BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022

Table of Contents

BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022

BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்குள் குடிசை (சேரிப்) பகுதி இல்லாத மாநிலமாக மாற்ற ஒடிசா இலக்கு

  • 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒடிசாவை குடிசைப் (சேரிப்) பகுதிகள் இல்லாத மாநிலமாக மாற்ற ஒடிசா அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
  • ஒடிசாவில் உள்ள அனைத்து சேரிகளும் மாதிரி காலனிகளாக மாற்றப்பட்டு 2023 டிசம்பரில் ஒடிசா குடிசைகள் இல்லாததாக மாற்றப்படும்.

சூரிய ஆற்றல் மூலம் இந்தியாவிற்கு 4.2 பில்லியன் டாலர் எரிபொருள் செலவு மிச்சம்

  • இந்தியா இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சூரிய மின் உற்பத்தி மூலம் இந்தியா சுமார் 4.2 பில்லியன் டாலர் எரிபொருள் செலவைச் சேமித்துள்ளது.
  • இதனுடன் சேர்த்து, இந்தியா சுமார் 19.4 மில்லியன் டன் நிலக்கரியைச் சேமித்துள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மின் கழிவு (மேலாண்மை) விதிகள், 2022

  • இந்திய அரசு மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள், 2022 குறித்த அறிவிப்பை வெளியிட்டது, இது அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் // The Indian Government issued notification on E-Waste (Management) Rules, 2022, which will come to effect from next financial year.
  • மின்-கழிவு (மேலாண்மை) விதிகள், 2022 நவம்பர் 2, 2022 அன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
  • புதிய விதிகள் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
  • புதிய விதிகளின்படி, மின்னணு கழிவுகள் என வகைப்படுத்தப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 21ல் இருந்து 106 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆச்சார்யா கிருபலானி பிறந்த நாள்: நவம்பர் 11

  • நவம்பர் 11, 2022 அன்று, சுதந்திரப் போராட்ட வீரர் ஆச்சார்யா கிருபலானியின் பிறந்தநாள் நாடு கொண்டாடப்பட்டது.
  • இவரின் இயற்பெயர் ஜீவத்ரம் பகவான்தாஸ் கிருபலானி, ஆனால் பிரபலமாக ஆச்சார்யா கிருபலானி என்று அறியப்பட்டார்.
  • ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்ற இயக்கங்களில் பங்கேற்றார்.
  • 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார்.

இந்தியாவில் தனிநபர் வருமானம் 33.4% அதிகரிப்பு : மத்திய அரசு தகவல்

  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இந்திய மக்கள் தொகையில் தனி நபர் வருமானம் 33.4% அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் இதுவரை 79.8 கோடி பேர் பயனடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

100% வாக்குப்பதிவு நடைபெற்ற உலகின் மிக உயரமான வாக்குப்பதிவு மையம்

  • சமிபத்தில் உலகின் மிக உயரமான வாக்குப்பதிவு மையம் என்ற பெயரை ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள தாஷிகாங் மையம் பெற்றுள்ளது
  • இந்த வாக்குப்பதிவு மையம் 15256 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை = 52.
  • இவர்கள் அனைவரும் சமிபத்தில் நடைபெற்ற ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் தங்களின் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை

BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளை, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை வழங்கியுள்ளது.
  • உச்சநீதிமன்றம் பயன்படுத்திய சிறப்பு அதிகார சட்டம் = அரசியலமைப்பு விதி 142
  • அரசியலமைப்பு விதி 142 = “மாநில அரசோ, மத்திய அரசோ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து நடக்கவில்லை, அதன் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக உத்தரவை நிறைவேற்ற முடியும்” என்பதே அந்த சட்டப்பிரிவு கூறும் அம்சம் ஆகும்.

சீர்காழியில் 122 வருடங்களில் இல்லாத மழை

  • மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்துள்ளது.
  • இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத மழை அளவாகும்.

800 கோடியை தொடும் மக்கள்தொகை

  • உலக மக்கள் தொகை வரும் நவம்பர் 15 ஆம் தேதியுடன் 800 கோடியை தொடும் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
  • உலக மக்கள்தொகை தினம் = ஜூலை 11
  • உலக மக்கள் தொகை ஆண்டிற்கு 1.10% அதிகரிக்கிறது. அதாவது 83 மில்லியன் (8.30 கோடி)
  • 2023 ஆம் ஆண்டு சீனாவை பின்னுக்கு தாலி உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை இந்தியா பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 1950 ஆம் ஆண்டிற்கு பிறகு உலக மக்கள் தொகை வளர்ச்சி முதல் முறையாக 1% 2020 ஆம் ஆண்டு குறைந்துள்ளது.

“பிரிக்ஸ்” கூட்டமைப்பில் இணைய அல்ஜீரியா விண்ணப்பித்துள்ளது

  • “பிரிக்ஸ்” கூட்டமைப்பு நாடுகள் = பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்\ஆப்ரிக்கா
  • பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் இணைய அணைத்து வித நடவடிக்கைக்களும் எடுக்கப்பட்டுள்ளதாக அல்ஜீரிய நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கப்பல் கட்டப்பட உள்ளது

  • நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கப்பல், கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் விரைவில் கட்டப்பட உள்ளது // Cochin Shipyard to build first hydrogen fuel cell catamaran vessel
  • இக்கப்பல் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்திற்காக கட்டப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை தமிழ்நாட்டில் அமைக்கும் ரிலையன்ஸ்

  • இந்தியாவின் முதல் மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை (எம்எம்எல்பி) தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு என்ற இடத்தில் அமைக்கும் ஒப்பந்தத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது // RIL to develop India’s first multi-modal logistics park in Tamil Nadu
  • மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு ₹1,424 கோடி மற்றும் இது 184.27 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

ஸ்லோவேனியா நாட்டின் முதல் பெண் அதிபர்

  • மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா நாட்டின் முதல் பெண் அதிபராக நடாசா பிர்க் முஷர் தேர்வாக வைப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஸ்லோவேனியா 1991 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியா நாட்டில் பிரிந்து தனி நாடாக உதயமானது குறிப்பிடத்தக்கது.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் லோவ்லினா போர்கோஹைன்

  • இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் 11 நவம்பர் 2022 அன்று ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 75 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சோகிபாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • 22 வயதான பர்வீன் ஹூடா 63 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானின் கிட்டோ மாயை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • 2022 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானின் அம்மானில் நடைபெறுகிறது.

கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட “ஹிட்லர் பூச்சி”

BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
  • கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் உள்ள பைராப்பூர் மலைப்பகுதியில் புதிய வகை பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு “ஹிட்லர் பூச்சி” (HITLER BUGS) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜெர்மானிய ஹிட்லரின் முக அமைப்பை கொண்டது போல இப்பூச்சி உள்ளதால் இதற்கு இப்பெயர்.
  • இப்பூசியில் அறிவியல் பெயர் = Catacanthus Incarnatus.

பொது சேவை ஒலிபரப்பு நாள்

BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
  • பொது சேவை ஒலிபரப்பு நாள் (Public Service Broadcasting Day) கொண்டாடப்படுவது = ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதி.
  • காரணம் = 1947 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலிக்கு மகாத்மா காந்தியின் ஒரே வருகையின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதி பொது சேவை ஒலிபரப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் 2001 இல் பொது சேவை ஒலிபரப்பு நாள் அல்லது (ஜன பிரசரன் திவாஸ்) என அறிவிக்கப்பட்டது.
  • “இது ஒரு அதிசயமான ஆற்றல். இதில் நான் சக்தியைக் காண்கிறேன்” என்று வானொலி பற்றி காதியடிகள் அப்பொழுது கூறினார்.

உலக நிமோனியா தினம்

  • உலக நிமோனியா தினம் (World Pneumonia Day) அனுசரிக்கப்படுவது = ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதி.
  • நோக்கம் = நிமோனியா நோயை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுக்கு விழிப்புணர்வைப் பரப்புதல்
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் = Pneumolight 2022
  • இந்த ஆண்டிற்கான தாரகச்சொல் = Pneumonia Affects Everyone
  • உலக நிமோனியா தினம் முதன்முதலில் நவம்பர் 12, 2009 அன்று “நிமோனியாவை நிறுத்து” முயற்சிகளின் கீழ் அனுசரிக்கப்பட்டது.
  • நிமோனியா என்பது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் அழற்சி சுவாசக் கோளாறு ஆகும், இது “அல்வியோலி” எனப்படும் நுரையீரலின் காற்றுப் பைகளை பாதிக்கிறது.

ஐசிசி தலைவராக 2 வது முறையாக தேர்வு செய்யப்பட கிரெக் பார்க்லே

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) சுதந்திர தலைவராக கிரெக் பார்க்லே 2 வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் // Greg Barclay unanimously re-elected as ICC Chairman for two-year term
  • அடுத்த 2 வருட காலத்திற்கு இவர் இப்பதவியில் நீடிப்பார்.
  • பார்க்லே முதலில் நவம்பர் 2020 இல் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார்.

“பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை” மாநாட்டை இந்தியா நடத்துகிறது

BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
BEST FREE CURRENT AFFAIRS TODAY 12/11/2022
  • 3-வது “பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை” மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இம்மாநாடு வருகின்ற நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற உள்ளது // The 3rd Ministerial “No Money for Terror” Conference will set to be held on November 18 and 19 this year in New Delhi, India.
  • நோக்கம் = பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்கொள்வது குறித்த சர்வதேச விவாதங்களுக்கான மேடையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது
  • இம்மாநாடு “உள்துறை அமைச்சகத்தால்” நடத்தப்பட உள்ளது.
  • இந்த நிகழ்வில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து உறுப்பினர்கள் பங்கேற்ப்பர்.

நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு இங்கிலாந்தின் ராயல் ஆர்டர் ஆஃப் மெரிட் வழங்கப்பட்டது

  • நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் அறிவியலுக்கான அவரது சிறந்த சேவையைப் பாராட்டி பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸால் மதிப்புமிக்க ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது // Nobel laureate Venki Ramakrishnan awarded UK’s royal Order of Merit
  • ரைபோசோமால் கட்டமைப்பில் அவர் செய்த பணிக்காக 2009 இல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் மற்றும் 2012 இல் பிரிட்டிஷ் ராணியிடம் இருந்து நைட் பட்டம் பெற்றார்.
  • இவர் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கருக்கு காந்தி அமைதி யாத்திரை விருது

  • அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற விழாவில், காந்தி தொண்டு நிறுவனம் சார்பில், ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கருக்கு காந்தி அமைதி யாத்திரை விருதுவழங்கப்பட்டது.
  • காரணம் = மகாத்மா காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோரின் அமைதி மற்றும் அகிம்சைக் கொள்கைகளை பரப்புவதால்.

 

 

 

 

Leave a Reply