TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
நேபாள தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு
- நேபாளத்தில் நடைபெற உள்ள அந்நாட்டு தேர்தலுக்கு, சர்வதேச பார்வையாளராக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார்.
- நேபாளத்தில் நவம்பர் 20, 2022 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
“உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022” அறிக்கை
- ஐ.நா.வின் ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022’ அறிக்கையின்படி, 2023-ல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்திவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது // According to the UN’s ‘World Population Prospects 2022’ report, India is projected to overtake China as the world’s most populous country in
- 2050 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சீனாவின் மக்கள் தொகை 1.317 பில்லியனாக குறையும்.
அசாமின் “திணை இயக்கம்”
- அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 16 நவம்பர் 2022 அன்று “அஸ்ஸாம் மில்லட் மிஷன்” (அசாம் தானிய இயக்கம் / Assam Millet Mission) தொடங்கி வைத்தார்.
- நோக்கம்: விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது.
- உலகின் மிகப்பெரிய திணை உற்பத்தியாளர் = இந்தியா // India is the largest producer of millet in the world
- இந்தியாவில் மிகப்பெரிய திணை உற்பத்தியாளர் = ராஜஸ்தான்
ஜி-20 தலைவர்களுக்கு கலை பொருட்களை பரிசாக வழங்கிய பிரதமர்
- இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு நாட்டு உலகத் தலைவர்களுக்கு இந்தியாவில் இருந்து சிறந்த கலைப் பொருட்களை பரிசாக வழங்கினார்.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் = இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல ஓவியர்கள் வரைந்த “சிருங்கார ரசத்தை” விவரிக்கும் கங்ரா நுண் ஓவியம் (கங்ரா மினியேச்சர் ஓவியங்கள். இதில் இயற்கையின் பின்னணியில் ராதா – கிருஷ்ணன் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டது) // Knagra miniature paintings portraying “shrinagar rasa”
- இத்தாலி பிரதமருக்கு வழங்கியது = சதேலி பெட்டியில் வைக்கப்பட்ட குஜராத்தின் பதான் பதோலோ துப்பட்டா (Patan Patola Duppatta packed in a decorative “sadeli’ box)
- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு = குஜராத் கோவில்களில் தெய்வங்களுக்கு படைக்கப்படும் “மாதா நி பசேடி” (mata ni pachedi) என்ற கைத்தறி ஜவுளி (இதில் 14 கைகளுடன், ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஆயுதத்துடன் சிம்ம வாகனத்தின் மீது துர்க்கை அமர்ந்த கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது)
- பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் தலைவர்களுக்கு = குஜராத் கலைஞர்கள் ஆபரணக் கற்களால் தயாரித்த “அகாதே கோப்பை (கிண்ணம்)”
- ஜெர்மனி அதிபருக்கு = குஜராத்தின் கட்ச் கிண்ணம்
- ஆஸ்திரேலிய அதிபருக்கு = குஜராத் மாநிலத்தின் சோட்டா உதைபூரின் “பிதோரா ஓவியங்கள்” வழங்கப்பட்டன (இது பழங்குடி மக்களின் நாட்டுப்புற கலையை பிரதிபலிக்கும்)
- ஸ்பெயின் அதிபருக்கு = இமாசலப் பிரதேசத்தின் உலோகக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட “கனல் பித்தளை இசைக்கருவி” வழங்கப்பட்டது.
- இந்தோனேசிய அதிபருக்கு = குஜராத்தின் வெள்ளிக் கிண்ணம் + இமாச்சலப் பிரதேசத்தின் “சால்வை” என்ற இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடந்தாண்டில் வெளிநாட்டு பயனியர் 15.24 லட்சம் பேர் இந்தியா வந்தனர்
- 2021 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுமார் 15.24 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இதில் அதிக பட்சமாக அமெரிக்கர்கள் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில வங்கதேசத்தினரும், மூன்றாவது இடத்தில கனடா நாட்டு மக்களும் உள்ளனர்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது 2022
- தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது, இந்த ஆண்டு “எண்ணரசு கருநேசனுக்கு” வழங்கப்பட்டது.
- விருஹுடன் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.
உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்
- உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 1904 ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழகத்தில் தான் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது.
- 1904 ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முதலாக காஞ்சிபுரத்தில் முதல் நகரக் கூட்டுறவு வங்கியும் துவங்கப்பட்டது.
- கூட்டுறவு இயக்க முன்னோடி மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்கிறது என்றார்.
நாட்டின் முதல் இரட்டை கோபுர நீதிமன்ற வளாகம்
- நாட்டிலேயே முதல் முறையாக இரட்டை கோபுர நீதிமன்ற வளாகம் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே அமைகிறது.
- இது சுமார் 7.6 ஏக்கர் பரப்பளவில், தலா 9 மாடிகள், 160 நீதிமன்ற வளாகங்களுடன் அமைகிறது.
- தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற வளாகம் 1892 இல் இந்தோ – சார்சானிக் முறையில் கட்டப்பட்டதாகும்.
கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் திட்ட செயலிக்கு விருது
- ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில், கோவை மாநகராட்சி சார்பில் வடிவமைக்கப்பட்ட 24 மணி நேர குடிநீர்த் திட்ட செயலிக்கு “சிறந்த புவியியல் தகவல் பயன்பாட்டு செயலி” என்ற விருது வழங்கப்பட்டது.
உலகின் 800 ஆவது கோடி அதிசய குழந்தை
- உலகின் 800 கோடியாவது குழந்தை தங்கள் நாட்டில் பிறந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. மணிலாவின் டோண்டோவில் பிறந்த ஒரு பெண் குழந்தை, உலகின் எட்டாவது பில்லியன் குழந்தையாக அறிவிக்கப்பட்டது
- பிறந்த அப்பெண் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் = Vinice Mabansag
முதன்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு தேர்வு
- முதல் முறையாக, புகழ்பெற்ற பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு (DSSC – Defence Services Staff College) ஆறு பெண் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இந்திய ராணுவத்தில் உள்ள ஒரே போட்டிப் படிப்பு இதுவே, படையில் உயர் அமைப்புகளுக்கு நியமனம் செய்ய வழி வகுக்கிறது.
- பாடநெறியை முடிப்பதன் மூலம் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய ராணுவ வீரர்களுக்கு உதவுகிறது
முதல் கிரீன்ஃபீல்ட் (பசுமை வயல்) பண்ணை இயந்திர ஆலை
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிதாம்பூரில் மஹிந்திரா & மஹிந்திராவின் முதல் கிரீன்ஃபீல்ட் பண்ணை இயந்திர ஆலையை மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார் // the first greenfield farm machinery plant of Mahindra & Mahindra at Pithampur in Madhya Pradesh
- இந்த ஆலை 23 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மற்றும் ஆண்டுக்கு 1,200 கூட்டு அறுவடை இயந்திரங்கள் மற்றும் 3,300 அரிசி மாற்று இயந்திரங்கள் தயாரிக்க முடியும்.
2022 வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகள்
- 2022 வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகள் (The North East Olympic Games 2022) நடைபெற்ற இடம் = மேகாலயாவின் ஷில்லாங் நகரம்.
- 2022 வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அணி = மணிப்பூர் (88 தங்கம், 75 வெள்ளி மற்றும் 77 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 240 பதக்கங்கள்)
- மொத்தம் 203 பதக்கங்களுடன் அசாம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
உலக விலையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் மருத்துவச் சாதனங்களை இந்தியா உற்பத்தி செய்கிறது
- உலகின் முதன்மையான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உயிர் கக்கும் மருந்துவக் கருவிகளை தயாரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மேலும் அவற்றின் செலவு மற்ற நான்கு நாடுகளின் செலவில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
சர்வதேச மாணவர் தினம்
- சர்வதேச மாணவர் தினம் = நவம்பர் 17 (Internatioanl Students Day)
- உலக மாணவர் தினம் = அக்டோபர் 15 (World Students Day)
- ஒவ்வொரு மாணவரும் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி சர்வதேச மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- செக்கோஸ்லோவாக்கியாவின் ஜேர்மன் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ப்ராக் பல்கலைக்கழகத்தில் 1939 நாஜி தாக்குதலின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
- டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ஆம் தேதி உலக மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய கை கால் வலிப்பு தினம்
- தேசிய கை கால் வலிப்பு தினம் (National Epilepsy Day) = நவம்பர் 17.
- சர்வதேச கை கால் வலிப்பு தினம் (International Epilepsy Day) = பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை
- இந்தியாவில், கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று தேசிய வலிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- இது எந்த வயதினரையும் பாதிக்கலாம்.
- இந்தியாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் கால்-கை வலிப்பு தொடர்பான வலிப்புத்தாக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
உலக தத்துவ தினம்
- உலக தத்துவ தினம் (World Philosophy Day) = நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன்
- உலக தத்துவ தினம் (World Philosophy Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று நினைவுகூரப்படுகிறது.
- இந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி விழும்.
- இந்த ஆண்டிற்கான கருப்பொருள் = The Human of the Future
- உலக தத்துவ தினம் (World Philosophy Day) முதலில் நவம்பர் 21, 2002 அன்று கொண்டாடப்பட்டது.
உலக குறைப்பிரசவ தினம் 2022
- உலக குறைப்பிரசவ தினம் = நவம்பர் 17.
- உலக குறைப்பிரசவ தினம் (World Prematurity Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் உலகெங்கிலும் காணப்பட்டும் அத்தகைய குடும்பங்களின் கவலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும்
இந்தியா – நார்வே பசுமை கடல்சார் துறை
- இந்தியா – நார்வே பசுமை கடல்சார் துறையில் இணைந்து செயல்பட உள்ளன.
- இக்கூட்டம் இந்தியாவின் “மும்பை” நகரில் நடைபெற்றது // India- Norway join hands to for a GREEN MARITIME SECTOR
- மேலும், இது தொடர்பாக 8வது நார்வே-இந்தியா கூட்டு பணிக்குழு கடல்சார் கூட்டம் நடைபெற்றது.
- கடல்சார் தொடர்பான 7வது JWG நவம்பர், 2019 இல் ஒஸ்லோவில் நடைபெற்றது.
சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி 2022
- “சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி 2022’ (International Innovation & Invention Expo (INEX) 2022) கோவாவின் மார்கோ நகரில் துவங்கியது.
- இதில் ஸ்டார்ட்-அப்கள், தொழில் நுட்பங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உலக சந்தைகளில் உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மத்திய வாரியத்தின் இயக்குநர்
- இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மத்திய குழுவின் இயக்குநராக நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷியை மத்திய அரசு நியமித்துள்ளது // Vivek Joshi as a director on the central board of the Reserve Bank of India (RBI)
- இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கு இந்த மத்திய வாரியமே பொறுப்பாகும்.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்
- இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) டாக்டர் வி ஜி சோமானியின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது // Drug Controller General of India (DCGI) Dr V G Somani
- இதற்கு முன்பு ஆகஸ்ட் 2022 இல் அவர்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது.
மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர்
- META இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக META அறிவித்துள்ளது // Sandhya Devanathan as vice-president of META India
- முன்னாள் இந்திய தலைவர் அஜித் மோகன் நிறுவனத்தில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு இந்த புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.
- சந்தியா தேவநாதன் 22 வருட அனுபவமுள்ள உலகளாவிய தலைவர் ஆவார்.
மேற்குவங்க ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் நியமனம்
- மேற்குவங்க ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் அவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.
- 1977 கேரளா பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார் இவர்.
இன்ஃபோசிஸ் பரிசு 2022
- Infosys Science Foundation (ISF) ஆறு பிரிவுகளில் Infosys Prize 2022 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
- அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
- பொறியியல் & kanini ariviyal = சுமன் சக்ரவர்த்தி
- மனிதநேயம் = சுதிர் கிருஷ்ணசாமி
- வாழ்க்கை அறிவியல் = விதிதா வைத்யா
- கணித அறிவியல் = மகேஷ் காக்டே
- இயற்பியல் அறிவியல் = நிசிம் கனேகர்
- சமூக அறிவியல் = ரோகினி பாண்டே
டெமிங் விருது 2022
- 2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க டெமிங் விருது பெரும் இந்தியர் = ரானே குழுமத்தின் தலைவரான லக்ஷ்மிநாராயண் கணேஷ் // Rane Group chairman, Lakshminarayan Ganesh was conferred with the prestigious Deming award
- இவ்விருதை பெரும் 3 வது இந்தியர் மற்றும் உலகளவில் 5 வது நபர்.
- மொத்த தர மேலாண்மையை (TQM) பரப்புதல் மற்றும் ஊக்குவிப்பதில் (வெளிநாட்டில்) சிறந்த பங்களிப்பிற்காக மதிப்புமிக்க டெமிங் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 16/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 13/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 12/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 10/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 9/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 8/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 7/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 6/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 5/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 4/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 3/11/2022
- TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2/11/2022
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 14
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021