TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 04 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் 65% பேர் மொபைல் பயன்படுத்துகின்றனர்
வி ஆர் சோஷியல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் “டிஜிட்டல் 2021: அக்டோபர் குளோபல் ஸ்னாப்ஷாட்” (DIGITAL 2021: OCTOBER GLOBAL SNAPSHOT) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 65% க்கும் அதிகமானோர் இப்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துகின்றனர்.
சர்தார் படேல் தலைமைத்துவ மையம்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முசோரியில் (உத்தரகாண்ட்) லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) “சர்தார் படேல் தலைமைத்துவ மையத்தை” நாட்டுக்கு அர்ப்பணித்தார் / UNION MINISTER DR JITENDRA SINGH HAS DEDICATED TO THE NATION “SARDAR PATEL LEADERSHIP CENTRE” AT LAL BAHADUR SHASTRI NATIONAL ACADEMY OF ADMINISTRATION (LBSNAA) IN MUSSOORIE (UTTARAKHAND).
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் அக்டோபர் 31, 2021 அன்று ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் விழாவில் இந்த வசதி மையம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தியாவின் தேசிய ஃபார்முலரியின் (NFI) 6வது பதிப்பு
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் சார்பில், இந்தியாவின் தேசிய ஃபார்முலரியின் (NFI) 6வது பதிப்பு துவக்கி வைக்கப்பட்டது / UNION MINISTER FOR HEALTH, LAUNCHED THE 6TH EDITION OF NATIONAL FORMULARY OF INDIA (NFI)
இது NFI 2021, மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் வழிகாட்டுதல் ஆவணமாக செயல்படும்
GREENLAKE ECOSYSTEM PARTNER OF THE YEAR விருது
2021 ஆம் ஆண்டின் GREENLAKE ECOSYSTEM PARTNER OF THE YEAR விருது “டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு” வழங்கப்பட்டது / TATA CONSULTANCY SERVICES (TCS) HAS WON THE 2021 HEWLETT PACKARD ENTERPRISE (HPE) GREENLAKE ECOSYSTEM PARTNER OF THE YEAR AWARD.
பிரபல மென்பொருள் நிறுவனமான HP நிறுவனம் சார்பில் இவ்விருது டாடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
பாரத ஸ்டேட் வங்கியின் “SBI ஈஸி ரைட்” கடன் திட்டம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அதன் YONO தளத்தின் மூலம் ‘SBI ஈஸி ரைடு’ என்ற பெயரில் முன்-அங்கீகரிக்கப்பட்ட இரு சக்கர வாகனக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது / STATE BANK OF INDIA (SBI) HAS LAUNCHED A PRE-APPROVED TWO-WHEELER LOAN SCHEME NAMED ‘SBI EASY RIDE’, THROUGH ITS YONO PLATFORM
குறைந்த பட்ச கடன் தொகை ₹20,000 உடன் அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 5% போட்டி வட்டி விகிதத்தில் ₹3 லட்சம் வரையிலான ஈஸி ரைடு கடனுக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
அபய் கரண்டிகர் குழு
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI – SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA) சார்பில் 7 பேர் கொண்ட தகவல் தொழில்நுட்பத் திட்ட ஆலோசனைக் குழு (IT-PAC – IT PROJECTS ADVISORY COMMITTEE) உருவாக்கப் பட்டுள்ளது
இக்குழுவின் தலைவராக கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) இயக்குநரான டாக்டர் அபய் கரண்டிகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
“நீலக்கொடி 2021” சர்வதேச போர் பயிற்சி நிகழ்ச்சி
இஸ்ரேலின் ஓவ்டா ஏர்பேஸில், இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 விமானப் படையுடன் இணைந்து, “ப்ளூ ஃபிளாக் 2021” (நீலக்கொடி 2021 / BLUE FLAG 2021) என்ற சர்வதேச பன்முகப் போர்ப் பயிற்சியில் மொத்தம் 84 இந்திய விமானப்படை (IAF – INDIAN AIR FORCE) வீரர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியின் கரு = INTEGRATION OF FOURTH AND FIFTH-GENERATION AIRCRAFT IN COMPLEX OPERATIONAL SCENARIOS.
சர்வதேச ஒரு சுகாதார தினம்
சர்வதேச ஒரு சுகாதார (ஆரோக்கிய) தினம் (ONE HEALTH DAY) உலகம் முழுவதும் நவம்பர் 3 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது
இது ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும், இது மனித-விலங்கு-சுற்றுச்சூழல் இடைமுகத்தில் பகிரப்பட்ட சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒரு ஆரோக்கிய அணுகுமுறையின் அவசியத்தை கூறுகிறது
ஒரு சுகாதார ஆணையம், ஒரு சுகாதார தளம் மற்றும் ஒரு சுகாதார முன்முயற்சி குழு ஆகியவற்றால் 2016 இல் இந்த நாள் தொடங்கப்பட்டது / THE DAY WAS INITIATED IN 2016 BY THE ONE HEALTH COMMISSION, THE ONE HEALTH PLATFORM, AND THE ONE HEALTH INITIATIVE TEAM.
இந்த ஆண்டிற்கான கரு = INDUSTRY AND ONE HEALTH
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையயே முதல் நாடுகடந்த சோலார் கிரிட் திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் உலகின் முதல் நாடுகடந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய சக்தி கட்டங்களுக்கான திட்டத்தை (FIRST TRANSNATIONAL SOLAR GRID PLAN) வெளியிட்டனர்
இது “ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு கட்டம்” (ONE SUN ONE WORLD ONE GRID) என்ற பிரதமரின் கனவுத் திட்டமாகும்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 என்றும் அழைக்கப்படும் ஐநா காலநிலை மாநாட்டில் இது வெளியிடப்பட்டது.
புக்கர் பரிசு 2021
தென்னாப்பிரிக்க எழுத்தாளர் டாமன் கல்கட் தனது தி ப்ராமிஸ் நாவலுக்காக 2021 புக்கர் பரிசை வென்றுள்ளார் / DAMON GALGUT WINS 2021 BOOKER PRIZE FOR HIS NOVEL ‘THE PROMISE’
2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் வெற்றி வாய்ப்பை இழந்த இவர் தற்போது 3-வது முறையில் வெற்றி பெற்றுள்ளார்
குறிப்பு,
புக்கர் விருதை வென்ற முதல் இந்திய வம்சாவழி நபர் = வி.எஸ்.நைபால் (A FREE STATE IN 1971)
புக்கர் விருதை வென்ற முதல் குடிமகன் = அருந்ததி ராய் (THE GOD OF SMALL THINGS IN 1997)
புக்கர் விருதை வென்ற முதல் இந்திய வம்சாவளியை கொண்ட பிரிட்டிஷ் இந்தியர் = சல்மான் ருஷ்டி (MIDNIGHTS CHILDRENS IN 1981)
குறிப்பு,
2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு (BOOKER PRIZE 2021 FOR FICTION) = டாமன் கல்கட்
2021 ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு (INTERNATIONAL BOOKER PRIZE FOR 2021) = டேவிட் டியோப்
இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமனம் செய்துள்ளது / BCCI APPOINTS RAHUL DRAVID AS HEAD COACH OF INDIAN MEN’S TEAM
டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பணியாற்றி வந்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்