இணைப்பு மூலம் குடியுரிமை
இணைப்பு மூலம் குடியுரிமை
இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) சட்டத்தின் பகுதி 2-ல் உள்ள “குடியுரிமை” (Part 2 – Citizenship) பிரிவில், இந்தியக் குடிமகனாக உரிமை பெறுவதற்கான வழிமுறைகளில் “இணைப்பு மூலம் குடியுரிமை” (By Incorporation of territory) என்பது சட்டம் ஒன்றினை உருவாக்கி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றிய குறிப்பு கூறப்பட்டுள்ளது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எந்தவொரு வெளிநாட்டு பகுதியும், இந்தியாவின் பகுதியாக மாறினால், அப்பகுதியில் வாழ்ந்த மக்களை, இந்திய அரசு, இந்தியாவின் குடிமக்களாக அவர்களை அறிவிக்கும். அவ்வாறு அறிவிக்கும் முன்பு, இந்திய அரசு அதற்காக தனியொரு சட்டத்தினை உருவாக்கி, அம்மக்களை இந்தியாவின் குடிமக்களாக, அச்சட்டம் நடைமுறையில் வந்த நாளில் இருந்து ஏற்கும். இதனை இணைப்பு மூலம் குடியுரிமை என்று அறியப்படுகிறது (If any territory becomes a part of India, the Central Government may, by order notified in the Official Gazette, specify the persons who shall be citizens of India by reason of their connection with that territory; and those persons shall be citizens of India as from the date to be specified in the order).
எடுத்துக்காட்டாக, 1962-ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பாண்டிச்சேரி பகுதிக்கு, குடியுரிமை சட்டம் 1955 படி, “குடியுரிமை (பாண்டிச்சேரி) சட்டம் 1962” (Citizenship (Pondicherry) Order, 1962) செயல்படுத்தப்பட்டு, அம்மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
- பசல் அலி கமிசன் / FAZAL ALI COMMISSION
- 1956 பிறகு புதிய மாநிலங்கள் / STATES AFTER 1956
- ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் / JAMMU KASHMIR AND LADAKH
- மாநிலங்களின் பெயர் மாற்றம் / RENAMING OF STATES