected by scientists)
  • கனடா நாட்டின் பிரதேசமான நுனாவுட்டில், இந்த பகுதி கிரீன்லாந்து மற்றும் எல்லெஸ்மியர் தீவின் வடக்கே அமைந்துள்ளது.
கேரளாவின் வேம்பநாடு ஏரி:
  • புகழ்பெற்ற கேரளாவின் வேம்பநாடு ஏரியின் “படகு இல்லம்” விரைவில் துவக்கப்பட உள்ளது.
  • இது கேரளாவின் மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் மிக நீளமான ஏரியாகும். வல்லம் காளி (நேரு டிராபி படகு பந்தயம் என்றும் அழைக்கப்படுகிறது) ஆகஸ்ட் மாதம் வேம்பநாத் ஏரியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு பந்தயம் ஆகும்.
  • இந்த ஏரி ராம்சார் ஒப்பந்த தளங்களில் ஒன்றாக 2௦௦2 இல் சேர்க்கப்பட்டது.
ஆயுஷ் அமைச்சகம்:
  • இந்திய சுகாதாரத் துறையில், ஆயுஷ் அமைச்சகம் தனது பங்களிப்பினை மேம்படுத்தும் விதமாக 5 செயல்களை துவக்கியுள்ளது
    1. Ayurveda Dataset on Clinical Trial Registry of India – CTRI
    2. CCRAS – Research Management Information System Portal
    3. E-Medha – Electronic Medical Heritage Accession Portal
    4. AMAR – Ayush Manuscripts Advanced Repository
    5. SHAI – Showcase of Ayurveda Historical Imprints Portal
8-வது பிரிக்ஸ் கல்வித்துறை அமைச்சர்கள் மாநாடு:
  • 8-வது பிரிக்ஸ் கல்வித்துறை அமைச்சர்கள் மாநாடு, மெய்நிகர் தொழில்நுட்ப முறையில் நடைபெற்றது (8th BRICS Education Ministers in virtual mode)
  • இக்கூட்டத்திற்கு இந்தியா தலைமை தாங்கியது.
மத்திய சுகாதாரத்துறையின் “கோவிட் குருக்கூல்”:
  • சுகாதார அமைச்சகம் தனது சமூக ஊடக தளங்களில் தகவல் வீடியோ தொடர்பான “கோவிட் குருகூலை” அறிமுகப்படுத்தியுள்ளது (Health Ministry has launched COVID GuruKool, an informational video series on its social media platforms)
  • இது COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் தடுப்பூசி திட்டம் குறித்த உண்மையான தகவல்களை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சனத் ஜெயசுந்தராவிற்கு 7 ஆண்டுகள் தடை:
  • இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளர் சனத் ஜெயசுந்தரா, ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார்
  • ஐ.சி.சி ஊழல் தடுப்பு விதியை மீறியதாக ஐ.சி.சி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார்
கோ-கோ கூட்டமைப்பின் புதிய தலைவர்:
  • இந்திய கோ-கோ கூட்டமைப்பின் புதிய தலைவராக “சுதன்ஷு மிட்டல்” தேர்வு செய்யப்பட்டுள்ளார் (Sudhanshu Mittal re-elected as KKFI President)
  • கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
கொச்சின் விமானநிலையதின் “ப்ரவா நடவடிக்கை”:
  • கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் சார்பில், “ப்ரவா நடவடிக்கை” துவங்கப்பட்டுள்ளது (The Cochin International Airport Limited (CIAL) has launched ‘Operation Pravaah’)
  • சியால் ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு உள்ளூர் சுய-அரசாங்கங்களுடன் தொடங்கியுள்ள வெள்ளத் தணிப்பு திட்டங்களை ஒருங்கிணைக்க இது ஒரு பன்முக உள்கட்டமைப்பு திட்டமாகும்.
129 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட மரநாய்:
  • ஓடிசாவின் சட்கோசிய புலிகள் காப்பகத்தில், 129 ஆண்டுகளுக்கு பிறகு “மரநாய்” ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (an albino common palm civet has made a comeback in Odisha after 129 years)
  • இதன் அறிவியல் பெயர் = Paradoxurus hermaphrodites

 

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY 5, 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY 4, 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY 3, 2021

 

 

 

 

Leave a Reply