TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை

தன்வினை வாக்கியம்

 

ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை

எ.கா :  

  • முருகன் திருந்தினான்.
  • பாடம் கற்றேன்.
  • நான் நேற்று வந்தேன்.
  • கவிதா பொம்மை செய்தாள்.
  • நண்பர் வீட்டில் விருந்து உண்டான்.
  • மன்னர் நாட்டை ஆண்டார்.
  • கலையரசி பாடம் கற்றான்.
  • கண்ணன் இலக்கணம் பயின்றாள்.
  • செல்வி பாடம் கற்றாள்.

பிறவினை

ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை
எ.கா :  

  • ஆசிரியை பாடம் கற்பித்தார்.
  • அவன் திருத்தினான்.
  • ராமன் பாடம் படிப்பித்தான்.
  • கோதை நடனம் ஆட்டுவித்தாள்.
  • ஆசிரியர் பாடம் பயிற்றுவித்தார்.
  • கலையரசி பாடம் கற்பித்தான்.
  • நண்பனை விருந்து உண்பித்தேன்.
  • கவிதா பொம்மை செய்வித்தாள்.
  • தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.

தன்வினை  – பிறவினை

 

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை

  • அடங்குவது – அடக்குவது
  • ஆடினாள் – ஆட்டுவித்தாள்
  • உண்டாள் – உண்பித்தாள்
  • உருண்டான் – உருட்டினான்
  • கற்றார் – கற்பித்தார்
  • செய் – செய்வி
  • சேர்கிறேன் – சேர்க்கிறேன்
  • திருந்தினான்  – திருத்தினான்
  • தேடினான் – தேடுவித்தான்
  • நடந்தான் – நடத்தினான்
  • பயின்றான் – பயிற்றுவித்தான்
  • பாடினான் – பாடுவித்தான்
  • பெருகு – பெருக்கு
  • வாடு – வாட்டு

 

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை

செய்வினை வாக்கியம்

ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு “ஐ” எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும். சில சமயம் “ஐ” மறைந்தும் வரும்.
எழுவாய் செயப்படுபொருள் பயனிலை என்றவாறு வரும்.
(எ.கா) பாரதியார் குயில் பாட்டைப் பாடினார்.

எ.கா :  

  • அவள் மாலையைத் தொடுத்தாள்.
  • கம்பர் கம்பராமாயணத்தை இயற்றினார்.
  • கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
  • தச்சன் நாற்காலியைச் செய்தான்.
  • நான் பாடம் படித்தேன்.
  • நான் பாட்டு பாடினேன்.
  • பாரி கதவைத் திறந்தான்.
  • மக்கள் நாடகம் பார்த்தனர்.
  • மூவர் தேவாரத்தை இயற்றினார்.
  • ராதா பொம்மையைச் செய்தாள்.

செயப்பாட்டு வினை வாக்கியம்

செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு “ஆல்” என்ற 3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு “பட்டது” “பெற்றது” என்ற சொற்கள் சேர்ந்து வரும். 

கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
கல்லணை என்பது (செயப்படுபொருள்), கரிகாலனால் என்பது (எழுவாய்) மற்றும் கட்டப்பட்டது என்பது (பயனிலை).

எ.கா :  

  • கதவு பாரியால் திறக்கப்பட்டது.
  • கம்பராமாயணம் கம்பரால் இயற்றப்பட்டது.
  • தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது.
  • தேவாரம் மூவரால் இயற்றப்பட்டது.
  • நாடகம் மக்களால் பார்க்கப்பட்டது.
  • பாடல் என்னால் பாடப்பட்டது.
  • பொம்மை ராதாவால் செய்யப்பட்டது.

 

 

Leave a Reply