TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 7, 2021
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 7, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 7, 2௦21 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்:
- சர்வதேச விமானசேவை கவுன்சில் சார்பில், 2௦2௦ ஆம் ஆண்டின் “சிறந்த செயல்பாடு விருது”, இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டது (Kempogowda International Airport, Bengaluru got “Roll of Excellence” for the year 2020)
- விமானப் பயணிகள் சேவையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
மாட்டு சாணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட பெயின்ட்:
- மத்திய காதி அமைச்சகத்தின் சார்பில், மாட்டு சாணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெயின்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- “Khadi prakritk paint” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பெயின்ட்டை, பிரபலப்படுத்தும் விதமாக, இதன் விளம்பர தூதராக “மத்திய அமைச்சர் நிதின் கட்காரி” தன்னை தானே நியமித்து கொண்டார் (Nitin Gadkari becomes “Brand Ambassador” of Khadi Prakritk Paint)
மகேந்திரா நிறுவனத்தின் “வேசின் லெட்ஜர்”:
- இந்தியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான, “மகேந்திரா”, ச்டாட்விக் நிறுவனத்துடன் சேர்ந்து, “வேசின் லெட்ஜர்” (VACCINE LEGDER) எனப்படும் “தடுப்பூசி கண்காணிப்பு தளத்தை” உருவாக்கி டிஜிட்டல முறையில் கண்காணிப்பு செய்வதாகும் (A DIGITAL SUPPLY CHAIN PROVIDER TO IMPLEMENT ‘VACCINE LEDGER”, A GLOBAL VACCINE TRACKER PLATFORM)
- தடுப்பூசி கொள்முதல் உட்பட பல விவரங்களில் வெளிப்படைத் தன்மை கொண்டு வருவதே இந்தன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவின் முதல் UPI அடிப்படையிலான பணமில்லா பார்கிங்:
- டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் சார்பில், “காஸ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில்”, இந்தியாவின் முதல் UPI அடிப்படையிலான பணமில்லா பார்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது (INDIA’S FIRST UPI BASED CASHLESS PARKING FACILITY AT THE KASHMERE GATE METRO STATION)
- “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
உலக சாக்லேட் தினம்:
- உலக சாக்லேட் தினம் ஆண்டு தோறும் ஜூலை 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது / WORLD CHOCOLATE DAY, JULY 7
- நம் வாழ்க்கையுடன் சாக்லேட் ஒன்றி இருப்பதை இந்நாள் எடுத்துக்கூறுகிறது.
திலிப் குமார் மறைவு:
- பிரபல இந்தி நடிகர், “திலிப் குமார்” 98 வயதில் இன்று காலமானார்.
- அவரின் இயற் பெயர் = மொகமது யூசப் கான்
- பாலிவுட்டின் சோக மன்னர் (TRAGEDY KING OF BOLLYWOOD) என்று பிரபலமாக அறியப்பட்டார்.
- 1998 ஆம் ஆண்டு “குய்லா” என்னும் படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.
- 1954 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதினை (He was the first actor to win the Filmfare Award for Best Actor in 1954) பெற்ற முதல் நடிகர் இவராவார். இவ்விருதை இவர் 8 முறை வென்றுள்ளார்.
இந்திய கிக்பாக்சிங் கூட்டமைப்பிற்கு அங்கீகாரம்:
- இந்தியாவில் கிக் பாக்ஸிங் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் வாக்கோ இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்புக்கு, தேசிய விளையாட்டு கூட்டமைப்பு (NSF) அங்கீகாரம் வழங்க இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது (WAKO INDIA KICKBOXING GETS GOVERNMENT RECOGNITION)
“போஸ்ட்பெயிட் மினி” திட்டத்தை துவக்கிய பேடிஎம்:
- ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.250 முதல் ரூ.1,000 வரையிலான கடன்களை, பயனர்களுக்கு வழங்கும் வாய்ப்பளிக்கும் “போஸ்ட்பெய்ட் மினி” என்ற திட்டத்தை பேடிஎம் அறிவித்துள்ளது (PAYTM HAS ANNOUNCED THE LAUNCH OF POSTPAID MINI, SMALL-TICKET LOANS THAT WILL GIVE USERS THE FLEXIBILITY TO ACCESS LOANS)
- இது சிறிய டிக்கெட் கடன்கள் பயனர்களுக்கு கடன்களை அணுகுவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்கும்
கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகம்:
- இந்திய கூட்டுறவு இயக்கத்தை உயர்த்துவதற்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நிரப்புதலுக்கும் அரசாங்கம் “கூட்டுறவு அமைச்சகத்தை” உருவாக்கியுள்ளது (The government has created a Ministry of Cooperation to boost the Indian cooperative movement and give a fillip to the indigenous enterprises)
- இந்த அமைச்சகம் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த தனி நிர்வாக, சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்கும்
- “Sahkar se Samriddhi’ என்று கூறப்படும் “செழிப்புக்கான ஒத்துழைப்பு மூலம்” என்ற மந்திரத்துடன் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 2௦11 ஆம் ஆண்டு 97-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், கூட்டுறவு அமைப்புகளுக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது
- விதி 19(1)(C) = கூட்டுறவு சங்கங்களை அமைத்தல் ஒரு அடிப்படை உரிமையாகும்
- இந்தியாவின் முதல் கூட்டுறவு துறை (INDIA’S FIRST MINISTER OF MINISTRY OF CO-OPERATION) அமைச்சர் = அமித் ஷா ஆவார்
“மத்சிய சேது” மொபைல் செயலி:
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், “மத்சிய சேது” (மீன் பாலம்) என்ற ஆன்லைன் பாடத்திட்ட மொபைல் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் (Union Minister for Fisheries, Animal Husbandry and Dairying, launched the Online Course Mobile App “Matsya Setu”)
- நோக்கம் = ஆன்லைன் பாடத்திட்ட பயன்பாடு நாட்டின் அக்வா (நீரியல்) விவசாயிகளுக்கு சமீபத்திய நன்னீர் மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்களை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
- இந்த மொபைல் செயலியை வடிவமைத்தது = புவனேஷ்வரில் உள்ள மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் / CENTRAL INSTITUTE OF FRESHWATER AQUACULTURE, BHUVANESHWAR
சூப்பர்மேன் பட இயக்குனர் காலமானார்:
- உலக புகழ் பெற்ற “சூப்பர்மேன்” படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் “ரிச்சர்ட் டோன்னர்” காலமானார்.
- அவருக்கு வயது 91.
1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்த ஜி.எஸ்.டி வரிவசூல்:
- ஜூன் 2௦21 ஆம் மாதம், நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல், 92,849 கோடியாகும். இதற்கு முன் மே 2௦21 ஆம் மாதம் வரி வசூல் 1,02,709 கொடியாக இருந்தது.
- ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை அதிகபட்சமாக ஏப்ரல் 2௦21 ஆம் மாதம் 1,41,000 வரி வசூல் செய்யப்பட்டது.
கூகுளின் துணை நிறுவனத்தின் தலைவராக “நேகா பரிக்” நியமனம்:
- தொழில்நுட்ப ஜாம்பவானான “கூகுள்” நிறுவனத்தின் துணை நிறுவனமான “WAZE” நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்கரான “நேகா பரிக்” நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- WAZE என்பது கூட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஜி.பி.எஸ் வழிகாட்டும் மொபைல் செயலியாகும். இது 56 மொழிகளில் செயல்படுகிறது (a crowd-sourced GPS navigation app “WAZE”)
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னல் திட்டம்:
- டிஜிட்டல் ஏகபோகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மதிய அரசு 9 பேர் கொண்ட குழுவினை அமைத்து “டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னல்” உருவாக்க உள்ளது (a nine-member panel for the development of an Open Network for Digital Commerce (ONDC), designed to curb digital monopolies)
- இக்குழுவின் இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நீல்கோனி உள்ளார்.
டி.ஆர்.டி.ஒ மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்:
- டி.ஆர்.டி.ஒ எனப்படும் இந்திய ராணுவ பாதுகாப்பு அராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- DRDO = DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION
- DIPAS = DEFENCE INSTITUTE OF PHYSIOLOGY AND ALLIED SCIENCES, DELHI
- டி.ஆர்.டி.ஒ-வின் “பாதுகாப்பு உடலியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம்” (DIPAS) உடன் சேர்ந்து கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஈடுபட உள்ளது
அமெரிக்காவின் இந்தியாவிற்கான இடைகாலத் தூதர்:
- அமெரிக்காவின் இந்தியாவிற்கான இடைக்காலத் தூதராக (INTERIM ENVOY TO INDIA), “அதுல் கேஷாப்” நியமனம் செய்து அமெரிக்கக் அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் “சீ ப்ரேக்கர்” ஏவுகணை அமைப்பு:
- இஸ்ரேல் நாட்டின் ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள, “சீ பிரேக்கர்”, 5 வது தலைமுறை நீண்ட தூர, தன்னாட்சி, துல்லியமாக வழிநடத்தும் ஏவுகணை அமைப்பு ஆகும். இது நிலம் மற்றும் நீர் இலக்குகளை துல்லியமாக தாக்கும் (Sea Breaker, the 5th generation long range, autonomous, precision-guided missile system, is meant to hit high-value maritime and land targets)
- இது 3௦௦ கிலோமீட்டர் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
சி-டாக் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள சி.ஆர்.பி.எப்:
- சி.ஆர்.பி.எப் எனப்படும் மத்திய ரிசர்வ காவல் படையானது, சி-டாக் எனப்படும் “உயர்தர கணினி மேம்பாட்டு மையத்துடன்” புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- CRPF = CENTRAL RESERVE POLICE FORCE
- C-DAC = CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING
- சி.ஆர்.பி.எப்பில் வீரர்களுக்கு, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கவும்,, இணைந்து கூட்டுத் திட்டங்களை உருவாக்கும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலாய் லாமா பிறந்த தினம், ஜூலை 6:
- உலகில் உள்ள திபத்திய புத்தமத மக்களால் தெய்வமாக போற்றப்படும் “தலாய் லாமாமின்” பிறந்த தினம் ஜூன் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
- இவர் 14-வது தலாய் லாமா ஆவார்.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு:
- ஐக்கிய நாடுகளின் 26 வது காலநிலை மாற்ற மாநாட்டில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இது ஸ்காட்லாந்து நாட்டின் “கிளாஸ்கோ” நகரில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது (THE WORLD LEADERS SUMMIT AT THE 26THUN CLIMATE CHANGE CONFERENCE OF THE PARTIES (COP26) WILL BE HELD IN GLASGOW ON NOVEMBER 1-2, 2021)
- இவ்வமைப்பின் தற்போதய தலைவராக, இந்தியாவை சேர்ந்த “அலோக் ஷர்மா” உள்ளார்
கொரனாவால் இறந்தவர்களின் சாம்பலின் மூலம் தாவரம் வளர்ப்பு:
- மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரத்தில் உள்ள, “:பத்ததா தகன மையத்தில்” கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சாம்பலை கொண்டு தாவரங்களை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது (BHOPAL’S BHADBHADA CREMATORIUM HAS DECIDED TO USE THEMORTAL REMAINS OF COVID VICTIMS LEFT AFTER CREMATION AS FERTILIZER FOR THE PLANTATION ON THE CAMPUS)
- சுமார் 12௦௦௦ சதுர அடி நிலப்பரப்பில் 35௦௦ மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பொது நிறுவனங்கள் துறை:
- நிதி அமைச்சகத்தின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது (GOVERNMENT BRINGS DEPARTMENT OF PUBLIC ENTERPRISES UNDER UNION FINANCE MINISTRY)
- இதற்கான விவரம், இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது
தனித்துவமான அரோராக்கள் (துருவ விளக்குகள்):
- ஐக்கிய அரபு அமீரகத்தின் “ஹோப்” விண்வெளி ஆய்வகம் செவ்வாய் கிரகத்தில் இருந்து “தனித்துவமான அரோராக்களை” (துருவ விளக்குகள்) புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி உள்ளது (THE UAE’S HOPE SPACECRAFT CAPTURED IMAGES OF DISCRETE AURORAS, WHICH ARE GLOWING ATMOSPHERIC LIGHTS IN THE NIGHT SKY OF MARS
- “ஹோப்” விண்கலம், அரேபிய நாடுகளின் முதல் செவ்வாய் கிரக முயற்சியாகும்.
“ரியுகு” குறுங்கோள்:
- “ரியுகு” குறுங்கோளின் முதல் மாதிரியை நாசா பெற்றுள்ளது. ஜப்பானின் “ஹயபுசா 2 விண்கலம்” பூமிக்கு இக்குறுங்கோளின் மாதிரியை கொண்டுவந்துள்ளது (NASA RECEIVED ITS FIRST SAMPLE OF ASTEROID RYUGU, WHICH WAS RETURNED TO EARTH BY JAPAN’S HAYABUSA-2 SPACECRAFT)
- வைர வடிவில் உள்ள இப்பறை (DIAMAOND SHAPED ROCK), பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே சுற்றிக் கொண்டு உள்ளது. இக்கோளில் கார்பன் மற்றும் நீர் (CARBON AND WATER) அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரி மின் திட்டம்:
- வங்கதேசத்தின் ராம்பால் என்னுமிடத்தில் இந்தியாவின் துணையுடன் கட்டப்பட்டு வரும் “மைத்திரி மின் நிலையம்” (MAITREE POWER PLANT), டிசம்பர் மாதம் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத “சூப்பர்கிரிடிக்கல் தொழில்நுட்பத்துடன்” (SUPERCRITICAL TECHNOLOGY) உருவாக்கப்பட்டு வருகிறது
- இதனை நிர்மாணிப்பது, “வங்கதேச இந்திய நட்புறவு ஆற்றல் கம்பெனி” (BANGLADESH INDIA FRIENDSHIP POWER PLANT) ஆகும்
சர் செத்தூர் சங்கரன் நாயர்:
- சர் செத்தூர் சங்கரன் நாயர் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
- கேரளாவின் மலபார் பகுதியில் பிறந்த இவர், 1897 ஆம் ஆண்டு 13-வது காங்கிரஸ் மாநாட்டின் (இடம் – அமராவதி) தலைவராக பதவி வகித்தார். அப்பொழுது இளம் வயதில் காங்கிரஸ் மாநாடு தலைவராக பதவி ஏற்றவர் இவரே. காங்கிரஸ் மாநாடு தலைவராக இருந்த ஒரே மலையாளி இவரே ஆவார்.
- 1908 ஆம் ஆண்டு மதராஸ் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவி பெற்றார்
- 1912 ஆம் ஆண்டு இவருக்கு நைட்விட பட்டம் வழங்கப்பட்டது
ஹைதராபாத்தின் அசார் மக்சூசி – இங்கிலாந்து விருது:
- ஹைத்ராபாத் நகரை சேர்ந்த சமூக ஆர்வலாரன, அசார் மக்சூசியால் துவக்கப்பட்ட “பசிக்கு மதம் தெரியாது” (HUNGER HAS NO RELIGION) என்ற இயக்கத்தின் மூலம் நாள்தோறும் 15௦௦ மேற்பட்டோருக்கு உணவளித்து வருகிறார்
- இவருக்கு இங்கிலாந்தின் UNITED KINGDOM COMMONWEALTH POINTS OF LIGHT AWARD என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது
தாகூர் சர்வதேச திரைப்பட திருவிழா:
- மேற்குவங்க மாநிலத்தின் போல்பூரில் நடைபெற்ற தாகூர் சர்வதேச திரைப்பட திருவிழாவில் (TAGORE INTERNATIONAL FILM FESTIVAL), ஹரியான மாநில குருக்ராமில் உள்ள “இஸ்கான்” அமைப்பின் துறவிகள் உருவாக்கிய 11 நிமிட குறும்படத்திற்கு SUN OF THE EAST AWARD என்ற விருது வழங்கப்பட்டது
- கொரோனா 2 ஆம் அலையை எதிர்கொள்வது பற்றியது இக்குறும்படம்
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 6, 2௦21
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 5, 2௦21
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 4, 2௦21