TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 04
TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 04 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் 65% பேர் மொபைல் பயன்படுத்துகின்றனர்
- வி ஆர் சோஷியல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் “டிஜிட்டல் 2021: அக்டோபர் குளோபல் ஸ்னாப்ஷாட்” (DIGITAL 2021: OCTOBER GLOBAL SNAPSHOT) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
- அறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 65% க்கும் அதிகமானோர் இப்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துகின்றனர்.
சர்தார் படேல் தலைமைத்துவ மையம்
- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முசோரியில் (உத்தரகாண்ட்) லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) “சர்தார் படேல் தலைமைத்துவ மையத்தை” நாட்டுக்கு அர்ப்பணித்தார் / UNION MINISTER DR JITENDRA SINGH HAS DEDICATED TO THE NATION “SARDAR PATEL LEADERSHIP CENTRE” AT LAL BAHADUR SHASTRI NATIONAL ACADEMY OF ADMINISTRATION (LBSNAA) IN MUSSOORIE (UTTARAKHAND).
- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் அக்டோபர் 31, 2021 அன்று ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் விழாவில் இந்த வசதி மையம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தியாவின் தேசிய ஃபார்முலரியின் (NFI) 6வது பதிப்பு
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் சார்பில், இந்தியாவின் தேசிய ஃபார்முலரியின் (NFI) 6வது பதிப்பு துவக்கி வைக்கப்பட்டது / UNION MINISTER FOR HEALTH, LAUNCHED THE 6TH EDITION OF NATIONAL FORMULARY OF INDIA (NFI)
- இது NFI 2021, மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் வழிகாட்டுதல் ஆவணமாக செயல்படும்
GREENLAKE ECOSYSTEM PARTNER OF THE YEAR விருது
- 2021 ஆம் ஆண்டின் GREENLAKE ECOSYSTEM PARTNER OF THE YEAR விருது “டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு” வழங்கப்பட்டது / TATA CONSULTANCY SERVICES (TCS) HAS WON THE 2021 HEWLETT PACKARD ENTERPRISE (HPE) GREENLAKE ECOSYSTEM PARTNER OF THE YEAR AWARD.
- பிரபல மென்பொருள் நிறுவனமான HP நிறுவனம் சார்பில் இவ்விருது டாடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
பாரத ஸ்டேட் வங்கியின் “SBI ஈஸி ரைட்” கடன் திட்டம்
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அதன் YONO தளத்தின் மூலம் ‘SBI ஈஸி ரைடு’ என்ற பெயரில் முன்-அங்கீகரிக்கப்பட்ட இரு சக்கர வாகனக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது / STATE BANK OF INDIA (SBI) HAS LAUNCHED A PRE-APPROVED TWO-WHEELER LOAN SCHEME NAMED ‘SBI EASY RIDE’, THROUGH ITS YONO PLATFORM
- குறைந்த பட்ச கடன் தொகை ₹20,000 உடன் அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 5% போட்டி வட்டி விகிதத்தில் ₹3 லட்சம் வரையிலான ஈஸி ரைடு கடனுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
அபய் கரண்டிகர் குழு
- இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI – SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) சார்பில் 7 பேர் கொண்ட தகவல் தொழில்நுட்பத் திட்ட ஆலோசனைக் குழு (IT-PAC – IT PROJECTS ADVISORY COMMITTEE) உருவாக்கப் பட்டுள்ளது
- இக்குழுவின் தலைவராக கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) இயக்குநரான டாக்டர் அபய் கரண்டிகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
“நீலக்கொடி 2021” சர்வதேச போர் பயிற்சி நிகழ்ச்சி
- இஸ்ரேலின் ஓவ்டா ஏர்பேஸில், இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 விமானப் படையுடன் இணைந்து, “ப்ளூ ஃபிளாக் 2021” (நீலக்கொடி 2021 / BLUE FLAG 2021) என்ற சர்வதேச பன்முகப் போர்ப் பயிற்சியில் மொத்தம் 84 இந்திய விமானப்படை (IAF – INDIAN AIR FORCE) வீரர்கள் பங்கேற்றனர்.
- பயிற்சியின் கரு = INTEGRATION OF FOURTH AND FIFTH-GENERATION AIRCRAFT IN COMPLEX OPERATIONAL SCENARIOS.
சர்வதேச ஒரு சுகாதார தினம்
- சர்வதேச ஒரு சுகாதார (ஆரோக்கிய) தினம் (ONE HEALTH DAY) உலகம் முழுவதும் நவம்பர் 3 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது
- இது ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும், இது மனித-விலங்கு-சுற்றுச்சூழல் இடைமுகத்தில் பகிரப்பட்ட சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒரு ஆரோக்கிய அணுகுமுறையின் அவசியத்தை கூறுகிறது
- ஒரு சுகாதார ஆணையம், ஒரு சுகாதார தளம் மற்றும் ஒரு சுகாதார முன்முயற்சி குழு ஆகியவற்றால் 2016 இல் இந்த நாள் தொடங்கப்பட்டது / THE DAY WAS INITIATED IN 2016 BY THE ONE HEALTH COMMISSION, THE ONE HEALTH PLATFORM, AND THE ONE HEALTH INITIATIVE TEAM.
- இந்த ஆண்டிற்கான கரு = INDUSTRY AND ONE HEALTH
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையயே முதல் நாடுகடந்த சோலார் கிரிட் திட்டம்
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் உலகின் முதல் நாடுகடந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய சக்தி கட்டங்களுக்கான திட்டத்தை (FIRST TRANSNATIONAL SOLAR GRID PLAN) வெளியிட்டனர்
- இத்திட்டத்தினை “பசுமை கட்டங்கள் முன்முயற்சி” (GREEN GRIDS INITIATIVE) என்பர்
- இது “ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டம்” (ONE SUN ONE WORLD ONE GRID) என்ற பிரதமரின் கனவுத் திட்டமாகும்.
- கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 என்றும் அழைக்கப்படும் ஐநா காலநிலை மாநாட்டில் இது வெளியிடப்பட்டது.
புக்கர் பரிசு 2021
- தென்னாப்பிரிக்க எழுத்தாளர் டாமன் கல்கட் தனது தி ப்ராமிஸ் நாவலுக்காக 2021 புக்கர் பரிசை வென்றுள்ளார் / DAMON GALGUT WINS 2021 BOOKER PRIZE FOR HIS NOVEL ‘THE PROMISE’
- 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் வெற்றி வாய்ப்பை இழந்த இவர் தற்போது 3-வது முறையில் வெற்றி பெற்றுள்ளார்
- குறிப்பு,
- புக்கர் விருதை வென்ற முதல் இந்திய வம்சாவழி நபர் = வி.எஸ்.நைபால் (A FREE STATE IN 1971)
- புக்கர் விருதை வென்ற முதல் குடிமகன் = அருந்ததி ராய் (THE GOD OF SMALL THINGS IN 1997)
- புக்கர் விருதை வென்ற முதல் இந்திய வம்சாவளியை கொண்ட பிரிட்டிஷ் இந்தியர் = சல்மான் ருஷ்டி (MIDNIGHTS CHILDRENS IN 1981)
- குறிப்பு,
- 2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு (BOOKER PRIZE 2021 FOR FICTION) = டாமன் கல்கட்
- 2021 ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு (INTERNATIONAL BOOKER PRIZE FOR 2021) = டேவிட் டியோப்
இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமனம் செய்துள்ளது / BCCI APPOINTS RAHUL DRAVID AS HEAD COACH OF INDIAN MEN’S TEAM
- டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பணியாற்றி வந்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 03
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 02
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 01
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 31
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 30