TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022

Table of Contents

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நேபாள தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு

  • நேபாளத்தில் நடைபெற உள்ள அந்நாட்டு தேர்தலுக்கு, சர்வதேச பார்வையாளராக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார்.
  • நேபாளத்தில் நவம்பர் 20, 2022 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

“உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022” அறிக்கை

  • ஐ.நா.வின் ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022’ அறிக்கையின்படி, 2023-ல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்திவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது // According to the UN’s ‘World Population Prospects 2022’ report, India is projected to overtake China as the world’s most populous country in
  • 2050 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சீனாவின் மக்கள் தொகை 1.317 பில்லியனாக குறையும்.

அசாமின் “திணை இயக்கம்”

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
அசாமின் “திணை இயக்கம்”
  • அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 16 நவம்பர் 2022 அன்று “அஸ்ஸாம் மில்லட் மிஷன்” (அசாம் தானிய இயக்கம் / Assam Millet Mission) தொடங்கி வைத்தார்.
  • நோக்கம்: விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது.
  • உலகின் மிகப்பெரிய திணை உற்பத்தியாளர் = இந்தியா // India is the largest producer of millet in the world
  • இந்தியாவில் மிகப்பெரிய திணை உற்பத்தியாளர் = ராஜஸ்தான்

ஜி-20 தலைவர்களுக்கு கலை பொருட்களை பரிசாக வழங்கிய பிரதமர்

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
ஜி-20 தலைவர்களுக்கு கலை பொருட்களை பரிசாக வழங்கிய பிரதமர்
  • இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு நாட்டு உலகத் தலைவர்களுக்கு இந்தியாவில் இருந்து சிறந்த கலைப் பொருட்களை பரிசாக வழங்கினார்.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் = இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல ஓவியர்கள் வரைந்த “சிருங்கார ரசத்தை” விவரிக்கும் கங்ரா நுண் ஓவியம் (கங்ரா மினியேச்சர் ஓவியங்கள். இதில் இயற்கையின் பின்னணியில் ராதா – கிருஷ்ணன் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டது) // Knagra miniature paintings portraying “shrinagar rasa”
    • இத்தாலி பிரதமருக்கு வழங்கியது = சதேலி பெட்டியில் வைக்கப்பட்ட குஜராத்தின் பதான் பதோலோ துப்பட்டா (Patan Patola Duppatta packed in a decorative “sadeli’ box)
    • இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு = குஜராத் கோவில்களில் தெய்வங்களுக்கு படைக்கப்படும் “மாதா நி பசேடி” (mata ni pachedi) என்ற கைத்தறி ஜவுளி (இதில் 14 கைகளுடன், ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஆயுதத்துடன் சிம்ம வாகனத்தின் மீது துர்க்கை அமர்ந்த கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது)
    • பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் தலைவர்களுக்கு = குஜராத் கலைஞர்கள் ஆபரணக் கற்களால் தயாரித்த “அகாதே கோப்பை (கிண்ணம்)”
    • ஜெர்மனி அதிபருக்கு = குஜராத்தின் கட்ச் கிண்ணம்
    • ஆஸ்திரேலிய அதிபருக்கு = குஜராத் மாநிலத்தின் சோட்டா உதைபூரின் “பிதோரா ஓவியங்கள்” வழங்கப்பட்டன (இது பழங்குடி மக்களின் நாட்டுப்புற கலையை பிரதிபலிக்கும்)
    • ஸ்பெயின் அதிபருக்கு = இமாசலப் பிரதேசத்தின் உலோகக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட “கனல் பித்தளை இசைக்கருவி” வழங்கப்பட்டது.
    • இந்தோனேசிய அதிபருக்கு = குஜராத்தின் வெள்ளிக் கிண்ணம் + இமாச்சலப் பிரதேசத்தின் “சால்வை” என்ற இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

கடந்தாண்டில் வெளிநாட்டு பயனியர் 15.24 லட்சம் பேர் இந்தியா வந்தனர்

  • 2021 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுமார் 15.24 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதில் அதிக பட்சமாக அமெரிக்கர்கள் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில வங்கதேசத்தினரும், மூன்றாவது இடத்தில கனடா நாட்டு மக்களும் உள்ளனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது 2022

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022

  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது, இந்த ஆண்டு “எண்ணரசு கருநேசனுக்கு” வழங்கப்பட்டது.
  • விருஹுடன் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

  • உணவு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • 1904 ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழகத்தில் தான் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது.
  • 1904 ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முதலாக காஞ்சிபுரத்தில் முதல் நகரக் கூட்டுறவு வங்கியும் துவங்கப்பட்டது.
  • கூட்டுறவு இயக்க முன்னோடி மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்கிறது என்றார்.

நாட்டின் முதல் இரட்டை கோபுர நீதிமன்ற வளாகம்

  • நாட்டிலேயே முதல் முறையாக இரட்டை கோபுர நீதிமன்ற வளாகம் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே அமைகிறது.
  • இது சுமார் 7.6 ஏக்கர் பரப்பளவில், தலா 9 மாடிகள், 160 நீதிமன்ற வளாகங்களுடன் அமைகிறது.
  • தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற வளாகம் 1892 இல் இந்தோ – சார்சானிக் முறையில் கட்டப்பட்டதாகும்.

கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் திட்ட செயலிக்கு விருது

  • ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில், கோவை மாநகராட்சி சார்பில் வடிவமைக்கப்பட்ட 24 மணி நேர குடிநீர்த் திட்ட செயலிக்கு “சிறந்த புவியியல் தகவல் பயன்பாட்டு செயலி” என்ற விருது வழங்கப்பட்டது.

உலகின் 800 ஆவது கோடி அதிசய குழந்தை

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
உலகின் 800 ஆவது கோடி அதிசய குழந்தை
  • உலகின் 800 கோடியாவது குழந்தை தங்கள் நாட்டில் பிறந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. மணிலாவின் டோண்டோவில் பிறந்த ஒரு பெண் குழந்தை, உலகின் எட்டாவது பில்லியன் குழந்தையாக அறிவிக்கப்பட்டது
  • பிறந்த அப்பெண் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் = Vinice Mabansag

முதன்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு தேர்வு

  • முதல் முறையாக, புகழ்பெற்ற பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு (DSSC – Defence Services Staff College) ஆறு பெண் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்திய ராணுவத்தில் உள்ள ஒரே போட்டிப் படிப்பு இதுவே, படையில் உயர் அமைப்புகளுக்கு நியமனம் செய்ய வழி வகுக்கிறது.
  • பாடநெறியை முடிப்பதன் மூலம் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய ராணுவ வீரர்களுக்கு உதவுகிறது

முதல் கிரீன்ஃபீல்ட் (பசுமை வயல்) பண்ணை இயந்திர ஆலை

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிதாம்பூரில் மஹிந்திரா & மஹிந்திராவின் முதல் கிரீன்ஃபீல்ட் பண்ணை இயந்திர ஆலையை மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார் // the first greenfield farm machinery plant of Mahindra & Mahindra at Pithampur in Madhya Pradesh
  • இந்த ஆலை 23 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மற்றும் ஆண்டுக்கு 1,200 கூட்டு அறுவடை இயந்திரங்கள் மற்றும் 3,300 அரிசி மாற்று இயந்திரங்கள் தயாரிக்க முடியும்.

2022 வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகள்

  • 2022 வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகள் (The North East Olympic Games 2022) நடைபெற்ற இடம் = மேகாலயாவின் ஷில்லாங் நகரம்.
  • 2022 வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அணி = மணிப்பூர் (88 தங்கம், 75 வெள்ளி மற்றும் 77 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 240 பதக்கங்கள்)
  • மொத்தம் 203 பதக்கங்களுடன் அசாம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

உலக விலையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் மருத்துவச் சாதனங்களை இந்தியா உற்பத்தி செய்கிறது

  • உலகின் முதன்மையான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உயிர் கக்கும் மருந்துவக் கருவிகளை தயாரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மேலும் அவற்றின் செலவு மற்ற நான்கு நாடுகளின் செலவில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச மாணவர் தினம்

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
சர்வதேச மாணவர் தினம்
  • சர்வதேச மாணவர் தினம் = நவம்பர் 17 (Internatioanl Students Day)
  • உலக மாணவர் தினம் = அக்டோபர் 15 (World Students Day)
  • ஒவ்வொரு மாணவரும் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி சர்வதேச மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • செக்கோஸ்லோவாக்கியாவின் ஜேர்மன் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ப்ராக் பல்கலைக்கழகத்தில் 1939 நாஜி தாக்குதலின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
  • டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ஆம் தேதி உலக மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய கை கால் வலிப்பு தினம்

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
தேசிய கை கால் வலிப்பு தினம்
  • தேசிய கை கால் வலிப்பு தினம் (National Epilepsy Day) = நவம்பர் 17.
  • சர்வதேச கை கால் வலிப்பு தினம் (International Epilepsy Day) = பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை
  • இந்தியாவில், கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று தேசிய வலிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இது எந்த வயதினரையும் பாதிக்கலாம்.
  • இந்தியாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் கால்-கை வலிப்பு தொடர்பான வலிப்புத்தாக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக தத்துவ தினம்

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
உலக தத்துவ தினம்
  • உலக தத்துவ தினம் (World Philosophy Day) = நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன்
  • உலக தத்துவ தினம் (World Philosophy Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று நினைவுகூரப்படுகிறது.
  • இந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி விழும்.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் = The Human of the Future
  • உலக தத்துவ தினம் (World Philosophy Day) முதலில் நவம்பர் 21, 2002 அன்று கொண்டாடப்பட்டது.

உலக குறைப்பிரசவ தினம் 2022

TNPSC TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17/11/2022
உலக குறைப்பிரசவ தினம் 2022
  • உலக குறைப்பிரசவ தினம் = நவம்பர் 17.
  • உலக குறைப்பிரசவ தினம் (World Prematurity Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் உலகெங்கிலும் காணப்பட்டும் அத்தகைய குடும்பங்களின் கவலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும்

இந்தியா – நார்வே பசுமை கடல்சார் துறை

  • இந்தியா – நார்வே பசுமை கடல்சார் துறையில் இணைந்து செயல்பட உள்ளன.
  • இக்கூட்டம் இந்தியாவின் “மும்பை” நகரில் நடைபெற்றது // India- Norway join hands to for a GREEN MARITIME SECTOR
  • மேலும், இது தொடர்பாக 8வது நார்வே-இந்தியா கூட்டு பணிக்குழு கடல்சார் கூட்டம் நடைபெற்றது.
  • கடல்சார் தொடர்பான 7வது JWG நவம்பர், 2019 இல் ஒஸ்லோவில் நடைபெற்றது.

சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி 2022

  • “சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி 2022’ (International Innovation & Invention Expo (INEX) 2022) கோவாவின் மார்கோ நகரில் துவங்கியது.
  • இதில் ஸ்டார்ட்-அப்கள், தொழில் நுட்பங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உலக சந்தைகளில் உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மத்திய வாரியத்தின் இயக்குநர்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மத்திய குழுவின் இயக்குநராக நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷியை மத்திய அரசு நியமித்துள்ளது // Vivek Joshi as a director on the central board of the Reserve Bank of India (RBI)
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கு இந்த மத்திய வாரியமே பொறுப்பாகும்.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்

  • இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) டாக்டர் வி ஜி சோமானியின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அரசாங்கம் நீட்டித்துள்ளது // Drug Controller General of India (DCGI) Dr V G Somani
  • இதற்கு முன்பு ஆகஸ்ட் 2022 இல் அவர்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது.

மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர்

  • META இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக META அறிவித்துள்ளது // Sandhya Devanathan as vice-president of META India
  • முன்னாள் இந்திய தலைவர் அஜித் மோகன் நிறுவனத்தில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு இந்த புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.
  • சந்தியா தேவநாதன் 22 வருட அனுபவமுள்ள உலகளாவிய தலைவர் ஆவார்.

மேற்குவங்க ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் நியமனம்

  • மேற்குவங்க ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் அவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.
  • 1977 கேரளா பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார் இவர்.

இன்ஃபோசிஸ் பரிசு 2022

  • Infosys Science Foundation (ISF) ஆறு பிரிவுகளில் Infosys Prize 2022 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
  • அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
    • பொறியியல் & kanini ariviyal = சுமன் சக்ரவர்த்தி
    • மனிதநேயம் = சுதிர் கிருஷ்ணசாமி
    • வாழ்க்கை அறிவியல் = விதிதா வைத்யா
    • கணித அறிவியல் = மகேஷ் காக்டே
    • இயற்பியல் அறிவியல் = நிசிம் கனேகர்
    • சமூக அறிவியல் = ரோகினி பாண்டே

டெமிங் விருது 2022

  • 2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க டெமிங் விருது பெரும் இந்தியர் = ரானே குழுமத்தின் தலைவரான லக்ஷ்மிநாராயண் கணேஷ் // Rane Group chairman, Lakshminarayan Ganesh was conferred with the prestigious Deming award
  • இவ்விருதை பெரும் 3 வது இந்தியர் மற்றும் உலகளவில் 5 வது நபர்.
  • மொத்த தர மேலாண்மையை (TQM) பரப்புதல் மற்றும் ஊக்குவிப்பதில் (வெளிநாட்டில்) சிறந்த பங்களிப்பிற்காக மதிப்புமிக்க டெமிங் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

 

 

Leave a Reply