TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022

Table of Contents

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

6வது வந்தே பாரத் ரயில்

  • 6வது வந்தே பாரத் ரயில் (6th Vande Bharat train) பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்) – நாக்பூர் (மகாராஷ்டிரா) வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
  • இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும்
  • சமிபத்தில் 5 வது வந்தே பாரத் ரயில் “சென்னை – மைசூரு” இடையே இயக்கப்பட்டது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இந்தியாவில் எச்.ஐ.வி தொற்று விகிதம் 46 சதவீதம் குறைந்துள்ளது

  • சமீபத்திய தரவுகளின்படி, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 2010 மற்றும் 2021 க்கு இடையில் நாட்டின் வருடாந்திர எச்.ஐ.வி தொற்று விகிதம் 46 சதவீதம் குறைந்துள்ளது என்று அறிவித்தது.
  • இந்த சரிவு உலக சராசரியான 32% விட அதிகமாகும்.

தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில்

  • தென்னிந்தியாவின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் = செகந்திராபாத் – விஜயவாடா இடையே புத்தாண்டு முதல் ஓட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை

  • நீதிமன்றத்தின் கூற்றுப்படி, வழிபாட்டுத் தலங்களின் தூய்மை மற்றும் புனிதத்தைப் பேணவே மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கோயில்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தொலைபேசி வைப்பு லாக்கர்களை அமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜி20 தலைமையேற்பு – தமிழகத்தில் 8 பாரம்பரிய தலங்கள் ஒளிவிளக்குகளால் அலங்கரிப்பு

  • ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் 100 முக்கிய பாரம்பரிய தலங்கள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    1. மகாபலிபுரம் கடற்கரை கோவில்
    2. மகாபலிபுரம் பஞ்சரதங்கள்
    3. தஞ்சை பெரிய கோவில்
    4. கங்கைகொண்ட சோழபுரம் கோவில், அரியலூர்
    5. தாராசுரம் கோவில், தஞ்சை
    6. வேலூர் கோட்டை
    7. மகாபலிபுரம் கிருஷ்ணன் வெண்ணை உருண்டை கல்
    8. மகாபலிபுரம் கோவில்

மாண்டஸ் புயல்

  • தமிழகத்தில் சில நாட்களில் உருவாக உள்ள புயலுக்கு “மாண்டஸ் புயல்” (MANDOUS) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இப்புயலுக்கு பெயர் வாய்த்த நாடு = ஐக்கிய அரபு அமீரகம்.
  • மாண்டஸ் என்பதன் பொருள் = புதையல் பெட்டி (TREASURE BOX)

வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம்

  • சென்னை வில்லிவாக்கம் ஏரியில் ஸ்மார்ட் நகரம் திட்டத்தின் கீழ் கண்ணாடி தொங்கு பாலம் அமைய உள்ளது.
  • இப்பாலத்தின் உறுதித்தன்மையை மெட்ராஸ் ஐ.ஐ.டி குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் “மகாகவி பாரதியார் விருது”

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் “மகாகவி பாரதியார் விருது”
  • தினமணியின் “மகாகவி பாரதியார் விருது” = பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருதை பெரும் மூன்றாவது நபர் இவராவார்.
  • இவரின் நூல்கள் = பாரதியின் இந்தியா கருத்துப்படங்கள், பாரதியும் வ.உ.சி.யும், விஜயா கட்டுரைகள், பாரதியின் சுயசரிதைகள்:கனவு, பாரதி கருவூலம்
  • “மகாகவி பாரதியார் விருது” பெற்ற மற்ற இரண்டு ஆய்வாளர்கள் = சீனி.விசுவநாதன், இளசை மணி.

தமிழகத்தின் 3 வது ஏறுதழுவுதல் நடுகல் கண்டுபிடிப்பு

  • தமிழகத்திலேயே மூன்றாவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் என்னும் ஊரில் ஏறுதழுவுதல் நடுக்கல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இதற்கு முன் கிடைத்த இரண்டு நடுகல் = சேலம் மாவட்டம் ஆத்தூர் கருமந்துரையில் இருந்தும், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூரில் இருந்து ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதல் பெண் சோப்தார்

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதல் பெண் சோப்தார்
  • மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதல் பெண் சோப்தாராக “லலிதா” என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் // FIRST WOMAN MACE-BEARER (CHOBDAR) AT HIGH COURT BENCH
  • பணி = நீதிபதியுடன் செங்கோல் ஏந்தி செல்லும் பணி.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தாராக நியமிக்கப்பட்டவர் = திலானி.

“மின்சாரத்திற்கு மாறுவோம்” இயக்கம்

  • தமிழக மின்சாரத்துறையின் சார்பில் “மின்சாரத்திற்கு மாறுவோம்” (SWITH TO ELECTRIC) என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
  • வாகனம், சமையல் ஆகிய பணிகளுக்கு மின்சாரம் மூலம் மேற்கொள்ளுதல் இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்தது

  • இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்தது // Indonesia’s Mount Semeru volcano erupts
  • இந்தோனேசியாவின் ஜாவாவில் செயல்பாட்டில் உள்ள இந்த எரிமலை, “தி கிரேட் மவுண்டன்” என்றும் அழைக்கப்படுகிறது

2022 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்ட் அகராதியின் சொல் “Goblin mode”

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
2022 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்ட் அகராதியின் சொல் “Goblin mode”
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்ட் அகராதியின் சொல்லாக தேர்வு செய்யப்பட்டுள்ள வாரத்தை = GOBLIN MODE // ‘Goblin mode’ named Word of 2022 by the Oxford Dictionary
  • இதன் பொருள் = பொதுவாக சமூக நெறிகள் அல்லது எதிர்பார்ப்புகளை நிராகரிக்கும் விதத்தில், சுயநலம், சோம்பேறி, சோம்பேறி, அல்லது பேராசை போன்ற ஒரு வகை நடத்தை” என வரையறுக்கிறது

மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கிய முதல் மாநிலம்

  • மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 1,143 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தனி திவ்யாங் துறை அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இதுபோன்ற துறையை கொண்ட முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.

பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்

  • பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் (Badminton Asia Junior Championships) போட்டிகள் நடைபெற்ற இடம் = தாய்லாந்தின் நோந்தபுரி
  • பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்திய ஷட்லர் அனிஷ் தோப்பானி 15 வயதுக்குட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் 17 வயதுக்குட்பட்ட இந்திய வீராங்கனை

  • பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் (Badminton Asia Junior Championships) போட்டிகள் நடைபெற்ற இடம் = தாய்லாந்தின் நோந்தபுரி
  • ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் 17 வயதுக்குட்பட்ட இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் = உன்னதி ஹூடா // Unnati Hooda became the first-ever Indian under-17 shuttler to clinch a medal at the Asian Junior Badminton Championships
  • இவர் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பேட்மிண்டன் ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் 2022

  • பேட்மிண்டன் ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் இந்தியா மொத்தம் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
  • உன்னதி ஹூடா – 17 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்
  • அனிஷ் தோப்பானி – 15 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்
  • அர்ஷ் முகமது மற்றும் சன்ஸ்கர் சரஸ்வத் – 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம்
  • ஞான தத்து – 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம்

65வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி

  • 65வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி (65th National Shooting Championship Competitions in Bhopal) நடைபெற்ற இடம் = போபால், மத்தியப்பிரதேசம்
  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பட்டத்தை வென்ற அணி = மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் கலப்பு அணி பிஸ்டல் பட்டத்தை வென்றனர்

பிரபல எழுத்தாளர் டொமினிக் லேபியர் காலமானார்

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
பிரபல எழுத்தாளர் டொமினிக் லேபியர் காலமானார்
  • பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் டொமினிக் லேபியர் காலமானார். இவர் இந்திய வரலாற்றை பற்றி எழுதிய மிக பிரபலமான புத்தகம், “நள்ளிரவில் சுதந்திரம்” (FREEDOM AT MIDNIGHT).
  • இவரின் புகழ்பெற்ற புத்தகம் = “இஸ் பாரிஸ் பர்னிங்?” (IS PARIS BURNING), The City of Joy (கொல்கத்தாவை சேர்ந்த ரிக்ஷாக்காரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது)
  • 2008 ஆம் ஆண்டு இவருக்கு பதம் பூஷன் விருது வழங்கப்பட்டது.

சிந்துஜா – 1 : கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
சிந்துஜா – 1 : கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்
  • ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘சிந்துஜா-1’ என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர் // IIT Madras Researchers develop ‘Sindhuja’ which generates Electricity from Sea Waves
  • இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய கடல் அலை ஆற்றல் மாற்றி’ (Ocean Wave Energy Converter) உருவாக்கியுள்ளனர்.
  • இந்தச் சாதனத்தின் சோதனைகள் நவம்பர் 2022 இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
  • தமிழகத்தின் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து 6 கிமீ தொலைவில் 20 மீட்டர் ஆழம் கொண்ட இடத்தில் சாதனம் நிறுத்தப்பட்டது.
  • இந்த சாதனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் கடல் அலைகளில் இருந்து 1 மெகாவாட் மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இதனை உருவாக்கிய குழுவின் பேராசிரியர் = அன்துள் சமாத்.

உலக மண் தினம்

TODAY TOP CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
உலக மண் தினம்
  • உலக மண் தினம் (World Soil Day) = டிசம்பர் 5 ஆம் தேதி
  • இந்த ஆண்டின் கருப்பொருள் = மண்: உணவு எங்கே தொடங்குகிறது // Soils: where food begins

சர்வதேச தன்னார்வலர்கள் தினம்

  • சர்வதேச தன்னார்வலர்கள் தினம் (International Volunteer Day) = டிசம்பர் 5 ஆம் தேதி
  • இந்த ஆண்டின் கருப்பொருள் = தன்னார்வத்தின் மூலம் ஒற்றுமை // solidarity through volunteering

சர்வதேச சிறுத்தைகள் தினம்

  • சர்வதேச சிறுத்தைகள் தினம் (International Cheetah Day) = டிசம்பர் 4 ஆம் தேதி
  • 2010 ஆம் ஆண்டில், டாக்டர் லாரி மார்க்கர் டிசம்பர் 4 ஆம் தேதியை சர்வதேச சிறுத்தைகள் தினமாக அறிவித்தார்.

உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம்

  • உலக வனவிலங்கு பாதுகாப்பு தினம் (World Wildlife Conservation Day) = டிசம்பர் 4 ஆம் தேதி
  • நோக்கம் = பூமியின் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு

தினை-ஸ்மார்ட் ஊட்டச்சத்து உணவு மாநாடு

  • தினை-ஸ்மார்ட் ஊட்டச்சத்து உணவு மாநாடு (Millets-Smart Nutritive Food Conclave) நடைபெற்ற இடம் = புதுதில்லி
  • நோக்கம் = தினை ஏற்றுமதியை ஊக்குவிக்க
  • 2023 ஆம் ஆண்டு = சர்வதேச தினை ஆண்டு

பெண்கள் மற்றும் குழந்தை நலன் தொடர்பான ஜி20 கூட்டம் அவுரங்காபாத்தில் நடைபெற உள்ளது

  • வருகின்ற பிப்ரவரி மாதம் பெண்கள் மற்றும் குழந்தை நலன் தொடர்பான ஜி20 கூட்டம் அவுரங்காபாத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பேரரசின் ‘மிகச் சிறந்த ஆணை அதிகாரி’ விருது

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன் மான்சிகானி, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த முதலீட்டு விழாவில், உடல்நலப் பாதுகாப்புக்கான தனது தொண்டு சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், பிரிட்டிஷ் பேரரசின் ‘மிகச் சிறந்த ஆணை அதிகாரி’ என்ற கவுரவத்தை பெற்றார் // An Indian-origin businessman Mohan Mansigani has received ‘Officer of the Most Excellent Order’ of the British Empire.

 

 

 

Leave a Reply