TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
6வது வந்தே பாரத் ரயில்
- 6வது வந்தே பாரத் ரயில் (6th Vande Bharat train) பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்) – நாக்பூர் (மகாராஷ்டிரா) வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
- இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும்
- சமிபத்தில் 5 வது வந்தே பாரத் ரயில் “சென்னை – மைசூரு” இடையே இயக்கப்பட்டது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இந்தியாவில் எச்.ஐ.வி தொற்று விகிதம் 46 சதவீதம் குறைந்துள்ளது
- சமீபத்திய தரவுகளின்படி, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 2010 மற்றும் 2021 க்கு இடையில் நாட்டின் வருடாந்திர எச்.ஐ.வி தொற்று விகிதம் 46 சதவீதம் குறைந்துள்ளது என்று அறிவித்தது.
- இந்த சரிவு உலக சராசரியான 32% விட அதிகமாகும்.
தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில்
- தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் = செகந்திராபாத் – விஜயவாடா இடையே புத்தாண்டு முதல் ஓட உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை
- நீதிமன்றத்தின் கூற்றுப்படி, வழிபாட்டுத் தலங்களின் தூய்மை மற்றும் புனிதத்தைப் பேணவே மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கோயில்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தொலைபேசி வைப்பு லாக்கர்களை அமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜி20 தலைமையேற்பு – தமிழகத்தில் 8 பாரம்பரிய தலங்கள் ஒளிவிளக்குகளால் அலங்கரிப்பு
- ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் 100 முக்கிய பாரம்பரிய தலங்கள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- மகாபலிபுரம் கடற்கரை கோவில்
- மகாபலிபுரம் பஞ்சரதங்கள்
- தஞ்சை பெரிய கோவில்
- கங்கைகொண்ட சோழபுரம் கோவில், அரியலூர்
- தாராசுரம் கோவில், தஞ்சை
- வேலூர் கோட்டை
- மகாபலிபுரம் கிருஷ்ணன் வெண்ணை உருண்டை கல்
- மகாபலிபுரம் கோவில்
மாண்டஸ் புயல்
- தமிழகத்தில் சில நாட்களில் உருவாக உள்ள புயலுக்கு “மாண்டஸ் புயல்” (MANDOUS) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- இப்புயலுக்கு பெயர் வாய்த்த நாடு = ஐக்கிய அரபு அமீரகம்.
- மாண்டஸ் என்பதன் பொருள் = புதையல் பெட்டி (TREASURE BOX)
வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம்
- சென்னை வில்லிவாக்கம் ஏரியில் ஸ்மார்ட் நகரம் திட்டத்தின் கீழ் கண்ணாடி தொங்கு பாலம் அமைய உள்ளது.
- இப்பாலத்தின் உறுதித்தன்மையை மெட்ராஸ் ஐ.ஐ.டி குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் “மகாகவி பாரதியார் விருது”
- தினமணியின் “மகாகவி பாரதியார் விருது” = பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருதை பெரும் மூன்றாவது நபர் இவராவார்.
- இவரின் நூல்கள் = பாரதியின் இந்தியா கருத்துப்படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், விஜயா கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்:கனவு, பாரதி கருவூலம்
- “மகாகவி பாரதியார் விருது” பெற்ற மற்ற இரண்டு ஆய்வாளர்கள் = சீனி.விசுவநாதன், இளசை மணி.
தமிழகத்தின் 3 வது ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிப்பு
- தமிழகத்திலேயே மூன்றாவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் என்னும் ஊரில் ஏறுதழுவுதல் நடுக்கல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- இதற்கு முன் கிடைத்த இரண்டு நடுகல் = சேலம் மாவட்டம் ஆத்தூர் கருமந்துரையில் இருந்தும், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூரில் இருந்து ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதல் பெண் சோப்தார்
- மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதல் பெண் சோப்தாராக “லலிதா” என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் // FIRST WOMAN MACE-BEARER (CHOBDAR) AT HIGH COURT BENCH
- பணி = நீதிபதியுடன் செங்கோல் ஏந்தி செல்லும் பணி.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தாராக நியமிக்கப்பட்டவர் = திலானி.
“மின்சாரத்திற்கு மாறுவோம்” இயக்கம்
- தமிழக மின்சாரத்துறையின் சார்பில் “மின்சாரத்திற்கு மாறுவோம்” (SWITH TO ELECTRIC) என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
- வாகனம், சமையல் ஆகிய பணிகளுக்கு மின்சாரம் மூலம் மேற்கொள்ளுதல் இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்தது
- இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்தது // Indonesia’s Mount Semeru volcano erupts
- இந்தோனேசியாவின் ஜாவாவில் செயல்பாட்டில் உள்ள இந்த எரிமலை, “தி கிரேட் மவுண்டன்” என்றும் அழைக்கப்படுகிறது
2022 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்ட் அகராதியின் சொல் “Goblin mode”
- 2022 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்ட் அகராதியின் சொல்லாக தேர்வு செய்யப்பட்டுள்ள வாரத்தை = GOBLIN MODE // ‘Goblin mode’ named Word of 2022 by the Oxford Dictionary
- இதன் பொருள் = பொதுவாக சமூக நெறிகள் அல்லது எதிர்பார்ப்புகளை நிராகரிக்கும் விதத்தில், சுயநலம், சோம்பேறி, சோம்பேறி, அல்லது பேராசை போன்ற ஒரு வகை நடத்தை” என வரையறுக்கிறது
மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கிய முதல் மாநிலம்
- மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 1,143 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தனி திவ்யாங் துறை அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
- இதுபோன்ற துறையை கொண்ட முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்
- பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் (Badminton Asia Junior Championships) போட்டிகள் நடைபெற்ற இடம் = தாய்லாந்தின் நோந்தபுரி
- பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய ஷட்லர் அனிஷ் தோப்பானி 15 வயதுக்குட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் 17 வயதுக்குட்பட்ட இந்திய வீராங்கனை
- பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் (Badminton Asia Junior Championships) போட்டிகள் நடைபெற்ற இடம் = தாய்லாந்தின் நோந்தபுரி
- ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் 17 வயதுக்குட்பட்ட இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் = உன்னதி ஹூடா // Unnati Hooda became the first-ever Indian under-17 shuttler to clinch a medal at the Asian Junior Badminton Championships
- இவர் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பேட்மிண்டன் ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் 2022
- பேட்மிண்டன் ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் இந்தியா மொத்தம் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
- உன்னதி ஹூடா – 17 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்
- அனிஷ் தோப்பானி – 15 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்
- அர்ஷ் முகமது மற்றும் சன்ஸ்கர் சரஸ்வத் – 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்
- ஞான தத்து – 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம்
65வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி
- 65வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி (65th National Shooting Championship Competitions in Bhopal) நடைபெற்ற இடம் = போபால், மத்தியப்பிரதேசம்
- 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பட்டத்தை வென்ற அணி = மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் கலப்பு அணி பிஸ்டல் பட்டத்தை வென்றனர்
பிரபல எழுத்தாளர் டொமினிக் லேபியர் காலமானார்
- பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் டொமினிக் லேபியர் காலமானார். இவர் இந்திய வரலாற்றை பற்றி எழுதிய மிக பிரபலமான புத்தகம், “நள்ளிரவில் சுதந்திரம்” (FREEDOM AT MIDNIGHT).
- இவரின் புகழ்பெற்ற புத்தகம் = “இஸ் பாரிஸ் பர்னிங்?” (IS PARIS BURNING), The City of Joy (கொல்கத்தாவை சேர்ந்த ரிக்ஷாக்காரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது)
- 2008 ஆம் ஆண்டு இவருக்கு பதம் பூஷன் விருது வழங்கப்பட்டது.
சிந்துஜா – 1 : கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்
- ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘சிந்துஜா-1’ என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர் // IIT Madras Researchers develop ‘Sindhuja’ which generates Electricity from Sea Waves
- இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய கடல் அலை ஆற்றல் மாற்றி’ (Ocean Wave Energy Converter) உருவாக்கியுள்ளனர்.
- இந்தச் சாதனத்தின் சோதனைகள் நவம்பர் 2022 இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
- தமிழகத்தின் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து 6 கிமீ தொலைவில் 20 மீட்டர் ஆழம் கொண்ட இடத்தில் சாதனம் நிறுத்தப்பட்டது.
- இந்த சாதனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் கடல் அலைகளில் இருந்து 1 மெகாவாட் மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.
- இதனை உருவாக்கிய குழுவின் பேராசிரியர் = அன்துள் சமாத்.
உலக மண் தினம்
- உலக மண் தினம் (World Soil Day) = டிசம்பர் 5 ஆம் தேதி
- இந்த ஆண்டின் கருப்பொருள் = மண்: உணவு எங்கே தொடங்குகிறது // Soils: where food begins
சர்வதேச தன்னார்வலர்கள் தினம்
- சர்வதேச தன்னார்வலர்கள் தினம் (International Volunteer Day) = டிசம்பர் 5 ஆம் தேதி
- இந்த ஆண்டின் கருப்பொருள் = தன்னார்வத்தின் மூலம் ஒற்றுமை // solidarity through volunteering
சர்வதேச சிறுத்தைகள் தினம்
- சர்வதேச சிறுத்தைகள் தினம் (International Cheetah Day) = டிசம்பர் 4 ஆம் தேதி
- 2010 ஆம் ஆண்டில், டாக்டர் லாரி மார்க்கர் டிசம்பர் 4 ஆம் தேதியை சர்வதேச சிறுத்தைகள் தினமாக அறிவித்தார்.
உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம்
- உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம் (World Wildlife Conservation Day) = டிசம்பர் 4 ஆம் தேதி
- நோக்கம் = பூமியின் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு
தினை-ஸ்மார்ட் ஊட்டச்சத்து உணவு மாநாடு
- தினை-ஸ்மார்ட் ஊட்டச்சத்து உணவு மாநாடு (Millets-Smart Nutritive Food Conclave) நடைபெற்ற இடம் = புதுதில்லி
- நோக்கம் = தினை ஏற்றுமதியை ஊக்குவிக்க
- 2023 ஆம் ஆண்டு = சர்வதேச தினை ஆண்டு
பெண்கள் மற்றும் குழந்தை நலன் தொடர்பான ஜி20 கூட்டம் அவுரங்காபாத்தில் நடைபெற உள்ளது
- வருகின்ற பிப்ரவரி மாதம் பெண்கள் மற்றும் குழந்தை நலன் தொடர்பான ஜி20 கூட்டம் அவுரங்காபாத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பேரரசின் ‘மிகச் சிறந்த ஆணை அதிகாரி’ விருது
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன் மான்சிகானி, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த முதலீட்டு விழாவில், உடல்நலப் பாதுகாப்புக்கான தனது தொண்டு சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், பிரிட்டிஷ் பேரரசின் ‘மிகச் சிறந்த ஆணை அதிகாரி’ என்ற கவுரவத்தை பெற்றார் // An Indian-origin businessman Mohan Mansigani has received ‘Officer of the Most Excellent Order’ of the British Empire.
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 03/12/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 02/12/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 30/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 29/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 28/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 27/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 26/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 25/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 24/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 23/11/2022