மாநிலங்களின் பெயர் மாற்றம்

மாநிலங்களின் பெயர் மாற்றம்

மாநிலங்களின் பெயர் மாற்றம்
மாநிலங்களின் பெயர் மாற்றம்

மாநிலங்களின் பெயர் மாற்றம்

  1. இந்தியாவில் முதல் முறையாக, “ஒருங்கிணைந்த மாகாணம்” (United Provinces) என்ற பெயரை “உத்திரப் பிரதேசம்” (Uttar Pradesh) என 195௦-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  2. 1969-ம் வருடம், “மதராஸ் மாநிலம் (பெயர் மாற்றம்) சட்டம் 1968 படி, “மதராஸ்” என்ற பெயர் “தமிழ்நாடு” என மாற்றம் செய்யப்பட்டது. இது நடைமுறைக்கு வந்த நாள் = ஜனவரி 14, 1969 (By the Madras State (Alteration of Name) Act, 1968, with effect from January 14, 1969)
  3. 1973-ம் ஆண்டு “மைசூர் மாநில (பெயர் மாற்றம்) சட்டம், 1973-ன் படி, “மைசூர்” என்ற பெயருக்கு பதிலாக “கர்நாடகா” என பெயர் மாற்றப்பட்டது.
  4. 1973-ம் ஆண்டு “லட்சத்தீவுகள், மினிக்காய் மற்றும் அமிந்திவி தீவுகள்”, “லட்சத்தீவுகள்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  5. இந்திய அரசியலமைப்பின் “69-வது சட்டத் திருத்தும்,1991” (69th Constitutional Amendment Act of 1991) படி, யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி, “தேசியத் தலைநகராக” (National Capital Territory of Delhi) மாற்றம் செய்யப்பட்டது. இது நடைமுறைக்கு வந்த நாள் = பிப்ரவரி 1, 1992 ஆகும்.
  6. 2௦௦6-ம் ஆண்டு “உத்திராஞ்சல்” என்ற பெயர் “உத்திரக்கான்ட்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
  7. 2௦௦6-ம் ஆண்டு “பாண்டிச்சேரி” என்ற பெயர் “புதுச்சேரி’ என மாற்றம் செய்யப்பட்டது.
  8. 2௦11-ம் ஆண்டு “ஒரிசா” என்ற பெயர் “ஓடிஸா” என மாற்றப்பட்டது.

மாநிலங்களின் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகள்

  • நகரங்களின் பெயரை மாற்றுவதைப் போலல்லாமல், மாநிலத்தின் பெயரை மாற்ற, மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஒப்புதல் அதன் 1953 வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் கீழ் தேவை.
  • இந்த மாற்றத்தை பாதிக்க அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகிறது என்பதே இதன் பொருள்.
  • ரயில்வே அமைச்சகம், புலனாய்வுப் பணியகம், தபால் துறை, சர்வே ஆஃப் இந்தியா மற்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் போன்ற பல நிறுவனங்களிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) பெற்ற பிறகு யூனியன் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்று அதற்கு ஒப்புதல் அளிக்கிறது.
  • முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்தத் தீர்மானம், நாடாளுமன்றத்தில் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமாகி, அதன்பின் மாநிலத்தின் பெயர் மாற்றப்படும்.

 

 

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

9. UNION AND ITS TERRITORY

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

 

Leave a Reply