TNPSC TAMIL விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
TNPSC TAMIL விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
வினா
ஒருவர் ஒரு செய்தியை பற்றி தெரிந்துகொள்ள மற்றொருவரிடம் கேட்பதே வினா.
வினா ஆறு வகைகள்:
- அறிவினா
- அறியா வினா
- ஐய வினா
- கொளல் வினா
- கொடை வினா
- ஏவல் வினா
அறிவினா
அறிவினா என்பது ஒரு பொருளைப் பற்றி நமக்கு தெரிந்தவற்றை அது பிறருக்குத் தெரியுமா என அறிவதற்காக வினவுவது அறிவினா.
எ.கா:
உயிரெழுத்துகள் எத்தனை? என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்பது ஆகும்.
அறியா வினா
அறியா வினா என்பது தான் ஒரு பொருளைப் பற்றி அறியாத ஒன்றை அதை பிறரிடமிருந்து அறிந்துகொள்வதற்காக வினவுவது அறியாவினா.
எ.கா:
ஐயா இச்செய்யுளின் பொருள் யாது? என மாணவன் ஆசிரியரிடம் கேட்பதாகும்.
ஐய வினா
ஐய வினா என்பது ஒரு பொருளைப் பற்றி இதுவா, அதுவா என்று ஐயப்பட்டு ஐயத்தை நீக்கிக்கொள்ள வினவுவது ஐய வினாவாகும்.
எ.கா:
தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? அங்கே கிடப்பது பாம்போ கயிறோ?, இது நல்லதா, கெட்டதா?
கொளல் வினா
கொளல் வினா என்பது ஒரு பொருளை வாங்கும் கருத்துடன்; பிறரிடம் வினவும் வினா கொளல் வினாவாகும்.
எ.கா:
பச்சைப் பயிறு உள்ளதா? என ஒருவர் கடைக்காரரிடம் வினவுதல் ஆகும்.
கொடை வினா
கொடை வினா என்பது பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் எண்ணத்துடன் ஒருவர் மற்றவரிடம் வினவுவது கொடை வினா ஆகும்.
எ.கா:
நண்பா, சாப்பிடுகிறாயா?
மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ?
ஏவல் வினா
ஏவல் வினா என்பது ஒருவர் ஒரு செயலைச் செய்யும்பொருட்டு வினவப்படும் வினா ஏவல் வினாவாகும்.
எ.கா
பாடம் ஏன் படிக்கவில்லை?
கண்ணா சாப்பிட்டாயா?
விடை
விடை எட்டு வகைகள்:
1. சுட்டு விடை
2. எதிர்மறை விடை
3. நேர் விடை
4. ஏவல் விடை
5. வினா எதிர் வினாதல் விடை
6. உற்றது உரைத்தல் விடை
7. உருவது கூறல் விடை
8. இனமொழி விடை
சுட்டு விடை
சுட்டு விடை என்பது நாம் வினவும் கேள்விற்கு சுட்டிக் காட்டி விடை கூறுவது சுட்டு விடை ஆகும்
எ.கா:
சென்னைக்கு செல்லும் வழி எது என்று கேட்டால் ,சென்னைக்கு செல்லும் வழி இதுதான் என்று சுட்டிக் கூறுவதாகும்
எதிர்மறை விடை
நாம் கேட்கும் கேள்விற்கு எதிர்மறையாக விடை கூறுவது எதிர்மறை விடை ஆகும்
எ.கா:
நீ பாடுவாயா? என்றால் பாடமாட்டேன் என விடை கூறுவதாகும்
நேர்விடை
நாம் கேட்கும் கேள்விற்கு உடன்பட்டு விடை கூறுவது நேர்விடை ஆகும்
எ.கா:
நாளை கல்லூரிக்கு செல்வாயா? என்றால் செல்வேன் என்று கூறுவதாகும்.
ஏவல் விடை
கேட்கப்படும் கேள்விகளுக்கு கேட்பவரையே ஏவுதல் போன்று விடை கூறுவது ஏவல் விடை ஆகும்.
எ.கா:
கடைக்கு செல்வாயா? என்று கேட்டால் நீயே செல் என்று கூறுவதாகும் நீ சற்று இங்கு வருவாயா என்ற கேள்விக்கு “நீ வா” என்று விடை கூறுவதாகும்
வினா எதிர் வினாதல் விடை
நாம் கேட்கும் கேள்விகளுக்கு விடையையே வினா போலவே கூறுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
எ.கா
கடைக்கு செல்வாயா? என்று கேட்டால் நீ செல்லக்கூடாதா? என்று பதில் கூறுவது ஆகும்.
உற்றது உரைத்தல் விடை
நாம் கேட்கும் கேள்விக்கு தனக்கு உற்றதனை விடையாக கூறுவது உற்றது உணர்தல் விடை ஆகும்.
எ.கா:
நீ பாடுவாயா ? என்றால் பல் வலிக்கிறது என்று விடை கூறுவதாகும்
உருவது கூறல் விடை
நாம் கேட்கும் கேள்விக்கு தனக்கு நிகழப்போகும் ஒன்றை விடையாக கூறுவது உருவது கூறல் விடை ஆகும்.
எ.கா:
கடைக்கு செல்வாயா? என்றால் கால் வலிக்கும் என்று விடை கூறுவதாகும்
இனமொழி விடை
நாம் கேட்கும் கேள்விற்கு, அதற்குரிய விடை கூறாமல் வேறு ஒரு விடையை கூறுவது இனமொழி விடை ஆகும்.
எ.கா:
நீ பாடுவாயா? என்று கேட்டால் ஆடுவேன் என்று பதில் கூறுவதாகும்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்