TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16- TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16 நவம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தூய தமிழ் பற்றாளர் விருது

  • தமிழக அரசால் நிறுவப்பட்ட தூய தமிழ்ப் பற்றாளர் விருது, மேலூரைச் சேர்ந்த 18 வயது மாணவர் வி வரதராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அன்றாட வாழ்வில் தூய தமிழைப் பயன்படுத்துபவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருது நிறுவப்பட்டது.
  • ஓசூரில் தமிழாசிரியராகப் பணியாற்றியவரும், 25 நூல்களுக்கு மேல் எழுதியவரும், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவருமான பாவலர் கருமலைத் தமிழனாருக்கு 2020-ஆம் ஆண்டு ஆண்டிற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார நாடு

  • அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடு என்ற அந்தஸ்தை சீனா கைப்பற்றி உள்ளது
  • மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணை ப்பாளர் நியமனம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16

  • ஐக்கிய நாடுகள் சபையானது, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிலையான வளர்ச்சி நிபுணரான ஷோம்பி ஷார்ப் என்பவரை இந்தியாவில் வதிவிட ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது / UN APPOINTS SHOMBI SHARP AS RESIDENT COORDINATOR IN INDIA
  • இவர் இதற்கு முன்னர் ஆர்மீனிய நாட்டிற்கான வதிவிட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்

தேசிய பத்திரிகை தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16

  • பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா செயல்படத்துவங்கிய தினமான நவம்பர் 16ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ‘தேசிய பத்திரிகை தினம்’ (NATIONAL PRESS DAY) ஆக கொண்டாடப்படுகிறது
  • சட்டப்பூர்வ மற்றும் அரை-நீதித்துறை நிறுவனமான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை அங்கீகரித்து கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது.

எகுஷே பதக் விருது பெற்ற வங்கதேச எழுத்தாளர் ஹசன் அஜிசுல் ஹக் காலமானார்

  • வங்கதேசத்தின் புகழ்பெற்ற லஐதாளரும் எகுஷே பதக் விருது பெற்றவருமான ஹசன் அஜிசுல் ஹக் காலமானார் / EKUSHEY PADAK AWARDEE, WRITER HASAN AZIZUL HAQUE PASSES AWAY
  • இவர் அந்நாட்டின் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரும் இலக்கியவாதியும் ஆவார். ஹசன் அஜிசுல் ஹக் 1999 இல் எகுஷே பதக்கையும், 2019 இல் நாட்டின் உயர்மட்ட சிவிலியன் கௌரவமான சுதந்திர விருதையும் பெற்றார்.

பூர்வாஞ்சல் விரைவுச் சாலை

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16

  • உத்திரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கர்வால் கேரியில், பூர்வாஞ்சல் அதிவிரைவு சாலையை பிரதமர் துவக்கி வைத்தார்
  • பூர்வாஞ்சல் விரைவுச்சாலை 341 கிமீ நீளம் கொண்டது. இது சௌத்சராய் கிராமத்தில் தொடங்கி ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது
  • இச்சாலையில் இந்திய விமானப் படையின் விமானங்கள் இறங்க ஏதுவாக 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு விமான சாலை கட்டப்பட்டுள்ளது

இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து SITMEX-21 பயிற்சியைத் துவங்கின

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16

  • இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் முத்தரப்பு கடல்சார் பயிற்சியான SITMEX – 21 இன் 3வது பதிப்பில், அந்தமான் கடலில் துவங்கியது / INDIA, SINGAPORE, THAILAND BEGIN TRILATERAL EXERCISE SITMEX-21
  • இப்பயிற்சியில் இந்தியாவின் சார்பில் INS கர்முக் கலந்துக் கொண்டது
  • முதல் SITMEX செப்டம்பர் 2019 இல் போர்ட் பிளேரில் இந்திய கடற்படையால் நடத்தப்பட்டது.

யுனெஸ்கோவின் 75வது ஆண்டு விழா

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 16

  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனஸ்கோ அமைப்பு உருவாக்கப்பட்டு 75-வது ஆண்டு விழாவினை நவம்பர் 16 ஆம் தேதி கண்டுள்ளது / 16 NOVEMBER 2021 MARKED THE 75TH ANNIVERSARY OF UNESCO (UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC, AND CULTURAL ORGANIZATION).
  • யுனெஸ்கோ 1945 இல் லண்டன், இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்சின் பாரிஸில் உள்ளது
  • யுனெஸ்கோவின் முக்கிய நோக்கம் கல்வி, அறிவியல், கலாச்சாரம் மூலம் நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பங்களிப்பதாகும்.

இந்தியாவின் முதல் புல் பாதுகாப்பு மையம்

  • இந்தியாவின் முதல் புல் பாதுகாப்பு மையம் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தின் ராணிகேட்டின் காளிகா வன ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது / INDIA GETS FIRST ‘GRASS CONSERVATORY’ IN UTTARAKHAND’S ALMORA DISTRICT
  • அறிவியல், சுற்றுச்சூழல், மருத்துவம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையத்தில் சுமார் 90 வகையான புல் வகைகள் வளர்க்கப்படுகின்றன.

சர்வதேச சகிப்புத்தன்மை தினம்

  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 16ம்தேதி (INTERNATIONAL DAY FOR TOLERANCE) ஐக்கிய நாடுகள் சபை சார்பில் சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், சமூகத்தின் சகிப்புத்தன்மைக்கான அவசியத்தை வலியுறுத்தவும் இந்தநாள் அனுசரிக்கப்படுகிறது.
  • யுனெஸ்கோ, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதற்காக மதன்ஜீத் சிங் விருதையும் உருவாக்கியுள்ளது / UNESCO HAS ALSO CREATED THE MADANJEET SINGH PRIZE FOR THE PROMOTION OF TOLERANCE AND NON-VIOLENCE

முதல் தணிக்கை தினம்

  • இந்தியாவில் முதல் தணிக்கை தினம் 16 நவம்பர் 2021 அன்று, இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது / FIRST AUDIT DIWAS WILL BE OBSERVED AT THE COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA (CAG) OFFICE PREMISES
  • இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
  • CAG அமைப்பின் வரலாற்று தோற்றம் மற்றும் நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு அது அளித்த பங்களிப்பைக் குறிக்கும் வகையில் தணிக்கை திவாஸ் கொண்டாடப்படும்.

இந்தியா அண்டார்டிகாவிற்கு 41வது அறிவியல் பயணத்தை துவக்கியது

  • இந்தியா 15 நவம்பர் 2021 அன்று அண்டார்டிகாவிற்கு 41 வது அறிவியல் பயணத்தை தொடங்கியது / INDIA ON 15 NOVEMBER 2021 LAUNCHED THE 41ST SCIENTIFIC EXPEDITION TO ANTARCTICA.
  • 41வது பயணம் இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது.
  • முதல் திட்டம் பாரதி நிலையத்தில் உள்ள அமெரி பனி அடுக்குகளின் புவியியல் ஆய்வுகளை உள்ளடக்கியது.
  • இரண்டாவது திட்டமானது உளவு ஆய்வுகள் மற்றும் மைத்ரிக்கு அருகில் 500 மீட்டர் பனிக்கட்டியை துளையிடுவதற்கான ஆயத்த வேலைகளை உள்ளடக்கியது.
  • இந்திய அண்டார்டிக் திட்டம் 1981 இல் தொடங்கியது.

அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பட்டாம்பூச்சியாக “கெய்சர்-இ-ஹிந்த்” தேர்வு

  • அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பட்டாம் பூச்சியாக Teinopalpus imperialis எனப்படும் “கெய்சர்-இ-ஹிந்த்” தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • கெய்சர்-இ-ஹிந்த் என்பதற்கு இந்தியாவின் பேரரசர் என்று பொருளாகும். பட்டாம்பூச்சி 90-120 மிமீ இறக்கைகள் கொண்டது

2021 ஜேசிபி பரிசு

  • Delhi: A Soliloquy என்ற புத்தகத்திற்காக பிரபல எழுத்தாளர் எம் முகுந்தன் 2021 ஆம் ஆண்டிற்கான ஜே.சி.பி பரிசை வென்றார் / M MUKUNDAN BAGS 2021 JCB PRIZE FOR HIS BOOK ‘DELHI: A SOLILOQUY’
  • முதலில் மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம் பாத்திமா ஈ.வி மற்றும் நந்தகுமார் கே ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசு

  • கிட்ஸ் ரைட்ஸ் சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசு இந்தியாவின் டெல்லியை செந்த 2 டீன்-ஏஜ் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது / TWO DELHI-BASED TEENAGE BROTHERS VIHAAN (17) AND NAV AGARWAL (14) HAVE WON THE 17TH ANNUAL KIDSRIGHTS INTERNATIONAL CHILDREN’S PEACE PRIZE FOR TACKLING POLLUTION
  • வீட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் தங்கள் சொந்த நகரத்தில் மாசுபாட்டைக் குறைத்ததற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது
  • சிறுவர்களின் பெயர், விஹான் (17) மற்றும் நவ் அகர்வால் (14) ஆகும்.
  • மேலும் இச்சிறுவர்கள் இந்திய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் மதிப்புமிக்க விருதை பெற்றனர்.
  • One Step Greener என்ற இயக்கத்தை துவக்கி வீட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றனர்.

முன்னாள் பாட்மிண்டன் வீரர் கோபிசந்தின் வாழ்க்கை வரலாறு புத்தகம்

  • ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் தனது சுயசரிதையான “Shuttler’s Flick: Making every match count” ஐ வெளியிட்டார் கோபிசந்த்
  • இந்த புத்தகத்தை பிரியா குமார் இணைந்து எழுதியுள்ளார்.
  • கோபிசந்த் இந்தியாவின் பிரபலமான முன்னாள் பாட்மிண்டன் வீரர் ஆவார். அவர் தற்போது ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால், பி.வி உட்பட பிரபல பேட்மிண்டன் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

துப்பாக்கி சுடுதலில் ஆசியாவுக்கான ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிப்பு

  • ஆசிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு நவம்பர் 13, 2021 அன்று, ஆசியாவுக்கான ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடங்களை 38ல் இருந்து 48 ஆக அதிகரிப்பதற்கான சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (ISSF) உறுதிமொழியை அறிவித்தது.
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ஆசியாவுக்கான 48 ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடங்கள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply