TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 11/11/2022
TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 11/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
லூயிஸ் ஹாமில்டனுக்கு கவுரவ குடியுரிமை
- பார்முலா ஒன் காற்பன்த்ய போட்டிகளில் 7 முறை உலக சாம்பியன் பட்டதை வென்றவர் = இங்கிலாந்தின் லூயிஸ் ஹாமில்டன்
- லூயிஸ் ஹாமில்டனுக்கு கவுரவ குடியுரிமை வழங்கியுள்ள நாடு = பிரேசில்
“நட்பு தூதராக” நியமிக்கப்பட்டுள்ள நீரஜ் சோப்ரா
- எந்த நாட்டின் சுற்றுலாத்துறை நீரஜ் சோப்ராவை “நட்பு தூதராக” (Friendship Ambassador) நியமனம் செய்துள்ளது = சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறை
- ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா வென்ற பதக்கம் = ஈட்டி எறிதலில் தங்கம்.
- பணி = இந்தியாவில் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையை பிரபலமாக்குதல்.
ஆண்கள் ஒற்றையர் பாரிஸ் மாஸ்டர்ஸ் 2022 பட்டம்
- ஆண்கள் ஒற்றையர் பாரிஸ் மாஸ்டர்ஸ் 2022 பட்டத்தை வென்றவர் = 19 வயதான டேனிஷ் வீரர் ஹோல்கர் ரூன்
- ஹோல்கர் ரூன் இறுதி ஆட்டத்தில் யாரை வீழ்த்தினார் = 6 முறை பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டதை வென்ற உலகின் முதல்நிலை வீரரான நோவாக் ஜோகோவிக்
- உலக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்த முதல் டேனிஷ் வீரர் = ஹோல்கர் ரூன்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இந்திய தாய்மொழி கணக்கெடுப்பு
- இந்திய தாய்மொழி கணக்கெடுப்பு நடத்தும் அமைப்பு = மத்திய உள்துறை அமைச்சகம்
- தற்போது வரை எத்தனை மொழிக்கான ஆய்வுகள் முடிந்துள்ளது = 576 மொழிகள்
- 2018 ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின் படி இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் எண்ணிக்கை = 19500 மொழிகள்
‘வட்டி இல்லா’ வங்கி அமைப்பு
- ‘வட்டி இல்லா’ வங்கி அமைப்பு முறை (Interest-free’ banking system) கொண்டுவரப்படும் என அறிவித்துள்ள நாடு = பாகிஸ்தான்
- எந்த ஆண்டு முதல் இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது = 2027 ஆம் ஆண்டு முதல்.
- வட்டியில்லா வங்கி முறையின் கருத்து இஸ்லாமிய வடிவமான வங்கியிலிருந்து பெறப்பட்டது.
தேசிய கல்வி தினம் நவம்பர் 11
- தேசிய கல்வி தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது = நவம்பர் 11 ஆம் தேதி
- இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
- சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் = மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
- 2022 தேசிய கல்வி தினத்தின் கருப்பொருள் = பாடத்தை மாற்றுதல், கல்வியை மாற்றுதல் (Changing Course, Transforming Education)
- கல்விக்கான உரிமையை கூறும் அரசியலமைப்பு விதி = 21A கல்விக்கான உரிமை (2009)
- இந்தியாவின் முதல் கல்வி நகரத்தை உருவாக்கும் மாநிலம் = உத்திரப்பிரதேசம்
- இந்தியாவின் 2வது தேசிய மாதிரி வேத பள்ளி துவங்கப்பட்டுள்ள இடம் = பூரி, ஒடிசா.
- இந்தியாவின் முதல் “ஒலிம்பிக் மதிப்புகள் கல்வி” அறிமுகம் செய்த மாநிலம் = ஒடிசா
இந்திய ராணுவம் வீர நாரிகளுக்காக ‘வீராங்கனா சேவா கேந்திரா’ சேவையை தொடங்கியுள்ளது
- வீர நாரி என்றால் = போரிலோ அல்லது ராணுவ நடவடிக்கையிலோ தேசத்துக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்த ராணுவ வீரரின் விதவை மனைவியை ‘வீர் நாரி’ என்பார்கள் // Indian Army launches ‘Veerangana Sewa Kendra’ for Veer Naris
- வீர நாரிகளுக்காக இந்திய ராணுவம் துவக்கியுள்ள ஒற்றை சாளர சேவை = வீராங்கனா சேவா கேந்திரா.
- நோக்கம் = ராணுவ வீரர்களின் மனைவிகளின் நலன் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய.
வாலோங் போரின் வைர விழாவைக் கொண்டாட இந்திய ராணுவம் முடிவு
- வாலோங் போரின் வைர விழாவைக் கொண்டாட்டம் நடைபெற உள்ள இடம் = அருணாசலப்பிரதேசம் // Diamond Jubilee of Battle of Walong
- வாலோங் போர் = 1962 ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் அருணாச்சலப் பிரதேச எல்லையில் மேற்கொண்ட யுத்தம்.
- கொண்டாட்டத்தின் நோக்கம் = இந்திய ராணுவத்தைப் பற்றி பொதுமக்களுக்குப் பழக்கப்படுத்துவதும், ஒற்றுமை மற்றும் ஒற்றுமை உணர்வை ஊக்குவிப்பதும் மேளாவின் நோக்கமாகும்.
அகில இந்திய ரப்பர் தொழில் சங்கத்தின் புதிய தலைவர்
- அகில இந்திய ரப்பர் தொழில் சங்கத்தின் (All India Rubber Industries Association (AIRIA)) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் = ரமேஷ் கெஜ்ரிவால்
- அகில இந்திய ரப்பர் தொழில் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் = சஷி சிங்.
நவீன தேர்தல் அறிவியலின் தந்தை சர் டேவிட் பட்லர் காலமானார்
- நவீன தேர்தல் அறிவியலின் தந்தை (Father of modern election science) எனப்படுபவர் = சர் டேவிட் பட்லர்
- தனது 98 வது வயதில் காலமானார்
- “அனைத்து தேர்தல் கருத்துக் கணிப்புக் கண்காணிப்பாளர்களின் தாத்தா” (the grand daddy of all election poll watchers) என்று அழைக்கப்பட்டவர் = சர் டேவிட் பட்லர்
2022 ASBC ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
- 2022 ASBC ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற இடம் = ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரம்
- 2022 ASBC ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் = சுமித் மற்றும் கோவிந்த்
- 48 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றார் = கோவிந்த்
- 75 கிலோ எடை பிரிவில் யாரை வீழ்த்தி வெண்கலம் வென்றார் சுமித் = நடப்பு ஆசிய சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஜாஃபரோவ் சைட்ஜாம்ஷித்
ஆசியான் அமைப்புடன் ஒப்பந்தம் செய்த உக்ரைன்
- ஆசியான் (ASEAN) அமைப்பின் “கம்போடியா உச்சி மாநாடு” நடைபெற்ற இடம் = புனோம் பென் நகரம், கம்போடியா // Ukraine signs Treaty of Amity and Cooperation with ASEAN
- ஆசியான் அமைப்புடன் உக்ரைன் மேற்கொண்ட ஒப்பந்தம் = நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
- இதன் மூலம் ஆசியான் அமைப்பில் எத்தனையாவது உறுப்பினராக உக்ரைன் சேர உள்ளது = 50 வது உறுப்பினராக
- ஆசியான் அமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது ஏற்றுள்ள நாடு = கம்போடியா
- ASEAN = Association of Southeast Asian Nations (தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம்)
தாஷிகாங்: உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி
- உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி (World’s highest polling station) என அறிவிக்கப்பட்டுள்ள இடம் = தாஷிகாங், ஹிமாச்சலப் பிரதேசம்.
- எத்தனை அடி உயரத்தில் இந்த வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது = 15256 அடி // In Himachal Pradesh, Tashigang is the world’s highest polling station situated at 15256
- தாஷிகாங் 2019 இல் வாக்குச்சாவடி மையமாக அமைக்கப்பட்டது.
- தாஷிகாங் மையத்தில் 12 நவம்பர் 2022 அன்று சட்டசபை தேர்தலில் முதல் முறையாக மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
- இந்த மாவட்டத்தின் கீழ் இது வருகிறது = லாஹவுல்-ஸ்பிடி மாவட்டம், ஹிமாச்சலப் பிரதேசம்.
ஆசியான்-இந்தியா நட்பு ஆண்டு 2022
- “ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாடு” (ASEAN-India Commemorative Summit) நடைபெற உள்ள இடம் = கம்போடியா
- 17வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (17th East Asia Summit) நடைபெறவுள்ள இடம் = கம்போடியா
- ஆசியான் அமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது ஏற்றுள்ள நாடு = கம்போடியா
- 2022 ஆம் ஆண்டு “ஆசியான்-இந்தியா” உறவுகளின் எத்தனை ஆண்டினை குறிக்கிறது = 30 ஆண்டுகள் // The year 2022 marks the 30th anniversary of ASEAN-India relations & is being celebrated as the ASEAN-India Friendship Year.
- 2022 ஆம் ஆண்டை எந்த ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது = ஆசியான்-இந்தியா நட்பு ஆண்டு 2022 (ASEAN-India Friendship Year)
இடஒதுக்கீட்டை 77% ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றிய ஜார்க்கண்ட்
- எந்த மாநிலம் பல்வேறு பிரிவினருக்கு வழங்கும் இடஒதுக்கீட்டை 77% ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளது = ஜார்க்கண்ட் மாநில அரசு
- தற்போது எத்தனை சதவிகிதம் அம்மாநிலத்தில் இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு வருகிறது = 60%
பெங்களூருவில் “செழுமை சிலை” திறப்பு
- பெங்களூரு நகரை நிர்மானித்தவர் = நடபிரபு கெம்பேகவுடா (Nadaprabhu Kempegowda)
- அவரை போற்றும் வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ள சிலை = செழுமை சிலை (வெண்கலத்தால் ஆனது, 108 அடி) // ‘Statue of Prosperity’, the 108-feet long Bronze statue
- இச்சிலையை திறந்து வைத்தவர் = பிரதமர் மோடி அவர்கள்.
2வது பிம்ஸ்டெக் விவசாய அமைச்சர்கள் கூட்டம்
- 2வது பிம்ஸ்டெக் விவசாய அமைச்சர்கள் கூட்டம் (2nd BIMSTEC Agriculture Ministers meet) நடைபெற்ற இடம் = புதுதில்லி
- தினையின் முக்கியத்துவத்தையும், “சர்வதேச தினை ஆண்டு – 2023” (International Year of Millets – 2023) இல் தினை மற்றும் அதன் தயாரிப்புகளை ஊக்குவிக்க இந்தியா இக்கூட்டத்தில் வலியுறுத்தியது.
- BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- பிம்ஸ்டெக் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகள் = 7 நாடுகள் (தெற்காசியாவின் ஐந்து நாடுகள் – பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இரண்டு நாடுகள் – மியான்மர் மற்றும் தாய்லாந்து)
- பிம்ஸ்டெக் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு = 1997.
இந்திய வேளாண் வணிக (தொழில்) விருது 2022
- “இந்திய வேளாண் வணிக விருது 2022” (India Agribusiness Awards 2022) யாருக்கு வழங்கப்பட்டது = தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (National Fisheries Development Board)
- “AgroWorld 2022” – 2022 – இந்திய சர்வதேச வேளாண் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி – 2022 (“AgroWorld 2022” – India International Agro Trade and Technology Fair – 2022) நடைபெற்ற இடம் = புதுதில்லி.
100% மின்மயமாக்கல் திட்டத்தை நோக்கி பயணிக்கும் ரயில்வே
- இந்தியாவில் உள்ள மொத்த அகலப்பாதை தடங்களின் நீளம் = 65,141 கிலோமீட்டர்
- தற்போது மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நீளம் = 53,470 கிலோமீட்டர்
- இது மொத்த அகலப்பாதை மின்மயமாக்கல் பணியில் 82.08% ஆகும் // Railways marching towards Mission 100% Electrification
- இந்திய ரயில்வேயின் வரலாற்றில் 2021-22-இல் அதிகபட்சமாக 6,366 கிலோமீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டன.
ஃபிட் இந்தியா பள்ளி வாரம்
- ஃபிட் இந்தியா பள்ளி வாரம் 2022 துவக்கக் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சின்னங்கள் = டூஃபான் & டூபானி // Olympic Double Medalist PV Sindhu Launches Fit India School Week Mascots Toofan & Toofani
- நிகழ்ச்சியில் இதனை அறிமுகம் செய்தவர் = ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து.
- ஃபிட் இந்தியா பள்ளி வாரத்தின் நான்காவது பதிப்பு நவம்பர் 15, 2022 அன்று தொடங்குகிறது.
வயிற்றுப்போக்கு நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய 16வது ஆசிய மாநாடு (ASCODD)
- வயிற்றுப்போக்கு நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய 16வது ஆசிய மாநாடு (ASCODD) நடைபெற்ற இடம் = கொல்கத்தா
- ASCODD = Asian Conference on Diarrhoeal Disease and Nutrition
- மாநாட்டின் கருப்பொருள் = சமூக பங்கேற்பின் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் காலரா, டைபாய்டு மற்றும் பிற குடல் நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது: SARS-CoV-2 தொற்றுநோய்க்கு அப்பால் // Prevention and control of cholera, typhoid and other enteric diseases in low and middle-income countries through community participation: beyond the SARS-CoV-2 pandemic
4 நட்சத்திர அந்தஸ்தில் “சரியான உணவு நிலையம்” சான்றிதழ் பெற்ற போபால் ரயில் நிலையம்
- போபால் ரயில் நிலையத்திற்கு “4 நட்சத்திர சரியான உணவு நிலையம்” என்ற சான்றிதழை வழங்கியது = FSSAI (Food Safety and Standards Authority of India / இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்)
- 4 நட்சத்திர அந்தஸ்து = பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக நிலையத்தின் முழு இணக்கத்தையும் குறிக்கிறது
- இச்சான்றிதழை பெற்ற ஆறாவது ரயில் நிலையம் = போபால் ரயில் நிலையம்
- இச்சான்றிதழை பெற்ற மற்ற ரயில் நிலையங்கள் = ஆனந்த் விஹார் டெர்மினல் ரயில் நிலையம் அடங்கும்; (டெல்லி), சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்; (மும்பை), மும்பை மத்திய ரயில் நிலையம்; (மும்பை), வதோதரா ரயில் நிலையம், சண்டிகர் ரயில் நிலையம்
பிரதமர் விரைவு சக்தியின் பல்வேறு போக்குவரத்து நீர்வழி உச்சி மாநாடு
- பிரதமர் விரைவு சக்தியின் பல்வேறு போக்குவரத்து நீர்வழி உச்சி மாநாடு (PM Gati Shakti Multimodal Waterways Summit 2022) நடைபெற்ற இடம் = உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி
- மாநாட்டின் நோக்கம் = உள்நாட்டு நீர்வழிகளின் பங்கை மேலும் வலுப்படுத்துதல்.
பழங்குடி சமூகத்தை மேம்படுத்துவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய மாநாடு
- பழங்குடி சமூகத்தை மேம்படுத்துவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய மாநாடு (National Conclave on Science & Technology for Empowerment of Tribal Community) நடைபெற்ற இடம் = ஐ.ஐ.டி கவுகாத்தி
- நவம்பர் 15 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட “ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்” நினைவாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
- ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் = பழங்குடியினர் பெருமை தினம் (Tribal Pride Day)
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 10/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 9/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 8/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 7/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 6/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 5/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 4/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 3/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 2/11/2022
- TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 1/11/2022
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 04/08/2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL NOV 14